பட்டினி தேசம்?
இலங்கை,நேபாளம், பாகிஸ்தானை
விட பின்தங்கிய இந்தியா!
உலக அளவிலான பட்டினி மற்றும் ஊட்டசத்து குறைபாடு பட்டியலில் இந்தியா, தனது அண்டை நாடுகளான நேபாளம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்காளதேஷை விட பின்தங்கிய நிலையில் காணப்படுவதாக 'குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ்' ( Global Hunger Index in 2022) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் இருக்கும் பட்டினி, ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றைக் கொண்டு, `உலக பட்டினிக் குறியீடு பட்டியல்' ஆண்டுதோறும் வெளியிடப்பட்டுவருகிறது.
* அயர்லாந்தைச் சேர்ந்த `கன்சர்ன் வேல்ர்ட்வைட்' அமைப்பும் (Concern Worldwide), ஜெர்மனியைச் சேர்ந்த `வெல்ட் ஹங்கர் ஹில்ஃப்' அமைப்பும் (Welt hunger hilfe) இணைந்து, 'குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ்' என்கிற தலைப்பில் உலக நாடுகளின் பட்டினி குறித்த ஓர் அறிக்கையைத் தொடர்ந்து வெளியிட்டுவருகின்றன.
* 5 வயதுக்குக்கீழ் இருக்கும் குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருப்பது,
* உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பது, 5 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளின் உயிரிழப்பு,
* ஒட்டுமொத்த ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுவருகிறது.
* இந்த நிலையில், 121 நாடுகள் அடங்கிய 2022 ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டியலில் இந்தியா 107-வது இடத்துக்கு சரிந்துள்ளது.
* அதே சமயம் இந்தியாவின் அண்டை நாடுகளான
நேபாளம் 81 ,
பாகிஸ்தான் 99,
இலங்கை 64
பங்காளதேஷ் 84 வது
இடங்களில் உள்ளது.
* கடந்த ஆண்டில் 101-வது இடத்தில் இந்தியா இருந்தது.
இந்த பட்டியலில் 121 வது இடத்தில், அதாவது மிக கடைசி இடத்தில் ஏமன் உள்ளது.
சீனா, துருக்கி, குவைத் உள்ளிட்ட 17 நாடுகள் இந்தப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.
இந்த நாடுகளின் பட்டினிக் குறியீடு 5-க்கும் குறைவாகவே இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* 19.3 சதவீத குழந்தைகள் வீணாகிறார்கள், 35.5 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர். இந்துத்துவா, ஹிந்தியை திணிப்பது, வெறுப்பை பரப்புவது ஆகியவை பசிக்கு மருந்தல்ல.
* உண்மையான பிரச்னைகளுக்கு பிரதமர் மோடி எப்போது தீர்வு காணப்போகிறார்?" என தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
சில மாநிலங்களில் தேர்தலை எதிர்கொள்ளப் போகிற பா.ஜ.க வுக்கு இது ஒரு பின்னடைவுதான்.