இந்து மதம் என்கிற பெயரே கிடையாது என
5ஜி ஆதரவு
4ஜி அறிமுகமான காலக்கட்டத்தில் 3ஜி அணுகல் கொண்டிருந்த ஸ்மார்ட்போன்களை வைத்திருந்தவர்கள் பட்ட சிரமத்தை அறிந்திருப்போம். காரணம் 4ஜிக்கும் 3ஜிக்கும் ஆன இணைய வேக வித்தியாசம் முற்றிலும் மாறுபட்டு இருந்தது.
இந்த நிலையில் 5ஜி வேகமானது 4ஜியை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ஜி உடன் ஒப்பிடும் போது 4ஜி மிகவும் அடிப்படையான ஒன்றாக இருக்க வாய்ப்புள்ளது. காரணம் 5ஜி மூலம் அடைய இருக்கும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் என்பது அதீத வகையில் இருக்கப் போகிறது.
ஏர்டெல் அக்டோபர் 1 முதலே 5ஜி சேவையைத் தொடங்கி இருக்கிறது. ஜியோ தீபாவளி முதல் 5ஜி சேவையைத் தொடங்க இருக்கிறது. விஐ அறிமுக தேதி குறித்த அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும் விரைவில் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் பிரதான தொலைத்தொடர்பு நிறுவனமாக இருப்பது ஜியோ, ஏர்டெல், விஐ தான். இந்த மூன்று நிறுவனங்களும் விரைவில் 5ஜி சேவையைக் கொண்டுவர இருக்கிறது. நாமும் இதற்கு தயாராக இருப்பது அவசியம் அல்லவா.
5ஜி ஆதரவு கொண்ட புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன்னாள் உங்கள் ஸ்மார்ட்போனில் 5ஜி ஆதரவு இருக்கிறதா என்பதை சோதித்து பார்ப்பது அவசியமாகும்.
கடந்த 2 ஆண்டுகளாக அறிமுகம் செய்யப்பட்ட பெரும்பாலான ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களில் 5ஜி ஆதரவு இடம்பெற்று இருக்கிறது.
Galaxy S21 சீரிஸ், ஆப்பிள் ஐபோன் ஏ13, அசுஸ் ஆர்ஓஜி போன் 5, ஆர்ஓஜி போன் 6, ரியல்மி ஜிடி சீரிஸ், ஒன்பிளஸ் 9 மற்றும் சீரிஸ் போன்ற அனைத்து ஸ்மார்ட்போன்களும் 5ஜி ஆதரவைக் கொண்டிருக்கின்றன.
இதில் பல ஸ்மார்ட்போனை பல மாதங்களுக்கு முன்பு நீங்கள் வாங்கி இருக்கலாம்.
ஆனால் இதிலும் 5ஜி ஆதரவு இருக்கலாம் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.
எனவே நீங்கள் புதிய போன் வாங்க வேண்டிய தேவையில்லை. சரி, உங்கள் போனில் 5ஜி ஆதரவு இருக்கிறதா என்பதை சரிபார்ப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
உங்கள் ஸ்மார்ட்போனில் செட்டிங்ஸ் பயன்பாட்டை ஓபன் செய்யவும்
இதில் Connection என்ற விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளவும்.
அதில் மொபைல் நெட்வொர்க் என்ற விருப்பம் காட்டப்படும் அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
இதில் நெட்வொர்க் மோட் என்பதை கிளிக் செய்து கொள்ளவும்.
இதில் 2G/3G/4G/5G (ஆட்டோ கனெக்ட் என்ற விருப்பம் காட்டப்படும். இப்படி காட்டும்பட்சத்தில் உங்கள் மொபைல் 5ஜி ஆதரவு இருக்கிறது என்பது உறுதி.
2G/3G/4G என்ற விருப்பம் காண்பித்தால் உங்கள் மொபைலில் 5ஜி ஆதரவு இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
உங்கள் மொபைலில் 5ஜி சேவைகளை இயக்க விரும்பினால், நெட்வொர்க் அமைப்புகளுக்கு சென்று 2G/3G/4G/5G (ஆட்டோ கனெக்ட்) என்ற விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளவும்.
