காற்றாடும் மின்வாரியம்

இரண்டு நாள்களாக மின்சார வெட்டு மிகக்குறைவாக இருந்தது அம்மா சொன்னபடி படிப்படியாக மின் வெட்டு நீங்கி விடும் என்று கவிதை எல்லாம் எழுதும் மனநிலைக்கு வந்து விட்டேன்.ஆனால் [அரசு]விதி பழைய குருடி -கதவைத் திறடி என்றாகி விட்டது.
காற்றாலை மின் உற்பத்திதான் அப்படி இரு நாட்களை தமிழகத்தில் மின்னொளி வீச வைத்துள்ளது.
இப்போது காற்றாலைகளை அடக்கி வாசிக்க தமிழ் நாடு அரசின் மின் வாரியம் கூறி விட்டதால் அவைகள் தங்கள் மின் உற்பத்தியை குறைத்து விட்டனவாம்.
சுரன்


தமிழகத்தின் இன்றைய மின்சார நிலைமை. வழக்க மான மின்சார உற் பத்தி நிலையங்க ளால் போதிய மின் சாரத்தை வழங்க முடியாத நிலையில் அதை ஈடுகட்ட உத வும் என்ற எதிர்பார்ப் புடன் காற்றாலை மின்சார நிலையங் கள் நிறுவப்பட்டன. பெரும்பாலான காற் றாலை நிலையங்கள் சிறிய, நடுத்தர தனி யார் நிறுவனங்க ளின் கையிலேயே இருக்கின்றன.போதுமான காற்று வீசினால்தான் அந்த நிலையங்களில் மின் சார உற்பத்தி நடை பெற முடியும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
தமிழ கத்தின் மின் வெட்டுச் சூழலில் தற்போது உருவாகியுள்ள சற்றே ஆறுதலான நிலை மைக்குக் காரணம், சாதகமான காற்று வீசத் தொடங்கியிருப்பதும், காற்றாலை மின் நிலையங்கள் இயங்கத் தொடங்கியி ருப்பதும்தான்.ஆனால், காற்று தாராளமாக வீசத் தொடங்கிவிட்ட பிறகும் பல காற்றாலை கள் சும்மா இருக்க வேண்டிய நிலை! தமிழகத்தில் பல இடங்களில் 10,882 காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஒரு காற்றாலையில் குறைந்தது 200 கிலோவாட் முதல் அதிக அளவாக 20,000 கிலோவாட் வரையில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியுமாம். காற்று சாதகமாக வீசிடு மானால் இந்த காற்றாலைகளிலிருந்து ஒவ்வொரு நாளும் 6,996 மெகாவாட் மின்சாரம் பெற முடியும். காற்று சாதகமாக இல்லாத காலத்தில் சுமார் 600 மெகா வாட் மின்சாரம் மட்டுமே இவற்றால் உற் பத்தி செய்ய முடிந்தது. மாநிலத்தில் ஏற் பட்ட மின்சாரத் தட்டுப்பாட்டிற்கு, அரசின் கொள்கைக்கோளாறு,
சுரன்

மின்வாரியத்தின் நிர்வாகக் கோளாறு ஆகியவற்றுக்கு அப் பால், காற்று சாதகமாக வீசாததால் காற் றாலை மின்சார உற்பத்தி சரிவடைந்ததும் ஒரு காரணம்.மாநிலத்தின் இன்றைய ஒருநாள் மின் சாரத் தேவை சுமார் 9,500 மெகாவாட். தற்போது காற்று சாதகமாக வீசும் காலம். இந்த காற்றாலைகளிலிருந்து சுமார் 6,996 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வேண் டும். ஆனால் உற்பத்தியாவது என்னவோ அதிக அளவாக 2,500 மெகாவாட் மட் டுமே. ஏப்ரல் மாதம் வரை காற் றின் வீச்சு குறைவாக இருந்ததால் 600 மெகாவாட் முதல் அதிக அளவாக 1,100 மெகாவாட் வரையில்தான் மின் உற்பத்தி இருந்திருக்கிறது.
இப்போது காற்று சாத கமாக வீசத்தொடங்கியிருக்கிறது. காற்று வீசும் காலம் தொடங்கிவிட்டால் மின்சாரத் தட்டுப்பாடு பிரச்சனை தீர்ந்துவிடும் என்று அமைச்சரும் அதிகாரிகளும் சொல்லிவந்தார்கள்.முழு உற்பத்தித் திறனும் ஈடுபடுத்தப் பட்டால் மாநிலத்தின் மின்சாரப் பற்றாக் குறை நிலையை இந்தக் காற்றுக் காலத் தில் பெருமளவுக்கு சமாளித்துவிட முடி யும் என்கிறார்கள். இருந்தபோதிலும், மூன் றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே உற் பத்தி செய்யப்படுவதற்கு என்ன கார ணம்? உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுமையாகக் நுகர்வோருக்குக் கொண்டுசென்று சேர்ப்பதற்கான தொழில்நுட்ப ஏற்பாடுகளும் கட்டமைப்பு களும் தமிழ்நாடு மின்வாரியத்திடம் போதுமானதாக இல்லை! ஆகவே குறை வாக உற்பத்தி செய்யுமாறு காற்றாலை நிறுவனங்களிடம் மின்வாரியம் கூறியுள்ளது.
அது மட்டுமல்ல, காற்றாலைகளுக்கு மின்வாரியம் கொடுக்க வேண் டிய சுமார் 2,200 கோடி ரூபாய் நிலு வை.
பிறகு எப்படி உற் பத்திஅதிகரிக் கும்.
சுரன்

