வாருங்கள் கமல்ஹாசன்.
ட்விட்டர் வலைத்தளத்தில் வெளியிடும் கருத்துக்கள் மூலமாகவே தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பை கமல்ஹாசன் ஏற்படுத்தியுள்ளார்.
அரசியல்வாதிகள் பதைபதைக்கிறார்கள். ஆத்திரமடைகிறார்கள். வசவுகளை அள்ளி வீசுகிறார்கள். கமல்ஹாசன் நேரடியாக எடப்பாடி அரசையும் அதன் அமைச்சர்களையும் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்குகிறார். கேள்விகளால் துளைக்கிறார். அந்த கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்காத அமைச்சர்கள், அவர் மீது தனிப்பட்ட தாக்குதல்களை தொடுக்கிறார்கள்.
கமல் குற்றச்சாட்டால் பாதிக்கப்பட்ட அதிமுக பிரமுகர்கள் எதிர் தாக்குதல் தொடுப்பதிலாவது ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் பிஜேபி தலைவர்கள் கமலை பிராண்டுகிறார்கள்.
எங்கே நேரடியாக அரசியலுக்கு வந்து விடுவாரோ என்று அஞ்சுகிறார்கள்.
அதிமுகவினர் கமல் மீது தொடுக்கும் தாக்குதலை விட, பிஜேபியினர் தொடுக்கும் தாக்குதல் மிக கடுமையாக இருக்கிறது.

கமல் திரைப்படங்கள் சிறு வயதில் என்னுள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதில்லை. ஏழு வயதில் மூன்றாம் பிறை திரைப்படம் பார்த்தபோது, அந்த படம் எனக்கு துளியும் பிடிக்கவில்லை. முதன் முதலாக எனக்கு பிடித்த கமல் திரைப்படம், சகலகலா வல்லவன். பெற்றோர்களோடு பார்த்த பிறகு, வீட்டுக்கு எந்த உறவினர் வந்தாலும் அவர்களை சகலகலா வல்லவன் திரைப்படத்துக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கேட்டு பல முறை பார்த்துள்ளேன். ]
இறுதி யாக தஞ்சாவூரில் குடியிருந்தபோது, இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஹவுசிங் போர்டு காலனி யில் சகலகலா வல்லவன் திரைப்படத்தை திரையிடுகிறார்கள் என்று அறிந்து வீட்டில் சொல்லாமல் சென்று அந்த திரைப்படத்தை இரவு பார்த்து விட்டு, வீட்டுக்கு வந்த பிறகு, அம்மா காலையில் என்னை வீட்டின் வெளியே இருந்த மின்சார கம்பத்தில் கட்டி வைத்து உரித்து எடுத்தது இன்னும் நினைவிருக்கிறது.

அதன் பிறகு பார்த்த திரைப்படங்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
ஒரு தீபாவளி அன்று, கமல்ஹாசனின் நாயகன், ரஜினிகாந்தின் மனிதன் மற்று விஜயகாந்தின் நல்லவன் ஆகியவை அனைத்தும் ஒன்றாக ரிலீஸ் ஆனது. பின்னாளில் கம்யூனிஸ்டாக மாறிய நண்பன், நாயகன்தான் பார்க்க வேண்டும் என்றான். நானும் மற்ற நண்பர்களும் மனிதன் தான் பார்க்க வேண்டும் என்றோம்.
இறுதியாக டிக்கெட் கிடைக்காமல் நல்லவன்தான் பார்த்தோம்.
நாயகன் எப்படிப்பட்ட ஒரு காவியம் என்பதை நான் அறிந்து கொள்ள பல வருடங்கள் ஆகியது. ஒரு பேட்டியில் கமல்ஹாசன், எங்கள் தெருவில், ஒவ்வொருவரும காட் ஃபாதர் நாவலை படித்து விட்டு மூன்று ஸ்க்ரிப்ட் வைத்திருப்போம் என்று சொன்னது எனக்கு அப்போது புரியவில்லை.
நாயகன் படத்தின் முக்கியத்துவத்தை நான் புரிந்து கொள்ள பல வருடங்கள் ஆகியது.

பல ஆண்டுகள் கழித்து சென்னையில் உள்ள பெரியார் திடலுக்கு கமல்ஹாசன் வந்திருந்தார். கமல் ஒரு பிராமணர் என்பது நன்றாக தெரியும்.
அவரை கி.வீரமணி அழைத்ததும், அதற்கு ஒப்புக் கொண்டு கமல் வந்திருந்ததும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருந்தது.
முதன் முதலாக கமல் அந்த மேடையில்தான் தன்னை நாத்தீகன் என்று அறிவித்தார். கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தார். “அக்ரஹாரத்தில் இருந்து புறப்பட்ட ஒரு புயல் இன்று பெரியார் திடலை வந்தடைந்திருக்கிறது” என்றார் கமல்.
நான் ஒரு நாத்தீகன் என்பதை முன்பே அறிவித்திருப்பேன். இன்றைய நிகழ்ச்சிக்கு நான் பென்ஸ் காரில் வந்துள்ளேன். முன்னதாகவே நாத்தீகன் என்று அறிவித்திருந்தால், ஆட்டோவில் வந்திருப்பேன் என்று கூறினார். அப்போது என்னை ஆக்ரமித்திருந்த மிகத் தீவிர நாத்தீக உணர்வு கமல்ஹாசனை மிக பிரமிப்பாக பார்க்க வைத்தது.
அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து சென்னை புத்தக கண்காட்சியில் கமல்ஹாசன் ஆற்றிய உரை அவர் மீதான மரியாதையை உயர்த்தியது. அன்பே சிவம் திரைப்படம் கமல் மீது ஒரு பெரும் பிரமிப்பை உண்டாக்கியது.