இதை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் நீங்கள் இருக்கும் இடத்தில் எந்த நெட்வொர்க் கிடைக்கிறதோ அது தானாகவே கனெக்ட் ஆகொள்ளுங்கள்.
உங்கள் ஸ்மார்ட்போனில் 5ஜி ஆதரவை பெறுவதற்கு இரண்டு விஷயங்கள் பிரதானமாகும்.
ஒன்று நீங்கள் இருக்கும் இடத்தில் 5ஜி ஆதரவு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மற்றொன்று உங்கள் மொபைல் மற்றும் சிம் 5ஜி ஆதரவைக் கொண்டிருக்கிறதா என்பது சரிபார்த்துக் கொள்ளவும்.
இது எதுவும் இல்லை என்றால் 5ஜி ஆதரவு கொண்ட போனை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை.
----------------------------------------------------------------------
தடை செய்யப்பட்ட
இயக்கங்களை சேர்ந்த
10 பேர்
பயங்கரவாதிகளாக
அறிவிப்பு:
ஒன்றிய உள்துறை அமைச்சகம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் 10 பேரை பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.
இவர்கள் ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ தொய்பா மற்றும் இதர தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஆவர். பாகிஸ்தானை சேர்ந்த ஹபிபுல்லா மாலிக் என்ற சஜித் தத், காஷ்மீரின் பாரமுல்லாவை சேர்ந்தவரும், தற்போது பாகிஸ்தானில் இருப்பவருமான பசிட் அகமது ரேஷி, காஷ்மீரின் சோபோரை சேர்ந்தவரும், தற்போது பாகிஸ்தானில் இருப்பவருமான இம்தியாஸ் அகமது கான்டூ என்ற சஜத், பூஞ்ச் பகுதியை சேர்ந்தவரும், தற்போது பாகிஸ்தானை சேர்ந்தவருமான ஜாபர் இக்பால் என்ற சலிம்புல்வாமாவை சேர்ந்த ஷேக் ஜமீல் உர் ரகுமான் என்ற ஷேக் சஹாப், ஸ்ரீநகரை சேர்ந்தவரும், தற்போது பாகிஸ்தானில் இருப்பவருமான பிலால் அகமது பெய்க் என்ற பாபர், பூஞ்ச் பகுதியை சேர்நத் ரபிக் நய் என்ற சுல்தான், தோடா பகுதியை சேர்ந்த இர்ஷாத் அகமது என்ற இத்ரீஸ், குப்வாரா பகுதியை சேர்ந்த பஷிர் அகமது பீர் என்ற இம்தியாஸ், பாரமுல்லா பகுதியை சேர்ந்தவரும், தற்போது பாகிஸ்தானில் இருப்பவருமான சவுகத் அகமது ஷேக் என்ற சவுகத் மோச்சி ஆகிய 10 பேர் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஹபிபுல்லா மாலிக், பூஞ்ச் பகுதியில் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை கையாண்டவர்.
காஷ்மீரில் டிரோன் மூலம் ஆயுதங்கள் போடப்பட்டதில் சம்பந்தப்பட்டவர். காஷ்மீரில் பல தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர்.
ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்கிற பெயரே கிடையாது என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நடிகர்கள் கார்த்தி, விக்ரமுடன் இணைந்து கமல்ஹாசன் நேற்று பார்த்தார்.
திரைப்படம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் ’பொன்னியின் செல்வன் திரைப்படம் மலைப்பாக இருக்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்’ என்றார். அதைத் தொடர்ந்து அவரிடம் இயக்குநர் வெற்றிமாறன் ராஜராஜசோழனை இந்து மன்னனாக மாற்ற முயல்கிறார்கள் எனக் கூறியது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு கமல்ஹாசன், ‘ராஜராஜசோழன் காலத்தில் இந்தியாவில் இந்து மதம் என்கிற வார்த்தை கிடையாது.
சைவம், வைணவம், சமணம் என்றுதான் இருந்தது. இவற்றை ஒரே சொல்லில் இணைத்தது ஆங்கிலேயர்கள்தான்’ என்றார்.
---------------------------------------------------------------------+-