அமெரிக்காவில் மோடி சாதித்தவை?



டிரம்ப் பதவியேற்ற பிறகு ‘அமெரிக்க பணிகள் அமெரிக்கர்களுக்கே’ என்பதை வலுவாக அமலாக்க முனைந்துள்ளார். 
இந்தியாவின் லட்சக்கணக்கான மென்பொருள் ஊழியர்கள் அமெரிக்காவில் பணியாற்றுகின்றனர். 
இவர்களில் பெரும்பாலோர் எச்-1விசாக்கள் மூலமாக அமெரிக்கா சென்றுள்ளனர். 
ஆண்டுதோறும் மென்பொருள் ஊழியர்களுக்காக அமெரிக்கா வழங்கும்  விசாக்களில் சுமார் 86சதவீத இந்தியர்களே பலன் அடைகின்றனர் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதனாலேயே கணினிக் கல்வி என்பதும் அமெரிக்காவில் பணி என்பதும் பல இந்திய இளைஞர்களின் கனவாகவே இருந்து வருகிறது. 

எச்-1விசாக்களில் அதிரடி மாற்றங்களை டிரம்ப் அறிவித்தார். 
அமெரிக்காவில் பணிபுரிகின்ற லட்சக்கணக்கான இந்தியர்கள் குறிப்பாக மென்பொருள் ஊழியர்களுக்கு இந்த மாற்றங்கள் பேரிடியாக இறங்கியது. 
புதியதாக இந்திய ஊழியர்கள் செல்ல முடியாது என்பது மட்டுமல்ல; ஏற்கெனவே அங்கு பணியாற்றுவோரின் எதிர்காலமும் பெரிய கேள்வியாக முன்வந்தது. இப்பிரச்சனை கொதிநிலையாக இருக்கும் தருணத்தில்தான் மோடி அமெரிக்கா சென்றார். 

இந்தியாவின் பிரதமர் எனும் முறையில் இப்பிரச்சனையை வலுவாக அமெரிக்க ஜனாதிபதியிடம் மோடி எழுப்புவார் எனும் எதிர்பார்ப்பு உண்டானது.

ஆனால் மோடி இதுகுறித்து எதுவுமே பேசவில்லை. டிரம்ப்-மோடி கூட்டறிக்கையில் இதுகுறித்து ஒரு வார்த்தை கூட இல்லை. 

56 இன்ச் மார்பு கொண்ட மோடியின் தைரியம் டிரம்ப் முன்னால் பதுங்கிவிட்டதா? 

இந்திய உழைப்பாளிகளுக்கு மோடி மிகப்பெரிய துரோகத்தை இழைத்துவிட்டார் எனில் மிகை அல்ல!அமெரிக்க வாழ் இந்தியர்கள் சந்திக்கும் இன்னொரு பெரிய பிரச்சனை சமீப காலமாக நடந்துவரும் இனவெறி தாக்குதல்கள் ஆகும். 

ஏற்கெனவே இரு இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 
டிரம்ப் உருவாக்கிய அமெரிக்க தேசிய வெறிதான் இதற்கு அடிப்படைக் காரணம் ஆகும். அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டினரும் பாதுகாப்பற்ற சூழலில் வாழும் நிலை உருவாகியுள்ளது. 
இதுகுறித்தும் மோடி எதுவுமே பேசவில்லை.
--------------------------------------------------------

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா விற்கு ஐந்தாவது தடவையாக பயணம் செய்திருக்கிறார். இந்தத் தடவை அவர் முதன்முறையாக ஜனாதிபதி டொனால்டு டிரம்பை அதிகாரப்பூர்வமாகச் சந்தித்து, இந்தி யாவானது, அமெரிக்க-இந்திய நீண்டகால ராணுவசூழ்ச்சித் திட்டத்தின் இளைய பங்காளி என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.வெள்ளைமாளிகைக்கு மோடியின் விஜயம்தொடர்பாக இந்திய அரசாங்கத்தின் தரப்பில் சிலஐயங்கள் ஏற்பட்டிருந்தன.
ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவின் நலன்களைப் பாதிக்கக்கூடியவிதத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்திருந்த தால், இதற்குமுன் எவரும் ஊகித்துணர முடியாத அளவிற்கு இத்தகைய ஐயங்கள் ஏற்பட்டிருந்தன. 

புவிவெப்பமயமாதல் தொடர்பாக பாரீஸ்ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு எதிராக டிரம்பின்விமர்சனம், இந்திய இளைஞர்கள் அமெரிக்காவில் வேலைசெய்வதற்கு எச்-1பி விசா வழங்குவதில் கட்டுப் பாடுகள், அமெரிக்க வேலைகளை இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யக் கூடாது என்று அவர் அழுத்தம் செலுத்தி வந்தது போன்ற அம்சங்கள் டிரம்ப்பால் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை என்று இந்திய அரசாங்கத்தின் தரப்பில் கருதப் பட்டு வந்தது.

