சின்ன வெங்காயம்,.
சின்ன வெங்காயம் என்று இருந்தாலும், பெரிய நோய்களை தீர்க்கும் அரிய மருத்துவ குணம் சின்ன வெங்காயத்தில் உள்ளது. 50க்கும் மேற்பட்ட நோய்களை போக்கும் சஞ்சீவியாக சின்ன வெங்காயம் பலன் தருகிறது.
வெங்காயத்துடன் வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில் விட்டால் காது இரைச்சல் மறையும்.
வெங்காய நெடி தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டால் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல்வைத்து கட்டினால், கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
வெங்காய சாற்றை மோரில் கலந்து குடித்தால், இருமல் குறையும். வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச்சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வந்தால் பல்வலி, ஈறுவலி குறையும்.
வெங்காயத்தை சமைத்து சாப்பாட்டில் சேர்த்துக்கொண்டால் உடல் வெப்பநிலை சமநிலை பெறும், மூலச்சூடு தணியும். வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டால், நரம்புத் தளர்ச்சி குணமாகும். வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டபின், பசும் பால் குடித்தால் ஆண்மை பெருகும்.
வெங்காயச் சாற்றையும், தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால், சீதபேதி நிற்கும். வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
வெங்காயத்தில் குறைந்த கொழுப்புச்சத்து உள்ளது.
எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயம் சாப்பிடலாம்.
வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்தசக்தியை மீட்கும்.
தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் 3 வேளை சாப்பிட்டால் நுரையீரல் சுத்தமாகும்.
வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலிக்கு, வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய்யை கலந்து தடவினால், வலி நீங்கும்.
நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடிகுடித்தால் மாலைக்கண் நோய் சரியாகும். வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட்டால் தொண்டை வலி குறையும்.
பாம்பு கடிக்கு, நிறைய வெங்காயம் தின்றால் விஷம் இறங்கும்.
வெங்காய சாற்றை தண்ணீரில் கலந்து பருகினால் சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
வெங்காயம், சோடா உப்பு இரண்டையும் சேர்த்து, அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவினால், நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.
வெங்காயச் சாற்றோடு சர்க்கரை கலந்து குடித்தால் மூலநோய் குணமாகும். சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது.
நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து, வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இருதுண்டாக நறுக்கி தேய்த்த்தால் முடி வளரும்.
காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு குடித்து வந்தால் வலிப்பு குறையும்.
வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் டி.பி.நோய் குறையும்.
வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் வாதநோய் குறையும்.
=================================================================================================
இன்று,
ஆகஸ்டு-14.
பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இன்று காலமானார்.
பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னையில் இன்று காலமானார்.
1975ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தவர் கவிஞர் நா.முத்துக்குமார்.இவரது தந்தையார் தமிழ் ஆசிரியர் .
புது நடையில் பாடல் எழுதி பிரபலமானவர். மிகச்சிறிய வயதில் இலக்கிய தரத்துடன் பாடல்களை எழுதும் திறன் கொண்ட நா.முத்துக்குமார் இசையை தாண்டி ரசிகர்கள் பாடல் வரிகளையும் நேசிப்பார்கள் என்பதை தனது வரிகளால் ஆணித்தனமாக, ஆழமான கருத்துக்களை வெளிப்படுத்தியவர்
தங்கமீன்கள் படத்தில் இடம்பெற்ற 'ஆனந்த யாழை மீட்டுகிறாள்..', சைவம் படத்தில் இடம்பெற்ற 'அழகே அழகே ..' பாடல் வரிகளுக்காக இரண்டு முறை தேசய விருதை வென்றுள்ளார். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது, ஃபிலிம் பேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை எழுதியுள்ளார். சுமார் 1,500 திரைப்பட பாடல்களை எழுதிய நா.முத்துக்குமார், கடந்த 2011ஆம் ஆண்டு 103 பாடல்கள் எழுதி திரையுலகில் புதிய சாதனையையும் படைத்திருக்கிறார்.
தமிழ் திரையுலகில் இயக்குனாராக அறிமுகமாக விரும்பிய நா.முத்துக்குமார், இயக்குனர் பாலு மகேந்திராவிடம் 4 ஆண்டுகளாக உதவி இயக்குனாராக பணியாற்றினார். பின்னர் 'வீர நடை' படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகாமகினார்.
பாடலாசிரியர் மட்டுமல்லாது 'கிரீடம்' படத்தில் வசனங்களை எழுதி வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார் .
வெங்காயத்துடன் வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில் விட்டால் காது இரைச்சல் மறையும்.
வெங்காய நெடி தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டால் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல்வைத்து கட்டினால், கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
வெங்காய சாற்றை மோரில் கலந்து குடித்தால், இருமல் குறையும். வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச்சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வந்தால் பல்வலி, ஈறுவலி குறையும்.
வெங்காயச் சாற்றையும், தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால், சீதபேதி நிற்கும். வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
வெங்காயத்தில் குறைந்த கொழுப்புச்சத்து உள்ளது.
எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயம் சாப்பிடலாம்.
வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்தசக்தியை மீட்கும்.
தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் 3 வேளை சாப்பிட்டால் நுரையீரல் சுத்தமாகும்.
வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலிக்கு, வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய்யை கலந்து தடவினால், வலி நீங்கும்.
நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடிகுடித்தால் மாலைக்கண் நோய் சரியாகும். வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட்டால் தொண்டை வலி குறையும்.
பாம்பு கடிக்கு, நிறைய வெங்காயம் தின்றால் விஷம் இறங்கும்.
வெங்காய சாற்றை தண்ணீரில் கலந்து பருகினால் சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
வெங்காயம், சோடா உப்பு இரண்டையும் சேர்த்து, அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவினால், நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.
வெங்காயச் சாற்றோடு சர்க்கரை கலந்து குடித்தால் மூலநோய் குணமாகும். சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது.
நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து, வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இருதுண்டாக நறுக்கி தேய்த்த்தால் முடி வளரும்.
காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு குடித்து வந்தால் வலிப்பு குறையும்.
வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் டி.பி.நோய் குறையும்.
வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் வாதநோய் குறையும்.
=================================================================================================
இன்று,
ஆகஸ்டு-14.
- பாகிஸ்தான் விடுதலை தினம்(1947)
- காங்கோ விடுதலை தினம்(1960)
- பராகுவே கொடி நாள்
- பசிபிக் போர் முடிவுக்கு வந்தது(1945)
- இஸ்ரேல்-லெபனான் போர் முடிவுக்கு வந்தது(2006)