"சிக்"கனமாக இருப்பது எப்படி?
நாட்டின் நிதி நிலைமையைக் கணக்கி லெடுத்துக்கொண்டு மத்திய அமைச்சர்களும் அதிகாரிகளும் தங்களின் செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று 2009ம் ஆண்டிலேயே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் அமைச்சர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும், விமானப் பயணத்தின் போது உயர் வகுப்பைத் தவிர்த்து, சாதாரண வகுப்பிலேயே பயணிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். இதனைப் பலரும் பல விதத்தில் கடைப்பிடித்துள்ளனர்.
திட்டக் குழு வின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலு வாலியா கடைப்பிடித்துள்ள சிக்கன நடவ டிக்கை வேடிக்கையானது.
இந்தியாவின் ஏழைகளைக் கண்டறிய மாண்டேக் சிங் அலுவாலியா கொடுத்த அதிர்ச்சியளிக்கும் சூத்திரத்தை நாமெல்லாம் மறந்திருக்க முடியாது. நகர்ப்புற மக்கள் 29 ரூபாயும் கிராமப்புற மக்கள் 23 ரூபாயும் நாள் ஒன்றுக்கு செலவழிக்கும் பட்சத்தில் அவர்கள் எல்லாம் வறுமைக் கோட்டிற்கு மேல் இருப் பவர்கள் என்று அனைவரையும் ஆத்திரமடை யச் செய்யும் கணக்கைச் சொன்னார். நாடே கொதித்தெழுந்தது. பலரும் அலுவாலியா அவர்களுக்கு 29 ரூபாய் பணம் அனுப்பி அவ ருடைய ஒரு நாள் செலவை மேற்கொள்ளு மாறு கேட்டுக் கொண்டனர். விஷயம் உச்ச நீதி மன்றம் சென்றது. அங்கேயும் விடவில்லை அலுவாலியா; திட்டக் கமிஷன் சார்பில் கொடுக்கப்பட்ட பதிலில், நாள் ஒன்றுக்கு நகர்ப்புற வாசிகள் 32 ரூபாயுடனும் கிராமப்புற வாசிகள் 26 ரூபாயுடனும் வாழ்க்கையை ஓட்டுபவர்கள் எல்லாம் பணக்காரர்கள் என்று அறிவிக்கும்படி உச்ச நீதி மன்றத்தில் முறை யிட்ட அராஜகத்தையும் மறக்க முடியாது.
சியாம்லால் யாதவ் கண்டறிந்த உண்மை கள் இன்னும் வியப்பானவை. இவர் எடுத்துக் கொண்ட ஆறரை ஆண்டு காலத்தில் அலுவா லியா 42 வெளிநாட்டுப் பயணங்களை மேற் கொண்டுள்ளார். மொத்தம் 274 நாட்கள் வெளி நாட்டில் இருந்துள்ளார். அதாவது ஒன்பது நாளுக்கு ஒரு நாள் வெளிநாட்டில் இருந்துள் ளார். இதற்கான செலவு ரூ.2 கோடியே 34 லட்சம் ஆகும். குறைந்தபட்ச செலவீனக் கணக்கின் அடிப்படையிலேயே இது கணக் கிடப்பட்டுள்ளது. இவர் பயணித்த நாடுகளின் தூதரகங்கள் இவ ருக்காகச் செலவழித்த பணம் இதில் அடங்காது. இவைகளையெல் லாம் சேர்த்தால் அலுவாலியாவுக்காக இந்த நாடு செலவழிக்கும் பணம் கணக்கிலடங்காது.
