நெஞ்சுக்கு நீதியா?

தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டங்களில் சென்னைஉயர்நீதிமன்றத்தின் ஒருதலைபட்சமான அணுகுமுறையால் உழைப்புச் சுரண்டலும், உரிமைகள் பறிப்புகளும் தடையில்லாமல் வேகமெடுக்கும் நிலை உருவாகும்.

தமிழகத்தில் நிறுவனப்படுத்தப்பட்ட தொழில்களிலும், நிறுவனப்படுத்தப்படாத முறைசாரா தொழில்களிலும் 4 கோடிக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். 


தமிழகத்தின் தொழில் வளர்ச்சியிலும், பொருளாதார முன்னேற்றத்திலும், அந்நிய செலாவணி ஈட்டுவதிலும் தொழிலாளர்களின் உழைப்பு பெரும் பங்களிப்பை செலுத்துகிறது.நாடு விடுதலை அடைவதற்கு முன்பும், பின்பும் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் மீதான உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக நடைபெற்ற எண்ணற்ற போராட்டங்களின் விளைவாக தொழிற்சங்க சட்டம், தொழிற்தகராறு சட்டம், சம்பளப்பட்டுவாடா சட்டம், ஒப்பந்த முறை ஒழிப்புச் சட்டம் என 40க்கும் மேற்பட்ட சட்டங்கள் உருவாக்கப்பட்டு தொழிலாளர் பணிநிலைமை, வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் நடைமுறைப்படுத்துவதில் முன்மாதிரி முதலாளியாக இருக்க வேண்டிய மத்திய - மாநில அரசுகள், தங்களுடைய நிறுவனங்களில் கூடதொழிலாளர் சட்டங்களை அப்பட்டமாக மீறுகின்றன. தென்னிந்தியாவில் துவக்கப்பட்ட முதல் தொழிற்சங்கமான மெட்ராஸ் லேபர் யூனியன் அன்றைய ஆங்கிலேய அரசை எதிர்த்து போராடியபோது, ஆங்கிலேய நீதிமன்றமும்,ஆங்கிலேய நீதிபதிகளும் தொழிற்சங்க தலைவர்களுக்கு தண்டனை விதித்ததும், அதை எதிர்கொண்ட வரலாறும் தமிழகத் தொழிலாளி வர்க்கத்திற்கு உண்டு என்பதை இன்றைய ஆட்சியாளர்களுக்கு தெரியவாய்ப்பில்லை.

தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றாமல் பொறுப்பற்ற முறையில் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இணைந்துநிற்பதின் விளைவாகவே தொழிலாளர்கள் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். 


அதன்பிறகும் தொழிலாளர் பிரச்சனைகளில் ஆக்கப்பூர்வமான தீர்வுக்கு முன்வராத போதே வேலைநிறுத்தம் என்ற நிலையை எடுக்க வேண்டிய சூழல்ஏற்படுகிறது. அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இல்லாத அக்கறை தொழிற்சங்கங்களுக்கு உண்டு என்பதாலேயே சட்டப்படியான வேலைநிறுத்தஅறிவிப்பை நிர்வாகத்துக்கும்,அரசுக்கும் தெரிவிக்கின்றன. 

அதையும் பொருட்படுத்தாமல் அரசு இயந்திரம், காவல்துறையை வைத்து போராட்டத்தை ஒடுக்கி, தொழிலாளர்களை நசுக்கிவிடவே ஆட்சியாளர்கள் முனைப்புக்காட்டுகின்றனர்.
நிராயுதபாணியான தொழிலாளி வேலைநிறுத்த ஆயுதத்தை தானாக விரும்பி எடுப்பதில்லை. நிர்வாக திறமையற்ற அரசும், அதை வழிநடத்தும் ஆட்சியாளர்களும் தான் தொழிலாளர்களை போராட்டக் களத்தில் தள்ளிவிடுகிறார்கள்.

தொழில் உறவில் ஏற்படும் தாவாக்களில் தொழிலாளர் துறையின் தலையீடும், சமரச முயற்சிகளும் தொழிலாளர் மத்தியில் இருந்த நம்பிக்கை படிப்படியாக குறைந்து வருகின்றன. 
முதலாளிகளின், சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியிடை நீக்கம், பணிநீக்கம், சம்பளப் பிடித்தம், ஊர்மாற்றம் என பல்வேறு விதமான பழிவாங்கல்களுக்கு ஆளாகியுள்ளனர். 