ஹேராம் மற்றும் அன்பே சிவம் போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாக கமலுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது என்றாலும், அது போன்ற படங்களைத்தான் அவர் தொடர்ந்து எடுத்து வந்தார். அதனால் ஏற்பட்ட பொருளாதார நஷ்டங்களை அவர் பெரிய அளவில் பொருட்படுத்தவில்லை.
திரையுலகில் விசாரித்துப் பாருங்கள்.
இன்று வரை, தனக்கு தரப்பட வேண்டிய மொத்த ஊதியத்தையும் கறுப்பில் வாங்காமல் வெள்ளையில் வாங்குவது கமல்ஹாசன் மட்டுமே.

தமிழக அரசியல் இன்று ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்து வரும் அராஜகங்களும் அட்டூழியங்களும் மக்களை கடும் கோபமடைய வைத்துள்ளன. ஆனால் இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றது என்பதால் அனைவரும் கையறு நிலையில் இருக்கின்றனர்.
இந்த அரசை ஆட்டம் காண வைக்க வேண்டிய பிரதான எதிர்க்கட்சியான திமுக புதிய வடிவங்களும், ஆலோசனைகளும் இல்லாமல் திணறிக் கொண்டிருக்கிறது. 1991 ஆட்சி காலத்தில் திமுகவுக்கு பரிதி இளம்வழுதி என்ற ஒற்றை எம்எல்ஏ மட்டுமே இருந்தார். அன்று அதிமுகவோடு கூட்டணி சேர்ந்து ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கட்சி வெகு சில காலங்களிலேயே கூட்டணியை முறித்தது. அன்று திமுகவின் ஒற்றை எம்எல்ஏ பரிதியும், காங்கிரஸ் எம்எல்ஏக்களும் சேர்ந்து சட்டப்பேரவையை ஸ்தம்பிக்க வைத்தனர். உள்ளிருப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி, மக்களின் கவனத்தை தங்கள் பால் ஈர்த்தனர். ஆனால் இன்று திமுகவுக்கு 89 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர்.
சட்டப்பேரவை கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படும் அளவுக்கு போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும்.
இந்த ஊழல் ஆட்சிக்கு எத்தகை தொந்தரவுகளை தர முடியுமோ அத்தனை தொந்தரவுகளையும் தந்திருக்க வேண்டும்.
ஆனால், அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் எடப்பாடியின் ஆட்சி நிம்மதியாக சட்டப்பேரவை கூட்டத் தொடரை நடத்தி முடித்திருக்கிறது.
புளிமூட்டை பழனிச்சாமி கூட்டத் தொடர் வெற்றிகரமாக முடிந்ததை கொண்டாடும் வகையில் ஜெயலலிதா சமாதியில் சென்று அஞ்சலி செலுத்துகிறார்.
அதிமுகவினர் வெற்றி முரசு கொட்டுகின்றனர்.

புளிமூட்டை பழனிச்சாமியின் ஆட்சியில் அங்கிங்கெனாதபடி, எங்கெங்கும் ஊழல் நிறைந்துள்ளது அப்பட்டமாகவே தெரிகிறது. அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் போட்டி போட்டுக் கொண்டு பணத்தை வாரிக் குவிக்கின்றனர். சாதாரண பணியிட மாற்றம் முதல், பல கோடி ரூபாய் கான்ட்ராக்டுகள் வரை, லஞ்சம் பெருமளவில் தலை விரித்து ஆடுவது கண் கூடாகவே தெரிகிறது.
அடுத்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதை அறிந்த ஆளுங்கட்சி எம்எல்ஏக்களும் அமைச்சர்களும், ஒவ்வொரு நாளையும் பொன் போல கருதி வசூலை குவித்து வருகின்றனர். இவை அனைத்தும் எதிர்க்கட்சிகளுக்கு தெரிந்தாலும், அறிக்கை விடுவதைத் தாண்டி அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஊழல் இலை மறை காயாக நடைபெற்றது என்றால், தற்போது வெளிப்படையாகவே நடைபெற்று வருகிறது. ஊழல் மற்றும் தமிழகத்தின் நலன்களுக்கு எதிரான திட்டங்களுக்கு எதிராக நடைபெறும் சில போராட்டங்களில் ஈடுபடுவோரையும், தமிழக அரசு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்கிறது.
வெறும் துண்டறிக்கைகளை விணியோகம் செய்த காரணத்துக்காக ஒரு கல்லூரி மாணவியான வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. இதை சட்டப்பேரவையிலேயே புளிமூட்டை பழனிச்சாமி நியாயப்படுத்தியுள்ளார். இப்படிப்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்களில் தலையிட்டு நியாயத்தை நிலை நாட்ட வேண்டிய நீதிமன்றங்கள், அமைதியாக வேடிக்கை பார்த்து வருகின்றன.

அயோக்கியத்தனத்தின் உச்சமாக, குட்கா வியாபாரத்துக்கு ஒத்துழைத்ததற்காக பல கோடி ரூபாயை லஞ்சமாக பெற்ற டிகே.ராஜேந்திரனை பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி, நள்ளிரவில் டிஜிபியாக இரண்டாண்டு பணி நீட்டிப்பு கொடுத்து நியமனம் செய்தது எடப்பாடி அரசு.
பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு புளி மூட்டை பழனிச்சாமி அளிக்கும் மரியாதையின் அளவுகோல் இதுதான்.

