வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

வலிக்கு அதுவே தலை.

நமக்கு அல்லது சிலருக்கு அடிக்கடி வருகிற தலைவலி  மண்டையைப் பிளந்தாலும் உண்மையில் அது தலை சம்பந்தப்பட்டது அல்ல. 
வயிற்றில் அமில சுரப்பு, மலச்சிக்கல், போதுமான தண்ணீர் குடிக்காதது, அதிக கோபம் ,மனஉளைச்சல் என தலைவலிக்கு பல  காரணங்களாக இருக்கிறது . 
தலைவலிக்கான சரியான காரணத்தை கண்டறிந்து சரி செய்யாமல்  தலைவலி ,ஒற்றைத் தலைவலி (மைக்ரேன்) என்று தலை வலிக்க ஆரம்பித்தவுடனே மருத்துவரைப் பார்த்து விடுவதும் ,அவர் நமமை பார்த்து பயப்படுத்தியதால்  எக்ஸ் - ரே, ஸ்கேன் என்று எடுப்பது வீண்.

தேவையற்ற செலவும் கூட .
மனதை அமைதியாக்கிக்கொள்வதன் மூலமாகவோ ,இருக்கும் மலசிக்கலை போக்குவதும் மூலமாகவோ ,அடிக்கடி தண்ணீர் அருந்தாதவர்கள் தண்ணீரை அதிகமாக அருந்திப் பார்ப்பதன் மூலமோ இந்த தலைவலியை முடிவுக்கு கொண்டு வரலாம்.
அப்படியும் தலைவலி தலையை பிளந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி   எக்ஸ் - ரே, ஸ்கேன் எடுத்துப்பார்த்து சிகிசை மேற்கொள்ளலாம்.
முட்டை சாப்பிட்டால் உடம்பில் புரதசத்து கூடும்.உடலுக்கு வலிமை என்று பலர் முட்டை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.புரதம் என்ற நல்ல கொழுப்பு தாவர உணவிலேயே கிடைக்கிறது.அதுவே நம் உடலுக்கு போதுமானது மட்டுமல்ல பாதுகாப்புமானது.தேங்காய், நிலக்கடலை, பாதாம் இவற்றில் உள்ள நல்ல கொழுப்பு, ஹார்மோன் உற்பத்திக்கு தேவை. ஆனால் அசைவ உணவு, முட்டை, பால் இவற்றில் கெட்ட கொழுப்பு அதிகம். 
நம் உடலில் கல்லீரல் மட்டுமே கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது. 
எந்த தாவரத்திலும் கல்லீரல் கிடையாது. 
அதனால் தாராளமாக தாவர உணவு சாப்பிடலாம்.
புரத சத்து வேண்டும் என்பதற்காக முட்டை சாப்பிடுகிறோம். 

ஆனால், முட்டையை உற்பத்தி செய்யும் கோழி, விதைகளையும், கொட்டைகளையும், சிறுதானியங்களையும் சாப்பிடுகிறது.  அவற்றை நாமே   நேரடியாக சாப்பிட்டு விட லாமே!
முட்டையில் அவற்றில் உள்ள சத்துக்கள்தானே இருக்கிறது.?
========================================================================================
இன்று,
ஆகஸ்டு-05.


பிரடெரிக் ஏங்கல்ஸ் நினைவு தினம் ( 1895)

சர்வதேச நண்பர்கள் தினம்


  • புர்கினா பாசோ விடுதலை தினம்(1960)


  • சுதந்திர தேவி சிலைக்கான அடிக்கல் நியூயார்க் துறைமுகத்தில் பெட்லோ தீவில் நாட்டப்பட்டது(1884)


  • தென்னாப்பிரிக்க கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா, 17 மாத தேடுதலுக்கு பின் கைது செய்யப்பட்டார்(1962)
பிரடெரிக் ஏங்கல்ஸ்
========================================================================================
கபாலி படத்தில் மிஸ்டர் பீன் நடித்திருந்தால் டீசர் எப்படி இருந்திருக்கும் பார்க்க <- அழுத்துங்கள்.