முத்துக்குளித்துறை
பழையதிருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சில பகுதிகளை பிரித்து அக்டோபர் 20, 1986 அன்று வ.உ. சிதம்பரனார் பெயரால் தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.சுவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் பல நூற்றாண்டுகளாகக்கடல் வழி வாணிபத்துக்கும் முத்துக் குளிப்புக்கும் சிறந்து விளங்குகிறது.
இதற்கு முத்துநகர் என சிறப்பு பெயரும் உண்டு.
தூத்துக்குடி எனும் பெயர் இந்நகருக்கு வந்ததற்கான வரலாற்றுக் குறிப்புகள் சில உள்ளன.
கி.மு.123இல் தாலமி என்ற கிரேக்கப் பயணி, தனது பயண நூலில் "சோஷிக் குரி"(சிறு குடி) சோதிக்குரை என்ற முத்துக்குளித்துரை நகரம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் சோதிக்குரை நகரம்தான், 'தூத்துக்குடி' என்று வரலாற்று அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்.
அகஸ்டஸ் சீசரின் பியூட்டிஸ்கர் அட்டவணை, ரோமானியரின் வர்த்தகம் நடைபெற்ற இடம் என்று தூத்துக்குடியைக் குறிப்பிடுகின்றது. "சோல்சியம் இண்டோரம்" என்ற பெயரில் குறிப்பிடப்படுவது தூத்துக்குடியாகும்.
கி.பி.80இல் ஒரு அறிமுகமற்ற அடுக்கியந்திரியின், கிரேக்கர்கள் எரித்திரிரேயன் கடல் பெரிப்லஸ், என்ற நூலில் 'தூத்துக்குடி' என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்க்கோ போலோ எனும் இத்தாலியப் பயணி, முத்துக்குளித்தல் மற்றும் இப்பகுதி மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
ஜேம்ஸ் கர்னல் மன்னார் வளைகுடாவில் முத்துக்குளித்துறையைப் பற்றி, சென்னை அரசாங்கத்திற்கு, தான் சமர்ப்பித்த அறிக்கையில், தோத்துக்குரையாக மாறி இறுதியில் 'தூத்துக்குடி' என்ற பெயர் பிறந்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.
தூத்துக்குடி என்ற பெயர், ஐரோப்பியர்களின் உச்சரிப்பில் மாற்றம் பெற்று, 'தூட்டிகொரின்' ("Tuticorin") என்று வந்துள்ளதென்று கால்டுவெல் கூறியுள்ளார்.
தூத்துக்குடி வரலாற்று ரீதியில், பரதவர் இன மக்கள் மீன் பிடித்தும், அதிகளவில் முத்துகுளித்தும் வந்தனர். இன்றளவும் இம்மக்கள், சங்கு குளிக்கும் தொழில் செய்கின்றனர்.இதை நாம், அகநானூறு 350 அதிகாரத்தில் காணலாம்.
சங்க காலத்தைச் சேர்ந்த வேள்விக்குடி சாசனத்திலும் தூத்துக்குடியைப் பற்றி குறிப்புகள் உள்ளது..
இரும்பு, செம்பு காலங்களைச் சேர்ந்த நாகரிகங்களை வளர்த்தெடுத்த ஆதிச்சநல்லூர், சிவகளை,கொற்கை போன்ற ஊர்கள்ளில் பண்டையகால மிச்சங்பள் கிடைக்கின்றது.
கி.பி.7ம் நூற்றாண்டு (ம) 9ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனின் அரசில் இங்கு துறைமுகம் நிறுவப்பட்டது.
இந்நகரம் கி.பி9ம் நூற்றாண்டு முதல் 12ம் நூற்றாண்டு வரை சோழ மன்னனின் அரசாட்சியின் கீழ் இருந்தது. முதலாவதாக தூத்துக்குடிக்கு கிபி1532ல் போர்ச்சுக்கீசியர்களும் அதனைத்தொடர்ந்து கி.பி1658ல் டச்சு நாட்டவரும் வந்தனர்.
கி.பி 1782ல்டச்சு நாட்டவரிடமிருந்து தூத்துக்குடி நகரத்தினை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி கிழக்கு இந்திய கம்பெனியினை நிறுவினார்கள்.
20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய தேசத்தின் விடுதலைக்காகவும் ஆங்கிலேயரின் கொடுமைக்கு எதிராகவும் போராடிய மாவீர்ர்கள் அதிகம்.
,மகாகவிபாரதி, வ.உ.சிதம்பரனார் போன்ற தலைவர்கள் பலர் இம்மாவட்டத்தில் பிறந்தவர்கள்.
வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் முதல் முதலாக கி.பி.1907ம் ஆண்டு சூன் 1ம்தேதி எஸ்.எஸ்.காலியா என்ற சுதேசி கப்பலை வெற்றிகரமாக இயக்கினார்.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்தொகை 237,830 ஆகும்.
