எம்மன் பயம்


சுரன்
சென்னை எழும்பூர் பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடராஜன் நேரில் வந்து, ஒரு மனுவைகொடுத்தார்.
அந்த மனுவில்,”தமிழக முதல்வரிடம் அளிக்கப்பட்ட தவறான தகவலினால் எனது  மனைவி சசிகலா மற்றும் எனது குடும்பத்தினர் அதிமுகவில் இருந்து கடந்த டிசம்பர் 19 -ம் தேதி நீக்கப்பட்டனர்.இதற்கு பின்னர் எனது குடும்பத்தினர் மீது போலீசார் பொய் புகார்களின் அடிப்படையில் வழக்குத் தொடர்ந்தனர்.

கடந்த பிப்ரவரி 18-ம் தேதி மாலையில் நான் பெசன்ட்நகர் வீட்டில் இருக்கும்போது திருச்சி சரக டி.ஐ.ஜி. அமல்ராஜ் தலைமையிலான போலீசார், என்னை ஒரு நிலமோசடி வழக்குத் தொடர்பாக விசாரணை செய்வதற்கு வருமாறு வேனில் அழைத்துச் சென்றனர்.அந்த வேன் செங்கிப்பட்டி,வல்லம் இடையே நள்ளிரவு 12 மணியளவில் நிறுத்தப்பட்டது.அப்போது காவல்துறையினர் என்னை என்கவுன்ட்டர் செய்வதற்கானமுயற்சியில் ஈடுபட்டனர்.

அந்த நேரத்தில் வழக்குரைஞர்களும்,பத்திரிகையாளர்களும் அங்கு வந்ததால்,அந்த திட்டத்தை போலீசார் கைவிட்டனர்.பின்னர் அவர்கள், என்னை தஞ்சாவூர் நிலமோசடி தடுப்புப் பிரிவு காவல் நிலையத்துக்கு கொண்டுச் சென்றனர். அங்கு ராமலிங்கம் என்பவரிடம் பொய்யான ஒரு புகாரைப் பெற்று, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சுரன்


இவ்வாறு பொய்யான புகார்களின் அடிப்படையில் என் மீது 6 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.போலீசார் என் மீது தொடர்ந்துள்ள எந்த வழக்குகளுக்குமே ஆதாரம் கிடையாது.

என்னை என்கவுன்ட்டர் மூலம் கொலை செய்ய முயன்றதற்கும் போலி வழக்குகளை பதிவு செய்ததற்கும் மத்திய மண்டல ஐ.ஜி. அலெக்சாண்டர் மோகன், திருச்சி சரக டி.ஐ.ஜி. அமல்ராஜ், திருவாரூர் எஸ்.பி. தன்ராஜ் சேவியர், தஞ்சாவூர் எஸ்.பி. ஏ.கே.கிரி, டி.எஸ்.பி. மாணிக்கவாசகம், இன்ஸ்பெக்டர்கள் நாராயணசாமி, ஆர்.சிகாமணி, மாரிமுத்து, சோமசுந்தரம், வேலு ஆகியோர் மீது காவல்துறையின் உயர் அதிகாரிகள் விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். விசாரணையின் மூலம் கிடைக்கும் அறிக்கையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்”என்று நடராஜன்ஏழுதியிருந்தார்.


அதன்பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே வந்த நடராஜன் செய்தியாளர்களிடம் ,”என்னையும், எனது குடும்பத்தினரையும் தமிழக முதல்வரிடமிருந்து பிரிப்பதற்காகவும், தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகவும் சிதம்பரம், கருணாநிதி ஆகியோர் தூண்டுதலின்பேரில் எங்கள் மீது போலி வழக்குகள் பதியப்படுகின்றன.அவர்கள்ஆலோசனைப்படியேகாவல்துறை எனது குடும்பம் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. காவல்துறையினர் என்னை என்கவுன்ட்டர் மூலம் கொலை செய்ய நினைக்கின்றனர்”  என்றார் நடராஜன்.
நடராஜனுக்கு தமிழ் நாட்டில் யார் ஆட்சி செய்கிறார்கள் என்பது கூட சிறையில் இருந்ததில் மறந்து விட்டது.
நூற்றாண்டு சாதனைகள் ஓராண்டில் விளம்பரங்களையுமா இவர் பார்க்கவில்லை.

