சேவை சரிவு?
இந்தியாவின் சேவைத்துறை வளர்ச்சி கடந்த 6 மாதங்களில் இல்லாத சரிவைச் சந்தித்துள்ளது.
‘எஸ் அண்ட் பி குளோபல் இந்தியா சர்வீசஸ் பர்சேசிங் மேனேஜர்ஸ்’ (Purchasing Managers’ Index - PMI) ஆய்வின் படி, செப்டம்பர் மாதத்தில் இந்திய சேவைத் துறையின் வளர்ச்சி 54.3 புள்ளிகளாகச் சரிந்துள்ளது.
முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் சேவைத்துறை வளர்ச்சி 57.2 புள்ளிகளாக இருந்த நிலையில், அது கணிசமாக குறைந்துள்ளது.உலகப்பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்லும் நிலையில், இந்திய சேவைதுறை செப்டம்பர் மாதம் வர்த்தகம் மற்றும் பணிகளில் ஏற்பட்ட மந்த நிலையில் 6 மாத சரிவுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் சேவைத்துறை வளர்ச்சி 57.2 புள்ளிகளாக இருந்த நிலையில், அது கணிசமாக குறைந்துள்ளது.
உலகப்பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்லும் நிலையில், இந்திய சேவைதுறை செப்டம்பர் மாதம் வர்த்தகம் மற்றும் பணிகளில் ஏற்பட்ட மந்த நிலையில் 6 மாத சரிவுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
பொதுவாக வளர்ச்சிக் (PMI) குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் அந்தத் துறை வளர்ச்சிப் பாதையில் இருப்பதாகப் பொருள்.
எனினும், 57.2 புள்ளிகளில் இருந்து 54.3 புள்ளிகளாக குறைவது சரிவாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்திய சேவைத் துறை மார்ச் மாதத்தில் இருந்து தொடர் வளர்ச்சிப் பாதையில் இருந்தால் நிலையில் செப்டம்பர் மாதத்தில்தான் அது சரிவைச் சந்தித்துள்ளது.
அதுமட்டுமல்ல, செப்டம்பர் மாதத்தில் சேவைத் துறை மந்தமான வளர்ச்சியைப் பதிவு செய்த காரணத்தால் ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் சேவைத் துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை குறைவாகவே உருவாக்கப்பட்டு இருப்பது பெரும் பாதிப்பாகப் பார்க்கப்படுகிறது
-----------------------------------------------------------------------
கவிஞர் சுப்பு ஆறுமுகம்
தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான வில்லுப்பாட்டின் மூலம் தேச பக்தி பாடல்களை பாடிவந்த கவிஞர் சுப்பு ஆறுமுகம் காலமானார்.
1928-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் சத்திரப் புதுக்குளத்தில் பிறந்த சுப்பு ஆறுமுகம், நெல்லை மந்திரமூர்த்தி உயர்நிலைப் பள்ளியிலும், பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் பள்ளியிலும் கல்வி பயின்றார்.
பின்னர் மதுரை தமிழ்ச்சங்கம் என்ற அமைப்பில் மூன்று ஆண்டுகள் படித்து, தமிழ் மொழியில் புலமை பெற்ற சுப்புஆறுமுகம் இளம் வயதிலேயே நூல் எழுதுவதை பழக்கமாக்கி கொண்டார்.11 வயதில் "குமரன் பாட்டு" என்ற நூலை எழுதிய சுப்பு ஆறுமுகத்தை பிரபல நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுத சென்னைக்கு அழைத்துச் சென்றார்.
காந்தி மகான் கதையை 10 வருடங்களுக்கும் மேலாக வில்லுப்பாட்டு மூலம் மக்களிடம் பரப்பி வந்தார் சுப்பு ஆறுமுகம்.
1960-ம் ஆண்டு "காந்தி வந்தார்" என்ற தலைப்பிலும், "கருணைக்கடல் காமாட்சி" என்ற தலைப்பிலும் ஆன்மிகம், தேசபக்தி இரண்டையுமே வில்லிசை மூலம் பாடி வந்தார்.
கோயில்கள், வானொலி, தொலைக்காட்சி என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்தி, மக்களின் பெரு மதிப்பையும், பாராட்டுக்களையும் பெற்ற சுப்பு ஆறுமுகத்தின் புகழுக்கு தமிழக அரசு கலைமாமணி விருதையும், மத்திய அரசு பத்மஸ்ரீ விருதையும் வழங்கி கவுரவித்தது.
------------------------------------------------------------------------
முலாயம்சிங்
சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவரும், இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவருமான முலாயம் சிங் யாதவ் காலமானார்.
மல்யுத்த வீரராக இருந்த முலாயம் அரசியல் தலைவராக மாறினார்.
1939-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதியன்று உத்தரப்பிரதேச மாநிலம் எட்வா மாவட்டத்தில் பிறந்த முலாயம் சிங், அரசியல் உலகில் கால் பதிப்பதற்கு முன்பாக மல்யுத்த வீரராக இருந்தவராவார்.பள்ளி ஆசிரியராக இருந்து, பின்னாளில் அரசியலுக்கு வந்தார்.
அரசியல் பின்னணி இல்லாவிட்டாலும் தனது 28-வது வயதில் பிரஜா சோஷியலிஸ்ட் கட்சி தலைவரினால் அடையாளம் காணப்பட்டு 1967-ம் ஆண்டு ஜஸ்வந்த் நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டார்.
இளம்வயதிலேயே சட்டமன்ற உறுப்பினர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றவர் முலாயம் சிங்,
இதுவரை 10 முறை எம்.எல்.ஏ.வாகவும்,
1 முறை எம்.எல்.சி.யாகவும்,
மூன்று முறை உத்தரப்பிரதேச முதலமைச்சராகவும்,
7 முறை மக்களவை உறுப்பினராகவும் அரசியல் உலகில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கினார்.
இந்திராகாந்தி ஆட்சிகாலத்தில் அறிவிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்ததன் விளைவாக 19 மாதங்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்.
இந்திய பிரதமராக இருந்த தேவகவுடா ராஜினாமா செய்ததையடுத்து முலாயம் சிங்குக்கு பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டு இறுதி நேரத்தில் கைநழுவிப்போனது.
மேலும் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக எதிர்த்து வந்தார் முலாயம் சிங்.
பாபர் மசூதி விவகாரத்தில் இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக விளங்கினார்.
82-வயதான முலாயம் சிங் உடல்நலக்குறைவு காரணமாக அரியானா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் முலாயம் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
--------------------------------------------------------------------