வரலாறு முக்கியம் அமைச்சர்களே!
:''நடிகர் கமல் ஹாசன் தொடர்ந்து அரசை ஆதாரமின்றி விமர்சித்து வருகிறார். இது தொடர்ந்தால், தமிழக அரசு சார்பில் வழக்கு பதிவு செய்யப்படும்,'' ,
=====================================================================================
இன்று,
ஜூலை-16.
😂
உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி.
உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி.
😲வேண்டாம் அமைசர்களே .
தமிழக அமைசர்கள்,அதிமுகவினர் ஊழல் உலகம் முழுக்க நாறி கிடக்கிறது.உத்தம வேடம் உங்களுக்கு பொருந்தாது.ஆதாரம் காட்டாத கமல் மீது வழக்கு என்று சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்ளாதீர்கள்.
ஆதாரங்கள் அரசு கோப்புகளிலும்,வருமானவரித்துறை ,தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரி அனுப்பிய கடிதங்களில் கொட்டி கிடக்கிறது.உங்கள் கைகளால் உங்கள் கண்களை குத்திக்கொள்ளாதீர்கள்.உங்கள் பு.தலைவி ஊழலால் சிறை சென்றார்.
செத்ததால் தப்பித்தார்.உங்க சி.பு.தலைவி இன்னும் உள்ளேதான் இருக்கிறார்.உங்கள் கூவத்தூர் குதூகலம் குவைத்தை வீட்டா நாடு நாறியது.நீங்கள் எப்படி பட்டவர்கள் என்பது உங்களுக்கு தெரியும்.கமல் வருமானவரி ஒழுங்காக கட்டி விருது பெற்றவர்.
தமிழ் நாடு அரசு சார்பில் கேளிக்கை வரி விலக்கு ஜெயலலிதா ஆட்ச்சிக்காலத்தில் இருந்து இதுவரை அவர் படங்களுக்கும்,உதயநிதி ஸ்டாலின் படங்களுக்கும் வழங்க மறுக்கப்பட்ட வந்துள்ளது.வாயை கொடுத்து வாங்கிக்கட்டி கொள்ளாதீர்கள்.
பாஜக வுக்கு கொத்தடிமையாக இருக்கும் வரை உங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.அதை இது போன்ற வெட்டி மோதலில் கெடுத்துக்கொள்ளாதீர்கள்.நீதிமன்றம் சென்றால் அசிங்கப்படப்போவது பினாமி அரசு ,அதிமுகத்தான்.
நாள்தோறும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்,பாமக ராமதாஸ் ஆகியோர் கூறிய, குற்ற சாட்டுகளுக்கே இன்றுவரை அதிமுகவினரால் பதில் சொல்ல முடியவில்லை.
வீணாக இன்னொரு உத்தம வில்லனை சம்பாதித்துக்கொள்ளாதீர்கள்.
அடிக்கடி விஸ்வரூபம் வர உதவினார் ஜெயலலிதா என்று அதற்கு நன்றி இல்லையா என்று சொல்லாதீர்கள்.
விஸ்வரூபம் வர ஜெயலலிதா உதவிய கதை தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.
பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி நல்ல பெயர் எடுக்க எண்ணினார் ஜெ.அதன் மூலம் தனக்கு எதிரான கமல்ஹாசனை தன கைப்பிடிக்குள் கொண்டுவறுவது அவர் திட்டம்.
அவர் கிள்ளி விட்ட பின் கமல் ஜெ காலில் விழாமல் நீதிமன்றத்தை நாடி விட்டார்.தொட்டிலை ஆட்டி விட்டது நீதிமன்றம்.
கமல்ஹாசன் மீதான ஜெயலலிதா பகை பலகாலம் தொடர்வது.கடைசி பகை 100 கோடிகள் பேரம் பேசியும் அதிமுகவில் சேர்ந்து 2001 தேர்தலை பிரசாரம் செய்ய மறுத்தது.
அதன் பின்னரும் ஜெயலலிதா நெருக்கடியில் இருந்து விலக தேர்தல் காலம் கமல் வெளிநாடு சென்று விட்டார் .
கலைஞர் ஆட்சியில் வந்ததால் தசாவதாரம் தப்பித்தது.
அடுத்து வந்த ஜெ கமலை பழி வாங்கவே விஸ்வரூபத்தை எடுத்தார் ஜெ.
ஆனாலும் ஜெயலலிதா கையில் எடுத்து விஸ்வரூபத்தை தடை செய்து கமலுக்கு நல்ல விளம்பரத்தை செய்து கொடுத்து விஸ்வரூபம் இரண்டாம்பாகம் எடுக்க வஸ்கி செய்து விட்டார்.
ஜெயலலிதா விஸ்வரூபத்தில் அவ்வளவு இடையூரு செய்யாவிட்டால் விஸ்வரூபம் தோல்விப்படமாகத்தான் அமைந்திருக்கும் என்பதுதான் கமல்ஹாசன் ரசிகர்கள் கருத்து.
ஜெ அதை வசூல் கொட்டும் படமாக மாற்றி கமலுக்கு உதவி விட்டார்.
தசாவதாரத்தை விட அதிக வசூல் .அடகு வைத்த வீடுவாசல் எல்லாவற்றையும் திருப்பி விட்டார் கமல்.
இந்த கதை எல்லாம் ஜெயலலிதாவுக்கு அப்போது அடிமை சேவகம் செய்து வந்த அமைசர்களுக்கு தெரியாமலா இருக்கும்.இருந்தும் விஸ்வரூபம் வெளிவர உதவினார் என்பது பொய்யான தகவல்.தடையை உருவாக்க சிலரை தூண்டிவிட்டவர் ஜெயலலிதாதான்.
ஆனால் விஸ்வரூபம் வெற்றிக்கு உதவினார் ஜெயலலிதா என்றால் அதை மறு பேச்சு இல்லாமல் ஒத்துக்கொள்ளலாம்.கமல்ஹாசனே ஒத்துக்கொள்வார்.
வரலாறு முக்கியம் அமைச்சர்களே!
😱
இன்று,
ஜூலை-16.
- ஐரோப்பாவின் முதலாவது பேங்க்நோட் சுவீடனில் வெளியிடப்பட்டது(1661)
- சான் டியாகோ நகரம் அமைக்கப்பட்டது(1769)
- எதியோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை மன்னர் ஹைல் செலாசி வெளியிட்டார்(1930)
- டிஸ்னிலாந்து பூங்கா கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டது(1955)
- பிரான்சையும் இத்தாலியையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப் பாதை திறக்கப்பட்டது(1965)