ஒன்றரை லட்சம் கோடிகள் தனியாருக்கு தாரை வார்க்கத் தயார் !
தொடரும் மோடியின் முதலாளிகள் விசுவாசமும்.
தொழிலாளர் விரோத போக்குகளும்
தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பி.எப், இ.எஸ்.ஐ., தனியாருக்கு தாரை வார்க்கப் போவதாக பரிசீலித்து வருகிறது.
மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைந்த நாளில் இருந்து கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டு வருகிறார்.
மிக முக்கிய திட்டங்களில் எல்லாம் அன்னிய முதலீடு, தனியார் ஆதிக்கம் என்று புகுத்தி கொண்டிருப்பதாக எதிர்கட்சிகள் சார்பில் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் முதலீடுகளை ஊக்கப்படுத்தி படிப்படியாக அந்த துறை படிப்படியாக தனியாருக்கு தாரை வார்க்கும் செயல்களில் தான் மத்திய அரசு முனைப்பு காட்டி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
மத்திய அரசு தற்போது ஒட்டு மொத்த தொழிலாளர்களையும் அதிர்ச்சியூட்டும் வகையில் புதிய நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தொழிலாளர் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணி புரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ., மற்றும் பி.எப்., திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.
பி.எப்., இ.எஸ்.ஐ., திட்டம் என்பது தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு உகுந்த திட்டமாகும். பி.எப்., திட்டத்தில் தொழிலாளரிடம் இருந்து குறிப்பிட்ட தொகை பிடிக்கப்பட்டு அந்த அளவிற்குரிய தொகை நிர்வாகம் சார்பில் போடப்படும்.
கடைசியில் தொழிலாளி ஓய்வு பெறும் காலத்தில் ஒரு பெருந்தொகை அதில் இருந்து கிடைக்கும். இதற்கு அரசு ஆண்டுக்கு ஆண்டு வட்டி நிர்ணயம் செய்து அளித்து வருகிறது. இடையில் குடும்பத்தில் ஏதாவது திருமண செலவு உள்ளிட்ட செலவுகளுக்கும் இந்த தொகையை பெற்று கொள்ளலாம்.
மொத்த பணத்தில் ௭௫ சதவீதத்தை நமது தேவைக்கு எடுத்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.
இ.எஸ்.ஐ., திட்டத்தில் தொழிலாளர் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. அவர்களுக்கு மருத்துவ உதவி, பெரிய, பெரிய மருத்துவ சிகிச்சைகள், உடல் நல குறைவு என்றால் இ.எஸ்.ஐ., மூலம் பணி செய்யும் நிர்வாகம் கொடுக்கும் அதே சம்பளத்தை விடுமுறையில் இருந்தாலும் வழங்குதல் போன்றவற்றை இலவசமாக இ.எஸ்.ஐ., நிர்வாகம் செய்து வருகிறது.
இதனால் பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., தொழிலாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பினை அளித்து வருவதால் அனைத்து தொழிலாளர்களும் இந்த திட்டங்களுக்கு நல்ல வரவேற்பை அளித்து வந்தனர்.
நாடு முழுவதும் பல கோடி தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்டுள்ள பி.எப் இ.எஸ்.ஐ., திட்டங்களின் மூலம் உள்ள ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசிடம் உள்ளது.
இப்போதைய நிலையில் இந்த பணம் தான் மத்திய அரசுக்கு கண்ணை உறுத்தி கொண்டிருப்பதாக பி.எப் மற்றும் இ.எஸ்.ஐ., அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து அந்த அதிகாரிகள் கூறிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் அளவிற்கு இருக்கிறது.
இது குறித்து அந்த அதிகாரிகள் கூறியதாவது;
நாடு முழுவதும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்களிடம் பி.எப் மற்றும் இ.எஸ்.ஐ., மூலம் பிடித்தம் செய்யப்பட்ட பணம் சுமார் ஒன்றரை லட்சம் கோடி மத்திய அரசிடம் இருக்கிறது. இந்த பணத்தில் எப்படியாவது தனியார் நிறுவனங்களை உள்ளே அனுமதிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
தொழிலாளர்களின் ஒன்றரை லட்சம் கோடி பணத்திற்கு வேட்டு வைப்பதற்காக அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கும் வகையில் புதிய முறையை கொண்டுவருவதாக மோடி அரசு புதிய யுத்தியை கையாண்டு வருகிறது. தற்போது தனித்தனி நிறுவனமாக செயல்பட்டு வரும் பி.எப்., இ.எஸ்.ஐ., நிறுவனத்தை ஒருங்கிணைக்கிறது.
இவ்வாறு ஒருங்கிணைப்புக்கு பிறகு புதியதாக லேபர் கோர்ட் அமைக்கிறது. இவ்வாறு அமையும் போது தொழிலாளர் துறையையும், தொழிலக பாதுகாப்பு துறையையும் ஒன்றாக்கி விடுகிறது.
புதிய லேபர் கோர்ட்டில் மத்திய அரசு அதிகாரிகள் தவிர தனியார்களையும் உறுப்பினர்களாக அதில் சேர்க்கிறது. அதன் மூலம் தனியார் ஆதிக்கத்தை லேபர் கோர்டில் மத்திய அரசு உருவாக்க திட்டமிட்டிருக்கிறது.
இவ்வாறு ரெடி செய்த பின்னர் தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையை இந்த கோர்டில் பெரும்பான்மையினர் தெரிவிக்கும் முடிவுகளின் படி ஒன்றரை லட்சம் கோடி பணத்தை தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்க திட்டமிட்டுள்ளனர்.
இதன் மூலம் பெரும் நிறுவனங்கள் இந்த பணத்தை பெற்று விட்டு இறுதியில் அந்த பணத்தை கட்ட முடியவில்லை என்று கூறி ‘ ஆட்டையை’ போட்டு விடுவர்.
கடைசியில் மல்லையா போல் அவர்கள் பறந்து விடுவர்.
கடைசியில் கஷ்டப்பட்டு தனது எதிர்காலத்திற்காகவும், குழந்தை திருமணம் உள்ளிட்டவை நடத்துவதற்கு சேமித்த பணம் மறைந்துவிடும்.
மத்திய அரசு டாட்டா காட்டி விடும். கடைசியில் தொழிலாளர்கள் பணம் தான் பாழாய் போகும் நிலைக்கு வந்துவிடும்.
இதற்காக மத்திய அரசு துடித்து கொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் அதிர்ச்சி தகவல் கூறப்படுகிறது.
ஒன்றரை லட்சம் கோடியை தனியாருக்கு தாரை வார்க்க தயராகி அதற்கான பணிகளை வேகப்படுத்தி கொண்டிருக்கிறது என்ற அதிர்ச்சி தகவலை அதிகாரிகள் கூறுகின்றனர்.
நீரின்றி உலகும் தொழிலாளரின்றி பாஜகவுக்கு கர்ப்பரேட்கள் நிதியும் அமையாது .
அதற்காகவாது தொழிலார் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.