அமெரிக்காவின் ராணுவ சூழ்ச்சி அம்சங்கள்அனைத்திற்கும் மோடி அரசாங்கம் வளைந்துகொடுத்திருக்கிறது. மோடியின் பயணத்தின் நிறைவில் இரு நாடுகளுக்கும் இடையே வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கை இத்தகைய அணுகு முறையுடன்தான் வர்ணம் பூசப்பட்டிருக்கிறது.
இருநாடுகளுக்கும் இடையே ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறைகளில் ஒத்துழைப்பினை ஆழப்படுத்திட உறுதி எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதன் உண்மையான பொருள் என்ன தெரியுமா?
இந்தியா, அமெரிக்காவிடமிருந்து இந்த ஒத்துழைப்பின் அடிப்படையில், 2 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கடல் கண்காணிப்பு ஆயுதத் தளவாடங்களை இந்தியா வாங்க இருக்கிறது.மேலும் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கிடையேயும் ராணுவ ஆயுத ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. அமெரிக்க பகாசுர ஆயுத உற்பத்தி நிறுவனமான லாக்கீட் மார்ட்டின்), இந்திய நிறுவனமான டாடாவுடன் இந்தியாவில் கூட்டாக எப்.16 போர்விமானங்களைக் கட்டுவதற்கு ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

 ஜூலை மாதத்தில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையிலான கப்பல் படைகளுக்கு இடையே நடைபெறவுள்ள மலபார் கூட்டுப் பயிற்சி குறித்தும் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் இந்தியா அணி சேர்ந்ததற்குப்பின்னர், இவ்விருநாட்டின் தலைவர்களும் தங்கள் பிணைப்பை, ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் ‘பொறுப்புள்ள பணியாளர்கள்’ என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். 


தென்சீனக் கடல் தொடர்பான இவர்களது அறிக்கை, ‘இப்பிராந்தியம் முழுவதும் கடல்வழியே பயணிப்ப தற்கும், கடலுக்கு மேல் வான்வழியே செல்வதற்கும், வணிகரீதியாக செயல்படுவதற்கும் உள்ள சுதந்தி ரத்தை மதித்திடுவதன் முக்கியத்துவம்’ குறித்தும் குறிப்பிட்டிருப்பதானது, சீனாவிடமிருந்து விலகிச் செல்ல விருப்பம் தெரிவித்து, மோடி சமிக்ஞை அளித்துவிட்டார் என்பதையே காட்டுகிறது.


இந்த அறிக்கையில், வடகொரியா குறித்த அமெரிக்காவின் நிலைபாடும் குறிப்பிடப்பட்டிருக் கிறது. ‘கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் (DPRK)தொடர் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளை எதிர்த்திட இவ்விருநாடுகளும் இணைந்து செயல்பட உறுதிகொள்கிறது’ என்று இந்தியா கூறியிருக் கிறது. 

‘கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் பேரழிவு ஆயுதங்கள் மற்றும் இத்திட்டங்களுக்கு ஒத்துழைத்திடும் அனைத்துத்தரப்பினருக்கு எதிராகவும் இணைந்து செயல்படவும்’ இந்தியா உறுதி எடுத்துக்கொண்டிருக்கிறது. இவ்வாறு இந்தியா, கொரிய ஜனநாயக மக்கள் குடியரசுக்கு எதிராக தீவிரமான முறையில் நிலைபாட்டினை மேற்கொண்டிருப்பது இதுவே முதன்முறையாகும்.

அமெரிக்காவிற்குள்ளேயே அதிக வேலைகளை உருவாக்குவதற்கு இந்தியா தன்னா லான அனைத்தையும் செய்திடும் என்கிற உத்தர வாதத்தை மீண்டும் டிரம்ப்புக்கு அளிக்கக்கூடிய அளவிற்கு, மோடி சென்றிருப்பதுபோலவே தோன்றுகிறது. இந்தியா, அமெரிக்காவிடமிருந்து 100 போயிங்ரக பயணிகள் விமானங்களை வாங்கிடும் என்கிறஅறிவிப்பானது, டிரம்ப்பால் வரவேற்கப்பட்டி ருக்கிறது. இது அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கிட உதவும் என்று அவர் கூறியிருக்கிறார். 

அதேபோன்று, இருநாடுகளின் கூட்டறிக்கையானது, வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் கம்பெனிக்்கும் இந்திய அணுமின் கழகத்திற்கும் இடையே,ஆறு அணு உலைகள் வாங்குவது சம்பந்தமான இறுதிக்கட்ட ஒப்பந்தங்கள் குறித்தும் குறிப்பிட்டிருக் கிறது. வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம் சமீபத்தில்தான் தன்னுடைய திவால் தன்மையை பிரகடனம் செய்திருக்கிறது. 

