இவர் யார் என்று புரிகிறதா?


ஆக மொத்தத்தில் கமல்ஹாசனை அரசியல் சாக்கடைக்குள் அதிமுக,பாஜக கூட்டணியினர் இழுத்துவிட்டனர் என்றே தெரிகிறது.

ஆனால் "இந்த வகை அரசியல் எனக்கு பிடிக்கவில்லை.

அப்படி வந்தால் துப்பாக்கியுடன் வருவேன்" என்று ஆரம்பகால கமல் ஒரு பெட்டியில் கூறியிருந்தார்.அப்போது இளம் ரத்தம்.அதனால் அப்படி கூறியிருப்பார்.
ஆனால் அன்றிருந்ததை விட  அரசியல் மிகவும் அசிங்கமாக,ஊழலே மூச்சாக மாறிபோனது கமலை மிகவும் உறுத்தியதால் இன்றைய அனுபவம் ஏறிய பொறுப்புடன் கூறிய வார்த்தைகள் அவரை அரசியல் சூறாவளியில் சுழற்றி விட்டுவிட்டது.

இன்றைக்கு வருவேன்,நாளைக்கழித்து வருவேன்,போரடித்தால் மன்னிக்கவும் போர் வந்தால் வருவேன் என்று கூறியே அரசியல் செய்யும்  நடிகர்  ரஜினிகாந்த் ஆண்டவன் சொல்லி வருவதற்குள் ஆண்டவனை நம்பாத அவரது நண்பர் கமல்ஹாசன் அரசியலில் வந்து விட்டது போல் தோற்றம் உருவாகியுள்ளது.

ஆனால் அரசியல் வேண்டாம் என்று அடிக்கடி கூறும் கமல் கட்சியினை துவக்குவாரா,அல்லது இணைவாரா என்பது காலம் கையில்.

இந்தி திணிப்புக்கு குரல் கொடுத்தபோதே அரசியலுக்கு வந்து விட்டதை முதுகெலும்பு அறிஞர் ,அரசியல் ஞானி ஏச்சு.ராஜா வுக்கு கமல் சொல்லியிருக்கிறார்.


ஆனால் அதற்கு முன்பே ஈழத்தமிழர் பிரச்னைக்கு தனது ரசிகர்களை வைத்து நடத்திய ஊர்வலத்தின் போதே அவரது அரசியல் வெளிப்பட்டு விட்டது.

கமல்ஹாசன் எப்போதும் சொல்லுவார் வாக்களிக்க கையை கறையாக்கும் ஒவ்வொருவரும் அரசியலில்தான் இருக்கின்றனர்.

உண்மை.

எந்த கட்சிக்கு வாக்கு என்பது தீர்மானிப்பது அரசியல் அல்லாமல் வேறென்ன?

 தற்போது அதிகமாக கமல்ஹாசனை அரசியலுக்கு இழுத்துவர முயற்சித்த அதிமுக அமைச்சர்கள்,பாஜக வினருக்கு பதில் தர ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அதிமுக ஆட்சி ஊழல் குறித்த விவரங்களை அரசுக்கு அனுப்புங்கள் ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

உலக நாயகன் கமல்ஹாசனின் கடிதம்.

கமலஹாசன்  முழுக்க அரசியல் பேச்சாக இல்லாமல் தமிழகத்தில் ஊழல் பெருகி விட்டது என்பதற்கு அதிமுக அமைச்சர்கள் தரும் பதிலை விட பாஜக கட்சியினர் கடுமையாக தரும் பதில் தான் மிகவும் வியப்பாக உள்ளது ,

ஊழல் தமிழகத்தில் பெருகி விட்டது என்றால் தேவையே இல்லாமல் பாஜக உள்ளே நுழைந்து அரசியலுக்கு வந்து பார்,முதுகெலும்பு இல்லை ,சேவை செய்த பின்னர்தான் அரசியலுக்கு வரவேண்டும் ,கோழை என்று கமலஹாசனை விமரிசிப்பது தேவையற்ற ஒன்று .

