கார் ஏற்றி விவசாயிகள் படு கொலைகள்.
InShot_20211005_221053443.mp4 விவசாயிகள் நலனுக்கு எதிராகவும்,அதனை உருவாக்கிய வேளாண் நிறுவனம் உட்பட்ட கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் மோடி பா.ஜ.க, ஒன்றிய அரசு கொண்டு வந்திள்ள விவசாய சட்டங்களுக்கு எதிராக பல மாநில விவசாயிகள் கடந்த ஓராண்டுகளாக போராடி வருகின்றனர்.
அவர்களை இது வரை கண்டு கொள்ளாத,அழைத்துப் பேசி தீர்வு காணாத பா.ஜ.க அரசு தற்போது விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்கப் பல வழிகளில் பாசிசத் தனமாக செயல் பட்டு வருகிறது.
உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி பகுதியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் அக்டோபர் 3 ஆம் தேதி காரில் சென்று மோதியதால் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டதாகவும், . அதையடுத்து ஏற்பட்ட மோதல்களால் இதுவரை ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. சம்பவ இடத்தில் தன் மகன் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் மறுத்துள்ளார். ஆனாலும் முதல் தகவல் அறிக்கையில் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
https://youtu.be/GrgNh3hvW_0https://youtu.be/GrgNh3hvW_0
கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறுவதற்காக நேற்று (அக்டோபர் 4) அப்பகுதிக்கு செல்ல முயன்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உபி போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். விவசாயிகள் மீதான கொலைத் தாக்குதலைக் கண்டித்தும், பிரியங்கா காந்தியின் கைதைக் கண்டித்தும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.