திட்டக் குழுவின் துணைத் தலைவர் இத் தனை பயணங்களை மேற்கொள்ள வேண்டிய தில்லை என்பதே யதார்த்தம். பிரதமரின் ஒப் புதலுடனேயே இத்தனை பயணங்களையும் இவ்வளவு செலவையும் செய்துள்ளார் என்பது இன்னும் வியப்பளிக்கிறது. இந்த 42 பயணங் களில் 23 முறை அமெரிக்கா சென்றுள்ளார். திட்டங்கள் தீட்டுவதில் எப்படி அமெரிக்கா நம்புவதில்லையோ அதே மாதிரி அலுவாலியா வும் நம்புவதில்லை என்பது வேறு விஷயம். எதற்காக இத்தனை முறை பயணித்தார்? உலக நாடுகளிடையே சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவா? அப்படியென் றால் இவர் அமெரிக்கா செல்லுவது சரிதான். என்னே! அமெரிக்காவின் பணக்காரர்கள் கடைப்பிடிக்கும் சிக்கனம். 2008ல் அமெரிக் காவின் வங்கிகளை திவாலாக்கிய தலைமை நிர்வாக அதிகாரிகள் போனஸாக கோடிக் கணக்கில் பணத்தைச் சுருட்டிக் கொண்டு போனார்கள் என்பது உலகறிந்த உண்மை தானே. அமெரிக்கக் கம்பெனிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகள் கம்பெனிகளை நஷ்டப் படுத்தி, ஆயிரக்கணக்கான மக்களை வேலை யிழக்க வைத்துவிட்டு, தாங்கள் மட்டும் பணத் தைச் சுருட்டிக் கொண்டு சென்றுவிட்டார்கள் என்று அமெரிக்காவின் பணக்காரர்கள் நடத் தும் பத்திரிகைகளே செய்திகள் வெளி யிட்டுள்ளன. இந்நிர்வாகிகளின் தவறான நடவடிக்கைகளினால் தங்களின் பணத்தை யும், வேலைகளையும் இழந்துள்ள அப்பாவி மக்களின் சிக்கனத்திற்கும், இப்பணக்கார நிர்வாகிகளின் சிக்கனத்திற்கும் தான் எவ் வளவு வித்தியாசம்!
2009ல் பாரதப் பிரதமர், எளிமையான வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள் என்று தனது சக மந்திரிகளைக் கேட்டுக்கொண் டதும் அவர்கள் அதை ஏற்றுக் கொண்டுள்ள விதமே அலாதிதான்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் மந்திரி பிரபுல் படேல் தன்னுடைய மகளின் திருமணத்தை யும், பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி தன் னுடைய மகனின் திருமணத்தையும் இந்த நான்கு ஆண்டு சிக்கன நடவடிக்கைக் காலத் தில் நடத்தியுள்ளனர். ஆகா! என்னே ஒற் றுமை! ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும்.! இந்த இரண்டு திருமணங்களும் இக்காலத் தில் மிகப்பெரிய ஆடம்பரத்துடன் நடந்த திரு மணங்கள் ஆகும். ஒரு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு வருபவர் களைக் காட்டிலும் அதிகமான பேர் இத்திரு மணங்களுக்கு வந்திருந்தனர்.
மந்திரிகள் இப்படியென்றால் தொழிலதிபர் கள் எப்படி? முகேஷ் அம்பானி இந்தியாவி லேயே விலையுயர்ந்த 27 மாடிகளைக் கொண்டுள்ள வீட்டைக் கட்டியுள்ளார். இந்த ஆடம்பர வீட்டை தொழிலதிபர் ரத்தன் டாடா அவர்களே விமர்சித்துள்ளார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். விஜய் மல்லையாவின் கிங் பிஷர் கம்பெனி ஊழியர்கள் சம்பளமின் றித் தவித்த அதே சமயத்தில் விஜய் மல்லையா துபாய் நகரத்தில் உள்ள பூர்ஜ் காலிபா கட்டி டத்தின் 123வது மாடியில் உள்ள ஹோட் டலில் தான் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாக டிவிட் செய்துள்ளார். “அருமையான காட்சி! வாழ்க்கையில் இவ்வளவு உயரத்தில் நான் இருந்ததில்லை” என்றும் டிவிட் செய்துள் ளார். இப்போது கிங் பிஷர் விமானங்கள்தான் உயரப் பறப்பதில்லையே. விஜய் மல்லையா வாவது உயரச் செல்லட்டும். இவர்கள் இரு வரும் ஐபிஎல் கிரிக்கெட் அணிகளுக்குச் சொந்தக் காரர்கள் என்பதும் முக்கியமானது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, ஐபிஎல் போட்டி களில் கிடைக்கும் லாபத்திற்கு கேளிக்கை வரியிலிருந்து விதி விலக்கு அளித்திருந்தது என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும். இது மும்பை உயர்நீதிமன்றத்தின் குறுக் கீட்டிற்குப் பின்னரே விலக்கப்பட்டுள்ளது.
