பத்தாண்டு மர்மம்

 ரிஷி சூனக்

சென்ற முறை தனக்கு கிடைக்க வேண்டிய. பிரதமர் பதவி நூலிலையில் தவற விட்ட ரிஷிக்கு தற்போது கிடைக்கும் சூழல்.

அவரது பின்னணி:-

ரிஷி சூனக்கின் பெற்றோர் கிழக்கு ஆஃப்ரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்கு வந்தவர்கள். 

இருவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அவரது தந்தை தற்போதைய கென்யாவில் பிறந்து வளர்ந்தார், அதே நேரத்தில் அவரது தாயார் தங்கனிகாவில் (பின்னர் தான்சானியாவின் ஒரு பகுதியாக மாறியது) பிறந்தார்.

இவரது தாத்தாக்கள் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர்கள் மற்றும் கிழக்கு ஆஃப்ரிக்காவில் இருந்து 1960களில் தங்கள் குடும்பங்களுடன் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தனர்.

ரிஷி சூனக், 1980இல் செளத்தாம்டனில் பிறந்தார். அங்கு அவரது தந்தை பொது மருத்துவராக இருந்தார். 



இவரது தாயார் சொந்தமாக மருந்தகத்தை நடத்தி வந்தார்.வின்செஸ்டர் கல்லூரியில் பயின்ற இவர் பின்னர் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படிக்க ஆக்ஸ்போர்டு சென்றார்.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்கும் போது, ​​இந்திய கோடீஸ்வரரும், ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸின் இணை நிறுவனருமான நாராயணமூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்தியைச் சந்தித்தார் ரிஷி சூனக்.

 பிறகு இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

பிரதமர் பதவிக்கான தமது முந்தைய தலைமை பிரசாரத்தின் போது, ​​காலநிலை மாற்றத்தின் பின்னணியை குறிப்பிடும்போது, அவர் தனது மகள்களை அடிக்கடி குறிப்பிட்டார்.

பிபிசி தொலைக்காட்சி விவாதத்தின் போது பருவநிலை மாற்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சூனக், "எனது வீட்டில் நிபுணர்களாக இருக்கும் எனது இரண்டு இளம் மகள்களிடமிருந்து ஆலோசனை பெற்றேன்" என்றார்.

2001 முதல் 2004ஆம் ஆண்டு வரை, சூனக் கோல்ட்மேன் சாக்ஸ் என்ற நிறுவனத்தின் நிதி ஆய்வாளராக இருந்தார். பின்னர் இரண்டு ஹெட்ஜ் முதலீட்டு நிறுவனங்களில் அவர் பங்குதாரராக இருந்தார்.

பணக்கார நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக கருதப்படும் ரிஷி சூனக், தமது சொத்து மதிப்பு என்ன என்பதை பகிரங்கமாக இதுவரை தெரிவிக்கவில்லை.

வலதுசாரி ஆதரவாளராக இருப்பதாலேயே இப் பிரதமர் பதவி கிடைக்க உள்ளது.

----------------------------------------------------------------------------

ரிஷி சூனக்

வயது: 42

பிறந்த இடம்: செளதாம்டன்

வீடு: லண்டன் மற்றும் யார்க்ஷையர்

கல்வி: வின்செஸ்டர் கல்லூரி, ஆக்ஸ்ஃபொர்டு பல்கலைக்கழகம், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம்

குடும்பம்தொழிலதிபர் அக்ஷதா மூர்த்தியை மணந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

நாடாளுமன்ற தொகுதி: ரிச்மொண்ட் (யார்க்ஷையர்)

ரிஷிசூனக் தற்போதைய நிலையில் முன்னணியில் இருந்தார், 357 எம்.பி.க்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார் - 

 100 எம்.பிக்கள் ஆதரவே குறைந்தபட்சம்.


படுகொலையின்
பத்தாண்டு


திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் தற்போதைய நகராட்சித்துறை அமைச்சருமான  கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம்.  2012 மார்ச் 29-ம் தேதியன்று திருச்சியில் 10-வது கிராஸ் வீட்டில் இருந்து நடைபயற்சிக்காக கிளம்பிய ராமஜெயம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது.


திருச்சி - கல்லணை சாலையில் உள்ள திருவளர்சோலை பகுதியில் கட்டுக்கம்பிகள், டேப் ஆகியவற்றால் கட்டப்பட்டு முட்புதருக்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார் ராமஜெயம். ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க திருச்சி மாநகர கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில் 7 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. 

