உதய் திட்டம் என்றால்...?
தமிழக சட்டமன்றத்தில் தமிழகம் மிகை மின் மாநிலம் ஆக மாறிவிட்டது என்று அழுத்தம் திருத்தமாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதிக விலை கொடுத்து இந்த வார்த்தையை மெய்பிக்க முயற்சி எடுக்கின்றார்.
வெளியிலிருந்து 3300 மெகாவாட் மின்சாரம் அதிக விலை கொடுத்து தமிழக மின்வாரியம் வாங்கவில்லை என்றால் தமிழகமுதல்வர் வார்த்தை பொய்த்துபோகும் என்று அவருக்கும் தெரியும்.
இந்த நேரத்தில் சட்டமன்றத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி கூறிய வார்த்தைகளையும் இங்கே நினைவூட்டுவது அவசியமாகின்றது. மின்வாரியத்தின் கடன் இந்த அளவிற்கு போனது திமுக ஆட்சியில் போடப்பட்ட மின்சாரம் வாங்குவதற்கான 15 ஆண்டுகால ஒப்பந்தம் தான் என்றும் அது முடிவுக்கு வருகின்றது என்றும் குறிப்பிட்டார்.அது 1998 ஆம்ஆண்டுகளில் ஒப்பந்தம் போடப்பட்டு 2001 முதல் அமலாகிய ஏழு தனியார் மின்உற்பத்தி நிலையங்களிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்திட போடப்பட்ட ஒப்பந்தம் .
அது உண்மையாக இருந்தால் அந்த ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று அதிமுக ஆட்சியில் இருந்தபோது சட்டமன்றத்தில் ஜெயலலிதா நிதிநிலை பற்றியான வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டபடி ஏன் மறுபரிசீலனை செய்யவில்லை.
ஜெயலலிதா அரசு அவ்வாறு மறுபரிசீலனை செய்திருந்தால் இப்பொழுது மின்வாரியம் இந்த அளவிற்கு கடனில்சிக்கி தவிக்காது.
2001 முதல் 06 வரை ஆட்சியில் இருந்த அதிமுக மின்உற்பத்திக்காக எடுத்த நடவடிக்கை என்ன?எத்தனை மெகாவாட் மின்உற்பத்தியை கூடுதல்படுத்தியது?
ஒரு மெகாவாட் கூட கூடுதல் உற்பத்தி இல்லை என்பது தான் உண்மை.
சரி. இப்பொழுது 2011 முதல் 16 வரை ஆட்சியில் இருந்தபோது இருட்டிலிருந்த தமிழக மக்களை ஒளியேற்றிட 15 ஆண்டிற்குநீண்டகால ஒப்பந்தம் மூலம் மின்சாரம்வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதை முன்னாள் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் செய்தியாக வெளியிட்டுள்ளது அனைவருக்கும் தெரியும்.
நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.91 க்கு கொள்முதல் செய்யப்படுகின்றது என்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இது மின்இழப்பு மற்றும் மின்தொடர் மூலம் கொண்டுவரும்செலவு அனைத்தும் சேர்த்து ஒரு யூனிட் மின்சாரம் நமக்கு வந்து சேரும்போது ஏழு ரூபாய் அளவில் ஆகிவிடும்.
அதனால் தானே மின்வாரியம் தனது வருவாயில் 70 முதல் 80 சதவீத அளவினை மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு செலவிடுகின்றது.
தமிழக மின்சார வாரியத்தின் அனல் மின்நிலையங்கள் மொத்த நிறுவுதிறனான 4660 மெகாவாட் உள்ளதில் உற்பத்தி என்பது2400 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றது ஏன்?
அதே நேரத்தில் வெளியிலிருந்து மின்சாரம் வாங்குவது 1500 மெகாவாட்டாக உள்ளது.நம் மின்நிலையங்களின் மின்உற்பத்தி விலைஒரு யூனிட் ரூ.2.30 உள்ளபோது ஏன் வெளியிலிருந்து ஒரு யூனிட் மின்சாரம் அதிக விலையான ரூ.7 கொடுத்து வாங்கவேண்டும்.