வால் ஸ்டீரிட் மாடல்,
கார்ப்பரேட் நிறுவனங்கள் வால் ஸ்டீரிட் மாடல் சிக்கன நடவடிக்கைகளிலேயே ஈடு படுகின்றன. அமெரிக்காவின் நஷ்டம் அடைந்த ஒன்பது வங்கிகள் (சிடி குரூப், மெரில் லின்ச் உட்பட) மக்கள் வரிப் பணத்திலிருந்து 175 பில்லியன் டாலர் பணத்தை மானியமாகப் பெற்று, அதன் நிர்வாகிகளுக்கு 32.6 பில்லியன் டாலர் போனஸாக வழங்கின. சென்ற வாரம் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று நாட் டின் நிதி நெருக்கடிக்குக் காரணம், ஏழை மக் களுக்குக் கொடுக்கப்படும் சலுகைகளே ஆகும் என்று கதறியது. கிராமப்புற வேலை வாய்ப்பு உத்தரவாதச் சட்டம், உணவுப் பாது காப்புச் சட்டம், கல்வி பெறும் உரிமைச் சட்டம் ஆகிய அனைத்தையும் தேவையற்ற சட்டங் கள் என்று கரிந்து கொட்டியது. பணக்காரர் களுக்கு வழங்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள் குறித்து மூச்சுவிடவில்லை. சென்ற பட்ஜெட் டில் மட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிதி அமைச்சர் ரூ.5 லட்சம் கோடி வரிச் சலு கைகளை வாரி வழங்கியுள்ளார், கார்ப்பரேட்டு களுக்கு வழங்கப்பட்டுள்ள வரிச் சலுகைகளை குறைத்திருந்தாலே பட்ஜெட் பற்றாக்குறை யைத் தவிர்த்திருக்கலாம் என்பதை நாடாளு மன்றத்தில் சீத்தாரம் யெச்சூரி பேசியுள்ளார்.
வைரம் மற்றும் தங்கம் இறக்குமதிக்கு அளிக்கப்பட்டுள்ள ரூ.50,000 கோடி கஸ் டம்ஸ் வரி விலக்கு குறித்து எந்த மீடியாக் களும் பேசாதது ஏன்? என்று அமர்த்தியா சென் கேட்டுள்ளார். உணவுப் பாதுகாப்புச் சட் டத்தை அமல்படுத்துவதற்கான ரூ. 27,000 கோடியை இதன் மூலம் பெற்றிருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். கார்ப்பரேட் உல குக்கு அப்பால் வாழும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மிக வித்தியாசமாக உள்ளது. விலைவாசி ஏற்றத்தினால் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியா மல் தவிக்கின்றனர். ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதி நாடுகளில் இருப்பதைவிட மோசமான நிலையில் இந்தியக் குழந்தைகள் சத்துண வின்றி வாடுகின்றனர்.
விவசாயிகள் இடு பொருள் வாங்க வழியின்றியும், விவசாயத்திற் கான கடன் கிடைக்காமலும் ஏங்குகின்றனர். மக்கள் குடிக்க நீரின்றித் தவிக்கும்போது, அது பிற பயன்பாட்டிற்கு திருப்பப்படுவது வேத னையளிக்கும் விஷயமாகும். மொத்தத்தில் எது சிக்கனம் என்ற குழப்பமே மிஞ்சுகிறது.
நன்றி: பி.சாய்நாத் [தி இந்து],
தமிழில்: பேரா.பெ.விஜயகுமார்
________________________________________________________________________________\
திட்டக் குழு வின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலு வாலியா கடைப்பிடித்துள்ள சிக்கன நடவ டிக்கை வேடிக்கையானது.