இவர்கள் செய்த ஒரே தவறுதொழிற்சங்கம் அமைத்தது தான். இந்திய அரசியலமைப்பு உறுதி செய்திருக்கூடிய உரிமையைக் கூடஅனுமதிக்க முடியாது என ஆணவத்தோடு செயல்படும் முதலாளிகள் மீது தொழிலாளர் துறையும், நீதிமன்றமும் பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதே நேரத்தில் தொழிற்சாலைக்கு முன்பு போராட்டங்கள் நடத்த தடைவிதிக்கும்படி முதலாளிகள் நீதிமன்றத்தை நாடினால் உடனடியாக தடை உத்தரவு வழங்கப்படுகிறது. ஆனால் தொழிலாளர் வழக்குகளில் இந்த ஆர்வத்தையும், அவசரத்தையும் காட்டுவதில்லை. 

ஏன் தான் வழக்கு தொடுத்தோம்? என்று விரக்தியின் விளிம்புக்கு தொழிலாளி செல்லும் அளவுக்கு வாய்தாக்களில் ஆண்டுகள் பல உருண்டோடி விடும்.
கடந்த ஆண்டில் அரசு ஊழியர் - ஆசிரியர், செவிலியர், போக்குவரத்து என பல்வேறு தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தப்போராட்டங்களில் நீதிமன்றங்களின் அணுகுமுறை ஒருதலைபட்சமாகவே இருந்துள்ளது. 

சமூகவிரோதிகளை போல தொழிலாளர்களின் மீதான பார்வையை செலுத்தியது.சட்டத்திற்கு அப்பால் நீதிபதிகள் அதிலும் தங்களது சொந்தக் கருத்தைதிணித்து, சம்பளம் போதவில்லையென்றால் வேலைவிட்டு செல்ல வேண்டியது தானே, இந்த சம்பளத்தை ஏற்றுத்தானே வேலைக்கு சேர்ந்தாய் என்று சிறுமைப்படுத்தியது ஆதிக்க மனோபாவத்தை வெளிப்படுத்தியது. 

வேலைநிறுத்தத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை என்ன? 
ஏன் இந்தநிலைக்கு தொழிலாளர்கள் சென்றார்கள்? 
இவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டியவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? இப்படியான வினாக்களை தொடுத்து அரசு தரப்பில் பதில் வந்து, அதற்கு தொழிலாளர் தரப்பின் பதிலுரைக்கு வாய்ப்பு தந்து நியாயத்தின் அடிப்படையில் நீதி வழங்குவதே நீதிமன்றத்திற்கு பெருமைசேர்க்கும்.

மாறாக பொதுநல வழக்குஎன்ற பெயரில் பிரச்சனை என்னவென்று தெரியாதவர்களின் வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொண்டு உத்தரவுகள் பிறப்பிப்பது கருத்தாலும், கரத்தாலும் உழைக்கக்கூடிய கோடிக்கணக்கான மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். 

இந்த வழக்குகளில் நீதிமன்றம் பொது மக்களின் பாதிப்பை கணக்கில் கொள்வதாகக் கூறுகின்றன. தொழிலாளர்கள் பொதுமக்களின் ஒரு பகுதியினர் என்பதை ஏனோ கவனிக்க மறுக்கின்றன. ஆண்டான்-அடிமைத்தனத்திலிருந்து நாடும், நாட்டு மக்களும் மீண்டு மக்களாட்சியில் 70 ஆண்டுகள் கடந்தும் அரசின் உயர் பொறுப்பில் உள்ள சிலரின் சிந்தனையில் மாற்றம்ஏற்படவில்லை என்பதே கவலைக்குரியது.

பொதுமக்களுக்கு இடையூறு, பொதுமக்கள் பாதிப்பு என மக்கள் மீதுகரிசனம் காட்டும் நீதிமன்றங்கள், உழைப்புக்கேற்ற கூலி , சட்டப்படியான உரிமைகள் மறுக்கப்படுவதில் அரசு மீதும், முதலாளிகள் மீதும் கோபத்தை காட்ட மறுப்பது ஏன்?

