பொறுப்பானவர்

 எந்த ஒரு மாநில அர சாங்கமாக இருந்தாலும் அது மக்களுக் காக செயல்படும் பொழுது வருவாய் பற்றாக் குறை ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. 

மக்கள் நலன் மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்காக கடன் பெறு வதும் தவிர்க்க முடியாதவை. ஆனாலும், இவை அனைத்தும் ஒரு வரம்புக்குள் அடங்க வேண்டும். அது எல்லையை தாண்டக்கூடாது. 

அப்போதுதான், அந்த மாநில மக்களும் மாநிலமும் வளர்ச்சி பாதைக்கு செல்லும். இதில் சில ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்கிறது. மாநிலத்தின் ஒட்டுமொத்தமான வருவாய் வரவை காட்டிலும், அரசின் செலவு அதிகரிக்கும்போது வரு வாய் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த பற்றாக்குறை யால், தினசரி தேவைகளுக்கும் பணம் இல்லாமல் தத்தளிக்கும் நிலை உருவாகிறது.

வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை, முதன்மை பற்றாக்குறை என்ற இந்த மூன்று நடை முறையும் அதிமுக ஆட்சியின் கடைசி ஐந்து ஆண்டு காலத்தில் முறையாக பின்பற்ற தவறியதால் வருவாய் பற்றாக்குறை 380.76 விழுக்காடாக உயர்ந்ததை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்த இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலை வரின் அறிக்கை தெளிவாகக் காட்டியிருக்கிறது. 

அதிமுக ஆட்சியின் கடைசி ஐந்தாண்டு கால 2021 மார்ச் உடன் முடிவடைந்த இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரின் மாநில நிதிநிலை மீதான தணிக்கை துறையின் 192 பக்க அறிக்கை மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்களையும் வெளிக்கொண்டு வந்துள்ளது.

 எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின் கடைசி ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை அசுர வேகத்தில் அதாவது, 380.76 விழுக்காடாக உயர்ந்துள்ளது. 

2016-2017 ஆம்  ஆண்டுகளில் ரூ‌.12,964 கோடியாக இருந்த இந்த பற்றாக்குறை, 2020-2021 ஆம் ஆண்டில் ரூ.62,326 கோடிக்கு உயர்ந்துள்ளது. 

சரக்கு மற்றும் சேவை வரி, வணிக வரி, முத்திரை தீர்வை, பதிவுக் கட்டணம், நில வருவாய் ஆகியவற்றில் 1,403 இனங்களில் குறைவான வரி மதிப்பீடுகள் செய்து, குறைவாக வரி விதிப்பு செய்து ரூ.236 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதையும் வெளிச்சம் போட்டுள்ளது.

கடனும்-வட்டியும் அதிகரிப்பு

தமிழ்நாட்டில் 2020-21ஆம் ஆண்டின் வருவாய் 1 லட்சத்து 74 ஆயிரத்து 76 கோடியாகும். இது கடந்த 2019-20 ஆம் ஆண்டை விட 0.26 விழுக்காடு குறைந்துள் ளது. 

இது மட்டுமின்றி, அரசின் நிதி பற்றாக்குறை 3 விழுக்காட்டிற்குள் இருக்க வேண்டும் என்கிற தமிழ்நாடு மாநில நிதி பொறுப்புடைமை சட்டம் மற்றும் வரவு-செலவு திட்ட மேலாண்மை சட்டம் 2003இல் கூறப்பட்டுள்ளதை எடப்பாடி அரசால் கடைபிடிக்க முடியவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. 

மாநிலத்தின் பற்றாக்குறையை அதிமுக அரசு,  அறவே நீக்க தவறியதன் விளைவாக  2016-21 ஆகிய ஐந்தாண்டு கால ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது. 

குறிப்பாக, 2019-2020 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2020-21ஆம் நிதி ஆண்டில் 56.17 விழுக்காடு அதிகரித்த நிதி பற்றாக்குறை ரூ.93,983 கோடியாக உயர்ந்துள்ளது. இதனால், தமிழக அரசு கடனுக்காக செலுத்தும் வட்டி யும் அதிகரித்துள்ளது. 18.32 விழுக்காடாக இருந்த வட்டி செலுத்தும் தொகை 20.97 விழுக்காடாக உயர்த்தியதும் அதிமுக ஆட்சியின் சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது. 