இந்தியாவின் ஏழைகளைக் கண்டறிய மாண்டேக் சிங் அலுவாலியா கொடுத்த அதிர்ச்சியளிக்கும் சூத்திரத்தை நாமெல்லாம் மறந்திருக்க முடியாது. நகர்ப்புற மக்கள் 29 ரூபாயும் கிராமப்புற மக்கள் 23 ரூபாயும் நாள் ஒன்றுக்கு செலவழிக்கும் பட்சத்தில் அவர்கள் எல்லாம் வறுமைக் கோட்டிற்கு மேல் இருப் பவர்கள் என்று அனைவரையும் ஆத்திரமடை யச் செய்யும் கணக்கைச் சொன்னார். நாடே கொதித்தெழுந்தது. பலரும் அலுவாலியா அவர்களுக்கு 29 ரூபாய் பணம் அனுப்பி அவ ருடைய ஒரு நாள் செலவை மேற்கொள்ளு மாறு கேட்டுக் கொண்டனர். விஷயம் உச்ச நீதி மன்றம் சென்றது. அங்கேயும் விடவில்லை அலுவாலியா; திட்டக் கமிஷன் சார்பில் கொடுக்கப்பட்ட பதிலில், நாள் ஒன்றுக்கு நகர்ப்புற வாசிகள் 32 ரூபாயுடனும் கிராமப்புற வாசிகள் 26 ரூபாயுடனும் வாழ்க்கையை ஓட்டுபவர்கள் எல்லாம் பணக்காரர்கள் என்று அறிவிக்கும்படி உச்ச நீதி மன்றத்தில் முறை யிட்ட அராஜகத்தையும் மறக்க முடியாது.
பிரதமர் மன்மோகன் சிங்கின் வேண்டு கோளுக்கு இணங்க அலுவாலியா எவ்வாறு சிக்கனத்தைக் கடைப்பிடிக்கிறார் என்கின்ற வினோதத்தை சற்றே பார்ப்போம். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி இரு பத்திரிகையாளர்கள் சுவாரசியமான உண் மைகளை வெளிக்கொணர்ந்துள்ளனர். அலு வாலியாவின் எளிமை எப்படிப்பட்டது என் பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ள இவர்களின் செயல் பாராட்டுதலுக்குரியது. இவர்களின் சிரமம் மிக்க பணி அதிகம் பேசப் படவில்லை என்பது கவலைக்குரியது.
சியாம்லால் யாதவ் என்ற ‘இந்தியா டுடே’ பத்திரிகையாளர், அலுவாலியா ஜூன் 2004 லிருந்து ஜனவரி 2011 வரை மேற்கொண்ட வெளி நாட்டுப் பயணங்கள் குறித்த செய்தி களைத் திரட்டியுள்ளார். இவர் ஏற்கனவே வியத்தகு வித்தைகளை தகவல் பெறும் உரி மைச் சட்டத்தின் மூலம் செய்து காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு பத்திரி கையாளர் ‘ஸ்டேட்மென் நியூஸ் சர்வீஸ்’ என்ற பத்திரிகையைச் சேர்ந்தவர். உலகம் சுற் றும் வாலிபர் அலுவாலியா 2011ம் ஆண்டு மே மாதம் முதல் அக்டோபர் வரை மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த செய்திக ளைத் திரட்டியுள்ளார். இந்த ஆறு மாத காலத் தில் அலுவாலியா தன்னுடைய நான்கு வெளி நாட்டுப் பயணங்களில் பதினெட்டு நாட்க ளைக் கழித்துள்ளார். களித்துள்ளார் என்றும் சொல்லலாம். இதற்காக மத்திய அரசு எவ் வளவு பணம் செலவழித்துள்ளது தெரியுமா? அதிகம் இல்லை ஜென்டில்மேன். 36 லட் சத்து 40 ஆயிரத்து 140 ரூபாய் மட்டுமே. அதா வது நாளொன்றுக்கு 2 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய். இது அவர் சிக்கனமாகச் செலவழித் தது, மன்மோகன் சிங் கூற்றை மதிக்காமல் அவர் சிக்கனத்தைக் கடைப்பிடிக்காமல் இருந்திருந்தால் என்னவாகியிருக்கும்?மக்களின் உணர்வுகளைப் புரிய மறுக்கும் ஆட்சியாளர்கள். [பெட்ரோல் விலைஎதிர்ப்பு போராட்டத்தின் போது] |
சியாம்லால் யாதவ் கண்டறிந்த உண்மை கள் இன்னும் வியப்பானவை. இவர் எடுத்துக் கொண்ட ஆறரை ஆண்டு காலத்தில் அலுவா லியா 42 வெளிநாட்டுப் பயணங்களை மேற் கொண்டுள்ளார். மொத்தம் 274 நாட்கள் வெளி நாட்டில் இருந்துள்ளார். அதாவது ஒன்பது நாளுக்கு ஒரு நாள் வெளிநாட்டில் இருந்துள் ளார். இதற்கான செலவு ரூ.2 கோடியே 34 லட்சம் ஆகும். குறைந்தபட்ச செலவீனக் கணக்கின் அடிப்படையிலேயே இது கணக் கிடப்பட்டுள்ளது. இவர் பயணித்த நாடுகளின் தூதரகங்கள் இவ ருக்காகச் செலவழித்த பணம் இதில் அடங்காது. இவைகளையெல் லாம் சேர்த்தால் அலுவாலியாவுக்காக இந்த நாடு செலவழிக்கும் பணம் கணக்கிலடங்காது.
