"எல்லாம் வல்ல" நிலக்கடலை

நிலக்கடலை - 
கடலை, வேர்க்கடலை, கடலைக்காய், மல்லாட்டை, மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. 
இது, பாதாம், பிஸ்தா, முந்திரியைவிட சத்து நிறைந்தது. 

‘ஏழைகளின் பாதாம்’’ என்று நிலக்கடலையை குறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது. நிலக்கடலையை வேகவைத்தோ, வறுத்தோ உண்ணும் வழக்கம் உள்ளது. 

கடலை எண்ணெய் என்ற பெயரில் சமையல் எண்ணெயாகவும் பயன்படுத்துகிறோம். நிலக்கடலையுடன் வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் சிறந்த ஹெல்த்தி ஸ்நாக்ஸ். 
இந்தியாவில், மலிவான விலையில் கிடைக்கும் இதன் மகிமை தெரியாமல் அலட்சியப்படுத்தி வருகிறோம். 

நிலக்கடலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கரையும் (நல்ல HDL) கொழுப்பு, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன. 


நிலக்கடலையில் உள்ள வைட்டமின்-பி உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கக்கூடியது. தசைகளின் வலிமைக்கும் இது தேவையான ஒன்று. 


உடலின் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) அதிகரிக்கிறது. குறிப்பாக, உடற்பயிற்சி செய்பவர்களுக்கு சிறந்த எனர்ஜி தரும் உணவு.

நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலர் நினைத்திருக்கிறோம். மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்புதான் நிலக்கடலையில் அதிகம் உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரச்சத்து நமது உடலில் எல்.டி.எல். (Low-density lipoprotein) எனப்படும் கெட்ட கொழுப்பை குறைத்து, நன்மை செய்யும் எச்.டி.எல். (High-density lipoprotein - HDL) கொழுப்பை அதிகப்படுத்துகிறது.  


நிலக்கடலையில் டிரைப்டோபீன் (Tryptophen) என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இது, மூளை நரம்புகளை தூண்டும் செரட்டோனின் என்ற உயிர்வேதிப்பொருள் சுரக்க உதவுகிறது. இதனால், மனஅழுத்தம் குறைகிறது. 

இதில் உள்ள வைட்டமின் பி3 மூளையின் செயல்பாட்டை தூண்டுவதோடு, நினைவாற்றலையும் அதிகரிக்க உதவும். நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது.

நிலக்கடலையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், இதய நோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. 

இதில் உள்ள நல்ல கொழுப்பு சத்தான மோனோஅன்சேச்சுரேட் (Monounsaturated fats), ஒலீக் அமிலம் (Oleic Acid) போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆகியவை இதய வால்வுகளை பாதுகாக்கிறது. 

குறைந்தபட்சம் வாரத்தில் 4 நாள் நிலக்கடலையை சாப்பிட்டு வருவது இதய நோயை தடுக்க உதவும். இறைச்சி உணவை விரும்பாதவர்கள் அதற்கு மாற்றாக நிலக்கடலையை சாப்பிடலாம். இதிலுள்ள சத்துகள் முதுமையை தள்ளிப்போடுவதுடன், இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் உள்ள பாலிபீனால்ஸ் என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் நோய் வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் உதவுகிறது.

 நிலக்கடலையில் உள்ள சத்து ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது. குறிப்பாக, நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகளவு உள்ளது. 

ஆகவே, பெண்கள் தினமும் 400 கிராம் என்ற அளவில் நிலக்கடலை சாப்பிட்டு வந்தால், கருவுறும் வாய்ப்பு அதிகரிக்கும். பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. 

இதனால், பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு ஏற்படுவதுடன் மார்பக கட்டி ஏற்படாமல் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் நிலக்கடலையில் நிறைந்துள்ளன. 

இதன் காரணமாக பெண்களுக்கு கர்ப்பப்பை கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.நிலக்கடலையை தினமும் ஒரு அவுன்ஸ் (30 கிராம்) அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாகுவதை தடுக்க முடியும். 

20 ஆண்டு தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், 25 சதவிகிதம் பித்தப்பை கல் உருவாகும் வாய்ப்பு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. 

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ், மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. 
எனவே, நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. 

குறிப்பாக, பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு எலும்பு தொடர்பான நோய் வராமல் காத்துக்கொள்ளலாம்.
======================================================================================
ன்று,
ஜூலை-24.
  • பெருவில் தொலைந்த நகரமாக கருதப்பட்ட மச்சு பிச்சு என்ற 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை அமெரிக்க பயணி ஹிராம் பிங்கம் கண்டுபிடித்தார்(1911)
  • பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு பாரீசில் அமைக்கப்பட்டது(1924)
  • சோவியத் யூனியனில் உலகின் முதலாவது குழந்தைகளுக்கான ரயில்வே திறக்கப்பட்டது(1935)
  • இந்திய அரசு தனது புதிய பொருளாதார அழிவு கொள்கையை அறிவித்தது(1991)
======================================================================================







இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?