இவர்கள் ஆட்சிக்கு வந்த உடன் செய்த தூய்மை இந்தியாவின் 7 பிரதிநிதிகளில் கமல்ஹாசனும் ஒருவராக மோடியால் நியமனம் செய்யப்பட்டார்.அப்போது நடந்த விழாவில் கமலுடன் வாலியை தூக்கி போட்டோவுக்கு நின்றவர் பாஜக தலைவி தமிழிசைதான்.அது சமூக சேவை இல்லையா?

அல்லது அப்போது கமலுக்கு முதுகெலும்பு இல்லாதது  உங்களுக்கும், எலும்பு நிபுணர் ஏச்சு.ராஜாவுக்கும் தெரியாதா?
இதுதான் பலரது கருத்து.

ஆனால்  பாஜக ரஜினியை அரசியலுக்கு வா,வா என்கிற காலக்கட்டத்தில் கமலை கண்டு மட்டும் பயம் கொள்வது ஏன்?

நடிகர் ரஜினி பாஜக ஆதரவான இந்துத்துவா கருத்துக்கொண்டவர்.
ஆனால் கமல் ஹாசன் திரையுலகை மட்டுமின்றி நடப்புலகிலும் ரஜினிக்கு போட்டியான கருத்துக்களைக்கொண்டவர்.

திராவிட ,பகுத்தறிவு,இடதுசாரி கருத்துக்களை கொண்டவர்.இந்தி எதிர்ப்பாளர்.
ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்தாலும் பாஜகவுடனே ஒத்து செல்வார்  என்ற  எதிர்பார்ப்பு உண்டு.ஆனால் கமல் மாட்டிறைச்சி,ஜல்லிக்கட்டு,இந்தி திணிப்பு ,ஜி.எஸ்.டி,உடன்பட எல்லா வகையிலுமே மோடி அரசை விமரிசிப்பவர்.

இவை எல்லாவற்றையும் விட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கலந்துரையாடலில் "மோடியின் இஸ்ரேல் பயணத்தை கடுமையாக விமரிசித்தார்.

அதுமட்டுமின்றி தற்போது 100 ஆண்டு போராட்டத்தின் பயனாக பஜ்ரங் தள் ,ஆர்.எஸ்.எஸ் கூட்டம் அதிகாரத்தை கைப்பற்றி விட்டது.அதை இளைஞர்கள்தான் போராடி நாட்டை காப்பாற்ற வேண்டும் அதற்கான பணிகளை  D Y F I (இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் )முன்னெடுப்பு செய்யவேண்டும்" என்றும் கூறினார் .

இந்த  செய்திகளை வழக்கம் போல் நமது நடுநிலை உணர்வுமிக்க ஊடகங்கள் மக்கள் பார்வைக்கே வரவிடவில்லை.

ஆனால் உளவுத்துறையை கையில் வைத்திருக்கும் பாஜக,அதிமுகவுக்கு போகாமல் இருக்குமா?

இப்போது  தமிழ் நாட்டை ஆள்வது யார் என்று    புரிகிறதா?
கமலின் அரசியல் பேச்சுக்கு பாஜக அலறுவது ஏன் என்று தெரிகிறதா?

விஸ்வருபம் பாடல்தான் நினைவில்

"இவன்  யார்  என்று  புரிகிறதா?

இவன்  " தீ "  என்று     தெரிகிறதா?
=======================================================================================
 இன்று,
ஜூலை-20.
  • உலக  சதுரங்க தினம்
  • கொலம்பியா விடுதலை தினம்(1810)
  • யுகோஸ்லாவிய ராஜ்யம் உருவாக்கப்பட்டது(1917)
  • வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி இறந்த தினம்(1937)
  • டென்மார்க் பன்னாட்டு அமைப்பில் இருந்து விலகியது(1940)
=======================================================================================
]









இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?