திட்டக் குழுவின் துணைத் தலைவர் இத் தனை பயணங்களை மேற்கொள்ள வேண்டிய தில்லை என்பதே யதார்த்தம். பிரதமரின் ஒப் புதலுடனேயே இத்தனை பயணங்களையும் இவ்வளவு செலவையும் செய்துள்ளார் என்பது இன்னும் வியப்பளிக்கிறது. இந்த 42 பயணங் களில் 23 முறை அமெரிக்கா சென்றுள்ளார். திட்டங்கள் தீட்டுவதில் எப்படி அமெரிக்கா நம்புவதில்லையோ அதே மாதிரி அலுவாலியா வும் நம்புவதில்லை என்பது வேறு விஷயம். எதற்காக இத்தனை முறை பயணித்தார்? உலக நாடுகளிடையே சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவா? அப்படியென் றால் இவர் அமெரிக்கா செல்லுவது சரிதான். என்னே! அமெரிக்காவின் பணக்காரர்கள் கடைப்பிடிக்கும் சிக்கனம். 2008ல் அமெரிக் காவின் வங்கிகளை திவாலாக்கிய தலைமை நிர்வாக அதிகாரிகள் போனஸாக கோடிக் கணக்கில் பணத்தைச் சுருட்டிக் கொண்டு போனார்கள் என்பது உலகறிந்த உண்மை தானே. அமெரிக்கக் கம்பெனிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகள் கம்பெனிகளை நஷ்டப் படுத்தி, ஆயிரக்கணக்கான மக்களை வேலை யிழக்க வைத்துவிட்டு, தாங்கள் மட்டும் பணத் தைச் சுருட்டிக் கொண்டு சென்றுவிட்டார்கள் என்று அமெரிக்காவின் பணக்காரர்கள் நடத் தும் பத்திரிகைகளே செய்திகள் வெளி யிட்டுள்ளன. இந்நிர்வாகிகளின் தவறான நடவடிக்கைகளினால் தங்களின் பணத்தை யும், வேலைகளையும் இழந்துள்ள அப்பாவி மக்களின் சிக்கனத்திற்கும், இப்பணக்கார நிர்வாகிகளின் சிக்கனத்திற்கும் தான் எவ் வளவு வித்தியாசம்!
2009ல் பாரதப் பிரதமர், எளிமையான வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள் என்று தனது சக மந்திரிகளைக் கேட்டுக்கொண் டதும் அவர்கள் அதை ஏற்றுக் கொண்டுள்ள விதமே அலாதிதான்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் மந்திரி பிரபுல் படேல் தன்னுடைய மகளின் திருமணத்தை யும், பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி தன் னுடைய மகனின் திருமணத்தையும் இந்த நான்கு ஆண்டு சிக்கன நடவடிக்கைக் காலத் தில் நடத்தியுள்ளனர். ஆகா! என்னே ஒற் றுமை! ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும்.! இந்த இரண்டு திருமணங்களும் இக்காலத் தில் மிகப்பெரிய ஆடம்பரத்துடன் நடந்த திரு மணங்கள் ஆகும். ஒரு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு வருபவர் களைக் காட்டிலும் அதிகமான பேர் இத்திரு மணங்களுக்கு வந்திருந்தனர்.