அம்மை யாரைக் கேட்டால் கலைஞர் ஆட் சியின் நிர்வாகக் கோளாறே காரணம் என்கிறார். கலைஞர் அம்மையார் ஆட்சியின் அவலம் என்கிறார். உண்மையில் உள்கட்டமைப்பு களை வலுப்படுத்தத் தவறியதற்கு மாற்றி,மாற்றி ஆண்டுவரும் இரண்டு ஆண்டவர்களும் தான் காரணம்.
கலைஞரைசொல்லி அம்மையார்நழுவ முடியாது.
கலைஞர் ஆட்சிக்கு முன் அம்மையார் ஆட்சியே இங்கு இருந்தது. அப்போதும் கட்டமைப்புகளை வலுவாக்க அம்மையார் எதையுமே செய்யவில்லை.
இன்றைய ஒளிரும் தமிழ் நாட்டை செதுக்கிய சிற்பிகள் இருவரும்தான்.இன்றைய மின் வெட்டு யுகத்துக்கு இருவருமே பொறுப்புதான்.
இல்லாத மின்சாரத்துக்கு அதிக கட்டணம் முடிவு செய்ய கருத்துக்கேட்பு நடத்தி கட்டணத்தை உயர்த்தியதுதான் மின்சாரம் தொடர்பாக அம்மையார் செய்த ஒரே சேவை.இப்படியே கொண்டு போங்க .தமிழ் நாடு உருப்படும்.
_____________________________________________________________________________

ஹிட்லர் சமாச்சாரம்.

ஜெர்மனிய சர்வதிகாரி ஹிட்லர் யூதர்களை ஒருபுறம் கொன்று குவித்தாலும் மறுபுறம் தனது காதலி ஈவா பிரவ்னுடன் காதல் லீலைகள்  தங்கு தடை யின்றி நடந்து கொண்டுதான் இருந்தது.
தனது இளமையை நீடிக்கவும்-உற்சாகமாக இருக்கவும் கோகைன் உட்கொள்ளும் பழக்கம் ஹிட்லருக்கு இருந்துள்ளது.
சிறு உருண்டைகளாக கோகைன் உட்கொள்வதுடன் ஈவா பிரவ்னுடன் காதல் லீலைகளில் ஈடுபட சில மருந்துகள்-ஊசிகள் என 28 வகையான மருந்துகளை ஹிட்லர் உபயோகித்திருக்கிறார்.
சுரன்

இது போன்ற விபரங்களை அவரின் மருத்துவர் பில் பனகோலாஸ் பின்னர் அமெரிக்க படியினரிடம் தெரிவித்துள்ளார்.
ஹிட்லரின் மருத்துவ பரிசோதனை அறிக்கை 178 பக்கங்களில் அமெரிக்க ராணுவ மருத்துவரான இர்வின் கீசிங் கிடம் 12-06-1945இல்  ஒப்படைக்கப்பட்டது.அதில் ஹிட்லர் சைனஸ் மற்றும் ஒவ்வாமையால் தாக்கப்படிருந்ததும் தெரிகிறது.
சுரன்