மேலும், தமிழகத்தில் அரசு சார்பில் வழங்கப் படும் மானியங்களுக்கான செலவு அதிகரித்துள்ளது. குறிப்பாக திருமண உதவி, மகப்பேறு உதவி, இலவச மடிக்கணினி, சீருடை போன்ற திட்டங்களு க்கு செலவிடப்படும் மானிய தொகை அதிகரித்து உள்ளதாகவும் 2019-20ஆம் ஆண்டில் 20 ஆயிரத்து 144 கோடியாக இருந்த இந்த தொகை 2020-21ஆம் ஆண்டில் 24.65 விழுக்காடு அதிகரித்து ரூ.25,110 கோடி யாக உயர்ந்துள்ளது.  

 கோவிட் பெருந்தொற்று காலத்தில் பொது முடக்கத்தை சமாளிக்க குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி கொடுக்க செலவிடப்பட்ட ரூ.7,903 கோடி மானி யத்திற்கு பதிலாக மானிய உதவி என தவறுதலாக வகைப்படுத்தப்பட்டுள்ளதையும் விரிவாக இடித்து ரைத்துள்ளது சிஏஜி.

அடுத்ததாக, உலக வங்கியின் 85 விழுக்காடு கடன் உதவியுடன் தமிழக பாசன வேளாண்மை நவீன மயமாக்கல், நீர்நிலைகள் மறு சீரமைப்பு என்ற புனர மைப்பு திட்டத்தில் அமராவதி நீர்த்தேக்கம், இராமநாத புரம் கால்வாய், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கங்களில் நடந்த பணிகளால் விவசாயிகளுக்கு  நிகழ்ந்த பாதிப்பு கள் குறித்து 60 பக்கங்களைக் கொண்ட அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. 

கரூர் மாவட்டம் அமராவதி நீர்த்தேக்கத்தில் நீர் கடத்தும் திறனை 20 விழுக்காடு அதிகரிப்பது என்று  ரூ. 75 கோடி செலவு செய்தும் இலக்கை பாதியளவுக்  கூட எட்ட முடியவில்லை. இதன் விளைவு பாசனத்தின் பரப்பு 50 விழுக்காடு வரைக்கும் குறைந்துள்ளது. 

புனர மைப்பு செய்த காலகட்டத்தில், தொடர்ந்து பெய்த  மழையால் தண்ணீர் அதிகமாக கிடைத்த போதிலும் பாசனத்திற்கு தண்ணீரை திறக்க தவறிவிட்டதும் அம்பலமாகியுள்ளது. அதே போன்று, கிருஷ்ணகிரி மாவட்டம் கெல வரப்பள்ளி அணை கட்டி முடிக்கப்பட்டு 25 ஆண்டுக ளைக் கடந்த பிறகும் நீர் விதிமுறைகள் வகுக்க வில்லை. 

இதனால், 222 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் தோண்டப்பட்ட கால்வாய்கள் நான்காண்டுகளாக பயன்படுத்த முடியவில்லை. இதற் காக செலவழிக்கப்பட்ட 2.5 கோடி ரூபாய் பணம் தண்ணீ ரோடு தண்ணீராக அடித்துச் சென்று விட்டது. ‌

மறுபுறத்தில், அமராவதி மற்றும் கெலவரப்பள்ளி அணைகளில் கலக்கப்படும் கழிவுநீரால் வேளாண் பணிகள் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பும் வெளியாகி இருக்கிறது. 

தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்க திட்டம் கீழிருந்து மேல் நோக்கி திட்டமிடல் என்ற  கருத்தின்படி வருடாந்திர திட்டங்கள் தயாரிக்கவில்லை என்பதும் கள அளவில் உள்ள நிலவரங்களுடன் திட்டங் கள் ஒருங்கிணைக்காமல் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள் ளதும் தணிக்கை துறை ஆய்வில் வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளது.

முறைகேடுகளின் மொத்த உருவம்!

மூன்றாவதாக, 111 பக்கங்களைக் கொண்ட சிஏஜி  அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழகம் மாண வர்களின் பட்டப் படிப்பு சான்றுகள், தரவரிசை சான்று கள், மதிப்பீட்டுத் தரம்-மதிப்பெண் தாள்கள் மற்றும் மதிப்பெண்கள் மதிப்பீட்டுத் தரம் ஆகிய சான்று களை நவீன முறையில் (டிஜிட்டல்) வழங்குவது என்று  முடிவு செய்தும் தேவையைப் பொறுத்து சான்று கள் அச்சடிக்காமல் அதிகமாக பிரதிகள் எடுத்ததால் ரூ.24.50 கோடி சான்றிதழ்கள் வீணாகிப் போனதையும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இலவச சீருடையில் பாரபட்சம்!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்க ளுக்கு, ஆண்டு தோறும் 4 சீருடைகள் இலவசமாக வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் 2021-22 ஆம் கல்வியாண்டில் 38.41 லட்சம் பேர் மதிய உணவு திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். 

