தைராய்டு

 

இந்தியாவில் பத்து பேரில் ஒருவர்  தைராய்டு நோயால் பாதிக்கப்படுகிறார்இந்திய சுகாதார அமைச்சகம்  தைராய்டு சிகிச்சைக்கான  மருத்துவக் கட்டணத்தை   குறைவாக நிறுவி உள்ளதுஇதனால் மக்கள் தங்கள் சிகிச்சையை மேற்கொண்டு பெரிதும் பயன் அடைகின்றனர். 

ஓர் அறிவியல்  ஆய்வின்படி  ஆண்களை காட்டிலும்  பெண்களுக்கு தைராய்டு பிரச்சினைகள் அதிகமாக ஏற்படுகின்றது  என்று கண்டறியப்பட்டுள்ளது தைராய்டு சுரப்பி ஒரு நபரின் உடலில் காணப்படும் உட்புற சுரப்பிகளில் ஒன்றாகும்இது கழுத்தைச் சுற்றி பட்டாம்பூச்சி வடிவத்தில் உருவெடுக்கிறதுஇது தைராக்ஸின் என்னும் ஹார்மோனை  சுரக்கிறதுதைராக்ஸின் ஹார்மோன்   உடலின் ஆற்றல் வளர்சிதை மாற்றத்தில்  (metabolism)  நேரடி செயல்பாடுகளைக் கொண்டுள்ளதுமேலும், தைராய்டு சுரப்பி உடலில் அமைந்துள்ள செல்களைக் கட்டுப்படுத்துகிறது.  தைராய்டு சுரப்பியில்  உண்டாகும் கோளாறுகள் பல சிக்கல்களை எழுப்புகின்றன. 

தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியில் ஏற்படும் கோளாறு காரணமாக  தொண்டையில் உண்டாகும்  நோயாகும், இதனை ஆரம்பத்தில் கண்டறிவது கடினம்ஆனால் இதன் சிக்கல்கள் அதிகரிக்கும் போது  தொண்டையின் முன் பகுதியில்  ஒரு வட்டமான கட்டி போல காட்சி அளிக்கிறது இதற்கு முக்கிய காரணம்  அயோடின் குறைபாடாகும்எனவே, நாம் உட்கொள்ளும்   உணவில் அயோடின் உப்பை சரியான அளவில் சேர்த்து   உட்கொண்டால் தைராய்டு பிரச்சினைகள் ஏற்படாது. 

தைராய்டு என்னும்  நோய் இரண்டு வகைகளில்  ஏற்படுகிறது. T3 ஹைப்பர் தைராய்டு, T4 ஹைப்போ தைராய்டு. இவை இரண்டும் தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளில் உண்டாகும் மாறுதல்களால் ஏற்படுகிறது.

