ஸ்டெர்லைட் 2.0.

 வேதாளம் உயிர்த்தெழுகிறது?

மக்களின் எதிர்பினால் தொடர் போராட்டத்தால் 14 உயிர்களை துப்பாக்கிக் குண்டிற்கு இரையாக்கி மூடிய நாசகார ஆலையை திறக்க வேண்டும்.அதானால் வாழ்வாதாரமே பறி போய் விட்டது என்று ஸ்டெர்லைட் போடும் எச்சில் இலைச் சோற்றிற்கு தவிக்கின்ற ,

அனில் அகர்வால் போடுகி ன்ற  பிச்சைக்காசை வைத்து உயிர் வாழ்கின்ற குடிகெடுக்கின்ற தறுதலைக் கூட்டம்தான் தற்போது கோடாரிக்காம்பாய் அமைதியான வாழ்விற்கு திரும்பிய தூத்துக்குடி அமைதியை கெடுக்கிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பால் மூடப் பட்டுள்ள நாசகார ஆலையை திறக்க வேண்டும் என திங்கள் கிழமைதோறும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து ஊடகங்களுக்கு காட்சியளித்து விட்டு செல்கிறது.

உச்சநீதிமன்றம் பல்வேறு வாதங்கள் ஆதாரங்களை வைத்து மூடக்கூறி தீர்ப்பு வழங்கிய பின்னர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரால் என்ன செய்யமுடியும்,அவரால்ஸ்டெர்லைட்டைத் திறக்க ஆணை பிறப்பிக்க முடியாது என்று தெரிந்தும் திங்கள் தோறும் வந்து மனு நகலை கொடுத்து கூடிக்கலையும் இந்த நற்குடிகெடுக்கும் கூலிகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் இன்னமும் தூண்டிவிட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

அதை சுட்டிக் காட்டி தட்டிவைக்காமல் வெட்டிவேலையாக மனுவை வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர் வாங்கி வைப்பது ஏன் என்று தெரியவில்லை.

இதேபோல் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மனுக்கள் கொடுத்தால் அதை இந்த அளவு முக்பியத்தும் கொடுத்து மாவட்டாட்சியர் வாங்குவதில்லை.ஊடகத்தினரும் கண்டுகொள்வதில்லை.

இந்த வாராந்திரி மனு கொடுப்பதன.பின்னணியில் இருப்பது வாழ்விழந்த ஸ்டெர்லைட் தொழிலாளர்கள் இல்லை.ஸ்டெர்லைட்டால் தற்போது கூலிக்கு அமர்த்தப்பட்டுள்ளவர்கள்தாம்.

ஒப்பந்ததாரர் சங்கம் என்ற பெயரில் தியாகராஜன், வழக்கறிஞர் மணிகண்ட ராஜா,ஜெயமோகன், ஜெயகனி என்பவர்கள்தான்.

இதில் ஒப்பந்தகார்ர்கள் என்றால் இது போன்ற அல்லக்கைகளை தினக்கூலிக்கு வண்டிகளுல் ஏற்றி வந்து மனுகொடுக்கு வைத்து விட்டு சாப்பாடு போட்டு அனுப்பும் ஒப்பந்தம்தான்.

கூலியாட்களுக்கு 1000 வரை வழங்கப் படுகிறதாம்.இதனால் வேலைகேட்டு வரும் கூட்டம் அதிகம்.

இச்செய்தியை பரப்ப

 செய்தியாளர்கள்,மின்னணு ஊடகத்தினர்களுக்கு 500 .வாரம்தவறாமல் வரும் இந்த வருமானத்தைப் பெற திங்கள்தோறும் 80க்கு குறையாமல்  ஊடக வீரர்கள் வருகின்றர்.

இதில் 80% ஊடகங்கள் பெயரில் மட்டுமே வாழ்பவை.

ஸ்டெர்லைட் செயல்பட்டபோது அங்கு பணிபுரிந்தவர்கள் 90 % வடமாநில ஓப்பந்தத் தொழிலாளர்கள்தான்.அவர்களும் மூடப்பட்டவுடன் வேறிடங்களுக்கு போய்விட்டார்கள்.மூடப்பட்டதால் பாதிப்பு  தொழிலாளர்கள்,வாகனங்கள் ஒப்பந்த்தார்கள்,சில அதிகாரிகள்ள்,ஊடகத்தின்களுக்குத்தான்.

