முல்லை பெரியாறும் தாமசும்-மத்திய அரசும்
பல ஆய்வுக் குழுக்கள் நடத்தி, நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் குழு முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாகவே உள்ளது. 142 அடி தண்ணீரைத் தேக்கலாம் என்று அறிக்கையில் கூறியுள்ளது.
இதற்கு பிறகும் இதில் மேலும்ஆய்வு செய்யவோ,போராட்டம் செய்வதற்கோ கேரள அரசுக்கு ஆதாரம் ஏதும்இல்லை.இனி142 அடி நீரை முல்லைப் பெரியாறு அணையில் தேக்கிக் கொள்ளும் தமிழக உரிமையில்தடையை ஏற்படுத்தவாய்ப்பு இல்லை.
அதனால்தான்கேரள அரசின் பிரதிநிதியாக ஆய்வுக்குழுவில் இடம் பெற்ற நீதிபதி கே.டி. தாமஸ் மீது, நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பி.ஜே. ஜோசப் கடுமையான கருத்துக்களை வெளியிட்டு அவரின் முன் பேரணி நடத்தச் ஏற்பாடு செய்யதுஅதுவும் சிலரால் நடத்தப்பட்டுள்ளது.
நீதிபதி கே.டி. தாமஸ்" நான் நேர்மையாகச் செயல்பட்டுள்ளேன். அமைச்சர் சொல்வதையெல்லாம் கேட்டு நான் அறிக்கையைத் தயார் செய்ய முடியாது. அமைச்சர் சொல்வதைதான் அறிக்கையாக தருவேன் என்று நான் உறுதி கூறவில்லை.உண்மையை கூறுவேன் என்றுதான் உறுதி எடுத்துள்ளேன்.அதையே செய்துள்ளேன்.அமைச்சர் ஜோசப் செயல்பாடுகள் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்"என்று வருத்தத்துடன்கூறியுள்ளார்.இதற்குமுன்கேரள அரசு வழக்குரைஞர் - முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாகவே உள்ளது என்று உண்மையைக்கூறி வாங்கிக்கட்டிக்கொண்டார்.
இப்பொழுது குழு அறிக்கை உச்சநீதிமன்றத்திடம் உள்ளது. உச்சநீதிமன்றம் தீர்ப்பும் தமிழ் நாடுக்கு ஆதரவாகத்தான் வரும் நிலை உள்ளது.
கேரள அரசு இதுவரை உச்சநீதிமன்றம் அளித்துவந்த தீர்ப்புகளை - ஆணைகளை உதாசீனம் செய்து வந்துள்ளது. இப்பொழுதும் அவ்வாறே கேரள அரசு நடந்து கொள்ளுமானால் - அதனை குற்றவாளியாக உச்சநீதிமன்றம் அறிவிக்க வேண்டும்.
இந்திய அரசு மாநிலங்களுக்கிடையிலான நதி நீர்ப் பிரச்சினையில் இன்னமும் பொறுப்பற்ற முறையிலும்,வழுக்கல் நடையிலும் நடந்து கொள்ளுமேயானால் விளைவு - மத்திய அரசுக்கு இந்திய மாநிலங்களை நடத்தி செல்லும் முறையிலேயே விரிசல் விழும்.மத்திய அரசு தேவையா என்ற நிலை உருவாகும்.
இந்தியக் கட்டமைப்பின் தேசியம் என்ற பெயரில் தமிழ்நாடு அடைந்து வரும், இழப்புகள் அதிகம்.
குறிப்பாக முல்லைப் பெரியாறு அணையில் 136 அடி உயரமாகக் குறைக்கப்பட்டதால் 38 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் தரிசாகி விட்டன என்பது சாதாரணமா! குடிநீர்ப் பிரச்சினையும் ஏற்பட்டு வருகிறது.
இதே போன்ற நதி நீர் பிரச்னைகளை கர்நாடகம் மூலமும்,ஆந்திரா மூலமும் தமிழ் நாடு அடைந்து வருகிறது.அனைத்துக்கும் சரியான தீர்வை கூறும் பொறுப்ப்பும்,அதிகாரமும் மத்திய அரசிடம்தான் உள்ளது.அது தனது பொறுப்பை தட்டிக்கழிப்பதன் மூலம் மாநிலங்கள் கூட்டமைப்பு அரசுக்கே ஆபத்து.
நதிகளை தேசியமயமாக்க வேண்டும்.புதிதாக அணைகள் கட்டுவதையும்.அணைகளின் உயர்த்தை அதிகரிப்பதையும் இனி அனுமதிக்கக் கூடாது.
கீழே மாயாவதியின் யானை சிலைகள் பூங்கா.
__________________________________________________________________________________