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராக ஒரு வலுவான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய காலகட்டத்தில் ஒரு இறுக்கமான மவுனம் தமிழகத்தில் நிலவுகிறது. பல்வேறு காரணங்களால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய முடியாமல் தனித்தனியாக நின்று, எடப்பாடி அரசை பலப்படுத்தி வருகின்றன.
பெரிய அளவில் எந்தவொரு அரசியல் அனுபவமோ, சாணக்கியத்தனமோ இல்லாமல், குண்டூசியின் மீது நின்று கொண்டிருக்கும் எடப்பாடி அரசு, ஒய்யாரமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது.

இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில்தான் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்தை பார்க்க வேண்டும். கமல்ஹாசன் இந்த முயற்சியில் வெற்றி பெறுவாரா, அல்லது தோல்வியை சந்திப்பாரா என்பதற்கான விடை காலத்தின் கைகளிலேயே இருக்கிறது.
ஆனால் வரலாற்று தரும் உதாரணங்களை வைத்து நாம் ஒரு ஊகத்துக்கு வர முடியும். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனைப் போல பெரிய ரசிகர் கூட்டத்தையும் பின்தொடர்பாளர்களையும் வைத்திருப்பவர் அல்ல விஜயகாந்த்.
இருவரோடு ஒப்பிடுகையில், விஜயகாந்த் ஒரு சூப்பர் ஸ்டார் அல்ல.
ஆனால் 14 செப்டம்பர் 2005 அன்று கட்சி தொடங்கிய விஜயகாந்த், 2006 சட்டமன்றத் தேர்தலில் 10 சதவிகித வாக்குகளைப் பெற்று அனைத்துக் கட்சிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். விஜயகாந்த்தின் தேமுதிக அந்த தேர்தலில் போட்டியிடாமல் போயிருந்தால், திமுக மைனாரிட்டி அரசாக உருவாகியிருக்காது.

அன்று விஜயகாந்த் கட்சி தொடங்கியபோது, இருந்த சூழல் வேறு. அன்று கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என்ற இரு ஆளுமைகள் வலுவாக இருந்தனர். முழுமையான செயல்பாட்டில் இருந்தனர். தீவிர அரசியலில் இருந்தனர்.
அப்படி இருந்தும், விஜயகாந்த்தால் 30 லட்சம் வாக்குகளை பெற முடிந்தது. ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ். கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என்ற இரு ஆளுமைகளும் முழுமையான அரசியல் செயல்பாட்டில் இல்லை. ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆகர்ஷிக்கும் ஒரு தலைமை தமிழகத்தில் இல்லை.
எடப்பாடி பழனிச்சாமியும் அவரது அமைச்சர்களும், உதிரிகளாக உலா வந்து கொண்டிருக்கின்றனர். சிறப்பான அரசியல் செய்தாலும், பாட்டாளி மக்கள் கட்சியால், சாதிக் கட்சி என்ற முத்திரையை உதற முடியவில்லை. வட தமிழகத்தைத் தாண்டி, இதர மாவட்டங்களில் காலூன்ற முடியவில்லை.
இடது சாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட இதர கட்சிகளின் பலம் மிகக் குறைவே. ஒட்டுமொத்த தமிழகத்தையும் தங்கள் வசப்படுத்தும் பலம் அவர்களுக்கு இல்லை.

பிரதான எதிர்க்கட்சியான திமுகவோ, முட்டுசந்தில் மாட்டிக் கொண்டது போல முழிக்கிறது. சட்டப்பேரவையில் எடப்பாடி அளிக்கும் பதிலில் சமாதானமடையும் அளவிலேயே ஸ்டாலின் இருக்கிறார்.
சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளன்று, சட்டவிரோதமாக விற்கப்படும் குட்காவை அவைக்கு எடுத்து வந்ததற்காக, உரிமை மீறல் புகார் என்று ஆளுங்கட்சியினர் குரல் எழுப்பியபோது, ஆம், உரிமை மீறல்தான்.
சட்டவிரோத பொருட்கள் சகஜமாக கடைகளில் விற்கப்படுவதை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை. இது விதி மீறல் என்றால் இந்த விதி மீறலை தொடர்ந்து செய்வோம் என்றே பதில் அளித்திருக்க வேண்டும். ஆனால் பதில் அளிக்க முடியாமல் திமுகவினர் திணறினர்.

அரசியலுக்கு வர கமலுக்கு தகுதி இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
ஜெயலலிதாவுக்கு என்ன தகுதி இருக்கிறது.
அவர் ஆளவில்லையா ? எடப்பாடி பழனிச்சாமிக்கு என்ன தகுதி இருக்கிறது.
அவர் ஆளவில்லையா ? அதிமுகவின் அமைச்சர்கள் பலருக்கு என்ன தகுதி இருக்கிறது அவர்கள் ஆளவில்லையா ?
விஜயகாந்துக்கு என்ன தகுதி இருக்கிறது. அவர் எதிர்க்கட்சித் தலைவர் ஆகவில்லையா ?

செந்தில் முருகன் என்ற தொழிலதிபர் இது குறித்து பேசுகையில், “வாக்களிக்கும் உரிமை உள்ள அத்தனை பேருக்கும் அரசியலில் இறங்க தகுதி இருக்கிறது. நாம் உண்ணும் உணவு முதல் அருந்தும் தண்ணீர் வரை அனைத்திலும் அரசியல் இருக்கிறது. இந்தியா முழுக்க பல்வேறு சூப்பர் ஸ்டார்கள் ரசிகர் மன்றம் வைத்திருந்தாலும், அந்த மன்றத்தை நற்ப
ணி மன்றம் என்று மாற்றி, உறுப்பு தானம், ரத்த தானம் என்ற பழக்கத்தை பல ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கியவர் கமல்ஹாசன்.
தற்போது ரத்ததானம் மற்றும் அனாதை குழந்தைகளுக்கு பிறந்தநாளில் உணவிடுவது ஃபேஷனாகி விட்டது.
ஆனால் இதற்கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்னால் இதை செய்தவர் கமல்ஹாசன்.

