யாருகிட்ட?
இந்த 2018 புத்தாண்டு இந்தியாவை உலகிலேயே முதல் இடத்தில் கொண்டு போய் வைத்து விட்டது.
இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு (01.01.2018) அன்று உலகிலேயே அதிகமான குழந்தைகள் இந்தியாவில்தான் பிறந்துள்ளதாக ஐக்கிய நாடு களின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் இந்திய மண்ணிற்கு இனிய செய்தியை தெரிவித்துள்ளது.
இதன்மூலம் சீனாவை இந்தியா முந்தி விட்டது என்ற வெற்றி செய்தியையும் யுனிசெப் தவறாமல் பதிவு செய்துள்ளது.
இது ஒவ்வொரு தேசத் துரோகியல்லாத இந்தியனும் பெருமை கொள்ள வேண்டிய வரலாற்று நிகழ்வு.
‘2018 புத்தாண்டு அன்று உலகம் முழுவதும் 3 லட்சத்து 86 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளர்ச்சி இல்லாத நாடுகளில்தான் அதிக அளவு குழந்தைகள் பிறந்துள் ளன.
இந்தியா வில் அதிகமாக 69 ஆயிரத்து 70 குழந்தைகள் பிறந்துள் ளன;
சீனாவில் 44 ஆயிரத்து 760 குழந்தைகள் பிறந்துள்ளன.
இதேபோல, நைஜீரியாவில் 20 ஆயிரத்து 210,
பாகிஸ்தானில் 14 ஆயிரத்து 910 ,
இந்தோனேஷியாவில் 13 ஆயிரத்து 370,
அமெரிக்காவில் 11 ஆயி ரத்து 280,
காங்கோ நாட்டில் 9 ஆயிரத்து 400,
எத்தியோப்பியாவில் 9 ஆயிரத்து 20, வங்கதேசத்தில் 8 ஆயிரத்து 370என்ற எண்ணிக்கையில் குழந்தைகள் பிறந்துள்ளன.
உலக நாடுகளில் பிறந்த மொத்தக்குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள், இந்த 9 நாடுகளில் மட்டும்பிறந்துள்ளன. இவற்றில் பல குழந்தை கள் பிறந்த முதல் நாளிலேயே இறந்தும் உள்ளன” என்று யுனிசெப் அறிக்கை வெளியிட்டுள்ளது.‘
‘குழந்தைகளின் பிறப்பு ஒருபுறம் அதிகரித்து வந்தாலும், மறுபுறம் குழந்தைகளின் இறப்பு விகிதமும் கவலையளிக்கும் விதமாக உள்ளது.2016-ம்ஆண்டில், சராசரியாக ஒரு நாளில்,2,600 குழந்தைகள் இறந்துள்ளன.
இதில், 80 சதவிகித குழந்தைகள், குறைப் பிரசவம் உள்ளிட்டகாரணங்களால் உயிரிழந்திருப்ப தாகவும், உரிய சிகிச்சை அளிக்கப் பட்டிருந்தால் இந்த குழந்தைகளை காப்பாற்றி இருக்க முடியும்.
குறிப்பாக பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது; 2016-ம் ஆண்டில், பிறந்த ஒரு மாதத்திலேயே இறந்த குழந்தை களின் எண்ணிக்கை 26 லட்சம்”
என்று தேவையே இல்லாத புள்ளி விபரத்தையும் கூறியுள்ளது யுனிசெப்.
ஒரு புதிய இந்தியாவை காணும் இந்த நேரம் நம் இந்திய அரசு குழந்தைகள் நலத்தில்,சுகாதாரத்தில் கோட்டை விடுவதாக யுனிசெப் கூறுவது சீனா ஆதரவு கருத்துதான்.
தன்னை விட எந்த விதத்திலும் இந்தியா முன்னேறி விடக்கூடாது என்று சீனா பல முயற்சிகள் செய்தாலும் மோடியின் "மேக் இன் இந்தியா"தற்போது சீனாவின் வாயை அடைந்துள்ளது.
