அறிந்தே செய்தவர்கள்...............
மும்பை நகரில் இருக்கும் வேளாங்கண்ணி தேவாலயத்தில் உள்ள இயேசு சிலையின் கால்களில் இருந்து தண்ணீர்திடீரென சொட்ட ஆரம்பித்தது. அதை கத்தோலிக்கர்கள் மிகவும்அதிசய நிகழ்வாக கருதி குவிந்தனர்.
பிதாவே அறியாமல் செய்த இவர்களை மன்னியும். |
நூற்றுக்கணக்கானவர்களை இந்த சிலையின் காலைப்பார்க தினசரி குவிதனர்.இப்படி காலில் இருந்து வடியும் நீருக்கு நோய்களை குணமாக்கும் சக்தி இருப்பதாகக்ஈடையில் சிலரால் கிளப்பிவிடப்பட்டது.
இந்த இயேசு சிலைகாலில்வடிந்த நீரை போட்டி போட்டு சேகரித்துகுடித்த பக்தர்கள் மூட்டுவலி முதல் புற்றுநோய் வரை பலவகையான நோய்களையும் இந்த தண்ணீர் குணப்படுத்த வல்லது என்று விளம்பரம் செய்ய ஆரம்பித்தார்கள்.
இந்த நீர் எங்கிருந்து-எப்படி வருகிறது என்பது தெரியாமல் இயேசுவின் அற்புத செயலாக பார்க்கப்பட்டது.அதை கண்டு பிடிக்க வில்லனாக வந்தார்இந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவரும் பத்திரிகையாளருமான சணல் எடமருகு.அந்த இடத்திற்கு நேரில் சென்ற அவர் அங்கே ஒருமணிநேரம் ஆய்வு செய்து கடைசியில் உண்மையை கண்டுபிடித்து விட்டார்.
அந்த சிலைக்கு அருகில் இருந்த கழிவறையில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக தண்ணீர் தேங்கியதையும், அப்படி தேங்கிய தண்ணீரே இந்த சிலையின் கால் வழியாக கசிந்தைஅவர் கண்டுபிடித்து அந்த தண்ணீரை காலி செய்ததும் இயேசு தன் சிலையின் காலில் வடிந்த நீரையும் நிறுத்தி விட்டார்.
சிலையில் நீர் வடிந்ததும்அதை என்ன காரணம் என்று பார்க்காமல் மதத்தின் பேரில் மக்களை கழிப்பறை நீரை குடிக்க வைத்த இந்த கத்தோலிக்க குமார்கள் மீதுதான் வழக்கு பதிய வேண்டும்.
சிலவகை கற்களில்நீர் கசிவது இயற்கை.அவை மழை நீர்,பனிப்பொழிவு மூலம் நீறை உறிஞ்சிக்கொண்டுபின்னர் நீரை கசிய விடும் இயற்கை தன்மை கொண்டது அதில் சாமி சிலைகளை செய்து கொண்டு நீர் வடியும் வேளை மக்களை சாமி பெயர் சொல்லி ஏமாற்றுபவர்கள் மீது கடும் நடவடிககை எடுக்க வேண்டும்.
பழமையான வேப்ப மரத்தில் பால் வடிவதும்,இனிப்பான நீர் கசிவதும் தாவரவியல் நடப்பு அதையும் அமமன் அருளாக்கிவிடுகிறார்கள்.
முன்புமக்களின் பாவத்தை போக்க பணத்தை வாங்கிகொண்டு பாவம் மன்னிக்கப்பட்டதாக ரசீதுகொடுத்த்வர்கள் இந்த அளவாவது முன்னேறியிருக்கிறார்கள் என்று மகிழ வேண்டியதுதான்.
இனி சாமி சிலைகளில் நீர் ,தேன் வடிந்தால் அங்குள்ள கழிப்பறையை
முதலில் சரி பார்த்துகொள்ளுங்கள்.இல்லாவிடில் வியாதி குணமாகாது புது வியாதிதான் வரும்.
____________________________________________________________________________________________
அஞ்சலி
_________
இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே சுமார் 30 ஆண்டுகளாக சண்டை நடந்து வந்தது.இருதரப்பிலும் பலர் உயிர் இழந்தனர்.
அப்பாவி தமிழர்களும் ஏராளமான எண்ணிக்கையில் கொல்லப்பட்டனர்.
முதலில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு காட்டிவந்த இந்தியா ராஜீவ் கொலைக்குப் பின்னர் தனது நிலையை மாற்றி புலிகளுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தது.. விடுதலைப்புலிகளுக்கு மற்ற நாடுகளில் இருந்துஆயுதங்கள் வருவதையும் தடுத்தது. இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கை ராணுவத்துக்கு தொழில்நுட்ப உதவிகளையும், தளவாடங்களையும் கொடுத்து உதவின.
இதன் காரணமாக விடுதலைப்புலிகள் அமைப்பு பலவீனம் அடைந்தது. புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையேயான இறுதிக்கட்ட யுத்தம் 2006, ஜூலை 26-ந்தேதி தொடங்கியது.விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வரும் வழிகளை இந்தியா அடைத்து விட்டதுடன் விடுதலைப்புலிகள் நடமாட்டத்தையும் சிங்கள படையினருக்கு உடனுக்குடன் தெரிவித்து இந்திய படையினரும் உதவியதால் புலிகள் தரப்பில்உயிர் சேதம் அதிகரித்த்தது.ஆயுதங்கள் இல்லாதவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.சிலர் சரண் அடைந்தனர்.
கடைசியில் எஞ்சியவர்கள் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், அவரது மகன் பாலச்சந்திரன் உள்ளிட்ட சிலர் மட்டுமே. அவர்களும் 2009-ம் ஆண்டு மே மாதம் 18-ந்தேதி, இலங்கை ராணுவத்தால் கொடூரமாக கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டன.முள்ளி வாய்க்க்கால் பகுதியில் அப்பாவி தமிழர்களைசிங்களப்படையினர் சுற்றி வளைத்து ஹிட்லர் பானியில் கொடுரமாக கொன்று குவித்தனர்.
இதனால்30 ஆண்டுகள் ஈழப்போர் முடிவுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டது. இலங்கை ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட யுத்தம் முடிந்து,மே-18யுடன், 3 ஆண்டுகள் நிறைகிறது.
இறுதிக்கட்ட போர் உலக அளவில் பலவித அதிர்வுகளை உருவாக்கியுள்ளது.
இறுதிக் கட்டப்போரில் அப்பாவி தமிழர்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டதற்கு போர் குற்றவாளியாக இலங்கை ஐ.நா மன்றத்தில் கண்டனம் தெரிவிகப்பட்டுள்ளது.ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.
வெற்றியை கொண்டாட பக்ஷேயின் சிங்களராணுவம்ஏற்பாடுக்கள் செய்து வரும் வேளையில் எந்த குற்றமும் செய்யாமல் இலங்கையில் தமிழர்க்களாகப்பிறந்த காரணத்தால் மட்டும் சிங்கள வெறியர்களால்கொன்றுகுவிக்கப்பட்ட ஈழத்தமிழர்களை நினைவு கொள்வோம்.அவர்களின் கனவுகள் என்றாவது நினவாகும் என்ற நம்பிக்கையுடன்.
____________________________________________________________________________________________
_