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டதில் இருந்து, ராமஜெயத்தின் உதவியாளர்கள், அவர் சார்ந்தவர்களிடம் உண்மைக் கண்டறியும் சோதனை நடைபெற்றது. தங்கள் குடும்பத்தை குறி வைத்து விசாரணை நடைபெறுவதால் அதிருப்தியடைந்த ராமஜெயம் மனைவி லதா வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற மனு தாக்கல் செய்தார். 

விசாரணை 2017-ம் ஆண்டு வரை நடந்து வந்தும் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாமல் போனது. தொழில் போட்டி மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாகவே கொலை நடந்திருக்கலாம் என்றும், இது தொடர்பாக 1100 பேருக்கு மேல் விசாரணை நடத்தப்பட்டதாகவும் சட்டசபையில் விளக்கம் அளித்தார் அன்றைய முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி. 

திருச்சியில் சாதாரண ஏர்செல் நிறுவனத்தின் ஏஜண்டாக செயல்பட்ட(Managing Director) காரணத்தால் M D என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். அண்ணன் அமைச்சர் என்பதால் அரசு அதிகாரிகள் , நில உரிமையாளர்கள், என சகல பிரிவினரையும் மிரட்டி காரியம் சாதித்தனர். இதனால்தான் அமைச்சரின் இலாக்காவில் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு ஒரு தொகை நிர்ணயித்து வசுலித்தும், குவாரி கான்ட்ராக்ட் முதல் ரியல் எஸ்டேட் வரை, ‘ஜனனி’ மினரல்ஸ், ‘கேர் காலேஜ்’ என தனது சாம்ராஜ்ஜியத்தை சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா, தென் ஆப்ரிக்கா என பரந்து விரிந்த வர்த்தக தொடர்பு மூலமாகவும் பல ஆயிரம் கோடிக்கு அதிபதியாகவும் மாறினார்.



2007-ல் நில அதிபர் துரைராஜ் காரில் உயிரோடு எரித்து கொன்ற வழக்கிலும் , அதே நிலத்தில் தங்கராஜ் என்பவர் தற்கொலை செய்து கொண்டதிலும் , ராஜெயத்தின் தலையீடு உள்ளதாக காவல்துறை சந்தேகித்தது. ‘கலைஞர் அறிவாலயம்’ , காஞ்சனா பிளாசா, மாயாஸ் ஹோட்டல், பிரபல SRM மருத்துவக்கல்லூரி(‘பாரிவேந்தர் பச்சைமுத்து உடையார்’) கட்டுவது உள்ளிட்ட பிரச்சனையில் மிரட்டப்பட்டதும் திருச்சி மக்கள் அறிந்தது தான். நில அபகரிப்பு நடந்ததாக சில வழக்குகள் தற்சமயம் பதிவு செய்து விசாரிக்க பட்டுவந்தது.

ஆளும் அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா சட்டமன்ற தேர்தலின் போது வாக்கு சேகரிக்க சென்ற இடமெல்லாம் தி.மு.க அமைச்சர்களை விட ராமஜயத்தை கடுமையாக விமர்சித்தார்.
பெண்கள் விஷயத்தில் ராமஜெயம் சபலம் என சொல்லப்படுகிறது. இதில், காதல் விவகார பிரச்சினை ஒன்றில் நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த ஒரு நபருக்கு எதிராக பஞ்சாயத்து பேசியதோடு மட்டுமல்லாமல், அவருடைய காதலியையே சம்பவம் நடந்த இடத்திற்கு அருகாமையிலுள்ள பொன்னி டெல்டா அபார்ட்மெண்டில் வைத்து குடித்தனம் நடத்தியதாகவும், திரைப்படத்துறையைச் சேர்ந்த நடிகர் ஒருவரின் மனைவியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும், கோவை மாவட்ட என்.ஜி.ஓ. அமைப்பினைச் சேர்ந்த பெண்மணியிடம் சில்மிஷம் செய்ததும் கொலைக்கான காரணமாக சிறப்புப் புலனாய்வுக் குழுவினரால் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதுபோல், ரூ. 1000 கோடி பஞ்சாயத்து ஒன்றில் தலையிட்டதும், மணல் விவகாரத்தில் தலையிட்டதும் கொலைக்கான கூடுதல் காரணமாக முன்வைக்கப் படுகின்றது.
ராமஜெயம் கடத்தப்பட்ட பிறகு, டூவீலரின் பிரேக், ஆக்ஸி லேட்டர் கேபிள்களால் கைகால் கட்டப்பட்டு, உடலெங்கும் கட்டுக்கம்பிகளால் கட்டப்பட்டு ஏறக்குறைய 1 மணி நேரம் குறிப்பிட்ட "அந்த" நபரின் வருகைக்காக காத்திருக்க வைக்கப்பட்டு, அந்த நபர் வந்தவுடன் நேரில் ஆஜர்படுத்தப் பட்டிருக்கின்றார் ராமஜெயம். வந்த நபரோ குண்டூசிகளால் ராமஜெயத்தின் உடலெங்கும், ஏறக்குறைய 186 குண்டூசி அளவிலான துளைகள் இட்டபின்னரே, கொலை செய்யப்பட்டிருக்கிறார் ராமஜெயம் என தெளிவாக குறிப்பிடுகின்றது ராமஜெயத்தின் பிரேத பரிசோதனை அறிக்கை.

