தலை முடி பிரச்னை

மதுரை ஆதினம் மடாதிபதியாக இல்லாமல் நித்தியானந்தாவை வாரிசாக முடி சூட்டியதன் மூலம் மடதிபதியாகியுள்ளார்.
நித்தியானந்தாவை வாரிசாக்கியதற்கு நித்தி பீடத்தில் பெண்கள்-ஆண்கள் ஆடி வழிபாடு செய்து ஆனந்தமாக உள்ளது அவரை கவர்ந்துள்ளதாம்.அதுதான் மூலக்காரணமாம்.எல்லோரும் மகிழ்ச்சியாக ஆடி,பாடி இருக்க வேண்டுமாம்.அப்படி என்றால் அருணகிரியார் டாஸ்மாக் பார்களில் பார்த்ததில்லைப்போல் இருக்கிறது.நித்தி பீடத்தை விட ஆனந்திகள் அதிகம் உள்ள ஆனந்தபீடம் அது.அரசு அனுமதி பெற்றதும் கூட.அருணகிரியார் முன்பு கூட தடாலடி தமாசுகள் பல செய்ததுண்டு.திடீரென மேடையில் துப்பாக்கியைக்காட்டி நான் துப்பாக்கி வைத்திருக்கும் மடாதிபதி என்கிட்டே வச்சுக்கிடாதிங்க என்று கூறியவர்.மேடையில் தடாலடி செய்வதை கொஞ்ச காலம் நிறுத்தியிருந்தார்.இப்போது பெரிய அடையாக அடித்துள்ளார்.

நித்தி தேர்வை மற்ற பாரம்பரிய ஆதினங்கள் எதிர்த்து தீர்மானங்கள் ஏற்றினால் அவர்களை நித்தி மிரட்டி தனது ரசிகர்கள் ரத்தக்கையெழுத்திட்டு வழக்குகளை எதிர்க்கும் ஆதினங்கள் மீது தொடர்வார்கள் என்கிறார்.
இவரெல்லாம் ஒரு ஆன்மிகவாதி?
மதுரை அருணகிரியார் செய்த அசிங்கம் பிடித்த வேலையால் ஆதினங்களின் 
அமைதியான நிலையே அடிபட்டுப்போயிற்று.ஒரு கோடியும் ,தங்க செங்கோலுக்கும்தான் மடாதிபதி பதவி விறகப்பட்டுள்ளது தெரிகிறது.ஆனால் அதை விட அதிகமான சொத்துக்கள் மதுரை ஆதினத்துக்கு உள்ளது.அருணகிரி காலத்துக்குப்பின் அதை கட்டி அனுபவிப்பவர் நித்திதானே.
தன் மீது குற்றம் சாட்டுவது பொய் என்றால் இன்னமும் ரஞ்சிதாவை கழட்டி விடாமல் வெட்கங்கெட்டு எல்லா இடமும் கூட்டிக்கொண்டு அலைவது ஏன்?
மானம்-அவமானம் பார்ப்பவர்கள் இது போல் குற்ற சாட்டுக்கு ஆளாகிவிட்டால் தான் குற்றமற்றவர் என்று நிச்சயம் செய்ய வேண்டும்.பழைய சகவாசங்களை களைய வேண்டும்.ஆனால் நித்தி இதில் எதையும் செய்யவில்லை. போதாதற்கு குற்றம் சுமற்றியவர்களை மிரட்டிக்கொண்டிருக்கிறார்.பல்லைக்காட்டிக்கொண்டு இன்னமும் அலைகிறார்.தனது ரசிக அடியாட்கள் மூலம் பயங்காட்டுகிறார்.எதிர்ப்பு தெரிவித்து திருநாவுக்கரசர் வாழ்க என்ற இந்து மக்களுக்கு எதிராக விஜய்காந்து போல் நாக்கை மடித்துக்கொண்டு நித்தியானந்தாஜி வாழ்க என்கிறார்கள்.அநத மடம் அமைத்தவரையே வாழ்க என்று கூற விரும்பாதவர்கள் மடத்தின் பெருமையை காப்பாற்றுவார்களா?
இந்து மதத்தில் ,இந்தியாவில் எவ்வளவோ தலையாய பிரச்னைகள் இருக்கும் போது என் தலை முடியைப்பற்றி பேசுகிறார்களே என்ற நித்தியானந்தாவின் பொன்மொழிக்கேற்ப இந்த முடி பிரச்னையை ஆன்மிகவாதிகளிடமே விட்டு விடுவோம்.
இந்த நித்தி நியமனத்தை 10 நாட்களில் திரும்ப பெற வேண்டும் அல்லது மடத்தை அரசு நிர்வகிக்க வேண்டும் என்று ஆதினங்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ் நாடு இந்து அற நிலையத்துறை மூலம் எடுத்து நடத்த சட்டத்தில் இடமில்லை என்று தெரிகிறது.
மதுரை அருணகிரி மனதை மாற்றி நித்தி நியமனத்தை திரும்பப்பெற வேண்டும் மற்றபடி ஆதினத்தில் அரசு தலையிட முடியாது எனப்படுகிறது.அருணகிரியார் வாங்கியஒரு கோடியை ,தங்க செங்கோல்,கிரிடத்தை திரும்பகொடுக்க வேண்டுமே.
மானமா?பணமா?வெல்லுவது எது .அருணகிரியாரிடம்தான் முடிவு.
சுரன்

--------------------------------------------------------------------------------------------------------
இவருக்கு நடப்பது பாலாபிசேகம்.இலங்கை பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் இது.

---------------------------------------------------------------------------------------------
இது லண்டனில் ஒலிம்பிக் நடக்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மெக் டொனால்ட் கடை.உலகிலேயே பெரிது.30000 ச.அ.யில் கால்பந்தாட்ட மைதானம் அளவில் உருவாக்கப்பட்டுள்ளது.

சுரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?