ஜெயலலிதா பலம் பொருந்திய மிகப்பெரும் ஆளுமையாக இருந்த காலத்தில், கலைஞர் கருணாநிதியின் நள்ளிரவு கைதை வெளிப்படையாக கண்டித்தவர் கமல்ஹாசன் என்பதை மறந்து விடக்கூடாது” என்றார்.
கமல்ஹாசனுக்கு சாதி மதத்தை கடந்த ஏற்புணர்வு இருக்கிறது. அவரின் தமிழறிவு மற்ற எவருக்கும் சளைத்ததில்லை.
மொழி என்ற அடிப்படையில் மட்டுமே திமுக ஆட்சியை பிடித்திருக்கிறது என்பதை நாம் மறக்க முடியாது.
கமலை கடுமையாக விமர்சித்து வரும் பிஜேபியின் எச்.ராஜா, கமல் விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில் மண்டியிட்டார் என்று விமர்சிக்கிறார்.
விஸ்வரூபத்தின் அடிப்படை பிரச்சினை, மன்னார்குடி மாபியாவின் கட்டளைக்கு இணங்க, விஸ்வரூபம் திரைப்படத்தை குறைந்த விலைக்கு ஜெயா டிவிக்கு விற்பனை செய்ய வேண்டும் என்பதே.
இது தொடர்பாக கமலஹாசனின் சகோதரர் சந்திரகாசன் சசிகலாவோடு பேச்சுவார்த்தை நடத்துகிறார். மன்னார்குடி கூட்டம் கேட்ட குறைந்த விலைக்கு விற்பனை செய்யமுடியாது என்பதை வெளிப்படையாக தெரிவித்த பிறகே, திரைப்படம் தடை செய்யப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து எதுவுமே அறியாத இஸ்லாமிய இயக்கத்தினர் ஜெயலலிதா விரித்த வலையில் விழுந்தனர்.

இந்த விவகாரத்தில் கமல்ஹாசன் கோழை போல செயல்பட்டார் என்று விமர்சனம் செய்பவர்கள் ஒரு விஷயத்தை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தன் வாழ்நாள் முழுக்க சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் ஒரே திரைப்படத்தில் இழக்கும் வலி என்ன என்பதை உணர்ந்தவர்கள், கமல் மீது இப்படிப்பட்ட விமர்சனத்தை வைத்திருக்க மாட்டார்கள்.
கமல் மீது பல விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் வைக்கும் எச்.ராஜா, வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் அவர் கணவர் மீது குவியும் புகார்கள் குறித்து வாயே திறப்பதில்லை.
மேலும், வானதி மீது குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்கள், பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் அல்ல. பாஜகவின் முக்கிய பிரமுகர்களே அந்த குற்றச்சாட்டுகளை முன்னெடுப்பவர்கள்.

கமலின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்தளித்த தி வீக் ஆங்கில வார இதழின் தமிழக தலைமை செய்தியாளர் லட்சுமி “அரசியலும் திரைத்துறையும் பின்னிப் பிணைந்திருக்கும் தமிழகம் போன்ற மாநிலங்களில், பிரபலமானவர்கள் அரசியலில் குதிப்பது புதிதன்று. கமல்ஹாசன், தான் எடுக்கும் நிலைப்பாட்டில் இருந்து பின் வாங்காதவர்.
பல விஷயங்களில் குழப்பமில்லாமல் தெளிவான நிலைப்பாட்டை எடுப்பவர்.
எல்லைகளை மீறுவது, கமலுக்கு இயல்பான ஒன்று.
தேவைப்படுகையில் எல்லைகளை தாண்டுவதற்கு தயங்காதவர் கமல்ஹாசன்.
விஸ்வரூபம் விவகாரத்தில் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று வெளிப்படையாக அறிவிப்பதாக இருக்கட்டும், ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான கருத்துகளாக இருக்கட்டும்.
விளைவுகள் குறித்து கவலைப்படாமல் தெளிவான முடிவெடுப்பவர் கமல்ஹாசன்.
ஒரு கருத்தை தெரிவித்து, ஒரு சில நாட்களில் பின்விளைவுகளை கருதி அதிலிருந்து பின் வாங்கும் இதர நட்சத்திரங்களை போன்றவர் அல்ல கமல்ஹாசன்.
அவர் ரஜினிகாந்தைப் போல அரசியல் குறித்து சிந்திப்பவர் அல்ல.
ஊழலுக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும் என்பதை செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்.” என்றார்.

கமலின் அரசியல் பிரவேசம் குறித்து பேசுகையில் ரஜினிகாந்தின் நிலைபாட்டோடு ஒப்பிடுவதை தவிர்க்க இயலாது.
1996ம் ஆண்டு, காலம் ரஜினிக்கு அருமையான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. ஆனால் அரசியலை விட, தனது சினிமா வியாபாரத்தையே பிரதானமாக ரஜினி கருதினார்.
ஒவ்வொரு முறையும், தனது அரசியல் பிரவேசம் என்ற விவகாரத்தை தனது சினிமா வியாபாரத்துக்காக மட்டுமே ரஜினிகாந்த் பயன்படுத்திக் கொண்டார்.
தனது சொந்த நலன்கள் பாதிக்கப்படுகையில் மட்டுமே ரஜினி அரசியல் வசனங்களை உதிர்த்தார்.
தனது வார்த்தைகளால் ஏற்படும் விளைவுகள் குறித்து, மிகவும் கவலைப்படுபவர்தான் ரஜினிகாந்த். சிஸ்டம் சரியில்லை என்று வக்கணையாக பேசும் ரஜினிகாந்த், கோச்சடையான் திரைப்பட வியாபாரத்தில், தனது குடும்பத்தினரே மோசடியில் ஈடுபட்டு காவல்துறை வரை புகார் சென்றபோது, அதை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த விவகாரமாக இருந்தாலும், தெளிவான நிலைபாட்டை எடுக்காமல், அதை குழப்பி, தனக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்பவர்தான் ரஜினிகாந்த்.