இவ்வாறு திவாலாகிப்போன நிறுவனத்தை தூக்கிப்பிடிப்பதற்கு, இந்திய மக்களின் வரிப் பணத்தை வாரி வழங்கிட மோடிஅரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. மேலும், மேற்படி அணுமின், திட்டங்களை நிறைவேற்றக் கூடிய விதத்தில் தோஷிபா நிறுவனத்தின் தலைமை யிலான வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்திற்குத் தற்போது போதிய அளவிற்கு வல்லமை உண்டா என்பதற்கான உத்தரவாதம் எதுவும் கிடையாது.

டிரம்ப் நிர்வாகம் தங்களை முழுமையாகப் பாதுகாத்துக்கொள்ளக் கூடிய விதத்தில் இந்தக் கூட்டறிக்கையை உருவாக்கியுள்ள அதே சமயத்தில், இந்தக் கூட்டறிக்கையானது, இருநாடு களுக்குமிடையே சுதந்திரமான மற்றும் நேர்மையான வர்த்தகக் கொள்கைகளை உயர்த்திப்பிடித் திடுவோம் என்று வஞ்சகமானமுறையில் கூறிக்கொண்டிருக்கிறது.

 மேலும், இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவுகளை ஒருங்கிணைந்த முறையில் மறுஆய்வு செய்திட இருக்கிறோம் என்ற முன்மொழிவும்கூட, நம்நாட்டைப்பொறுத்தவரை ஓர் ஆபத்தான அறிகுறியையே காட்டுகிறது.

இதனை அமெரிக்காவின் உற்பத்திப் பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு இப்போதி ருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும் என்றும், வர்த்தகப் பற்றாக்குறை குறைக்கப்பட வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை நடைபெற்ற சமயத்தில், டிரம்ப் மோடியிடம் கூறியிருப்பதுடன் பொருத்திப் பார்த்திட வேண்டும். 


அமெரிக்காவில் உற்பத்தியாகும் அனைத்துவிதமான பொருட்களும் எவ்விதமான கட்டுப்பாடுகளும் இன்றி, இனி இந்திய சந்தைக்குள் பாயும் என்பதே இதன் பொருளாகும்.‘இந்தியாவில் உற்பத்தி செய்க’ என்னும் மோடியின் முழக்கத்திற்கு அமெரிக்கா எப்படி உதவும் என்பது குறித்து கூட்டறிக்கையில் எதுவும் இல்லை. 

அதேபோன்று இந்தியாவின் புவிவெப்பமயமாதல் தொடர்பான ஒப்பந்தத்தை நிறை வேற்றிட இந்தியா பசுமைத் தொழில்நுட்பத்தை பெறுவதற்கு அமெரிக்கா எந்த விதத்தில் உதவிடும் என்பது குறித்தும் கூட்டறிக்கையில் எதுவும் இல்லை.

அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர் களுக்கு எச்-1பி விசா வசதிகளைத் தொடர்வது சம்பந்தமாகவும் எவ்விதமான உறுதிமொழியும் இக்கூட்டறிக்கையில் இல்லை. 

கூட்டறிக்கை தொடர்பாக மோடி அரசாங்கம் தம்பட்டம் அடித்துக்கொள்ளக்கூடிய ஒரே யொரு வெளிப்பாடு என்னவெனில், பாகிஸ்தான்தன் எல்லையை பிற நாடுகள் மீதான பயங்கர வாதத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தாது என்பதைஉத்தரவாதப்படுத்திட வேண்டும் என்று குறிப்பிட்டி ருப்பதாகும். 

இது, இதற்கு முன்னர் ஜனாதிபதி ஒபாமாவுடன் செய்துகொள்ளப்பட்டுள்ள அறிக்கை யுடன் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.

எனினும்,டிரம்ப் நிர்வாகம், ஆப்கானிஸ்தானில் உள்ளநிலைமைகளைச் சமாளித்திட பாகிஸ்தானைத் தான் ராணுவ சூழ்ச்சிக்கான தளமாக பார்ப்பது இப்போதும் தொடர்கிறது. மோடி பகட்டான ஆரவாரத்துடன் மும்முறைடிரம்பைக் கட்டித்தழுவிய போதிலும், இருநாடு களுக்கும் இடையேயான கூட்டறிக்கையானது, அமெரிக்காவின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய விதத்திலும், இந்தியாவின் நலன்களை மிகவும் எச்சரிக்கையுடன் கண்டு கொள்ளாமல் உதாசீனம் செய்துள்ள நிலையில் இருப்பதையுமே காட்டுகிறது.
                                                                                                                                     தமிழில்: ச. வீரமணி
அமெரிக்காவிடம் அடகு போன ‘மேக் இன் இண்டியா’

இந்தியா ரூ.13000 கோடிக்கு துரோன் (Drone) எனப்படும் ஆளில்லா விமானங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்க மோடியின் பயணத்தில் உடன்பட்டது. 

