வாழ நடத்தும் பெரும் போராட்டங்கள்.

ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் செய்து உலகத்தையே தன்  பக்கம் திரும்பிப்பார்க்க வைத்ததவர்கள்தான் நம் செம்மொழித் தமிழ் நாடு 
இதன் மூலம்  2016ம் ஆண்டில்  அதிக போராட்டங்கள் செய்த மாநிலங்கள் பட்டியலில் நம் தமிழகம் இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.


தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகளை முன்னிருத்தி போராட்டங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டம், முழு மதுவிலக்கு அமல்படுத்த வேண்டி, மீத்தேன் திட்டத்துக்கு எதிராக, விவசாயிகள் போராட்டம் என பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.

இதற்காக நம் தமிழகத்துக்கு எல்லா வாய்ப்புகளையும் தந்த,  தந்து வருகிற பாஜக அரசுக்கு நாம் நமது நன்றியை தெரிவித்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் உள்ளது.
இந்நிலையில் தற்போது மிகவும் சூடுபிடித்துள்ள கதிராமங்கலம் போராட்டம், மாட்டிறைச்சி போராட்டம், ஜிஎஸ்டி,மணல் கொள்ளை,நீட் தேர்வுஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு,குடி நீர்  ,டாஸ்மாக் ள்ளிட்ட மொத்தம் 20450 போராட்டங்கள் நடந்துள்ளதாகவும், தினசரி   47போராட்டங்கள்  என்ற அளவிற்கு தமிழகத்தில் போராட்டங்கள் நடைப்பெறுவதாக தகவல் தெரிவிக்கின்றது.

இதில் மக்கள் தினசரி வாழ நடத்தும் பெரும் போராட்டத்தை சேர்க்கவில்லை.


இந்தியாவில் போராட்டங்களை நடத்துவதில் முதலிடத்தில்  உத்தரகாண்ட் மாநிலம் உள்ளது. 

இங்கு கடந்த 2016ம் ஆண்டு 21,966 போராட்டங்கள் நடைப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டங்களும்  மாநிலங்களும் :
1.உத்தரகாண்ட் - 21,966
2.தமிழகம் - 20,450
3.பஞ்சாப் - 11,876
4.தெலுங்கானா - 8,926
5.டெல்லி - 4,048
6.மகாராஷ்டிரா - 5,089
7.கேரளா -2,939
8.சத்தீஸ்கர் -7
9.மேகாலாயா - 7
10.நாகாலாந்து - 1

இதில் குஜராத் மாநிலம் போராட்டங்கள் பற்றிய விபரங்களே இல்லை.
காரணம் அங்கு நடப்பவை இரும்புத்திரை கொண்டு ஊடகங்களால் மூடப்பட்டு வருகின்றன.
 தற்போது கூட ஜிஎஸ்டி வரியை எதிர்த்து பலலட்சம்பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்ட பேரணி,மற்றும் தொடர் போராட்டங்கள்  நடந்துள்ளது.
அதை இந்திய ஊடங்கள் மக்கள் மத்தியில் பரபர செய்தியாக கொண்டுவரவே இல்லை.
=====================================================================================
ன்று, 
ஜூலை-12.
செனான்

  • செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது(1898)

  • 16 ஜெர்மன் மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவின.(1806)

  • போர்ச்சுகலுக்கும் நெதர்லாந்திற்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது(1641)

  • நார்வே, வடக்கு கிரீன்லாந்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது(1932)



செனான் (ஆங்கிலம்: Xenon) ஒரு வேதியியல் தனிமம். 
தனிம அட்டவணையில் இதன் குறியீடு Xe. செனானின் அணுவெண் 54, மற்றும் இதன் அணுக்கருவில் 77 நொதுமிகள் உள்ளன. செனான் ஒரு நிறமற்ற, மணமற்ற, கனமான ஒரு நிறைம வளிமம். நில உருண்டையின் காற்று மண்டலத்தில் மிக மிகச் சிறிய இம்மியப் பொருளாக இது உள்ளது. 
நிறைம வளிமங்கல் பிற அணுக்களுடன் இணைந்துசேர்மம் ஆகாது என்று 20 ஆம் நூற்றாண்டுவரை நம்பி இருந்ததற்கு மாறாக முதல் நிறைம வளிம சேர்மத்தை செனான் வளிமம் வழி உருவாக்கப்பட்டது. செனான் வளிமம், ஐமேக்ஸ் (IMAX) போன்ற திரைப்படம் காட்டும் கருவிகளிலும் பிற உயர் வெளிச்சம் தரும் விளக்குகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. 
செனான் தனிமம்

பொது மயக்கம் தரும் பொருளாகவும் இது விளங்குகின்றது.