பாரதீய ஜனதா கட்சியினர், ரஜினிகாந்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாதுவதும், கமல்ஹாசனை கடுமையாக விமர்சிப்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே.
ரஜினிகாந்த் ஒரு சாமியார் மட்டுமல்லாமல் ஒரு கோழை.
எந்த விவகாரத்திலும் வெளிப்படையாக கருத்து கூற தயங்கக் கூடியவர்.
மாட்டிறைச்சி விவகாரத்தில், எனது உணவை வேறு யாரும் தீர்மானிக்க முடியாது என்று கமல் வெளிப்படையாக கருத்து கூறியபோது, வாயே திறக்காமல் அமைதியாக இருந்தவர்தான் ரஜினிகாந்த். இவரைப் போன்ற மவுனிகளும், சுய சிந்தனை இல்லாத கோழைகளையுமே பிஜேபி விரும்புகிறது. கமல் போன்ற துணிச்சலான சிந்தனைகள் உள்ளவர்களை அல்ல.

கமலின் அரசியல் பிரவேசம் குறித்து பேசிய திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனிடம் பேசினோம். “அவரது அரசியல் பிரவேசம் வரவேற்கப்பட வேண்டியதே.
எல்லா குடிமகன்களையும் போல, அவருக்கு கருத்து சுதந்திரம் உண்டு. ஆனால் அவர் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், தனிப்பட்ட முறையில் அவர் மீது தொடுக்கப்படும் தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டியது. ” என்றார். ரஜினியை பாஜக முன்னிறுத்துவதால், கமல்ஹாசனை திமுக முன்னிறுத்துகிறது என்ற கேள்விக்கு, “திமுக ஒரு மிகப்பெரிய இயக்கம்.
ஒரு நடிகரையோ அல்லது வேறு நபரையோ பின்னிருந்து இயக்கித்தான் அரசியல் செய்ய வேண்டும் என்ற தேவை திமுகவுக்கு ஒரு போதும் கிடையாது. ஒரு அரசியல்வாதி மட்டுமே கருத்து கூற முடியும் என்பது போல பிஜேபியும், அதிமுகவும் கமலை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது.
வாக்களிக்கும் உரிமை உள்ள ஒவ்வொருவருக்கும், அரசை விமர்சனம் செய்யும் உரிமை உண்டு. ” என்றார்.

அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் ஆவடி குமார், கமல்ஹாசன் மீது அவரது விமர்சனத்தை முன்வைத்தார். “எல்லா குடிமகன்களையும் போல, கருத்து சொல்வதற்கு கமல்ஹாசனுக்கும் உரிமை உண்டு. அவர் சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் அவர் ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறார். பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டு சொல்கிறார்.
இந்த இடத்தில் ஊழல், இவர் ஊழல் செய்திருக்கிறார் என்று தெளிவாக ஒரு குற்றச்சாட்டையும் கமல் இது வரை சொல்லவில்லை.

ஒரு பிரபலமாக இருப்பவர், பொறுப்போடு பேச வேண்டும். ஆனால் கமல்ஹாசன் வாய்க்கு வந்த குற்றச்சாட்டுகளை ஆட்சியின் மீது அள்ளி வீசுகிறார். இப்படி பொத்தாம் பொதுவாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை சொல்கையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் நாங்கள் எப்படி அமைதியாக இருக்க முடியும்” என்றார்.
ஒரு பத்திரிக்கையாளன் மற்றும் பொதுமக்கள், குற்றச்சாட்டுகளைத்தான் தெரிவிக்க முடியும். அதற்கான ஆதாரங்களை புலனாய்வு செய்து தேட வேண்டியது ஒரு அரசின் கடமை.
ஆதாரங்களோடு குட்கா ஊழலை ஊடகங்கள் வெளியிட்டபோது, அதன் மீது எடப்பாடி அரசு எடுத்த நடவடிக்கை என்ன ?
லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை என்ற பெயரில், அந்த ஊழலை மூடி மறைப்பதைத் தவிர வேறு என்ன செய்தது இந்த அரசு ?

இப்போது ஆதாரங்களை அனுப்பினால் மட்டும் நடவடிக்கை எடுத்து விடுவார்களா என்ன ?
எல்ஈடி பல்பு ஊழல், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம், குட்கா ஊழல் என்று எத்தனை ஊழல்கள் ஆதாரத்தோடு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன ?
என்ன நடவடிக்கை எடுத்தது இந்த அரசு ?

அதிமுக அடிமைகளை விட, பிஜேபியினர் கமல்ஹாசனை கரித்துக் கொட்டுவதுதான் புதிராக உள்ளது. எதற்காக அவர்களுக்கு இந்த கோபம் என்பது புரியவேயில்லை.
பிஜேபியின் செய்தித் தொடர்பாளர் கல்யாண் இது குறித்து பேசுகையில், “கமல்ஹாசனால் தனது குடும்பத்தைக் கூட ஒழுங்காக வைத்துக் கொள்ளத் தெரியவில்லை.
அவரது மனைவிகளையும், வைப்பாட்டிகளையும் (Concubine) கூட அவரால் அவரோடு தக்க வைக்க முடியவில்லை. இதைக் கூட செய்ய முடியாத ஒரு நபரால், எப்படி ஒரு மாநிலத்தை வழிநடத்த முடியும்” என்றார்.