இவரின் மனைவி -மன்னார் குடி கூட்டங்களை வெளியே அனுப்பியவர்தான் இவரையும் நில மோசடி வழக்கில் உள்ளே தள்ளினார்.அது கூட கருணாநிதிதான் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாரோ?
இவரின் மனைவி யாருடைய பங்களாவில் இருக்கிறாரோ அந்த வீட்டின் உரிமையாளரின் -இவரின் மனைவியின் உடன் பிறவா சகோதரியின் ஆட்சிதான் நடக்கிறது.காவல்துறையும் அவர் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
ஜெயலலிதா கையை நீட்டுபவர்கள் மீதுதான் சட்டத்தின் ஆட்சி செயல் படும்.
பாவம் கருணாநிதி சுற்றி,சுற்றி அவரின் உடன்பிறப்புகள் மீது போடப்படும் வழக்குகளையே சந்திக்க இயலாமல் இருக்கிறார்.
2-ஜி வ;லையில் மாட்டிக்கொண்டு வெளியே வரமுடியாமல் தவிக்கிறார் சிதம்பரம் .இவர்கள் இருவரும் சொல்லி தமிழக காவல்துறையினர் செயல்படுகிறார்கள் என்றால் இந்த 2012 இல் கண்டிப்பாக இதுதான் சிறந்த சிரிப்பு.சோ உடல் நலமாகி வரட்டும் .ஒரு பைசா பரிசை மணியார்டர் செய்யச் சொல்கிறோம்.

நடராஜனுக்கு ஜெயலலிதாவை தாக்கி ஏதாவது சொல்லப்போய் முதலுக்கே மோசம் வந்திடும் என்ற பயம்.அதன் வேகத்தில்தான் என்ன சொல்கிறோம் என்பதையே உணராமல் பேசுகிறார்.

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=++++++++++++++++++++++

டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ், எகனாமிக் டைம்ஸ், ஏசியன் ஏஜ், இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்து பிசினெஸ் லைன், மின்ட், பிசினெஸ் ஸ்டாண்டர்டு, தி ஸ்டேட்ஸ்மென், தி டெலிகிராப் மற்றும் தி ஹிந்து, அனைத்து தமிழ் பத்திரிகைகள் என சகல ஊடகங்களிலும் ஆறு பக்க விளம்பரம் பேய்மழை போல வெளிவந்தது. இதில் பல ஆங்கிலத் தினசரிகளுக்கு தமிழ்நாட்டில் பதிப்பே கிடையாது.
சுரன்

இதன் ஒட்டு மொத்த செலவு தோராயமாக 50 கோடி ரூபாய் இருக்கும் என்கிறார்கள். ஒரு நிறுவனம் ஒரே நாளில் விளம்பரத்திற்க்காக அதிக பட்சம் செலவழித்திருப்பதில் இதுதான் சாதனை என்கிறார்கள். இதற்கு முன்னர் வோடோஃபோன் நிறுவனம் தனது சாம்ராஜ்ஜியத்தை துவக்கிய தினத்தன்று அதிக பட்சம் பத்து கோடி ரூபாயை ஒரே நாளில் செலவழித்ததுதான் ரிக்கார்டாம். அந்த வகையில் இது ஒரு ரிக்கார்டு பிரேக்! அம்மாவின் ஆட்சி மட்டுமல்ல விளம்பரமும் சாதனைதான் என்று ஒரு விளம்பரம் கொடுத்து விட்டால் போயிற்று! இந்த விளம்பர யுத்தம் ஒரு நாளோடு முடிந்துவிடவில்லை. அதன் பிறகும் எல்லா தினசரிகளிலும் ஒரு பக்க விளம்பரங்கள் இதுவரை வந்தபடிதான் இருக்கின்றன. இதன் கணக்கு தனி! எப்படியும் பல கோடிகள் இரைக்கப்பட்டிருக்கும்.
________________________________________________________________________


சுரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?