இன்னொரு வங்கி மோசடி
இந்த வாரம் முழுக்க ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்த பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியைப் போலவே, இன்னொரு நிதி மோசடி– சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சிட்டி யூனியன் வங்கியில் நடைபெற்றுள்ளது.
12.8 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட இந்த மோசடி குறித்து, இந்த வங்கி பங்குசந்தைகளுக்கு தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிட்டி யூனியன் வங்கி தெரிவித்துள்ள தகவலின்படி, கடந்த பிப்ரவரி 7ம் தேதி வங்கிப் பணி நிறைவில், கணக்கு வழக்கு சரிபார்ப்பின்போது 3 முறைகேடான பணப் பரிமாற்றங்கள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
‘ஸ்விஃப்ட் (SWIFT)’என்ற, மின்னணு பணப்பபரிமாற்ற முறை மூலம், இந்த வங்கியால் அதிகாரப் பூர்வமாக இல்லாமல், ஆனால், அவர்களது ‘ஜன்னல்’ வழியே செய்யப்பட்டுள்ள இந்த பணபரிமாற்றம் 3 வெளிநாட்டு வங்கிகளில் முடிந்துள்ளது.
இதில் நியூயார்க் நகரத்தின் ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி (SCB)மூலம் துயாயில் உள்ள ஒரு வங்கிக்கு அனுப்பப்பட்ட 5 லட்சம் அமெரிக்க டாலர் நடுவழியில் இடைமறிக்கப்பட்டு, திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இதுதவிர ஃபிராங்க்பர்ட் நகரத்தின் SCB, துருக்கியில் உள்ள வங்கிக்கு 3,72,150 யூரோக்களை இடம் மாற்றியுள்ளது. அதேபோல, நியூயார்க்கின் பேங்க் ஆப் அமெரிக்கா, சீன வங்கிக்கு 10 லட்சம் அமெரிக்க டாலரை அனுப்பியுள்ளது.
இந்த இரு பணப் பரிமாற்றத்தைச் சரிசெய்து, கைமாறிய தொகையை மீட்க சிட்டி யூனியன் வங்கி சார்பில் சம்மந்தப்பட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை மூலம் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இந்த வங்கி வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது.
ஏற்கனவே வங்கிகளில் வெளிச்சத்துக்கு வராத பல கண்ணி வெடிகள் மறைந்திருக்கின்றன என ரிசர்வ் வங்கியை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.ரிசர்வ் வங்கி என்ன லட்சணத்தில் வங்கிகளை கண்காணிக்கிறது என்பதற்கு தற்போது தொடர்ந்து வெளிவரும் ஊழல்களே ஆதாரம்.
சிட்டி யூனியன் வங்கி ஸ்ரீராம் குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் வங்கி.வங்கி துவங்கிய இடம் கும்பகோணம்.அதனால்தான் மோசடி12.8 கோடிகளாக இருக்கையிலேயே கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதுவே தேசியமாக்கப்பட்ட வங்கி என்றால் இந்த மோசடி எத்தனை ஆயிரங்கோடிகளாகியிருக்கும் ?
======================================================================================
தமிழ்நாடு இந்திய தேர்தல் ஆணையர்
சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய இயக்குநராக இருக்கும் சத்யபிரதா சாஹூ புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 1997 தமிழ்நாடு ஐஏஎஸ் பிரிவை சேர்ந்தவர்.
விரைவில் சத்யபிரதா சாஹூ தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்பார்.
2015-ம் ஆண்டு முதல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக ராஜேஷ் லக்கானி இருந்து வருகிறார். சென்ற 2016 சட்டமன்றத்தேர்தலில் ஆளும் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு பணப்பட்டுவாடாவை கண்டு கொள்ளாமல் விட்டதாகவும்,
ராஜேஷ் லக்கானி சத்யபிரதா சாஹு |
வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு குளறுபடிகள் நடந்து அதிமுக பல இடங்களில் வெற்றி பெறவைக்கபப்ட்டதாகவும் ராஜேஷ் லக்கானி மீது ஆதாரங்களுடன் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் இரண்டு முறை நடந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தல்களில் பணப்பட்டுவாடா புகாரில், முறையான விசாரணையை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று ராஜேஷ் லக்கானி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
அதனால் தன்னை மற்றும்படி லக்கானி கேட்டுக்கொண்டு கடிதம் எழுதினர்.
ராஜேஷ் லக்கானிக்கு தில்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிகிறது.
இன்னொரு சேஷனா இல்லை , பிரவீன் குமார்,ராஜேஷ் லக்கானிதானா இல்லையா என்பதை சத்யபிரதா சாஹு செயல்பாடுகளை பார்ப்போம்.