2021 அக்டோபர் மற்றும் நவம்பரில் சென்னை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, வேலூர் ஆகிய 4 மாவட்டங்க ளிலுள்ள 1,425 அரசு உதவிபெறும் பள்ளிகளில் 214 மாதிரி பள்ளிகளில் சீருடைப் பயன்பாடு குறித்த தணிக்கை குழு ஆய்வு செய்துள்ளது. அப்போது, சென்னை மாநகராட்சியின் பெரும்பா லான பள்ளிகளில் அரசு வழங்கிய இலவச சீருடையை அணியாமல் வெவ்வேறு வண்ணங்களிலும் வடிவ மைப்பிலும் அணிந்துள்ளனர். 

ஒரு சில பள்ளிகளில் மட்டும் வாரத்தில் ஒரு நாள்  அல்லது முதல் மூன்று நாட்கள் இலவச சீருடை அணிந்து வந்ததும் மீதமுள்ள நாட்களில் பள்ளி நிர்வா கம் நிர்ணயித்த சீருடைகளையே அணிந்து வருவதும் தெரியவந்தது.

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரி யத்தின் நிதியை பயன்படுத்தி, அந்தத் தொழிலா ளர்கள் தங்குவதற்காக சென்னை அருகே தையூர் மற்றும் எழுச்சூரில் இடங்கள் சரியாக தேர்வு செய்யப் படவில்லை. இதனால் தொழிலாளர்கள் ஒருவரும் தங்கவில்லை. உதாரணத்திற்கு, கொரோனா பெருந்தொற்றால் கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டபோது அங்கு பணியாற்றிய 245 தொழிலாளர்கள் தையூரில் தற்காலிக மாக தங்க வைக்கப்பட்டனர். 

சந்தை மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து ஒருவரும் அங்கு தங்கவில்லை. எழுச்சூர் விடுதியில் 50க்கும் குறைவான தொழிலா ளர்களே தங்கி இருப்பதால் திட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் முடங்கிக் கிடக்கிறது.

 மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மின் பாடத் தொகுப்புகள் மற்றும் மின் கற்றல் முகப்பை (போர்டெல்) உருவாக்குவதற்கான ஒப்பந்த ஆவணங் கள் தயாரிப்பதில் ஏற்பட்ட குறைபாடுகள், ஒப்பந்த தாரரின் சேவைகளின் தரத்தை உறுதி செய்யாததால் ரூ.10.70 கோடிக்கு தேவையற்ற செலவும், ரூ.5.17 கோடியை திரும்ப செலுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.

முன்னுக்குப் பின் முரணாக...

மானாவாரி பகுதி மேம்பாடு என்பது பயிர்கள், தோட்டக்கலை, கால்நடை, மீன்பிடி, வனவியல் போன்றவை உள்ளடக்கியதாகும். 

ஆனால், மானா வாரி பதிலாக நீர்ப்பாசன நிலங்களில் இந்த திட்டம் முறையற்ற வகையில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. நன்செய் நிலம் இருந்தவர்களையும் மானாவாரி விவசா யம் செய்து வருவதாகவும் அரசு கணக்கு காட்டியி ருக்கிறது. 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளர்களால் கொள்முதல் நடைமுறை மீறப்பட்டதால் ரூ.3.22 கோடி தேவையில்லாத செலவு ஏற்பட்டது.

 காஞ்சிபுரம், பெரம்பலூர், திருப்பூர் அரசு மருத்துவ மனை தலைவர்களின் செயல்பாட்டினால் ‘எம்.ஆர்.ஐ. ஸ்கேனரை’ பொருத்துவதற்கான இடத்தை அடையா ளம் காண்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் நோயாளிக ளுக்கு சிகிச்சை கொடுப்பதில் ஏற்பட்ட பெரும் சிரமம்,  

மதுரையில் ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையத்தை உருவாக்க தவறியதால் 3 ஆண்டுக ளுக்கு மேலாக ரூ.2.27 கோடியில் கட்டப்பட்ட கட்டடம் பயன்படுத்த முடியாத நிலையிலும், ஓராண்டுகளு க்கு மேலாக ரூ.2.73 கோடி வங்கிக் கணக்கில் முடக்கப் பட்டது என முந்தைய அதிமுக ஆட்சியின் பல்வேறு பணிகளையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் புள்ளி விபரங்களுடன்  சட்டமன்றத்தின் பார்வைக்கு வைத்துள்ள இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கைகளின் பரிந்து ரைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தொகுப்பு: சி.ஸ்ரீராமுலு




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?