ஞாநி சங்கரன்,
பிரபல எழுத்தாளர் ஞாநி சங்கரன் உடல் நல குறைவால் காலமானார்.
சிறந்த எழுத்தாளர் ஞாநி சங்கரன். பத்திரிகையாளர், நாடகஆசிரியர் , என பன்முகதன்மை கொண்டவாராக திகழ்ந்தார்.முரசொலி,இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற நாளிதழ்களில் பணியாற்றியுள்ளார்.தினமணி நாளிதழ் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
ஆனந்த விகடனின் ஜூயூனியர் போஸ்ட்,சுட்டி விகடன்,தினமலர் பட்டம்,போன்றவை இவரது தயாரிப்புகள்தான்.
அலைகள்,தீம்தரிகிட போன்ற இதழ்களையும் நடத்தியுள்ளார்.
இவரின் பரிட்ஷா நாடகக்குழுவின் "பலூன்"நாடகம் மிகப் பரபரப்பான அதிர்வலைகளை உண்டாக்கியது.இடதுசாரி,பகுத்தறிவு சார்ந்தே இவரது எண்ணங்கள் வடிவுறும்.
“கமல் அரசியலுக்கு வரும் வாய்ப்பே அதிகம்” என்று 35 வருடங்களுக்கு முன்பே கணித்திருக்கிறார். எழுத்தாளர் ஞாநி.
அவர் எழுதியிருக்கும் முகநூல் பதிவு:
“கமல் அரசியலுக்கு வரக் கூடும் என்பது 35 வருடங்கள் முன்னர் தீம்தரிகிட இதழுக்கு நான் அவரிடம் பேட்டி எடுத்தபோதே தோன்றியது.
சில வாரமாக "ஓபக்கங்கள்" என்ற யூடியுப் சானலை ஆரம்பித்து நாட்டு நிகழ்வுகளை நேரடியாக விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீம்தரிகிட இனைய இதழையும் நடத்தி வந்தார்.
கண்கள்,மீசை மட்டும் உள்ள பாரதி சின்னம் இவரே வரைந்தது.மிகவும் பிரபல்யம் .
சில மாதமாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த ஞாநி க்கு திடீர் முச்சுத்திணறல் ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று (15.01.2018)அதிகாலை காலமானார்.
அவருக்கு வயது 63 தான் ஆகிறது .
அவரது உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக கே.கே. நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. பின்னர் அவரது உடல் மருத்துவ கல்லுாரிக்கு தானமாக வழங்கப்பட உள்ளது.
சிறந்த எழுத்தாளர் ஞாநி சங்கரன். பத்திரிகையாளர், நாடகஆசிரியர் , என பன்முகதன்மை கொண்டவாராக திகழ்ந்தார்.முரசொலி,இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற நாளிதழ்களில் பணியாற்றியுள்ளார்.தினமணி நாளிதழ் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
ஆனந்த விகடனின் ஜூயூனியர் போஸ்ட்,சுட்டி விகடன்,தினமலர் பட்டம்,போன்றவை இவரது தயாரிப்புகள்தான்.
அலைகள்,தீம்தரிகிட போன்ற இதழ்களையும் நடத்தியுள்ளார்.
இவரின் பரிட்ஷா நாடகக்குழுவின் "பலூன்"நாடகம் மிகப் பரபரப்பான அதிர்வலைகளை உண்டாக்கியது.இடதுசாரி,பகுத்தறிவு சார்ந்தே இவரது எண்ணங்கள் வடிவுறும்.
“கமல் அரசியலுக்கு வரும் வாய்ப்பே அதிகம்” என்று 35 வருடங்களுக்கு முன்பே கணித்திருக்கிறார். எழுத்தாளர் ஞாநி.
அவர் எழுதியிருக்கும் முகநூல் பதிவு:
“கமல் அரசியலுக்கு வரக் கூடும் என்பது 35 வருடங்கள் முன்னர் தீம்தரிகிட இதழுக்கு நான் அவரிடம் பேட்டி எடுத்தபோதே தோன்றியது.