இந்த நிலையில் தமிழக மின்வாரியத்தை கடனில் இருந்து மீட்க மத்திய அரசு உஜ்வல் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனா என்ற திட்டம் சுருக்கமாக உதய் திட்டத்தை கொண்டுவந்துள்ளது.
முதல்வரை எரிசக்திதுறை அமைச்சர் ப்யூஷகோயல் சந்தித்தார். உதய் திட்டம் ஏற்கப்பட்டால் தமிழக மின்வாரியம் கடனிலிருந்து மீட்கப்பட்டுவிடும் என்றார்.
உதய் திட்டம் என்றால் என்ன?
தமிழக மின்வாரியத்தை கடனில் இருந்து மீட்க மத்திய அரசு உஜ்வல் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனா என்ற திட்டம் சுருக்கமாக உதய் திட்டத்தை கொண்டுவந்துள்ளது.
இந்த உதய் திட்டம் குறித்து அப்போதைய மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தேர்தல் நேரத்தில் என்ன சொன்னார் என்பதை நினைவு கூறுவது அவசியமாகும்.
உதய் திட்டமானது மின்சார சீர்திருத்த நடவடிக்கையில் மக்களை ஏமாற்றும் திட்டமாகும். இதனால் மக்களுக்கு ஒன்றும் பயனில்லை. இத்திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்ததற்கு காரணம் உள்ளது. அந்நிய நாட்டு நிதி நிறுவனங்கள் கொடுத்த நிர்ப்பந்தமே உதய் திட்டம் ஆக வந்துள்ளது.
உண்மையில் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டுமென்றால் நிலக்கரிவிலையை குறைத்திட வேண்டும். நிலக்கரியினால் ஏற்படும் கரியமிலவாயு சரிசெய்யும் செஸ் தொகை ஒரு டன் நிலக்கரிக்கு ரூ.51.50 ஆக இருந்தது.
அதை தற்போதைய பாஜக அரசு ரூ.400 ஆக உயர்த்தியுள்ளது. உதய் திட்டம் ஏற்கப்பட்டால் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணத்தை உயர்த்திட
வேண்டும் என்றும் அத்தகைய மின்கட்டண உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும் என்றும் மேலும் தனியார் வங்கிகளிடம் கடன் வாங்குவதற்கான ஏற்பாடாகும் இந்த உதய் திட்டம் என்று எரிசக்திதுறை அமைச்சருக்கு சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் நத்தம் விஸ்வநாதன் பதிலளித்தார்.
வேண்டும் என்றும் அத்தகைய மின்கட்டண உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும் என்றும் மேலும் தனியார் வங்கிகளிடம் கடன் வாங்குவதற்கான ஏற்பாடாகும் இந்த உதய் திட்டம் என்று எரிசக்திதுறை அமைச்சருக்கு சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் நத்தம் விஸ்வநாதன் பதிலளித்தார்.
எரிசக்தி துறை அமைச்சருக்கு அளித்த பதில்சரியானது. இதை அன்று அதிமுக பொதுச்செயலாளர் ஏற்றுக்கொண்டார். இன்று மத்தியஎரிசக்தி துறை அமைச்சர்முதல்வரை சந்தித்து உதய் திட்டத்தை பற்றி விளக்கி பேசியவுடன் முதல்வர் உதய்திட்டத்தை பரிசீலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மின்துறை அமைச்சர் தங்கமணி உதய் திட்டமானது அனைத்து ஷரத்துக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். இந்த மூன்று மாதத்திற்கு ஒரு முறை மின்கட்டணஉயர்வு செய்யவேண்டும் என்பது மட்டும் தான் மத்திய அரசிடம் பேசவேண்டி உள்ளது என்றுதெரிவித்துள்ளார்.
பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பின்னால் நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதன் மூலம் அரசுக்கு ஏராளமான அளவில் லாபம் கிடைத்துள்ளது என்று அரசுத்தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் நிலக்கரி விலை உயர்ந்து விட்டது என்பதை பார்க்கவேண்டும்.
தற்போது உள்நாட்டு நிலக்கரிக்கு தமிழக மின்வாரியம் கொடுக்கும் விலை ஒரு டன்னுக்கு ரூ.2576 ஆகும். இதற்கு முன்னால் ஒரு டன்னுக்கு ரூ.500 மட்டுமே விலையாக கொடுக்கப்பட்டுள்ளது.
அப்படி என்றால் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய நிலக்கரிக்கு செலவிடும் தொகை ரூ.2.10 என்று கொள்ளலாம்.தமிழகத்தில் உள்ள வல்லூர் அனல் மின்நிலையம் தேசியஅனல் மின்கழகம் மற்றும் தமிழக மின்வாரியம் இணைந்து நடத்தும் மின்நிலையம்.அதன் வரவு செலவுக்கணக்கான ரூ.2756 கோடியில் 2014-15 ஆம் ஆண்டில் நிலக்கரிக்கு செலவிட்ட தொகை ரூ.1660 கோடி ரூபாயாகும்.
இதர செலவுகள் கடன் மற்றும் வட்டி அளித்தல் எல்லாம் போக 274 கோடி ரூபாய் நட்டம் உள்ளதாக கணக்கு உள்ளது.
இதிலிருந்து பார்க்கும்போது தேர்தல் நேரத்தில் அதிமுக மின்துறை அமைச்சர் பாஜகவிற்கு அளித்த பதிலில் உண்மையுள்ளது.அதற்குப்பின் உதய் திட்டத்தின் விதிகள் ஒன்றைத்தவிர வேறு எதுவும் மத்திய அரசால் மாற்றப்படவில்லை.
அதே நிலை தான் தொடர்கின்றது.புதியதாக சேர்க்கப்பட்ட ஷரத்து ஆனது உதய் திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்குள் மாநில அரசுகள் ஏற்கப்படவில்லை என்றால் மின்வாரியத்தின் கடனை மாநில அரசின் கடனாக மாற்றப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.உதய் திட்டம் தமிழக அரசால் ஏற்கப்படவில்லை என்றால் மின்வாரியத்தின் கடனான ஒரு லட்சம் கோடி ரூபாயை தமிழக அரசின் கடனாக மாற்றப்படும்.
மின்வாரியங்களை சீரமைப்பு என்ற சீர்திருத்த நடவடிக்கை எடுத்த காரணத்தினால் மின்வாரியங்கள் 4.3 லட்சம் கோடி ரூபாய் நட்டமடைந்து விட்டன என்பதை மறைக்கவே இந்த புதிய திட்டம்.இதற்கு முன் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 2.3 லட்சம் கோடி ரூபாய் நட்டமடைந்து விட்டு அதை சரிக்கட்ட மாநிலங்களுக்கு மீட்சி நிதி அளித்தது.
தற்போதைய மின்துறை அமைச்சர் இதை எல்லாம் கணக்கில் கொண்டு தான் உதய் திட்டம் தமிழகஅரசால் ஏற்கப்படுகிறது என்ற முடிவுக்கு வந்தார்களா?
இனிமேல் தமிழக மின்வாரியத்திற்கு மத்திய அரசினால் வழங்கப்படும் நிலக்கரி விலை குறைந்து விடுமா?
மின்வாரியம் கடனிலிருந்து மீட்கப்பட்டுவிடுமா?
இதற்கெல்லாம் ஜெயலலிதாவின் அரசு தான் பதில் கூறவேண்டும். -கே.விஜயன்.
நன்றி:தீக்கதிர்
இன்று,
ஆகஸ்டு-12.
- உலக இளைஞர்கள் தினம்
- சிகாகோ நகரம் அமைக்கப்பட்டது(1833)
- எக்கோ 1 என்ற முதலாவது தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது(1960)
- ஐசக் சிங்கர் தனது தையல் இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1851)
=====================================================================================