பழமை வாய்ந்த சிறிய துறைமுகமாகிய இத்துறைமுகத்தின் கலங்கரை விளக்கு கடல் வாணிபத்திற்கு மிகவும் உதவி உள்ளது கி.பி.1864ம் ஆண்டு மரத்தினால் செய்யப்பட்ட சிறிய கப்பல்களில் வாணிபம் செய்யப்பட்டது. தற்போது இத்துறைமுகத்தின் வாயிலாக உப்பு,பருத்திநூல்,சென்னா இலைகள்,பனைப்பொருட்கள், நார், உலர்மீன்கள் மற்றும் உள்நாட்டு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.மேலும் இத்துறைமுகத்தின் வாயிலாக நிலக்கரி, கொப்பரைகள், பருப்புவகைகள் மற்றும் தானியவகைகளும் இறக்குமதி
செய்யப்படுகிறது.
இத்துறைமுகம் நாட்டின் 10வது பெரிய துறைமுகமாகும். இத்துறைமுகம் வருடத்திற்கு 1 மில்லியன் சரக்குகளைக்கையாள்கிறது என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
இத்துறைமுகநகரம் மன்னார்வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது.
. நகரின் தென்பகுதி செம்மண் நிறைந்த பகுதியாகவும் சிவந்த அடுக்குப்பாறைகளாகவும் அதன் துகள்களாகவும் அமைந்துள்ளது.வடப்புதி கரிசல் மண் பபுதி.
இந்நகரம் மிதமான தட்பவெப்ப நிலையைக்கொண்ட பகுதியாகும். சிறிய அளவிலான தீவுகளும் ஆபத்தான முனைகளையும் கொண்ட இவ்வளைகுடா பகுதி புயல் மழை போன்றவற்றிலிருந்து உள்நாட்டவரைப் பாதுகாக்கும் அரணாக அமைந்துள்ளது.
தூத்துக்குடி தென்னிந்தியாவிலேயே மிக வேகமாக வளரும் தொழிற்சாலை நகரமாக வளர்ந்து வருகிறது.
அதன் வரலாற்றில் ஒரு வேதனைதரும் பதிவாக நாசகார தாமிர ஆலையை அகற்றும் போராட்டத்தில் 14 உயிர்கள் பலியானது அமைந்து விட்டது.
இந்திய மீனவர்களைச் சுட்ட
இந்திய கடலோரக் காவற்படை.
நாகை மாவட்டம், கோடியக்கரை பகுதியில் நேற்று நள்ளிரவு மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்று முதலில் தெரியாமல் இருந்த நிலையில், தற்போது சுட்டது இந்திய கடற்படைதான் எனத் தெரியவந்துள்ளதால் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
எல்லைத் தாண்டி மீன்பிடிக்க வந்ததாகக்கூறி அவ்வப்போது தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதும், அவர்களை அடித்து உதைத்து படகுகளுடன் இலங்கைக்கு கொண்டு சென்று சிறையிலடைப்பதும் வாடிக்கையான நிகழ்வாகி விட்டது.
இவ்வாறு கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுபவர்களை விடுவிக்கக்கோரி தமிழக முதல்வர், பிரதமருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதுவதும், நீண்ட போராட்டங்களுக்குப் பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுவதும் தொடர்கதையாகவே நடந்து வருகிறது. மேலும் படகுகளையும் இலங்கையிடம் பறிகொடுக்கும் நிலை தொடர்கிறது. இதைத் தடுத்து நிறுத்த
* இலங்கை அரசிடம் இந்தியா கண்டிப்பு காட்ட வேண்டும் எனத் தமிழக அரசும், அரசியல் கட்சித்தலைவர்களும் வலியுறுத்தி வருகிறபோதிலும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நின்றபாடில்லை.
* கடந்த 20 ஆம் தேதியன்றுகூட புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள், நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லைத் தாண்டி மீன்பிடித்தாகக்கூறி அருள், ஐயப்பன், சுந்தரம் ஆகிய 3 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
இத்தகைய சூழ்நிலைகளுக்கு இடையேதான், காரைக்கால் மாவட்டம், அக்கரைப்பேட்டையிலிருந்து விசைப்படகில் தமிழகம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த பத்து மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக, கடந்த 15-ம் தேதி புறப்பட்டு சென்றனர்.
கோடியக்கரை பகுதியில் நேற்று நள்ளிரவு மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு படகில் வந்த மர்ம நபர்கள் சிலர் இவர்கள்மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்பட்டது.
இதில் மயிலாடுதுறை மாவட்டம், மானகிரி பகுதியைச் சேர்ந்த வீரவேல் (30) என்ற மீனவரின் இடது கால் மற்றும் வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்தது.
இதனையடுத்து இந்திய கடற்படையினர்தான், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தகவல்கள் பரவின. அதை இந்திய கடற்படை அதிகாரிகள் முதலில் மறுத்தனர். இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியது தாங்கள்தான் என இந்தியக் கடற்படை ஒப்புக்கொண்டு, சுட்டது ஏன் என்பது குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
சுட்டது ஏன் என விளக்கம்
அதில், " இந்தியா- இலங்கையை பிரிக்கும் பாக் ஜலசந்தி கடற்பரப்பில் சர்வதேச கடல் எல்லை கோட்டிற்கு அருகில் இந்திய கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமான வகையில் படகு ஒன்று காணப்பட்டது.
* பலமுறை எச்சரித்தும் படகு நிற்கவராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
* சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநா
------------தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
* சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.