எளிய மு [ன்னாள்] தல்வர்
“மாயாவதி உ.பி., முதல்வராக இருந்த போது, 13, மால் அவென்யூவில் உள்ள பங்களாவில் குடியிருந்தார். இந்த வீட்டை புதுப்பிப்பதற்கு, அரசு சார்பில் எவ்வளவு தொகை செலவிடப்பட்டது” எனதகவல் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மேற்கண்ட பதிலை உ.பி.,யில் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான வீடுகளை பராமரித்து வரும் எஸ்டேட் துறை தந்துள்ளது.
மால் அவென்யூ பங்களாவை புதுப்பிப்பதற்காக, 86 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. கடந்த 2007ல், மாயாவதி முதல்வராக பதவியேற்றதும், புதுப்பிக்கும் பணி துவங்கியது. கடந்தாண்டு அவர் பதவிகாலம் முடியும் நேரம்தான், இந்த புதுப்பிக்கும் பணி முடிவடைந்துள்ளது. இந்த பங்களாவை விரிவுப்படுத்துவதற்காக, அருகில் இருந்த அரசு அலுவலகம் ஒன்றும்இடிக்கப்பட்டது.
ஒவ்வொருஜன்னலுக்கு மட்டும்15 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. பங்களா, ஆறு அறைகள் கொண்டதாக மாற்றி அமைக்கப்பட்டது. ஒவ்வொரு அறையிலிருந்தும், மற்ற அறைக்கு செல்லக் கூடிய வகையில், இந்த அறைகள் அமைக்கப்பட்டன. இந்த பங்களாவின் இரண்டு ஜன்னல்களுக்கு, குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்தப்பட்டன. ஒவ்வொரு ஜன்னலுக்கும் 15 லட்சம் ரூபாய் செலவானது. விருந்தினர் இல்லமும் இங்கு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இந்த விருந்தினர் இல்லத்தில் 14 அறைகள் அமைக்கப்பட்டன. இவ்வாறு அப்பதிலில் கூறப்பட்டுள்ளது.
மாயாவதிக்கு எதையுமே பிரமாண்டமாக செய்துதான் பழக்கம்.அது அம்பேத்கர். யானை சிலைகளாகட்டும் கோடிகள்தான் .
அதை யாராவது தட்டிக்கேட்டால்.நான் தலித் என்பதால் இப்படி செய்கிறார்கள் என்ற வாதம் தயாராக வைத்திருப்பார்.இவரின் முறை கேடுகளுக்கு தலித் வார்த்தை ஒரு கேடயம் .மற்றபடி அவர் உண்மையிலேயே தலித்,ஏழை மக்களுக்கான முன்னேற்றம் விரும்பும் தலைவர் என்றால் வெறும் சிலைகள் ஊர் முழுக்க அமைக்க 20000 கோடியை செலவிடுவதற்கு பதிலாக தலித்,ஏழை மக்களுக்கு வீடு வசதி,வேலை வசதிகளை செய்து கொடுத்திருக்கலாம் .அதைப் பற்றி அவர் கனவில் கூட நினைத்தது கிடையாது.அதனால்தானே அவரிடம் மீன்டும் ஆட்சி அமைக்க தலித்துகள் கூட வாக்களிக்கவில்லை.வெறும் அம்பேத்கர்,யானை சிலைகளால் தலித் மக்கள் வாழ்வுநிலை உயர்ந்து விடுமா என்ன?
அவைகள் நடைபாதை இடத்தை அடைக்கவும்,காக்கைகள் கழிப்பறைக்கும்,தேர்தல் நேரம் துணியால் மூடவும் மட்டும்தான் பயன்படும்.
மாயாவதிக்கு தேர்தலில் வாக்குகளை வாங்கிக்கொடுக்கக் கூடமுடியாத அவைகளால் வேறு என்ன பயன் ?