இந்த முடிவால் டிரம்ப் புளகாங்கிதம் அடைந்து கூறினார்: ‘மிக்க மகிழ்ச்சி. ஆயுதங்களை உற்பத்தி செய்வதில் அமெரிக்காவை எவரும் மிஞ்ச முடியாது.’ எனினும் மோடி முன்வைத்த ‘Make in India’ எனும் முழக்கம் என்ன ஆனது எனும் கேள்வி எழுகிறது. 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் ராணுவ தளவாடத் தேவைகளை அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து ‘Make in India’ எனும் கோட்பாடின் அடிப்படையில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
 அதில் கையெழுத்திட்டது மோடிதான்.

ஆனால் இன்று மோடி அந்தர் பல்டி அடித்துவிட்டார். இந்திய பாதுகாப்புத் துறை ஆராய்ச்சியகம் இந்தியாவிலேயே துரோன் தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளது. 

மிகவும் நவீனமான இந்த தொழில் நுட்பம் அமெரிக்காவுக்கு சற்றும் சளைத்தது அல்ல. துரோன் ரக விமானங்களின் உற்பத்தியை இந்தியாவிலேயே செய்திருந்தால் இந்திய தொழிற்சாலைகள் குறிப்பாக அரசு மற்றும் பொதுத்துறையில் உள்ள ஆயுத ஆலைகள் பலன் அடைந்திருக்கும். வேலை வாய்ப்புகளும் உருவாக்கியிருக்க முடியும். அப்படியிருந்தும் அமெரிக்காவிடம் மோடி சரண் அடைய காரணம் என்ன?

டிரம்ப் - மோடி கூட்டறிக்கையில் வர்த்தகம் குறித்து கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது:-

‘...விவசாயம், தகவல் தொழில் நுட்பம், பொருள் மற்றும் சேவை உற்பத்தி பிரிவுகளில் மேலும் சந்தையை திறந்துவிடுவது குறித்து ஆழமான ஆய்வு செய்யப்படும்’

- ஏற்கெனவே விவசாயத்தை வெளிநாட்டுச் சந்தைக்கு திறந்ததால்தான் விவசாய நெருக்கடி கடுமை அடைந்துள்ளது. அது பற்றிய உணர்வு சிறிதளவும் மோடிக்கு இல்லை என்பதையே இந்த கூட்டறிக்கை வெளிப்படுத்துகிறது. மேலும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் பொருள் உற்பத்தி துறையிலும் இந்திய சந்தையை திறந்துவிடுவது இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதகத்தையே உருவாக்கும். கூட்டறிக்கை மேலும் கூறுகிறது:

‘தொழில் துறைகளில் உள்ள பயன்படுத்தப்படாத உற்பத்தித்திறன் பயன்பாட்டை (Industrial Capacity) எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து இருதரப்பும் ஒத்துழைப்பது என முடிவு செய்யப்பட்டது.’
- அமெரிக்க ஆலைகளில் உற்பத்தி திறன்பயன்பாடு மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 

ஆலைகள் செயல்படாமல் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. 
இந்த நெருக்கடியை இந்தியா மூலம் தீர்த்து கொள்ள டிரம்ப் நிர்வாகம் முயல்கிறது.
 இதற்கு ஆமாம் சாமியாக மோடி தலையாட்டியுள்ளார். இது இந்திய தொழில் வளர்ச்சிக்கு எவ்விதத்திலும் பயன்படாது. 

‘Made in India’ எனும் முழக்கத்தை அந்நிய நாடுகளுக்காக ‘Make in India’ என மோடி மாற்றினார். இப்பொழுது ‘Make in India’ முழக்கத்தையும் டிரம்ப் நிர்வாகத்திடம் மோடி அடகுவைத்து விட்டார்.
                                                                                                                                                                                                அ.அன்வர் உசேன்
========================================================================================
ன்று,
ஜூலை-02.
  • தாமஸ் சேவரி, முதலாவது நீராவிப் பொறிக்கான காப்புரிமம் பெற்றார்(1698)
  • முதலாவது வோல் மார்ட் அங்காடி ஆர்கன்சாவில் திறக்கப்பட்டது(1962)
  • பிரெஞ்ச் ராணுவத்தினர், பசிபிக் பெருங்கடலில் அணுஆயுத சோதனையை நிகழ்த்தினர்(1966)
  • ஆசியான் அமைப்பில் பாகிஸ்தான் இணைந்தது(2004)
========================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?