இரண்டாம் முறை,
தமிழ்நாட்டில் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சி தான் தி.மு.க.வின் திராவிட மாடல் என சில நாட்களுககு முன் விளக்கம் கொடுத்திருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இன்று திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவராக அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை பலரும் சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும், இத்தகைய வளர்ச்சி அவரது வாழ்க்கையில் அவ்வளவு எளிதாக அமைந்து விடவில்லை.
கலைஞர் கருணாநிதிக்கு இளைய மகனாய் பிறந்த மு.க.ஸ்டாலின், சிறு வயதில் இருந்தே பொது வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
1967ல் கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பினை தொடங்கிய ஸ்டாலின் பின்னர் திமுகவின் இளைஞரணி தலைவராக உருவெடுத்தார்.
1975-ம் ஆண்டில் மிசா சட்டத்தின் கீழ் சிறை சென்றது மு.க.ஸ்டாலினின் அரசியல் வாழ்வில் ஒரு திருப்புமுனை.
கட்சியில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி 75-வது வட்டத்தின் தி.மு.க. பகுதி பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின், ஒன்றிய செயலாளர், வட்டச் செயலாளர், மாவட்டச் செயலாளர், சென்னை மாநகராட்சி மேயர் என படிப்படியாய் உயர்ந்தார்.
இதுவரை 9 சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொண்ட மு.க.ஸ்டாலின் 7 முறை வெற்றிக்கனியை ருசித்துள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக அவரது பங்களிப்பு முக்கியமானது.
கலைஞர் கருணாநிதி உயிருடன் இருந்த வரையில் துணை முதலமைச்சராகவே பதவி வகித்தாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்படாமலேயே பணியாற்றினார்.
கருணாநிதி மறைவுக்குப் பிறகு கடந்த 2019-ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தி.மு.க.வில் 15-வது உட்கட்சித் தேர்தல் இன்று நடந்து முடிந்த நிலையில் மு.க.ஸ்டாலின் தலைவராக இரண்டாம் முறையாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
அவருக்கு எதிராக யாரும் வேட்புமனு அளிக்காத நிலையில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
73 ஆண்டுகால வரலாற்றை கொண்டுள்ள திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் தெரிவு செய்யப்பட்டதை லட்சக்கணக்கான தொண்டர்கள் கொண்டாடிக் கொண்டிருந்தாலும், அவர்களை வழிநடத்த வேண்டிய பெரும்பொறுப்பும், அவரது வழிகாட்டிகள் விட்டுச் சென்ற பணிகளை தொடர்வதே அவர் முன்னுள்ள சவால் என்கிறது அரசியல் களம்.
--------------------------------------------------------------------------
தமிழறியாதவரின் திருக்குறள் திருத்தம்.