=====================================================================================
பிப்ரவரி-23.
- ருடொல்ஃப், டீசல் இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1893)
- ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது(1905)
- புளூட்டோனியம் முதல் முறையாக உருவாக்கப்பட்டது(1941)
- உலக தரநிர்ணய அமைப்பு( ஐ.எஸ்.ஓ.,) ஆரம்பிக்கப்பட்டது(1947)
- கயானா குடியரசு தினம்(1970)
செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்,
செய்ய முடியாதவன் தான் போதிக்கிறான்
இயக்குநர் பாரதிராஜா ,"மக்கள் நீதி மய்யம் "துவக்கியுள்ள கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாரதிராஜா அறிக்கையில்,
“என் இனிய நண்பர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு, அன்புடன் பாரதிராஜா எழுதுகிறேன்!
“என் இனிய நண்பர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு, அன்புடன் பாரதிராஜா எழுதுகிறேன்!
‘அறிவாளியாய் இருப்பதைவிட புத்திசாலியாக இருக்கிறவன் தான் ஜெயிக்கிறான்’ என்ற தத்துவம் வாழ்க்கைக்கு மட்டுமல்ல, அரசியலுக்கும் அப்படியே பொருந்தும்.
தமிழ்நாடு இன்று சாதி, மதம், இனம் என்ற வேற்றுமைகளால் உடைக்கப்பட்டு கிடக்கிறது.
இது அத்தனையும் ஒரே அணியில் கூட்டிச் சேர்ப்பது பெரும்பாடு.
கரை வேட்டி கட்டி, கட்சிக்கொடி பிடித்து, மேடை போட்டு மைக் பிடித்துப் பேசுவது மட்டும்தான் மக்களுக்கான அரசியல் பிரச்சாரம் அல்ல.
திரைப்படத்தின் மூலமும் சமூக, அரசியல் கருத்துகளைச் சொல்லலாம்.
‘என் திரைப்படங்களை சென்சார் செய்யாமல் வெளியிட அனுமதித்தால், ஒரே ஆண்டில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறேன்’ என்றாராம் அறிஞர் அண்ணா.
கமல்ஹாசனும் தன் திரைப்படங்கள் மூலம் சமூகக் கருத்துகளை மக்களிடம் விதைத்தவர் தான். தன் நற்பணி மன்றத்தின் மூலம் மக்கள் பணியாற்றியவர் தான்.
இரத்த தானத்தில் இருந்து தன் உடலையே தானம் செய்தவர் கமல். அவர் அரசியலுக்கு வரவேண்டுமென்ற உள்நோக்கத்தோடு இதுபோன்ற நற்பணிகளைச் செய்தவரல்ல. உண்மையான தொண்டுள்ளம் கொண்ட காரணத்தினால்தான் செய்தார். ஓர் தலைவனுக்கான முழுத் தகுதியும் உடையவர் நம்மவர் கமல்.
இன்று அரசியல், தமிழர்களின் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, போராட்டம் ஆகியவற்றோடு பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. மக்கள் புரட்சியினால் மட்டும்தான் மாற்றம் கொண்டுவர முடியும்.
உங்கள் மக்கள் நீதி மையத்தின் பயணம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
‘செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் தான் போதிக்கிறான்’ என்று சொல்வார் பெர்னாட்ஷா. கமல்… நீங்கள் செய்ய முடிந்தவர்.
திரையில் தெரிந்த உங்கள் ‘தசாவதாரம்’, அரசியலில் ‘விஸ்வரூபமாய்’ வெற்றிபெற வாழ்த்துகிறேன்”
என வாழ்த்தியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்தின் ஆன்மிக அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்தான் பாரதிராஜா.
========================================================================================
குஜராத்தில் மொத்தம் 75 நகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ளது . அதில் பாஜக 47 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும் கைப்பற்றியிருக்கின்றன.
4 இடங்களில் சுயேச்சைகளும், 2 இடங்களில் மற்றவர்களும் வெற்றிபெற்றிருக்கின்றனர்.
2013 ல் நடைபெற்ற தேர்தலில் 79 நகராட்சிகளில் பாஜக பெற்றது 59 .
தற்போது 47ஆக சரிந்துள்ளது.
அப்போது வெறும் 11 இடங்களை பெற்ற காங்கிரஸ் தற்போது 16 இடங்களை கைபற்றியுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் சரிவை சந்தித்த பாஜகவுக்கு நகராட்சி தேர்தல் முடிவுகளும் சறுக்கல்தான் .எத்தனைக்காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------