"புதிய இந்தியா " புத்தாண்டு தினத்திலேயே பிறந்திருப்பது 69 ஆயிரத்து 70 குழந்தைகள்அல்ல 69 ஆயிரத்து 71குழந்தைகள் என்றே சரித்திரம் சொல்லும்.
இந்திய எல்லைப்புறம் சீனா குடியேறுவதற்குள் அங்கும் இந்திய குழந்தைகள் காலியிடத்தை நிரப்பி சீனாவை தோல்வியுடன் திரும்பச் செய்துவிடும் .யாருகிட்ட?
===========================================================================================
திசை மாறக் கூடா எழுச்சி
ஈரானில் அரசுக்கு எதிரான எழுச்சி என்று மேற்கத்திய கார்ப்பரேட் ஊடகங்களால் குறிப்பிடப்பட்டு நடந்து வருகிற போராட்டமானது, ஈரானிய சமூகத்திற்குள் வறுமை யிலும் மிகக்கடுமையான வேலையின்மையிலும் உழன்று கொண்டிருக்கிற பெருவாரியான மக்களது கோபத்தின் வெளிப்பாடே என்றும் நீண்டகாலமாக புதைந்து கிடக்கிற இந்தக் கோபத்தை ஈரான் அரசுக்கு எதிரான வன்முறைக் கள மாக மாற்றுவதற்கும் அதன்மூலம் தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கும் ஈரானிய தீவிர வலதுசாரி பிற்போக்கு சக்திகளும் ஏகாதிபத்திய ஆதரவு சக்திகளும் முயற்சிக்கின்றன என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
ஈரானில் கடந்த சுமார் ஒருவாரகாலமாக போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்தப் போராட்டங்களை வன்முறை மயமாக மாற்றியதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அதன் உலவு ஸ்தாபனமான சிஐ ஏவுக்கும் மிக முக்கியமான பங்கு உண்டு.
எனினும் போராட்டம் உருவாவதற்கான சூழல் ஈரானிய சமூ கத்திலும் அரசியலிலும் வலுவாக இருந்துள்ளது; இந்நிலையில் எதிர்ப்பை வெளிப்படுத்த முனை கிற இளைஞர்களை வன்முறைப் பாதைக்கு மாற்றுவதிலும், அமைதியான போராட்டங்களை வன் முறை மயமாக்குவதிலும் கடந்த சிலநாட்களாக அமெரிக்க உளவாளிகள் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்றேதகவல்கள் உறுதிசெய்கின்றன.
முதலில் கடந்த வியாழனன்று ஈரானின் இரண்டாவது பெரிய நகரமான மசாத்தில்தான் ஒரு இளைஞர் குழுவினரின் போராட்டம் துவங்கியது. சமூக ஊடகங்களான டெலிகிராம், இன்ஸ்டாகிராம் ஆகியவை மூலமாக போராட்ட அலை பரவியது.
இந்தப் போராட்டத்தின் மையப்புள்ளியாக உணவுப் பொருள் விலை உயர்வு, தீவிரமடைந்துவரும் வேலையின்மை, சமூக வருமான ஏற்றத்தாழ்வு ஆகியவை மட்டுமின்றி, ஆளும் இஸ்லாமிய மதத் தலைவர்களின் தலைமையிலான அரசின் சிக்கன நடவடிக்கை என்ற பெயரிலான பொருளாதார தாக்குதல்கள் ஆகிய அடிப்படையான பிரச்சனைகளே முன்வைக் கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி சமீபகாலமாக சிறிய அளவிலான போராட்டங்களைக் கூட ஆளும் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி தலைமையிலான அரசு கடுமையான முறையில் ஒடுக்குவதும், இளைஞர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பின்னணியில்தான் ஈரானில் போராட்ட அலை எழுந்தது. மசாத் நகரைத் தொடர்ந்து நைசபூர் மற்றும் கஷ்மர் ஆகிய நகரங்களிலும் அதைத்தொடர்ந்து தலைநகர் டெஹ்ரானிலும் பரவிய இந்தப் போராட்டம், தற்போது நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு பரவியுள்ளது.
