வரட்டும். வா,வா....
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஒன்றிய பாஜக அரசு தற்போது 4ஜி சேவைக்கு அனுமதி வழங்கியிருக்கிறது.
கடந்த 6 வருடங்களாக 4ஜி சேவையை பிஎஸ்என்எல் க்கு வழங்க மோடி அரசு திட்டமிட்டு வழங்க மறுத்து வந்தது. இந்தியாவில் 4ஜி சேவை அறிமுகமான போது அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் பெற்றிருந்த நிறுவனமாக பிஎஸ்என்எல் இருந்தது. இந்நிலையில் முதலில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கே 4 ஜி சேவை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் இருந்தது.மேலும் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாகவும் பிஎஸ்எல் இருந்து வந்தது. ஆனால் ஒன்றிய மோடி அரசு தனது நெருங்கிய கூட்டாளியாக இருந்து வரும் ரிலையன்ஸ் நிறுவனமான ஜியோவிற்கே அனுமதி வழங்கியது.
அதோடு பிரதமர் மோடியே அதன் விளம்பர தூதுவராகவும் விளம்பரப்படுத்தப்பட்டார்.
ஆனால் பிஎஸ்என்எல்க்கு 4ஜி உரிமத்தை வழங்க மறுத்து விட்டது. பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்கள் மற்றும் இடதுசாரி கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் மோடி அரசு 4 ஜி சேவையை வழங்க மறுத்து விட்டது. அதோடு மட்டுமின்றி பிஎஸ்என்எல் தொலைதொடர்பு பராமரிப்பு பணிகளை தனியாரிடம் கொடுத்து இருந்த இணைப்புகளின் சேவையையும் சீர்குலைத்தது. பிஎஸ்என்எல் எப்படியும் முடிந்து விடும் என்று ஒன்றிய மோடி அரசு எதிர்பார்த்த நிலையில் இன்றும் பிஎஸ்என் மக்களின் நம்பிக்கையை பெற்றுவருகிறது.
இதற்கிடையில் தொலை தொடர்பு துறையில் ரிலையன்ஸ் நிறுவனத்தை தவிர்த்த அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களையும் படிப்படியாக முடக்கப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனத்தை மட்டுமே மோனா புள்ளியாக்கும் மோடி அரசின் சதி திட்டம் அனைத்து தரப்பினராலும் விமர்சனத்திற்கு உள்ளானது. சிலர் நீதிமன்றத்தையும் நாடிபெற்றது.
முகேஷ் அம்பானி ஜியோவின் 4 ஜி நெட்வொர்க் 18,000 நகரங்கள் மற்றும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை இணைத்திருக்கிறது. மேலும் மார்ச் 2017 க்குள் இந்தியாவின் 90 விழுக்காடு மக்கள்தொகையை இணைக்கும் நெட்ஒர்க்காக ஜியோ மட்டுமே இருக்கும் என ரிலையன்ஸ் அறிவித்தது. ஆனால் அந்த இலக்கு அவ்வளவு எளிதாக நிறைவேறவில்லை.
இதற்கிடையில் பிஎஸ்என்எல் சேவையை திட்டமிட்டு சீர்குலைத்து அதற்கு மாற்றாக ரிலையன்ஸ் ஜியோவை முன்நிறுத்தும் வேலையை மோடி அரசு செய்தது. அதன் விலைவாக கடந்த ஜூன் இறுதியில், 39 கோடியே 72 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஜியோ நெட்வொர்க் பெற்றது.
ரிலையன்ஸ் ஜியோ மே மாதத்துடன் ஒப்பிடும்போது ஜூன் மாதத்தில் சுமார் 4.5 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை இணைத்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே புதிய பயனர்களைச் சேர்க்க முடிந்தது. மற்ற நிறுவனங்கள் அதிக அளவு வாடிக்கையாளர்களை இழந்தன. வோடாபோன், ஐடியா ஜூன் மாதத்தில் அதிக 48.21 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்தது. பிஎஸ்என்எல் 17.44 லட்சம் பயனர்களை இழந்தது.
இந்நிலையில், பிஎஸ்என்எல் ஊழியர்கள் 4ஜி சேவையை வழங்க வேண்டுமென தொடர்ந்து போராடிய நிலையில், தற்போது 17.44 லட்சத்திற்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் 4ஜி வசதி இல்லாமல், இணைய சேவை, தொலைதொடர்பு பிரச்சனைகள் காரணமாக மாற்று தொலைதொடர்பிற்கு மாறிய நிலையில் , 5ஜி சேவை பரவத் தொடங்கும் ,6ஜி க்கான பணிகள் நடக்கும் கால கட்டத்தில்தற்போது போய்த் தொலையட்டும் என்று ஒன்றிய பாஜக அரசு பிஎஸ்என்எல்-க்கு 4ஜி சேவையை வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
------------------------------------------------------------
https://youtu.be/JQPAuJk6Jqk
சூர்யா முன்னிலை.
யூடியூபில் அக்டோபர் 14ம் தேதி வெளியான அண்ணத்த படத்தின் டீசர் அக்டோபர் 17ம் தேதி இரவு 7.38 மணி வரை 77 லட்சட்து 82 ஆயிரத்து 554 பார்வைகளைப் பெற்றுள்ளது.
அதே போல, யூடியூபில் அக்டோபர் 15ம் தேதி வெளியான ஜெய்பீம் படத்தின் டீசர் அக்டோபர் 17ம் தேதி இரவு 7.38 மணி வரை 1 கோடியே 17 லட்சத்து 37 ஆயிரத்து 045 பார்வைகளைப் பெற்று அண்ணத்த டீசரை தாண்டியுள்ளது. ஆனால், லைக்குகளில் அண்ணாத்த படத்திற்கு குறைவாகத்தான் உள்ளது. அண்ணாத்த படம் 4.51 லட்சம் லைக்குகளையும் 22 ஆயிரம் டிஸ்லைக்குகளையும் பெற்றுள்ளது. ஆனால், ஜெய்பீம் படத்தின் டீசர் 3.44 லட்சம் லைக்குகளையும் 5.5 ஆயிரம் டிஸ் லைக்குகளையும் பெற்றுள்ளது.