அவர்களுக்கும் அந்த விஷயங்கள் வெளிப்பட வேண்டும் என்ற நோக்கம் கிடையாது.
ஏனென்றால் கட்சி பாதிக்கப்படும். ஆனால் தங்கள் ஆதங்கத்தை என்னோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.
கமலாலயத்தில் உள்ள படுக்கையறையில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று ஒரு கோரிக்கை வையுங்களேன். துடிதுடித்து உங்களை கடுமையாக விமர்சிப்பார்கள்.
ஏனென்றால் அங்கே நடப்பவை அனைத்தும் அதுதான்.
இன்னும் சில பெண் பிரமுகர்கள் குறித்து என்னால் எழுத முடியும்.
நாகரீகம் கருதி தவிர்கிறேன்.

இன்று ஆர்எஸ்எஸ்ஸின் ஊதுகுழலாக இருக்கும் விஜயபாரதத்தின் ஆசிரியர் குழந்தைகளோடு செக்ஸ் வைத்துக் கொள்ளும் ஒரு பீடோஃபைலா இல்லையா என்று கேளுங்கள்.
நேர்மையான ஆர்எஸ்எஸ் அன்பர்கள் இதை மறுக்க மாட்டார்கள்.
நிரந்தரமாக சிறையில் இருக்க வேண்டிய ஒரு பீடோஃபைலை விஜயபாரதத்தின் ஆசிரியராக நியமித்து அதை வழிநடத்தும் ஒரு அமைப்பை தாங்கிப் பிடிக்கு எச்.ராஜாவுக்கு கமல்ஹாசனின் ஒழுக்கத்தை பற்றிப் பேச என்ன யோக்கியதை இருக்கிறது ?

பிஜேபியினரின் கமல் மீதான கருத்துக்கள் வெறித்தனமாக இருக்கிறது.
பரம்பரை சொத்துக்களை கமல் களவாண்டவர் போல பேசுகிறார்கள்.
அவர்களின் இந்த கருத்து, கமல்ஹாசனை எந்த அளவுக்கு ஆபத்தாக பார்க்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.

மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.மணி இது குறித்து விளக்கினார். “கமலின் அரசியல் பிரவேசத்தின் முன்னோட்டமாக அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் எனக்கு வியப்ப அளிக்கிறது.
கமல் இப்படி வெளிப்படையாக பேசுவார் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை.
மாநில அரசின் மீது அவரது நேரடியான தாக்குல் வியப்பை ஏற்படுத்துகிறது. எந்த விஷயத்திலும் அவர் இது வரை பின்வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
ஊழலுக்கு எதிரான அவரது நிலைபாடுதான் இருப்பதிலேயே மிகச் சிறப்பானது. இதனால் அவர் மீதான மரியாதை அதிகரித்திருக்கிறது.

ஆனால் அதே நேரத்தில், தனது திரைத்துறை முழுக்கவே கருப்புப் பணத்தில் இயங்குகிறது என்பதையும் கமல் அறிவார். அவர் அது குறித்தும் பேச வேண்டும்.
கமல் எந்த அளவுக்கு ஆபத்தானவர். அவரால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை முழுக்க உணர்ந்தவர்கள் பிஜேபியினர். அதனால்தான் அவர் மீது கடுமையான தாக்குதலை தொடுக்கிறார்கள்.
பிஜேபி தலைவர்கள் கடுமையான பயத்தில் உள்ளார்கள். அந்த பயம்தான் அவர்களை வரம்பின்றி வார்த்தைகளை பிரயோகிக்க வைக்கிறது.
அதே நேரத்தில் ட்ராஃபிக் கான்ஸ்டபிளும், விஏஓவும் வாங்கும் 100 அல்லது 200 ரூபாய் மட்டும் லஞ்சமல்ல. அதை விட அமைச்சர்கள் கோடிக்கணக்கில் வாங்கும் லஞ்சத்தின் தீவிரத்தை புரிந்து கமல் செயலாற்ற வேண்டும். ” என்றார்.

காவல்துறையில் ஒரு மூத்த ஐபிஎஸ் அதிகாரி கமலின் அரசியல் பிரவேசம் குறித்து பேசினார். “கமல் ஒரு அற்புதமான நடிகர் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. ஆனால் ஒரு நிர்வாகத்தை நடத்த நடிப்புத் திறன் மட்டும் போதுமானதல்ல. ஒரு வரி செலுத்தும் குடிமகனாக, வாக்களிக்கும் குடிமகனாக அரசாங்கத்தை கேள்வி கேட்க அவருக்கு எல்லா உரிமையும் உள்ளது. அவரின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியது அரசின் கடமை. அதே நேரத்தில் தேசத்தையே உலுக்கிய 2ஜி ஊழலின் போது அவர் என்ன செய்து கொண்டிருந்தார் ?
இலங்கையில் அரசுகளின் துணையோடு மக்கள் கொல்லப்படுகையில் என்ன செய்து கொண்டிருந்தார் என்ற கேள்விகளை தவிர்க்க முடியவில்லை.

வெறும் நடிகர் என்ற அடிப்படையில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் வகையில் மக்கள் முட்டாள்கள் அல்ல. மக்கள் மிக மிக புத்திசாலிகள். அரசியலில் பல நடிகர்கள் இறங்கியிருந்தாலும், எம்ஜிஆர், என்டி.ராமாராவ் மற்றும் ஜெயலலிதாவை மட்டுமே வெற்றி பெற வைத்தார்கள்.
பிரேம் நசீர், சிவாஜி கணேசன், எஸ்எஸ்.ராமச்சந்திரன், பாக்கியராஜ், டி.ராஜேந்தர் போன்றோரை மண்ணைக் கவ்வ வைத்தார்கள். எம்ஜிஆருக்கு நிகரான புகழைப் பெற்ற சிவாஜி தனது சொந்த மண்ணிலேயே தோற்றார் என்பதை நாம் புறந்தள்ள இயலாது.