ராம ஜெயம் கொலை தொடர்பாக பயனுள்ள தகவல்களை அளிப்பவர்களுக்கு தலா 2 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவித்தபோதும், கொலையாளியின் நிழலைக் கூட நெருங்க முடியாமல் போனது. பல நாட்களாக கிடப்பில் போடப்பட்ட இந்த வழக்கு சில நாட்களுக்கு முன் நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி  தூத்துக்குடி எஸ்.பி.ஜெயக்குமார் தலைமையிலும், அரியலூர் டி.எஸ்.பி. மதன், சி.பி.ஐ. அதிகாரி ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு குழுவே தற்போது இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது.
ராமஜெயம் கொலை தொடர்பாக சிறையில் உள்ள கைதிகள், குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சிறைக்கு வெளியில் உள்ளவர்கள், ராமஜெயம் கடத்தப்பட்ட இடத்தில் இருந்து அந்த சமயத்தில் செல்போனில் பேசியவர்கள் என 1400க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இவ்வழக்கில் 20 பேர் அடங்கிய இறுதிபட்டியல் தயார் செய்யப்பட்டநிலையில், இந்த வழக்கின் முக்கிய விசாரணைகளின் நகர்வு குறித்து அறிவதற்கும், அதேநேரம் தமிழகத்தையே அச்சுறுத்திய பிரபல ரவுடிகள் சுமார் 20க்கும் மேற்பட்டோரை கஸ்டடியெடுத்து கடந்த சில நாட்களாக தீவிரமாக விசாரித்து வருவது குறித்தும், சில ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.
சுங்கச்சாவடியில் சிசிடிவி கேமராக்களில் குறிப்பிட்ட ஒரு காரில் கொலையாளிகள் தப்பிச் சென்றிருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த காரை கண்டறிந்தால் கொலையாளியை நெருங்கிவிடலாம் என்பதால் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி வந்தனர்.



அந்த கார் வெர்ஷா வேன் என தெரியவந்துள்ளது. இதையடுத்து வெர்ஷா வேன் வைத்திருப்போரின் பட்டியலை சிபிசிஐடி போலீஸார் எடுத்து வந்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் 1400 வெர்ஷா வேன்கள் இருக்கிறது. அவற்றில் கோவையில் மட்டும் 250 வெர்ஷா வேன்கள் உள்ளன.

இதனால் கோவையில் உள்ள வெர்ஷா வேன்களின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினால் வழக்கிற்கு ஏதேனும் துப்பு கிடைக்கும் என போலீஸார் நம்புகிறார்கள். அந்த 250 கார்களிலும் கடந்த 2012 ஆம் ஆண்டுக்கு முன்பு வாங்கப்பட்டது, விற்கப்பட்டது எவை என்பதையும் கணக்கிட்டு விசாரணையை கோவை மாவட்டத்தில் முடுக்கிவிட்டுள்ளனர்.  
மேலும் சென்னை முன்னாள் எம்எல்ஏ எம்.கே.பாலன் கொலை வழக்கில் கணேசனும், செந்தில்குமாரும் தொடர்புடையதிண்டுக்கல்லை சேர்ந்த கணேசன், புதுக்கோட்டையை சேர்ந்த செந்தில்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி நடந்து வரும் நிலையில் ராமஜெயம் கொலை வழக்கு மீண்டும் சூடு பிடித்திருக்கிறது. பத்து வருடங்களாக பதுங்கிய உண்மைகள் இனியாவது வெளியே வருமா?





------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?