போராட்டங்களும், கிளர்ச்சிகளும் அடிமை இந்தியாவை விடுதலை பெற வைத்தது என்ற வரலாற்றுப் பதிவுகள் நீதிபரிபாலனத்தில் உள்ளவர்கள் கவனப்படுத்திக்கொள்ள வேண்டும்.இத்தகைய உத்தரவுகளால் உழைப்புச் சுரண்டலும், உரிமைகள் பறிப்பும் தடையில்லாமல் வேகமெடுக்கும். 

அதையும் தமிழகத் தொழிலாளி வர்க்கம் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் வீரியத்துடன் உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுத்து செல்லும்.
நன்றி:தீக்கதிர்.                                                                                                                       --கே.திருச்செல்வன்
=========================================================================================================================================
ன்று,
டிசம்பர்-07.
  •  முதலாவது வர்த்தக வங்கி அமெரிக்காவில் திறக்கப்பட்டது(1782)
  • அமெரிக்காவில் முதல் முறையாக அரசு தலைவர் தேர்தல் நடைபெற்றது(1789)
  • வில்லியம் கென்னடி டிக்சன், அசையும் படத்துக்கான (சினிமா)காப்புரிமம் பெற்றார்(1894)
  • புரூணை, ஆசியான் அமைப்பில் உறுப்பு நாடாக இணைந்தது(1984)
  • ==========================================================================================
 இதோ தமிழருவி  மணியன் பேசுகிறார் கேளுங்கள், கேளுங்கள்!
‘‘ஜல்லிக்கட்டு வரவேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்தமாக தமிழகமே திரண்டது. டில்லியில் உட்கார்ந்துகொண்டு சுப்பிரமணியன் சாமி, ‘‘பொறுக்கிகளின் கூட்டம்’’என்றார். ஆனால், உண்மையில் நான் கமலசஹாசனைப் பாராட்டுகிறேன்.
‘‘உண்மைதான்; நான் தமிழ்நாட்டுப் பொறுக்கி; மற்றவர்களைப் போல் நான் டில்லியில் பொறுக்குவதில்லை’’ என்று. இதைவிட வன்மையாகச் சொல்லவே முடியாது. நான்கு மணிநேரம் சொன்னாலும்கூட, இவ்வளவு அழுத்தமாக சொல்ல முடியாது; அதை கமலசஹாசன் சொல்லியிருக்கிறார்.
இப்பொழுதுகூட சசிகலா வருவதில் எனக்கு விருப்பமில்லை; பன்னீர்செல்வம் தவறு செய்தவராக இதுவரையில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தெரியவில்லை. எனவே அவர் முதலமைச்சராகத் தொடர்வதுதான் நல்லது என்று தன்னுடைய கருத்தை வெளிப்படையாக சொல்கிறார். ரஜினிகாந்தை கொஞ்சம் சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
ரஜினிகாந்திடம் கேட்டால் என்ன சொல்வார்? 
‘‘ஒரு பக்கம் பார்த்தால் சசிகலாவும் பரவாயில்லை; இன்னொரு பக்கம் பார்த்தால், பன்னீர்செல்வமும் பரவாயில்லை. வேறொரு பக்கம் பார்த்தால் ஸ்டாலின்கூட பரவாயில்லை; அந்தப் பக்கம் பார்த்தால் ராமதாசுகூட பரவாயில்லை. எல்லோருமே பரவாயில்லை.

ஒன்றை புரிந்துகொள்ளுங்கள், எல்லாருக்கும் நண்பனாக இருப்பவன்; உண்மையில் எவனுக்கும் நண்பனாக இருப்பதில்லை என்பதுதான் உண்மை.
ரஜினிகாந்தை நேசிக்கக்கூடிய லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்த மண்ணில் இருக்கிறார்கள். நானும் ரஜினிகாந்தை நேசிக்கிறேன். 

ஆனால், என்போன்றவர்களின் நேசத்திற்குரிய ரஜினிகாந்த்,அரசியலுக்கு வரும் திட்டமுள்ளவர் .அவர்  ஒரு கமலஹாசனைப் போல வாய் திறக்கவேண்டாமா?
இந்தப் பன்னீர்செல்வத்திற்காக அவர் பேசவேண்டாமா?''
இப்படி பேசியவர் இன்றைய  நடிகர் ரஜினியின் அரசியல் செயலர். தமிழருவி மணியன்தான் - 
 பேசிய இடம் : கோவை
 நாள்: 12.2.2017.
===================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?