( அந்த பேட்டி அன்னம் வெளியிட்டுள்ள என் கேள்விகள் தொகுப்பில் உள்ளது.) கமலுடன்பேசிய ஒரு மேடையில் நான் கமல் அரசியலுக்கு வரப் போவதில்லை என்று இப்போது சொன்னாலும் பின்னால் வரும் வாய்ப்பு உள்ளது என்று 30 வருடங்கள் முன்னரே சொல்லியிருக்கிறேன்.
அண்மையில் 6 மாதங்கள் முன்னர் கூட ரஜினியை விட கமல் அரசியலுக்கு வரும் வாய்ப்பே அதிகம் என்று புதிய தலைமுறை டிவி விவாதத்தில் சொன்னேன்.
இப்போதும் அவர் வராமல் போகலாம்.
எனினும் வரும் வாய்ப்பும் தேவையும் இருப்பதாகவே இன்னமும் தோன்றுகிறது!”
இவரது "ஓ "பக்கங்கள் எல்லா வகை நாட்டு நடப்புகளையும் அலசி எழுதப்பட்டவை.சிலரைப்போல் இவரது கட்டுரைகளில் பக்கச்சார்பு இல்லாமல் நடுநிலையுடன் எழுதப்படுவது ஞாநி யின் நம்பகத்தன்மையை அதிகரித்ததது.பலர் அவர் கட்டுரையை படித்து தெளிவு பெற வைத்தது.சில வாரமாக "ஓபக்கங்கள்" என்ற யூடியுப் சானலை ஆரம்பித்து நாட்டு நிகழ்வுகளை நேரடியாக விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீம்தரிகிட இனைய இதழையும் நடத்தி வந்தார்.
கண்கள்,மீசை மட்டும் உள்ள பாரதி சின்னம் இவரே வரைந்தது.மிகவும் பிரபல்யம் .
சில மாதமாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த ஞாநி க்கு திடீர் முச்சுத்திணறல் ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று (15.01.2018)அதிகாலை காலமானார்.
அவருக்கு வயது 63 தான் ஆகிறது .
அவரது உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக கே.கே. நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. பின்னர் அவரது உடல் மருத்துவ கல்லுாரிக்கு தானமாக வழங்கப்பட உள்ளது.
உங்களுடன் ஒரு நிமிடம்....
என்னதான் புரட்சிக் கவிஞன் பாரதியைத் துணைக்கு வைத்துக்கொண்டாலும் தமிழில் தொடர்ந்து நல்ல கருத்துக்களை, அனுபவங்களை, நான் படித்த புத்தகங்களை, பார்த்த படங்களை மற்றும் இந்த சூரியனுக்கு கீழே இருக்கும் எல்லா விஷயங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் உள்ள சிரமங்களை நினைத்தால், சற்று தயக்கமாகவே உள்ளது.
ஏன்? சொல்கிறேன். நடிகனுக்கு கைத்தட்டல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஒரு படைப்பாளிக்கு வரும் விமரிசனங்கள். என்னவோ எழுதுகிறான் பொழுது போகாமல், எதோ படித்துவிட்டு போவோம் அப்பால் என நினைக்காமல் சில நிமிடங்களை ஒதுக்கி எனக்கு நீங்கள் தரப்போகும் Horlicks தான் உங்களுடைய விமரிசனங்கள்.
ஏதேனும் நல்ல, சுவையான விஷயங்கள் எங்கேயிருந்தாலும் தேடிப்பிடித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என் ஒரு எண்ணம், இந்த விஷயத்தில் நீங்களும் எனக்கு உதவலாம்.
பாரதி, நீயே துணை. ஜெய்ஹிந்த்! "தீம்தரிகிட"வில் ஞாநி

கடைசி முகநூல் இடுகை.?