தைராய்டின்  காரணம் 

  • தைராய்டு சிக்கலுக்கு  மிகவும் பொதுவான காரணம் கிரெவ்ஸ்  நோய், இது தைராய்டு சுரப்பியில் உண்டாகும் கோளாறுகள்  காரணமாக  ஏற்படுகின்றது. இதன் காரணமாய் தைராய்டு சுரப்பி அதிக ஹார்மோன்களை சுரக்கிறது.
  • தைராய்டு சுரப்பியில் உள்ள நீர்கட்டிகள் அதன் செயல்பாட்டை பாதிக்கிறது.
  • உடலில் அயோடின் குறைபாடு காரணமாக  தைராய்டு நோய் ஏற்படுகிறது.
  • பெண்களின் கர்ப்ப காலத்தில் உண்டாகும்  ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஹார்மோன்களில் உண்டாகும்  ஏற்றத்தாழ்வுகள் தைராய்டு தொடர்பான பிரச்சினைகளுக்கு ஒரு காரணமாக  அமைகிறது.
  • பிட்யூட்டரி சுரப்பியில் புற்றுநோய் செல்கள் உருவாகும் போது தைராய்டு சுரப்பி செயலிழக்கக்கூடும்.
  • மன அழுத்தம் மற்றும் பதட்டம் உண்டாவது  தைராய்டு நோயின்  அபாயத்தை அதிகரிக்கிறது. மன நிம்மதியுடன் இருப்பதே ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
  • உயர் இரத்த அழுத்த நோயாளிகளிடத்தில் தைராய்டு நோய் அபாயம் அதிகரிக்கிறது.
  • பெண்களுக்கு  பெரும்பாலும் பிரசவத்திற்குப் பிறகு தைராக்ஸின் ஹார்மோனில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகும். சிறிது நேரத்தில்   ஹார்மோனின் அளவுகள்  இயல்பு நிலைக்கு திரும்பவில்லையேனில்.  ஒரு மருத்துவரைத் தொடர்பு கொண்டு இந்த  பிரச்சினையை கவனியுங்கள். 
  • தைராய்டு நோயின் அறிகுறிகள்:
  • மலச்சிக்கல்.
  • உடல் எடை குறையும்  அல்லது அதிகரிக்கும்.
  • கை கால்கள் குளிர்ந்து  இருக்கும்
  • தோல் வறட்சி
  • பதட்டமாக ஏற்படுவது
  • சோம்பேறியாக இருத்தல்.
  •  தீராத சளி.
  • உடல் மற்றும் மன வளர்ச்சியில் தடை.
  • முடி உதிர்தல்..
  • தைராய்டு நோய்க்கு பல்வேறு வழிகளில் சிகிச்சையளிக்கப்படுகிறது. தைராய்டு  சுரப்பியின் குழாயில் ஏதேனும் சிக்கல் இருந்தால், மருத்துவர் சில நுண்ணுயிர் எதிர்ப்பிகளைக் கொடுக்கின்றனர், இதனால் தைராய்டின் சிக்கலைக் குறைக்க இயலும்.
  • ஒரு நபர் தொண்டை வலி குறித்து புகார்  செய்தால், மருத்துவர் முதலில் அந்த நபரின் இரத்தத்தை பரிசோதிக்கின்றனர். தைராய்டு அறிகுறிகள் உள்ளதா என்பதை அறிய இரத்தத்தில் டி.எஸ்.எச் ( TSH ) அளவுகளை காண்கின்றனர். முடிவுகளைப் பெற்ற பின்னரே, மருத்துவர்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் சிகிச்சைக்கு பரிந்துரைக்கின்றனர். 
  • சில நேரங்களில் தைராய்டின் நீர்க்கட்டிகள்  நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் சிகிச்சைக்கு  கரையவில்லையேனில்மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் நீர்க்கட்டியை  அகற்றுகின்றனர்.
  • ஒருவருக்கு தைராய்டு சுரப்பியில் புற்றுநோய் இருந்தால், மருத்துவர்கள் கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சின் ( radiation) உதவியுடன் சிகிச்சையளிக்கின்றனர். தைராய்டு புற்றுநோயின் நிலை மோசமடைந்துவிட்டால், மருத்துவர்கள்  அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கின்றனர்.
  • சுண்டைக்காய் சாறுடன் துளசி சாறு கலந்து குடிக்கவும்.
  • தைராய்டு பிரச்சினை மோசமாக இருக்கும் நிலையில் உணவில் அதிக மீன் எண்ணெயைப் பயன்படுத்துங்கள்   மீன் எண்ணெயில் ஒமேகா கொழுப்பு இருப்பதால் அஃது அதிக பயனை நல்குகிறது.
  • ஆப்பிள் வினிகரில் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க  உதவும் கார அமிலம் இருப்பதால் ஆப்பிள் வினிகரை சாப்பிட வேண்டும்.
  • தேனுடன் கலந்த இஞ்சி தேநீர் குடிப்பதால் தொண்டைக்கு இதம் அளிக்கிறதுஅதோடு மிகுந்த நிம்மதி கிடைக்கும். இஞ்சியில் பொட்டாசியம், ஜின்க் போன்ற பொருட்கள் உள்ளன, இது தைராய்டு பிரச்சினையை குறைக்கிறது.
  • பச்சை கொத்தமல்லி சட்னியை உணவில் கலந்து சாப்பிடுங்கள், இதனால் செரிமான அமைப்பு நன்றாக இருக்கும்  மேலும் தைராய்டு பிரச்சினை இருக்காது.
  • யோகாவில் உள்ள பிராணயாமம் எளிதான முறையில்  தைராய்டு  நோய்க்கு  நன்மை பயக்கும். மேலும் சூர்யா நமஸ்கர் செய்வதிலும் பல நன்மைகள்  ஏற்படுகின்றது.
  • பயாப்ஸி மற்றும் மைக்ரோஸ்கோபியின்  மூலம்  கட்டியை அடையாளம் காணவிட்டால்  மருத்துவர்கள் தைராய்டெக்டோமியை செய்ய  பரிந்துரைக்கின்றனர்




https://youtu.be/7zgN7jGAjDU



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?