சிலரைத் தேர்ந்தெடுத்து பலரை மக்கள் உதாசீனப்படுத்துவதற்கான காரணத்தை மக்களே முடிவு செய்வார்கள். அவர்களின் அறிவை என்றுமே குறைத்து மதிப்பிட முடியாது. கமலஹாசன் இம்மக்களின் அறிவை உணர்ந்து செயல்படுவாரோயானால் அவர் வெற்றி பெறுவார். அதை விடுத்து, அவசர கதியில், உடனடி முதல்வர் கனவில் அவர் இருப்பாரோயானால் அவருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்றார்.
பல்வேறு ஆதரவான கருத்துக்களையும் எதிர்க் கருத்துக்களையும் பார்த்தோம். கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டுமா கூடாதா என்ற கேள்விதான் இறுதியில் நிற்கிறது. அவர் வர வேண்டும் என்பதை தீர்மானமாக சொல்கிறது சவுக்கு. கூத்தாடிகள் மிக எளிதாக அரசியலில் வந்து வெற்றி பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்மையே. கூத்தாடிகள் வரக்கூடாதென்றால், அரசியலில் வெற்றி பெறுபவர்கள் அனைவரும், சுதந்திரப் போராட்ட தியாகிகளா என்ன ? திமுவை எடுத்துக் கொண்டால் கூட, முன்னாள் அமைச்சர்களின் வாரிசுகள்தானே இன்று பதவிக்கு வருகிறார்கள் ? முக.ஸ்டாலினின் நம்பிக்கையைப் பெற்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழி மொழிப்போர் தியாகியா என்ன ? டிஆர்.பாலுவின் மகன் டிஆர்பி.ராஜா அரசியல் விஞ்ஞானியா ?
ஒரு சாதாரணர், கடைநிலையில் உள்ளவர், அரசியலில் குதித்து வெற்றி பெறுவது நடக்காத ஒரு காரியம் என்பதை நாம் அனைவருமே அறிவோம். அதுதான் யதார்த்தம். யதார்த்தத்தின் புரிதலோடு தமிழகத்தை காப்பாற்ற வேண்டுமென்றால், பிரபலமான, அனைவருக்கும் ஏற்புடைய ஒருவர் வர வேண்டும். அது கமலஹாசன் மட்டுமே.
கருப்புப் பணத்தை வைத்து மட்டுமே தொழில் நடத்தும் திரைத்துறையில் நான் கணக்கில் காட்டப்படும் வெள்ளைப் பணத்தை மட்டுமே வாங்குவேன் என்று பிடிவாதமாக இருக்கும் ஒரே ஒரு குணம் மட்டுமே கமல்ஹாசனை அரசியலுக்கு வர தகுதியானவராக்குகிறது. நான் கருப்புப் பணம் வாங்கிதில்லை என்று ரஜினியை சொல்லச் சொல்லுங்கள் ? ராஜ்குமார் வீரப்பனால கடத்தப்பட்டபோது அவருக்கு பிணைத் தொகையை வசூல் செய்து நான் தரவிலை என்று ரஜினியை சொல்லச் சொல்லுங்கள்…….!!!!! அவரால் சொல்ல முடியாது. சொல்லவும் மாட்டார்.
வாருங்கள் கமல்ஹாசன்.
குறிப்பு :
தயவு செய்து, ட்விட்டரில் மக்கள் தமிழில் எழுதுங்கள்.
புறநானூறு நடையில் எழுதினால் அதை புரிந்து கொள்வ தற்குள் மண்டை காய்கிறது. நீங்கள் படித்த அதே முத்தையா செட்டியார் பள்ளியில்தான் நானும் படித்தேன்.
உங்களுக்கு ஆசிரியராக இருந்த கேடி.கோவிந்தராஜன் எனக்கு தலைமை ஆசிரியர்.
அவருக்கு நீங்கள் வாங்கிக் கொடுத்த சைக்கிளை அவர் பல முறை அன்போடு ப்ரேயர் கூட்டங்களில் நினைவு கூர்ந்துள்ளார். இறுதி வரை அவர் சைக்கிளில்தான் வந்தார்.
அந்த பள்ளிதான் என்னை செதுக்கியது. உங்களையும் செதுக்கியதை என்னால் காண முடிகிறது.
வாருங்கள்.
கொள்ளைக் கூட்டத்தை விரட்டி அடியுங்கள் அயயா!

========================================================================================
இன்று,
ஜூலை-25.
சோம்நாத் சாட்டர்ஜி |
- முதல் சீன-ஜப்பானியப் போர் துவங்கியது(1894)
- அஜினமோட்டோ கண்டுபிடிக்கப்பட்டது(1908)
- சோவியத் செய்தி நிறுவனமான டாஸ் நிறுவப்பட்டது(1925)
- முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, பிறந்த தினம் (1929)
- துனீசியா குடியரசு தினம்(1957)
- இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக பிரதிபா பாட்டீல் பதவியேற்றார்(2007)
=========================================================================================
இது தெளிவான பார்வையையும் தாண்டிய ஒன்று...
தாமஸ் ஆல்வா எடிசனின் கூற்றின் படி, செயல்படுத்தப்படாத காட்சி அனைத்தும் ஒரு மாயே! நாம் பார்த்த பெரும்பாலான நிறுவனர்கள் எல்லாவற்றிற்கும் ஒரு பார்வை வைத்திருப்பார்கள், ஆனால் அவர்களிடம் அதற்கான செயல்முறையை கேட்டால் அவர்களின் பதில் குழப்பமாகவோ அல்லது வெறுமையாகவோ இருக்கும்.
நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களை ஊக்குவிக்க அடித்தளமாக இருப்பது ஒரு சிறந்த பார்வையே ஆகும். ஆனால் அந்த பார்வை நடைமுறையில் செயல்படுத்த முடிந்தவையாய் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, நான் எத்தனை விநியோக சேவை App-ஐ என் போனில் இறக்கிய பிறகு நீக்கியிருப்பேன் என்ற கணக்கை நான் இழந்துவிட்டேன். ஏன் என்றால் குறிப்பிட்டவாறு சேவைகள் யாவும் எனக்கு கிடைக்கவில்லை. இவ்வாறு செயல் படுத்த முடியாமல் பல ஆரம்ப தொழில் நிறுவனங்கள் திணறுகின்றனர்.

