கொசுத் தொல்லை...........
டெங்கு காய்ச்சலால் நெல்லையில் மட்டும் இதுவரை 39 பேர்கள் இறந்துள்ளார்கள். தினசரி அக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்வோர் என்ணிக்கையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.நெல்லை கடைய நல்லூரில் இக்காய்ச்சல் தற்போது ஆரம்பமானது.அப்போது மக்களும் இந்த மர்மக்காய்ச்சலுக்கு சரியான நடவடிக்கை எடுங்கள் சில உயிர் பலி நடந்துள்ளது என்று போராட்டம் வரை நடத்தி பார்த்து விட்டார்கள்.ஆனால் மாவட்டமும்,மாநிலமும் ஒன்றும் கண்டு கொள்ளவில்லை.காய்ச்சல்தான் மக்களிடம் பரவி அவர்களை கொன்று வந்தது.இப்போதோ நெல்லை மாவட்டம் முழுக்க பரவி,பக்கத்து மாவட்டங்களான குமரி,தூத்துக்குடி ,விருது நகர் என்று பரவிவருகிறது.
முதலில் சாதா காய்ச்சல் போல் வரும் டெங்கு மருந்துகளுக்கு கட்டுப்படாமல் தொடரும்.
அதன் பின்னர் ரத்தத்தைல் வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை அதி வேகமாகக் குறைய ஆரம் பிக்கும்.அப்போது நாம் சரியான மருந்துகளை உட் கொள்வதுடன், புதிய ரத்தத்தையும் உடலில் ஏற்றி வெள்ளையணுக்கள் குறைவை சரி செய்ய வேண்டும்.இல்லையெனில் நோய் எதிர்ப்பு சக்தியே உடலில் இல்லாத நிலையில் மரணத்தை தழுவ வேண்டியதுதான்.
இப்போதைய தேவை மருத்துவமனைகளில் போதுமான எல்லாப் பிரிவுகளிலுமான ரத்தம் இருப்பில் இருக்க வேண்டும்.மருத்துவர்கள் அடிக்கடி நோயாளியி ன் வெள்ளையணுக்கள் விபரத்தை எடுக்க,மருத்துவம் பார்க்க போதுமான அளவில் மருத்துவமனையில் இருக்க வேண்டும்.
முக்கியமாக கொசு மருந்து வீதிகளில் ,தண்ணீர் தேங்கும் இடங்களில் தெளிக்க வேண்டும்.இதை அரசு செய்வது போலவே இல்லை.
சுகாதார அமைச்சர் 'டெங்கு காய்ச்சலை ஊடகங்கள் தான் பெரிது படுத்துகின்றன."என்று கூறியுள்ளார்.
ஊடகங்கள் கடைய நல்லூரில் சாதாரணமாக இந்நோய் பரவ ஆரம்பிக்கும் போதே செய்திகளை வெளியிட்டே வந்துள்ளது.ஆனால் ஆட்சியாளர்கள்,சுகாதாரத்துறையினர் கண்டு கொள்ளாததால்தான் 39 பேர்கள் சாவை சந்தித்துள்ளனர்.இதில் மருத்துவமனை அருகே வராமலே கசாயம் குடித்து பார்த்து போய் சேர்ந்தவர்கள் கணக்கு சேர வில்லை.
இன்னமும் சரியான பொறுப்பான முறையில் மாவட்டம்தான் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் அமைச்சர் விஜயும் ஊடகங்கள் தவறு செய்வது போல் குற்றம் சாட்டுகிறார்.மருத்துவ மனையில் பத்திரிகை நிருபர்கள் சங்கத்தினர் ரத்தம் கொடுத்துள்ளனர்.செய்தியை வெளியிடுவதுடன் போக வில்லை.ரத்தம் தான் டெங்குக்கு அதிகம் தேவை என்பதால் ரத்தம் கொடுத்துள்ளனர்.
இதுவரை ரத்தம் கொடுத்த அமைச்சர்களையோ,கட்சிக்காரர்களையோ ஒருவரையாவது அமைச்சர் விஜய் சொல்ல முடியுமா?
இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலை.
டெங்கு காய்ச்சலில் மக்கள் உயிரைக்கொடுத்துக்கொண்டிருக்கையில் மன்மோகன் சிங் தனது வேலையை மட்டும் சரியாக செய்து கொண்டிருக்கிறார்.