வில்லியம் ராம்சே (William Ramsay) மற்றும் மாரிச் டிராவெர்ஸ் (Morris Travers) ஆகியோர் ஜூலை 12, 1898 அன்று இப்பொருளைக் கண்டுபிடித்தனர். 


நீர்மமாக்கப்பட்ட காற்று மீண்டும் ஆவியாகும் பொழுது எஞ்சி இருந்த பொருளில் இருந்து கண்டறிந்தனர்.

 சர் ராம்சே, அந்நியன் அல்லது வேற்றாள் என்னும் பொருள் கொண்ட கிரேக்கச் சொல்லான ξένον [செனாஸ்] என்பதில் இருந்து பெறப்பட்ட செனான் என்னும் பெயரை இந்த வளிமத்துக்குப் பெயராகப் பரிந்துரைத்தார். 

1902 இல், புவியின் வளிமண்டலத்தில் காணப்படும் செனானின் அளவு 20 மில்லியனில் ஒரு பங்கு என ராம்சே மதிப்பிட்டார்.
======================================================================================
கொசுவை விரட்ட 
கொஞ்சம் தூறல் விழுந்தாலும் கிளம்பிவிடும் கொசுக்கள் நம்மை கடித்து குதறியும்,பாடியும் ஒரு வழி செய்து விடும்.

அப்படி முந்தைய காங்கிரசு அரசு போல் கொடுமை செய்தாலும் பரவாயில்லை வேறு வழியின்றி சமாளித்துக்கொள்ளலாம்.

ஆனால் அவை மோடி அரசு தரும் பணமதிப்பிழப்பு,ஜிஎஸ்டி,மாட்டிறைசி தடுப்பு போன்ற ஆணைகள் போல் உயிருக்கே ஆபத்தாக டெங்கு,மலேரியா,பன்றி,மூளை,குரங்கு,ஜிகா     போன்ற விதவிதமான காய்சசல் வகைகளை கட்டவிழ்த்து விடுவதுதான் தாளமுடியாததாக உள்ளது.பொறுத்தது போதும் கொசுக்களை அழிப்போம் என்று பொங்கி எழவும் செய்து விட்டது.(கொசுவைத்தான்).

கொசுக்களை விரட்டி அடிக்க என்ன வழிகள் உள்ளன என்று தனியே உட்கார்ந்து படித்து தேர்ந்தெடுத்தவை இந்த வழிகள்.
முதலில் காலகாலமாக புகை போடுதல் என்பது கொசுவை விரட்ட மிகச் சிறந்த வழிமுறை.
வேப்பிலை, நொச்சி இலை, யூகலிப்டஸ் இலை போன்றவற்றில் ஏதாவது ஒன்றைக் காயவைத்து வீடு முழுவதும் புகைபோட்டால், கொசுக்கள் வீட்டுக்குள் வராது.
காய்ந்த தேங்காய் நார்களை எரித்தால், அதில் இருந்து வரும் புகை அவற்றை எளிதில் விரட்டிவிடும்.
காலை, மாலை வேளைகளில் வீட்டுக்குச் சாம்பிராணிப் புகை போடலாம். இதுகூட கொசுக்களை விரட்ட உதவும்.
வேப்பிலை, நொச்சி, குப்பைமேனி போன்ற ஏதாவது ஒன்றின் இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து, உடலில் தேய்த்துக்கொள்வதன் மூலம் கொசுக்கடியிலிருந்து தப்பிக்கலாம்.
வேப்ப எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து, உடலில் தேய்த்துக்கொள்ளலாம்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர்விட்டு, அதில் கற்பூரத்தைப் போட்டுவைத்தால், அதில் இருந்து வரும் வாசனைக்கு, கொசுக்கள் வீட்டுக்குள் வராது.
வேப்பிலை எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வீடு முழுவதும் தெளிக்கலாம்.
லெமன் கிராஸ் ஆயிலைத் தண்ணீரில் கலந்து, அதைக்கொண்டு தரையைத் துடைத்தால் அந்த வாசனைக்குக் கொசுக்கள் வீட்டுக்குள் வராது.
===========================================================================




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?