ஒரு நல்ல வியாபார யோசனை, வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு அமையவில்லை என்றால் அது ஒரு நல்ல நிறுவனமாக முடியாது. ஒரு சிறந்த நிறுவனத்தை தோற்றுவிக்க முறையான திட்டம் வேண்டும், குறுகிய அல்லது நீண்டகால நோக்கங்கள் வேண்டும் மற்றும் சீரான இலக்கு வேண்டும்.
வியாபார போட்டியிலிருந்து உங்களை வேறுபடுத்திப் பாருங்கள்
போட்டியிலிருந்து உங்களை வேறுப்படுத்திக்காட்ட, நீங்கள் தனித்து இருக்க வேண்டும். எல்லா ஆரம்ப நிறுவனங்கள் செய்வது போல, மற்ற நிறுவனங்களின் வெற்றிக்கு காரணமாக இருக்கும் அனைத்து தளங்களையும் கையில் எடுக்க கூடாது. தொழிலுக்கு ஏற்றவாறு தனி தன்மையுடன் செயல்பட வேண்டும்
தொழில் தொடங்கும் முன் எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெளிவாக முடிவு செய்ய வேண்டும். ஒரு நிறுவனத்திற்கு தொடர்புகள் தேவை என்றாலும், அதைவிட அடிப்படையான மற்ற விஷயங்களை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். உதாரணமாக, தொழில் தொடங்கிய பின், சிக்கலான அல்லது ஒரு தனிப்பட்ட பிரிச்சனைக்கு தீர்வு காணாமல், உங்கள் நிறுவனத்திற்கு அச்சகம் போன்ற அடிப்படையான செயலில் ஈடுப்பட்டிருந்தால், நீங்கள் உங்கள் தொழில் நிறுவுவதில் ஏதோ தவறு செய்துள்ளீர்.
முறையான செயல்பாடு இல்லை என்றால் நீங்கள் செய்யும் விளம்பரம், லோகோ டிசைன், வலைத்தள உள்ளடக்கம் போன்ற அனைத்து செயலும் பலனற்றதே ஆகும்.
இங்கு பட்டப்படிப்பு ஒரு சிறிய விஷயமே
உணவு தொழில்நுட்ப தொழிலில் நீங்கள் நுழையும்பொழுது, உங்கள் நிறுவனத்திற்கான App-ஐ உருவாக்க ஐஐடி அல்லது ஐஐஎம் பட்டதாரிகள் தேவையில்லை. ஒரு வேலை உங்களிடம் அதற்கான முதலீடு இருந்தால் நீங்கள் வேலைக்கு அமர்த்தலாம். ஆனால் அது தேவையில்லை, ஏன் என்றால் நம் நாட்டில் திறமைக்கு பஞ்சம் இல்லை. பட்டப்படிப்பை பார்த்து வேலைக்கு சேர்க்காமல், உண்மையான திறமைக்கு வேலை வழங்கிடுங்கள். அதன் பலனை கண்டு பிரமித்து விடுவீர்கள். அதனால் உங்கள் பார்வையை உண்மையாக்கும் சிறந்த ஊழியர்களை வேலைக்கு அமர்த்துங்கள்.
வேலை கலாச்சாரம் இலவச உணவு மற்றும் இலவச பானங்களை தாண்டிய ஒன்று
சிறந்த, பளபளப்பான அலுவலகம், தூங்கும் வசதி, இலவச உணவு போன்ற வசதிகள் இருந்தும், சில சமயங்களில் முறிந்து போகும் வேலை கலாச்சாரத்தை நான் பார்த்திருக்கிறேன். அடக்குமுறையான வேலை நேரம், சிறந்த HR கொள்கையின்மை போன்ற சில நெருக்கடிகளால் பல நிறுவனங்கள் சுக்குநூறாக உடைகின்றனர்.
இது ஒரு வணிகம், மிக எளிமையான ஒன்று. எனவே அதை அவ்வாறு நடத்தவே முயற்சி செய்யுங்கள். வேலை கலாசாரம், வேலை நேரம், ஊழியரை ஊக்குவித்தல், நட்பு கொள்கைகள் போன்ற அடிப்படையான விஷயங்களை சரி பார்த்து, நல்ல ஒரு நிறுவனத்தை அமைக்க வேண்டும்.
ஒரு நிறுவனத்தை தொடங்கி, அதில் ஏற்படும் சரிவின் மூலம் கற்றலைவிட, தொழில் தொடங்கும் முன் அதை பற்றி நன்கு ஆராயிந்து பிறகு நிறுவுவதே சிறந்த முறையாகும். ஏற்கனவே தொழில் செய்யும் பல தொழில்முனைவர்களிடம் கற்கும் பாடமே ஒரு ஏணியாய் அமையும்.