துக்ளக் ஆண்டு விழா வீடியோ கொஞ்ச நேரம் பார்த்தேன். குருமூர்த்தி பகிரங்கமாக பி.ஜே.பி நிலை எடுக்கிறார். சோ இவ்வளவு பகிரங்கமாக செய்ய மாட்டார். பி.ஜே.பியையும் லேசாக கிண்டல் செய்வார். குருமூர்த்தி முழுக்க முழுக்க பி.ஜே.பி சங்கப் பரிவாரத்தின் குரலாகவே ஒலிக்கிறார். இப்படி வெளிப்படையாக இருப்பது வரவேற்கத் தக்கது. முழுக்க அம்பலமானால்தான் மக்களுக்குப் புரியும்.
=========================================================================================
இன்று,
ஜனவரி-15.- இந்திய ராணுவ தினம்
- பிரிட்டன் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது(1759)
- ஜேம்ஸ் நெய்ஸ்மித், கூடைப்பந்து விளையாட்டு விதிகளை உருவாக்கினார்(1892)
- விக்கிப்பீடியா துவங்கப்பட்டது(2001)
- மொபைலில் எஸ்.எம்.எஸ்., அனுப்புவதற்கான சாஃப்ட்வேர் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது(2005)
விழி உறங்காமல் எந்நேரமும் நாட்டின் எல்லையில் எதிரிகளை எதிர்த்து நாட்டையும், மக்களையும் காக்கும் உயரிய பணியை செய்பவர்கள் தான் ராணுவ வீரர்கள்.
உயரமான மலைகள், பனி படர்ந்த குன்றுகள், நடுங்க வைக்கும் குளிர், மழை, சுட்டெரிக்கும் வெயில், என பல இன்னல்களுக்கும் மத்தியில் புன்னகையுடன் போர் முனையில் பணியாற்றும் தேசத்தின் உண்மையான ஹீரோக்கள். எதிரிகளிடமிருந்து நாட்டையும், மக்களையும் காப்பாற்றுவதோடு, இயற்கை சீற்றம், தேசிய பேரிடர், உள்நாட்டு கலவரம் உள்ளிட்ட நிகழ்வுகளின் போது மீட்பு மற்றும் அமைதி பணிகளிலும் ராணுவம் ஈடுபடுகிறது.
ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது, ராணுவ தலைமை பொறுப்பை அவர்கள் தான் கவனித்தனர். சுதந்திரம் பெற்ற பின்பும் இது தொடர்ந்தது. இந்நிலையில் 1948 ஜன., 15ல், ராணுவ தலைமை தளபதி பொறுப்பை, ஆங்கிலேயர் ராய் பட்சரிடம் இருந்து, இந்தியாவின் 'கரியப்பா' ஏற்றார். இந்த வரலாற்று நிகழ்வை கவுரவிக்கும் விதமாகவும், நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், ஜன., 15ம் தேதி, இந்திய ராணுவ தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்திய ராணுவம் உலகின் இரண்டாவது பெரியது. தலைமையகம் டில்லி. முப்படைகளின் தலைவர் ஜனாதிபதி. தற்போதைய ராணுவ தலைமை தளபதியாக பிபின் ராவத் பதவி வகிக்கிறார். ராணுவத்துக்கான கட்டளையை, பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக் குழு மற்றும் ராணுவ அமைச்சகம் வெளியிடுகிறது.

இந்திய ராணுவத்தில் தரைப்படை, கப்பல்படை, விமானப்படை, கடலோர காவல்படை, துணை ராணுவப்படை என ஐந்து படைப்பிரிவுகள் உள்ளன. தற்போது ராணுவத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பணியாற்றுகின்றனர்.
பல விஷயங்களில் கவனம் செலுத்தும் மக்கள், ராணுவ வீரர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க தயங்கக்கூடாது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு, மரியாதை மற்றும் சிறப்பு வசதிகள் வழங்கப்பட வேண்டும். ராணுவத்தில் சேர்வதற்கான ஆர்வத்தை, பள்ளி மாணவர்களிடம் இருந்து ஏற்படுத்த வேண்டும்.