பல இடங்களில் போராட்டத்திற்குள் வன்முறையாளர்கள் திட்டமிட்டு ஊடுருவி யிருக்கிறார்கள். அவர்கள் போராட்டத்தை திசைதிருப்பி, வன்முறைமயமாக்க முயற்சித் திருக்கிறார்கள்.
பல இடங்களில் தீவைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.
இதைத்தொடர்ந்து பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக் காரர்களுக்கும் இடையே மோதல் கள் வெடித்துள்ளன. இந்த மோதல்களில் இதுவரை 21 பேர் பலியாகியுள்ளனர்.
பலர் கைது செய்யப்பட்டுள் ளனர். இதனிடையே அரசு தரப்பில்சமூக ஊடகங்களுக்கு தடைவிதிக்கப் பட்டுள்ளது.
எனினும் நாடு முழுவதும்முழுமையான தடை விதிக்கப்பட வில்லை என்று ஈரானிய அரசு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.நாட்டில் நிலவுகிற அடிப்படை யான பிரச்சனைகளை மையமாகக் கொண்டே இளைஞர்களிடையே போராட்ட அலை பரவியுள்ளது என்பதை ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி ஒப்புக் கொள்கிறார்.
சமூக மற்றும்அரசியல் பிரச்சனைகளை முன்னி றுத்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு ஈரானியர் களுக்கு உரிமை உண்டு எனக் குறிப்பிட்டுள்ள ரவ்ஹானி, போராட்டக் காரர்கள் முன்வைத்துள்ள சமூக, பொருளாதார பிரச்சனைகள் குறித்துஅரசு விரைவில் கவனம் செலுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாக வேலை யின்மை மாறியிருக்கிறது என்பதை யும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.ஜனாதிபதி ரவ்ஹானி, போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள அதே நேரத்தில் ஈரானிய அரசின் மதத் தலைவராக உள்ள அயத்துல்லா அலி கோமேனி உள்பட அரசின் பிற தலைவர்கள், கடுமையான முறையில் பேசத் துவங்கியிருக்கிறார்கள்.
போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று கூறி வருகிறார்கள்.
அவர்கள் கூறும் வார்த்தைகளை ஈரானிய தீவிர வலதுசாரி பிற்போக்கு சக்திகள்பயன்படுத்தி வருகின்றன.
ஈரானில்கற்கால மத, பழமைவாத ஆட்சியை மீண்டும் கொண்டுவர விரும்புகிறவலதுசாரி சக்திகள், தற்போதையபோராட்டத்தை முன்னிறுத்தி ஏகாதி பத்திய சக்திகளுடன் கரம்கோர்த்துக் கொண்டிருக்கிறார்கள்; போராட்டத் திற்குள் புகுந்து வன்முறை வடிவ மாக்க தீவிரமாக முயற்சித்து வரு கிறார்கள்.ஈரானில் ஜனாதிபதி ரவ்ஹானி ஒப்புக்கொண்டதுபோல, சமூகத்தை அச்சுறுத்துகிற மிகப்பெரும் பிரச்சனையாக வேலையின்மை மிரட்டிக் கொண்டிருக்கிறது.
இதனால் தொழிலாளர்களும் ஏழை மக்களும் படித்த இளைஞர்களும் மிகப்பெரும் துயரின் பிடியிலும் அதன் விளைவாக கொதிப்பிலும் இருக்கிறார்கள். ஈரானிய உழைப்பு சக்தியில் 12.7 சதவீதம் பேர் - அதாவது 32 லட்சம் பேர் வேலைவாய்ப்பற்ற வர்களாக உள்ளனர் என்று அரசுதரப்பு தகவல்கள் ஒப்புக் கொள் கின்றன.
ஆனால் உண்மையில் வேலையின்மை விகிதம் 40சதவீதமாக இருக்கக்கூடும் என்று சமீபத்தியபுள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன.