ஊடகத்தினர் என்று மீண்டும்,மீண்டும் சொல்லக்காரணம் உண்டு.ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட உச்சக்கட்டத்தில் அனில் அகர்வாலால்  செல்வத்தில் மிதந்தவர்கள் அரசியல்வாதிகளும்,தூத்துக்குடி ஊடகத்தினரும்தான்.

கட்சிகளுக்கு நிதி வாரியிறைக்கப்பட்டது.நாளிதழ்களுக்கு விளம்பரம் அள்ளி வழங்கப்பட்டது.ஊடக,செய்தியாளர்கள் பலமாக கவனிக்கப் பட்டனர்.ஸ்டெர்லைட் தயவால் வீடு கட்டியவர்கள்,கார் வாங்கியவர்கள்,இருசக்கரவாகனங்கள் வாங்கியவர்கள் என ஊடக தகுதிக்கேற்ப செய்தியாளர்கள் பலனடைந்தார்கள்.

இவர்கள் ஆதாரம் உள்ளதுஸ்டெர்லைட் ஆதரவாக செய்தி போடாவிட்டீலும் பரவாயில்லை.எதிர்ப்பு செய்திகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவர்கள் பணியை ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நடந்த பின் காவல் துறை அட்டகாசத்தை,இளைஞர்களை கண்மூடித்தனமாக தாக்கியதை வெளியே கொண்டுவந்தது ஜூனியர் விகடனும்,நக்கீரனும்தான் .அதுவும் சென்னையில் இருந்து வந்த செய்தியாளர்கள்தான்.

உள்ளுர் செய்தியாளர்கள் கெட்டதைப் பார்க்க மாட்டோம் என குருடர்களாகிவிட்டனர்.

இவையெல்லாம் இன்னும் திறக்க மனு கொடுக்கும் கூலிகளைப்பற்றியும்,அதை வாங்கும் மாவட்ட ஆட்சியர்,அதை செவ்வாய்தோறும் செய்தி,படமாக்கும் செய்தியாளர்கள் மீதான அதிருப்தியால்தான்.

ஸ்டெர்லைட் எங்கிருக்கிறது என்றே தெரியாத அர்ஜூன் சம்பத் விமானம் ,கார் மூலம் சத்யாவில் தங்கி மாவட்டாட்சியர் அலுவலகம் வந்து ஸ்டெர்லைட்டைத்திறக்க சொல்லுகிறார என்றால்  அதற்கான செலவை யார் ஏற்கிறார்கள்.

இன்றுவரை நாளிதழ்களில்,வார ,மாத இதழ்களில் விளம்பரம்,யூடியூப்,கூகிள் விளம்பரம் மூலம் ஸ்டெர்லைட் சாதனைகள் படைகள் செலவிட்டு வேதாந்தா கொடுக்கிறது வேதனை என்றால்.அதற்கு அரசு அதிகாரிகள் கைகொடுப்பது மகா வேதனை.

ஸ்டெர்லைட் போராட்டம உச்சத்தை எட்டிய போது மதுரை உயர்நீதிமன்றம் ஒரு ஆணை வெளியிட்டது.

" ஸ்டெர்லைட் ஆதரவாகவோ,எதிர்ப்பாகவோ இருதரப்பினரும் மாறி,மாறி மனுக்கள் கொடுப்பது பதட்டத்தை அதிகரிக்கிறது.எனவே இருதரப்பினரையும்  ஊர்வலமாக வருவதையும்,மனு கொடுப்பதை யும் மாவட்ட ஆட்சியர் தடை விதிக்க வேண்டும்"

அதை மறந்திருந்தாலும்,சில அதிகாரிகள் மறைத்திருந்தாலும் தற்போதைய மாவட்ட ஆட்சியர். கைக்கொள்ள வேண்டும்.

அலட்சியம் காட்டுவது மீண்டும் பதட்டத்தை உருவாக்கி விடும்.

இப்போதுதான் சுத்தமான காற்றையும்,மழையையும்,தடையற்ற குடிநீரெயும் தூத்துக்குடி மக்கள் பயன்படுத்துகிறார்கள்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?