மந்திரிகள் இப்படியென்றால் தொழிலதிபர் கள் எப்படி? முகேஷ் அம்பானி இந்தியாவி லேயே விலையுயர்ந்த 27 மாடிகளைக் கொண்டுள்ள வீட்டைக் கட்டியுள்ளார். இந்த ஆடம்பர வீட்டை தொழிலதிபர் ரத்தன் டாடா அவர்களே விமர்சித்துள்ளார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். விஜய் மல்லையாவின் கிங் பிஷர் கம்பெனி ஊழியர்கள் சம்பளமின் றித் தவித்த அதே சமயத்தில் விஜய் மல்லையா துபாய் நகரத்தில் உள்ள பூர்ஜ் காலிபா கட்டி டத்தின் 123வது மாடியில் உள்ள ஹோட் டலில் தான் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாக டிவிட் செய்துள்ளார். “அருமையான காட்சி! வாழ்க்கையில் இவ்வளவு உயரத்தில் நான் இருந்ததில்லை” என்றும் டிவிட் செய்துள் ளார். இப்போது கிங் பிஷர் விமானங்கள்தான் உயரப் பறப்பதில்லையே. விஜய் மல்லையா வாவது உயரச் செல்லட்டும். இவர்கள் இரு வரும் ஐபிஎல் கிரிக்கெட் அணிகளுக்குச் சொந்தக் காரர்கள் என்பதும் முக்கியமானது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, ஐபிஎல் போட்டி களில் கிடைக்கும் லாபத்திற்கு கேளிக்கை வரியிலிருந்து விதி விலக்கு அளித்திருந்தது என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும். இது மும்பை உயர்நீதிமன்றத்தின் குறுக் கீட்டிற்குப் பின்னரே விலக்கப்பட்டுள்ளது.
வால் ஸ்டீரிட் மாடல்,
அமுல் விளம்பரம் |
வைரம் மற்றும் தங்கம் இறக்குமதிக்கு அளிக்கப்பட்டுள்ள ரூ.50,000 கோடி கஸ் டம்ஸ் வரி விலக்கு குறித்து எந்த மீடியாக் களும் பேசாதது ஏன்? என்று அமர்த்தியா சென் கேட்டுள்ளார். உணவுப் பாதுகாப்புச் சட் டத்தை அமல்படுத்துவதற்கான ரூ. 27,000 கோடியை இதன் மூலம் பெற்றிருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். கார்ப்பரேட் உல குக்கு அப்பால் வாழும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மிக வித்தியாசமாக உள்ளது. விலைவாசி ஏற்றத்தினால் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியா மல் தவிக்கின்றனர். ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதி நாடுகளில் இருப்பதைவிட மோசமான நிலையில் இந்தியக் குழந்தைகள் சத்துண வின்றி வாடுகின்றனர்.
நமக்கு ஒரு நாள் வாழ்க்கைக்கு 28 ரூபாய். அலுவாலியா செலவு 2லட்சம் பயணத்துக்கு மட்டும்?சாப்பாடு -மத்ததுக்கு ? |
விவசாயிகள் இடு பொருள் வாங்க வழியின்றியும், விவசாயத்திற் கான கடன் கிடைக்காமலும் ஏங்குகின்றனர். மக்கள் குடிக்க நீரின்றித் தவிக்கும்போது, அது பிற பயன்பாட்டிற்கு திருப்பப்படுவது வேத னையளிக்கும் விஷயமாகும். மொத்தத்தில் எது சிக்கனம் என்ற குழப்பமே மிஞ்சுகிறது.
நன்றி: பி.சாய்நாத் [தி இந்து],
தமிழில்: பேரா.பெ.விஜயகுமார்
________________________________________________________________________________\
சிக்கனமாகத்தின்று சிக்குனு இருன்னு அலுவாலியா சொல்லதுக்குள்ள காட்டுக்குள்ளே போயிருவோம்.வா,சீக்கிரம்.... ___________________________________________________________________________ |