இளம் எருதுகளின் விறைகளில் உற்பத்தியாகும் விந்தினால் உருவாக்கப்பட்ட மருந்தை உட் கொண்டு தனது ஆண்மையை ஹிடலர் பெருக்க நினைத்தார்.மற்றபெண்களை விட ப்ரவ்ன் உடன் தனது படுக்கையை தினம் பகிர்ந்து கொள்ள ஹிட்லர் நினைத்தார்.வாயு மாத்திரை,கல்லீரல்நோய் என்று சில மருந்துக்களை தொடர்ந்து உட்கொண்டு தனது உடலில் விசத்தன்மையை ஹிட்லர் உண்டாக்கி விட்டார்.என்று டியோடர் மாரல் என்ற ஹிட்லர்மருத்துவம் பார்த்த மருத்துவர் அறிவித்துள்ளார்.
உலகை பயமுறுத்திய ஹிட்லருக்கு தனது ஆண்மையின் மீதும் உடல்நலத்தின் மீதும் ஒரு இனம் புரியா பயமும் அதற்காக பல மருந்துக்களை உட் கொண்டதும் தெரிகிறது.
ஹிட்லருக்கு ரகசியமாக மகன் பிறந்தார்.பிரஞ்சு பெண்னுக்குத்தான் அந்த மகன் பிறந்தான்.அது ரகசியமாக வைத்துக்கொள்ளப்பட்டது என்றும் ஒரு கதை உலவுகிறது.

சுரன்
ஹிட்லர்-ஈவா ப்ரவ்னுடன்.
_____________________________________________________________________________

ஹஜ் பயணம் அரசு உதவித்தொகை சரியா?


இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் சுமார்1.75 இலட்சம் பேர்கள் ஹஜ் பயணம் செல்கின்றனர்.
இதில் 1.25 இலட்சம் பேர் மத்திய அரசு நியமிக்கும் குழுவால் தெரிவுசெய்யப்பட்டு அவர்களது பயணக் கட்டணத்தை விமான நிறுவனத்துக்கு அரசு அளித்துவருகிறது.
சுரன்

இந்த பயணம் முற்றிலும் ஒரு மதம்சார்ந்த புனித பயணம்.ஆனால் அப்படிசெல்பார்களில் சிலர் நாங்கள் முக்கிய பிரமுகர்கள் அரசு நிறுவனமான ஏர் இந்தியாவைத் தவிர்த்து வேறு நிறுவன விமானங்களில்தான் பயணம் செய்வோம் அதற்கும் அரசு பணத்தை அந்த விமான நிறுஅனத்துக்கே கொடுக்க வேண்டும் என்று கேட்க அதை மத்திய அரசு மறுக்க மும்பை நீதிமன்றத்தில் வழக்கும் போட்டு விட்டனர்.அவர்கள் கேட்பது போல்வேறு விமானங்களுக்கும் கட்டணத்தை அளிக்கலாம் என்ற மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பு வழ்ங்கிவிட்டது.அதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுச் செய்தது,
மனுவில் வேறு விமானத்துக்கு கட்டணம் கொடுப்பதை மட்டும் அல்ல.ஒரு குறிப்பிட்ட மத சடங்குக்கு பல்வேறு மதத்தினர் வாழும் இந்திய அரசு மானியம் கொடுப்பது சரியா?தேவைதானா? என்ற வாதத்தையும் மத்திய அரசுஎழுப்பி விட்டது.
அதற்கு பதிலளிக்கும் வகையில், நீதிபதிகள் அல்தமஸ் கபீர் மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய அமர்வு மானியம் கொடுப்பதை நிறுத்தி விடலாம் எனக் கூறியிருக்கிறது.
சுரன்

மேலும் இந்திய ஹஜ் தேர்வுக்குழு எப்படி செயல்படுகிறது என்பதையும், ஹஜ் பயணத்துக்கு பயணிகள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதையும் அரசு ஆய்வு செய்யவில்லை.அதை தான் ஆய்வு செய்யப்போவதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

சில முஸ்லீம் அமைப்புகள் , ஹஜ்ஜிற்கு இலட்சக்கணக்கில் முஸ்லிம்கள் செல்கிறார்கள், அவர்களது பயணத்திற்கான கட்டணத்தை அரசு கொடுக்காவிட்டாலும் முஸ்லிம்களுக்கு இழப்பில்லை.ஆனால் தங்கள் மதக் கடமையை நிறைவேற்ற கட்டணத்தொகையினை எப்படியாவதுமுஸ்லீம்கள் திரட்டிவிடுவார்கள். எனவே மானியத்தை நிறுத்தி விட்டு ஹ்ஜ் பயணிகளுக்கு அரசு வேறு வசதிகள் செய்துகொடுக்கலாம் என்று ஆலோசனை கூறியுள்ளன..
_____________________________________________________________________________
சுரன்


சுரன்



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?