100 ஆண்டு நாளிதழ்-

புரட்சியாளர் லெனின் 1912ம் ஆண்டு மே 5ம் தேதி யன்று நிறுவிய ரஷ்ய உழைக்கும் மக்களின் நாளித ழான ‘பிராவ்தா’[உண்மை]வின் நூற் றாண்டு விழாக் கொண் டாட்டங் கள் எளிமையான முறையில் மாஸ்கோவில் தொடங்கின.

இரண்டு நாட்கள் நடை பெற்ற கொண்டாட்டம், முதல் நாள்முகமறியா வீரர்களின் கல் லறையில் அஞ்சலியுடன் தொடங்கியது. இந்நிகழ் வில் சகோதர கம்யூனிஸ்ட் பத்திரிகைகளின் பிரதிநிதி கள் கலந்துகொண்டு அஞ் சலி செலுத்தினர்.
சுரன்


ரஷ்யக் கூட்டமைப்பு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜுகானோவ் தலைமையில் இளைஞர்களும் முதிய வர்களுமான தொண்டர் கள் செங்கொடி ஏந்திய வண்ணம் வீரமுழக்கங்களு டன் அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ரஷ்ய நாடா ளுமன்றத்தில் உறுப்பினர் களாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். பெரும்புரட்சியின் ராணு வத் தளபதியாகக் கருதப் பட்ட நாயகன் மார்ஷல் ஜுகானோவின் நினைவுச் சின்னத்தின் முன்னே ஜுகா னோவ் புகழஞ்சலி செலுத் தினார். அதையடுத்து சர்வ தேச கம்யூனிஸ்ட் இதழ் களின் பிரதிநிதிகள் அஞ் சலி செலுத்தினர்.

மாஸ்கோ நகரின் மை யத்தில், செஞ்சதுக்கத்துக் கும் லெனின் அருங்காட் சியகத்துக்கும் அருகில் இந்த நினைவுச் சின்னம் உள்ளது. மாபெரும் தேசப் போரில் பங்கேற்று உயிர்த் தியாகம் செய்த, வரலாற்றில் பதிவு செய்யப்படாத எண் ணற்ற தியாகிகளின் சாட் சியாக இந்த முகமறியா வீரர்களின் கல்லறை நிற்கிறது.

சோவியத் யூனியன் சிதறுண்டபோது உருவான பல்வேறு நாடுகளில் இயங் கும் கம்யூனிஸ்ட் இதழ்க ளின் ஆசிரியர்கள் மற்றும் சீனா, வியட்நாம், கியூபா, வடகொரியா, லாவோஸ் உள்ளிட்ட 30க்கும் மேற் பட்ட கம்யூனிஸ்ட் பதிப்பு களின் பிரதிநிதிகள் நூற் றாண்டு விழாவில் கலந்துகொண்டனர்.
_________________________________________________________________

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் சர்கோசி தோல்வியடைந்தார். இதனையடுத்து புதிய அதிபராக ஹோலன்ட் பதவியேற்க உள்ளார்

பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியின் பதவிக் காலம் முடிவடைவதையொட்டி, கடந்த மாதம் 22ம் தேதி, அதிபர் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில், சர்கோசி இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, சோஷலிஸ்ட் கட்சி சார்பில், பிராங்காய்ஸ் ஹோலன்ட் போட்டியிடுகிறார். முதல் கட்ட தேர்தலில் வேட்பாளராக 10 பேர் களத்தில் இருந்தனர்.முதல் கட்ட தேர்தலில், 50 சதவீத ஓட்டுகள் யாருக்கும் கிடைக்காத நிலையில், நேற்று இரண்டாவது கட்ட தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் சர்கோசியும், பிராங்காய்ஸ் ஹோலன்டும் களத்தில் இருந்தனர்.பொருளாதார மந்த நிலை, வேலை வாய்ப்பின்மை, வரி விதிப்பு, ஓய்வூதியம் குறைப்பு மற்றும் மறுப்பு உள்ளிட்ட விஷயங்களை முன்னிறுத்தி, இத்தேர்தலில் ஹோலன்ட் பிரசாரம் செய்தார். "மீண்டும் வாய்ப்பு அளித்தால், பிரான்ஸ் மேலும் வலுவுள்ளதாக மாறும்' என, அதிபர் சர்கோசி உறுதியளித்துள்ளார்.
சுரன்


கடந்த தேர்தலின்போது சர்கோசி, லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியிடமிருந்து 353 கோடி ரூபாய் அளவுக்கு தேர்தல் நிதி பெற்றதாகக் கூறப்படுகிறது. இதை லிபியாவின் முன்னாள் அமைச்சர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். இரண்டாவது கட்ட தேர்தல் நடக்கும் சமயத்தில், இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், சர்கோசிக்கு சங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது.முதல் கட்ட தேர்தலில் இவர் ஹோலன்டை விட பின்தங்கியிருந்தார் என்பதால், 
சுரன்

இரண்டாவது கட்ட தேர்தல் ஹோலன்டுக்கு மேலும் வெற்றி வாய்ப்பை அதிகமாக்கும் எனக் கூறப்பட்டது.பிரெஞ்ச் காலனி ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளிலும் இந்த தேர்தல் நேற்று நடந்தது.உடனடியாக ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் ஹோலன்டா 52 ஓட்டுக்கள் பெற்று புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹோலன்டா வெற்றியை அவரது ஆதரவாளர்கள் பல இடங்களில் கொண்டாடினர். கடந்த 1995ம் ஆண்டிற்கு பின்னர் சோசலிஸ்ட் கட்சி சார்பில் முதல் அதிபர் என்ற பெருமையை ஹோலன்டா பெற்றார். சர்கோசியின் தோல்வி, ஐரோப்பிய அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
_________________________________________________________________

                                    
இப்படி [போஸ் கொடுத்த] இருந்த நான்

ச்ரன்

இப்படியாயிட்டேன்

சுரன்

மேலே போட்டோவுக்கு பெண்ணுடன் போஸ் கொடுத்த சிறுத்தை என்ன நினைத்ததோ.போட்டுத்தாக்கிவிட்டது.
_________________________________________________________________

வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இன்று இந்தியா வருகிறார். ஆசிய கண்டத்தை சேர்ந்த மூன்று நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் சீனா மற்றும் வங்கதேசத்தி்ல தனது பயணத்தை முடித்து விட்டு இன்று இந்தியா வருகிறார்.மூன்றுநாள் சுற்றுப்பயணம் மேற்‌கொள்ளும் அவர் நாளை மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திகறார்.அநேகமாக அந்நிய சில்லறை வர்த்தகம் பற்றி தான் இருக்கும் அந்த பேச்சு என்று தெரிகிறது.
------------------------------------------------------------------------------------------------------------


இந்த ஆண்டின் மிகப்பெரிய முழு நிலா காட்சி[ஏத்தேன்ஸ்]
சுரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?