இந்த மாத பெட்ரோல் விலை உயர்வை செய்து விட்டார்.ஆனாலும் அதிகப்படியான விலை உயர்வுதான்.ரூ 7.50 .இப்படி பெட்ரோல் விலையை மாதாமாதம் உயர்த்துவது. தெருவில் கல்தட்டி விழுந்தால் கூட சேவைவரி கேட்பது என்று வரியை உயர்த்தினால் விலைகள் உயர்கிறது.சம்பளம் அதிகம் கேட்டு போராட வேண்டிய கட்டாயம்.என்று சங்கிலித்தொடராக இருந்தால் ரூபாயின் மதிப்பு குறையாமல் என்னதான் செய்யும். ?
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் குறைந்து விட்டதால் ஒரு பேரல் கச்சா எண்ணைக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்த இழப்பை ஈடுகட்ட வேண்டுமெனில் பெட்ரோல் விலையை உடனடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது என்று எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஏன்அப்படி கொடுக்க வேண்டும் விலை குறைவாகவும்,இந்திய பணத்திலேயே வாங்கிக்கொள்வதாகவும் கூறு ஈரானில் இருந்து பெட்ரோல் வாங்கினால் என்ன கேடு?
அமெரிக்க ஓபாமா கூறியதால்தானே ஈரான் பெட்ரோலை நிறுத்துகிறீரகள்.அப்போ அதிக விலையை அமெரிக்க அரசிடமே கேட்க வேண்டியதுதானே?
மன்மோகன் சிங்=அமெரிக்கா செய்யும் முட்டாள்தனத்துக்கெல்லாம் இந்திய மக்கள்தான் தண்டம் அழ வேண்டுமா?
தற்போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 69.70 ரூபாயாக உள்ளது. 23-05-2012 நள்ளிரவு முதல் இதன் விலை 77 ரூபாயாக மாறும்.
அமெரிக்க கொசுத்தொல்லை தாங்க முடியலை.
________________________________________________________________________________இது சிலருக்கு அதிர்ச்சியாகவும்,சிலருக்கு ஆச்சரியமாகவும் இருக்கும்.
திமுக வினருக்கு ஆப்பு வைப்பதற்காகவே தேர்தல் ஆணையத்தால் மதுரை ஆட்சியராக வைக்கப்பட்டவர் சகாயம்.அவரும் அதற்கேற்றார் போல்தான் நடந்து கொண்டார் மு.க.அழகிரி யை விசாரனை என்ற பெயரில் மத்திய அமைச்சர் என்ற மரியாதை கூட தராமல் நடந்து கொண்டு நீதிமன்றத்திடம் கொட்டு கூட வாங்கினார்.
ஆனால் அவரை தற்போது கோ-ஆப் டெக்ஸ் நிர்வாக இயக்கு நர் என்ற பதவிக்கு மாற்றிவிட்டார்கள்.முன்பு உமாசங்கர் வகித்த பதவிதான்.தண்டனை பதவியோ?
கடைசியாக சகாயம் விட்ட அறிக்கை மு.க.அழகிரி தொடர்பானது அல்ல.நித்தியானந்தா மீதானது.
மதுரை ஆதீனம் மீதும் நித்தியானந்தா மீதுமான புகார்களின் மீது நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார்.அதற்கான சில வேலைகளில் ஈடும் பட்டிருந்தார்.
அருணகிரி கனவில் வந்த சிவபெருமான் யார் கனவில் வந்தாரோ? சகாயம் மாறுதல் ஆணை வந்து விட்டது. மதுரை மாவட்ட ஆட்சியராக திருவண்ணாமலை ஆட்சியர் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆண் பாவம் பொல்லாதது.அதை விட பெண்பாவம் பொல்லாது என்பார்கள்.அப்படியானால் இரண்டுமாக இருப்பவர் பாவம் எவ்வளவு பொல்லாததாக இருக்கும்.சகாயம் அதை உணராதது ஏன்?
நெருப்பாற்றில் நீந்தி வந்தவர்களை அருணகிரி சந்தித்து பிரசாதம் கொடுத்திருப்பாரோ?
மதுரை மடத்தை காப்பாற்ற போகிறவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்.
இ.ஆ.ப.க்காரர்களை கூட கொசு விடாது போல் தெரிகிறது.ஆன்மிகவாதிகள் நீங்கள் எம்மாத்திரம்?
_____________________________________________________________________________