உலக செல்வ வளம் மற்றும் வருமான கணக்கெடுப்பு விவரங்களின்படி ஈரானிய மக்களில் 50சதவீதத்திற்கு அதிகமானோர் வறுமையின்பிடியில் சிக்கியிருக்கிறார்கள்.
மறுபுறத்தில் ஈரானின் பெரும் கார்ப்பரேட் முத லாளிகளாக இருக்கிற வெறும் ஒரு சதவீதத்தினர் அந்நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தில் 16.3 சதவீ தத்தை தங்கள் வசம் வைத்திருக்கிறார்கள். இத்தகைய தீவிரமான பிரச்சனை கள் ஈரான்அரசியல் கொந்தளிப்பின் மையப் புள்ளியாக இருக்கின்றன.
அங்கு இந்தப் போராட்டங்களை கூர்மைப்படுத்தி வழிநடத்திச் செல்லும் விதத்தில் இடதுசாரி இயக்கங்கள் பிரதானமாக இல்லாத சூழ்நிலை யில், கொந்தளிக்கும் இளைஞர்கள் வலதுசாரி சக்திகள் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் கைகளில் சிக்குகிறார்கள்.
இதையே தனது சர்வதேச அரசியல் நோக்கத்திற்கு அமெ ரிக்க ஏகாதிபத்தியம் மூலதனமாக பயன்படுத்த துவங்கியிருக்கிறது.
==========================================================================================
இன்று,
ஜனவரி-04.- வில்லியம் மெக்டொனால்ட், மெக்டொனால்ட் தீவுகளை கண்டுபிடித்தார்(1854)
- ஃபாபியன் அமைப்பு லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது(1884)
- பிரிட்டன் காலனித்துவ நாடுகளில் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது(1912)
- பர்மா விடுதலை தினம்(1948)
ரஜினிக்கு ஒரு நாளில் பத்து லட்சம் உறுப்பினர்கள்?
ஆக விர்ச்சுவல் உறுப்பினர்கள். இதை எல்லாம் நாங்கள் முன்பே பாஜக வழியே பார்த்து இருக்கின்றோம்.
பாஜகவுக்கு ஒரு நாள் திடீர்ன்னு ஒரு கோடி மெம்பர்ஸ்ன்னு தலைப்பு செய்தி போட்டானுங்க. என்னடான்னு கேட்டா மிஸ்கால் கொடுத்தாங்க. அதனால் உறுப்பினர் ஆகிட்டாங்க என பதில் வந்தது. இது எப்படி சாத்தியம் என குழம்பினோம்! அந்த கணக்கின் படி பார்த்தால் பாஜகவுக்கு ஆர்.கே நகரில் மட்டும் இன்று 30,000 உறுப்பினர்கள். ஆனால் வந்து விழுந்த ஓட்டுகளோ 1417 தான்.
களம் எப்படின்னு கவனிக்கிறானுங்களாமாம்.... பி ஜே பி யில்... எப்படி... இணையம் வழியாக உத்து உத்து பார்க்கின்றார்களாம்! அப்படி பார்த்ததில் திமுகவில் உறுப்பினர் ஆவது ரொம்ப கஷடம் என புரிஞ்சுதாம்.
என்ன காரணம் எனில் திமுகவில் அப்போது உறுப்பினர் ஆக வேண்டும் எனில் நகர செயலர், பேரூர் செயலர், ஒன்றிய செயலர், பகுதி செயலர் வழியே தான் உறுப்பினர் ஆக இயலும். அப்படி உறுப்பினர் ஆனாலும் அவர்கள் கையில் தான் உறுப்பினர் கார்டு வரும். அப்படி வந்தால் தான் அவர்கள் தன் போக்குக்கு வார்டு செயலர், வார்டு பிரதிநிதி என நியமிக்க முடியும். ஆக திமுகவின் ஜனநாயக முறையில் இருந்த குளறுபடி இது. இதை பலரும் சொல்லப்போக ஆக இது மட்டுமே தான் திமுகவின் பிரச்சனை என நினைத்த பாஜக மேற்படி முடிவை எடுத்திருக்கலாம்.
