ரத்தவட்டு அணுக்கள்...




 ரத்தவட்டு அணுக்கள் அதாவது சிகப்பு அணுக்கள் குறைப்பாட்டை போக்கும் மருத்துவ முறை குறித்து பார்க்கலாம். 

அதிகமான மாதவிலக்கு, அதிகளவில் மருந்து சாப்பிடுதல், சிக்கன் குன்யா, டெங்கு போன்றவற்றால் ரத்தவட்டு அணுக்கள் குறைபாடு ஏற்படுகிறது. 

இதனால் ரத்தம் உறையும் தன்மை குறையும். ரத்தவட்டு அணுக்கள் குறைபாடு உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.    

பப்பாளி இலையை பயன்படுத்தி ரத்தவட்டு அணுக்கள் குறைபாட்டை போக்கும் மருந்து தயாரிக்கலாம். 


தேவையான பொருட்கள்: பப்பாளி இலை, சீரகம், தேன். பப்பாளி இலை சாறு 2 ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் சீரகம் சேர்க்கவும். 
ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டி தேன் சேர்த்து காலை, மாலை வேளைகளில் குடித்து வந்தால், ரத்தவட்டு அணுக்கள் குறைபாடு நீங்கும்.

ரத்தத்தில் உள்ள பிரச்னைகள் தீரும். இஞ்சி, மஞ்சளை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். 

ஒரு ஸ்பூன் இஞ்சி, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து சாப்பிடவும். 

இதேபோல் ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து சாப்பிடவும். ஒரு நாள்  இஞ்சி, தேன் கலவை, மறுநாள் மஞ்சள் தேன் சேர்ந்த கலவை சாப்பிடவும். 

48 நாட்கள் தொடர்ந்து எடுத்துவர ரத்தவட்டு அணுக்கள் அதிகரிக்கும்.

நெல்லி வற்றல், வெந்தயத்தை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். 
ஒரு ஸ்பூன் அளவுக்கு நெல்லி வற்றல், வெந்தயம், உலர்ந்த திராட்சை ஆகியவற்றை சம அளவு எடுத்து ஊறவைத்து கொதிக்க வைக்கவும். 

இதை வடிகட்டி காலை, மாலை உணவுக்கு பின் 50 முதல் 100 மில்லி வரை குடித்துவர ரத்த வட்டு அணுக்கள் குறைபாடு நீங்கும்.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நிலவேம்பு குடிநீர் சூரணம் வாங்கி தேனீராக்கி குடித்துவரலாம் அதன் மூலமும்  ரத்தவட்டு அணுக்கள் அதிகரிக்கும். 


நில வேம்பு மிகுந்த கசப்பு தன்மை உடையது. பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை அழிக்க கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி உடையது.  

இதேபோல் இம்பூரல் லேகியத்தை காலை, மாலை வேளைகளில் நெல்லி அளவு சாப்பிட ரத்தவட்டு அணுக்கள் அதிகரிக்கும். 

உடல் சோர்வை போக்கிட கறிவேப்பிலையுடன் வெந்தயப் பொடி சேர்த்து தேனீராக்கி தினமும் குடித்துவர உடல் சோர்வு நீக்கி புத்துணர்வு ஏற்படும்.
======================================================================================
இன்று,
ஆகஸ்டு-18.

  • தாய்லாந்து தேசிய அறிவியல் தினம்
  • லாத்வியாவின் ரீகா நகரம் அமைக்கப்பட்டது(1201)
  • செவ்வாய் கோளின் ஃபோபோஸ் கண்டுபிடிக்கப்பட்டது(1877)
  • இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்த தினம்(1945)
======================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?