இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

திங்கள், 8 ஜனவரி, 2018

வாழ வைக்கும் வாழைப்பழம்.

வாழைப் பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும்.
ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி நம்மில் பலருக்கு தெரியாது.வாழைப்பழத்தில் வைட்டமின் `ஏ’, வைட்டமின் `பி’ 6, வைட்டமின் `சி’, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. இதனால் உடலில் ஏற்படும் பல நோய்களை போக்கி, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும்.


அலர்சியால் அவஸ்தைப்படுபவர்களுக்கு வாழைப்பழம் மிகவும் நல்லது. ஏனெனில் இதில் தீங்கற்ற அமினோ ஆசிட்டுகள் நிறைந்திருப்பதால், இது அலர்சி ஏற்படுவதைத் தடுக்கும்.

அதிகப்படியான இரும்புச்சத்து வாழைப்பழத்தில் இருப்பதால், இதனை சாப்பிட்டால், ரத்த சோகை நீங்கி, ரத்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாழைப்பழத்தில் உள்ள ஃபுருக்டோஸ், குளுக்கோஸ், மற்றும் சுக்ரோஸ், உடலுக்கு ஆற்றலை உடனடியாகக் கொடுக்கும். அதனால் தான் விளையாட்டு வீரர்களை அடிக்கடி வாழைப்பழம் சாப்பிட சொல்கிறார்கள்.

மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள், வாழைப்பழத்தை சாப்பிட்டால் குடலியக்கமானது சீராக இயங்கி, மலச்சிக்கல் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும்.

மசித்த வாழைப்பழத்தில் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிட்டால், வயிற்றுக்கடுப்பிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மது அருந்தியதால் ஏற்படும், தலைபாரத்தை போக்குவதற்கு வாழைப்பழ மில்க் ஷேக் சாப்பிட வேண்டும். இதனால் வாழைப்பழம் மற்றும் பாலானது உடலை அமைதிப்படுத்தி, உடலை சீராக இயங்க வைக்கும்.

வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம், உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற உதவுவதோடு, புகைப்பிடித்தலை நிறுத்தவும் உதவியாக இருக்கும்.

வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ ஆசிட், மூளையில் உற்பத்தியாகும் செரோடினின் அளவை அதிகரித்து, மன அழுத்தத்தைப் போக்கி, மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான நாள்பட்ட அல்சர் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும். அதிலும் நன்கு கனிந்த பழத்தை சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அலற்சியையும் குணமாக்கும். மேலும் செரிமானமும் சீரான நடைபெறும்.

பொட்டாசியம் அதிகம் உள்ள வாழைப்பழத்தை சாப்பிட்டால், மூளையின் செயல்பாடானது அதிகரிக்கும். எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு, அன்றைய நாளை துவங்குங்கள்.

வாழைப் பழத்தில் உள்ள குறைந்த அளவு புரோட்டீன் மற்றும் உப்பு மற்றும் அதிக அளவில் உள்ள கார்போஹைட்ரேட் சிறுநீரகத்தில் ஏற்படும் தீவிர பிரச்சனைகளை போக்கும்.

அதிலும் இந்த பழத்தை தொடர்ந்து மூன்று நாட்களில், ஒரு நாளைக்கு 8அல்லது 9 பழங்கள் சாப்பிட்டால், எந்த ஒரு பிரச்சனையானாலும் போய்விடும்.


வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால்,அது மாதவிடாய் பிரச்சனைகளை குணமாக்க பெரிதும் உதவும். அதிலும் அதிகப்படியான ரத்தப் போக்கால் அவஸ்தைப்படுபவர்கள், வாழைப்பூவை சாப்பிட்டால், புரோஜெஸ்ட்ரோனின் அளவு அதிகரித்து, அதிகப்படியான ரத்தப் போக்கு குறையும்.

உடல் எடை அதிகம் உள்ளவர்கள், டயட்டில் வாழைப்பழத்தை சேர்த்தால், உடல் எடை குறையும்.

வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள செல்களில் இருக்கும் எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் நீர்மத்தை சீராக வைத்து, இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய நோயான மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படுவதை தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால், 40% பக்கவாதம் வருவது குறையும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

வாழைத்தண்டை ஜுஸ் போட்டு குடித்தால், சிறுநீரக கோளாறை போக்கலாம். இந்த ஜுஸ் சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்கும். குறிப்பாக சிறுநீரக கற்களை போக்குவதற்கு சிறந்த நிவாரணி.

பாலுணர்வுக் கிளர்ச்சியூட்டும் தன்மை வாழைப்பழத்தின் வடிவத்தில் மட்டுமல்லாமல், அதன் உள்ளடக்கத்திலும் உள்ளது.
பாலியல் ஹார்மோன்களை அதிகரிக்கச் செய்யும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதோடு, ஆணின் பாலியல் உணர்வுகளையும் அது தூண்டுகிறது. கலவிக்குப் பிறகு உண்டாகும் பரவச நிலைக்குக் காரணமான செரடோனின் அளவையும் அது கட்டுப்படுத்துகிறது.

இதுபோன்று உடலில் ஏற்படும் அசாதாரண கோளாறுகளை நீக்கவல்ல வாழைப்பழத்தை தினமும் உண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.
=========================================================================================
வெந்தயம் 

உடல் வெப்பம் அதிகரித்தால், பல பிரச்சனைகள் தானாகவே வரும். 
 உடல் நிலையில் சீராக வைத்துக்கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டி வந்தாலும், ஒரு சிலருக்கு சூட்டு உடம்பு என சொல்வார்கள்.

அதே சமயத்தில்,இது போன்றவர்களுக்கு எளிதில் தோல் பிரச்னை முதல், முகத்தில் கட்டிகள் கூட வரும், காரணம் உடல் வெப்பம் அதிகரிக்கும் போது,உடல் உறுப்புக்கள் சுரக்கும் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்பட்டு, குறைபாடு ஏற்படும். 

இதற்கெல்லாம் ஒரு முக்கிய மருந்தாக உள்ளது "வெந்தயம்"
வெந்தயம் பாலுணர்வைத் தூண்டும் திறன் கொண்டது. அதிலும் ஆண்கள் இதனை உட்கொண்டு வந்தால், டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரித்து, நீண்ட நேரம் தாம்பத்தில் இருக்க முடியுமாம்.

அது என்னவெனில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும்.


வெந்தயத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.
மேலும் வெந்தயம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதால், இதய பிரச்சனைகள் வர வாய்ப்பு இல்லை.
வெந்தயத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.

மேலும் வெந்தயம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதால், இதய பிரச்சனைகள் வர வாய்ப்பு இல்லை.
நிறைய பெண்களுக்கு மார்பகத்தின் அளவை பெரிதாக்க ஆசை இருக்கும்.
அத்தகைய பெண்கள் நீங்களாக இருந்தால், வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வாருங்கள். இதனால் இயற்கையாக மார்பகத்தின் அளவு பெரிதாகும்.

வெந்தயம் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அதிலும் கல்லீரலில் இரத்தத்தை சுத்தப்படுத்தி, உடல் முழுவதும் இரத்தம் சீராக பாய உதவி புரியும்.

 பல நன்மைகள் கிடைக்கும்  வெந்தயத்தை  பயன்படுத்தி பல உடல் நன்மைகள் பெறலாம். 
 ==========================================================================================

ன்று,
டிசம்பர்-08.


  • மொனாக்கோ விடுதலை பெற்றது(1297)

  • ஆல்பிரட் வெயில், புள்ளிகளையும் கோடுகளையும் கொண்ட தொலைத்தந்தியை அறிமுகப்படுத்தினார்(1838)

  • அலாஸ்காவில் ராணுவ ஆட்சி வந்தது(1900)

  • பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான  கியூபாப் புரட்சி வென்றது (1959)
==========================================================================================