அதாவது ஒரு மிஸ் கால் கொடுத்தா உறுப்பினர்! இப்படியாக சேர்ந்தது தான் தமிழிசை அக்காவின் ஒரு கோடி உறுப்பினர்கள் என்பதாகும்! இன்னும் சொல்லப்போகின் இதே ஆர்.கே நகரில் கூட அக்காவின் கட்சிக்கு சுமார் 45,000 உறுப்பினர்கள் அதாவது மிஸ்கால் மெம்பர்ஸ் உண்டு!
இதையும் நம்பி அந்த லூசுப்பசங்க அமித்ஷா போன்றவர்கள் என்னவோ தமிழகம் முழுவதும் பாஜக உறுப்பினர்களால் நிரம்பி வழிந்து விடுவது போல நினைத்துக்கொண்டு இருப்பது தான் காமடியின் உச்சம்!
ஆர் கே நகர் தேர்தல் முடிவில் தமிழக மக்கள் கேட்கும் மூன்று கேள்விகள் என்ன?
ஆர் கே நகர் தேர்தல் முடிவில் தமிழக மக்கள் கேட்கும் மூன்று கேள்விகள் என்ன?
1. திமுகவின் மீதம் இருந்த 30,000 ஓட்டுகள் எங்கே?
2. நாம் தமிழர் கட்சியின் அந்த எக்ஸ்ட்ரா 2000 ஓட்டு எப்படி வந்தது?
3. பி.ஜே. பி யின் அந்த 800 ஓட்டுகள் எக்ஸ்ட்ரா எப்படி வந்தது?
ஆக இப்போது புரிந்து இருக்குமே!
ஒரே விஷயம் தான் அதற்கு பதில் ... அது எல்லோருக்கும் தெரியும்.
இதிலே கெத்தாக தினகரன் “40 ஆண்டுகால ஸ்டாலின் அனுபவம் என்ன ஆச்சுது? அவங்க ஒழுங்கா வேலை செஞ்சிருந்தா அதிமுகவை டெபாசிட் வாங்காமல் செய்திருக்கலாம்” என்கிற பேட்டி ஆணவத்தின் உச்சம்!
தினகரன் இதுவரை வந்த பாதை குறுக்கு வழியில் முள் இல்லாத குறுக்கு பாதை! ஆனால் இந்த பேட்டிக்கு பின்னர் தானே முள்ளை வெட்டி தன் முன்னாள் போட்டுக்கொண்ட முட்பாதை!
சொடக்கு போடும் நேரம் தான் திமுகவுக்கு! மதுசூதனன் மற்றும் தினகரனை வீழ்த்த கண் முன்னே இருந்த பண ஆயுதம்! இல்லை! அதை செய்யவில்லை!
இதே போலத்தான் சென்ற நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளில் அதிமுக வென்ற போது வாக்காளர்களுக்கு 200 ரூபாய் அதிமுக கொடுத்தது. ஆனால் அந்த கடைசி நேரம் கூட ஒரு தகவல் வருகின்றது திமுக தலைமையிடம் இருந்து... “ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டாம்... உழைத்து வாங்கும் ஓட்டுகள் போதும்” ஆனால் திமுக தோற்றது. அதிமுக 37ல் வென்றது. ஆனால் அங்க எந்த நாயாவுது பேசுதா எனில் இல்லை இல்லை இல்லவே இல்லை என்பதே உண்மை! ஆக இப்ப தோத்தது யாரு? திமுகவா? அல்லது மக்களா?
ஆனால் சட்டப்படி திமுக தோற்றது! அதற்கு பெய்ர் தோல்வியா? இல்லை... ஜனநாயகப்படி அது தோல்வி அல்ல! ஆனால் சட்டப்படி அது தோல்வி தான்!
இதை எல்லாம் எதற்கு சொல்கிறேன் எனில் வரும்காலத்தில் ரஜினி அவர்கள் ஒரு ஓட்டுக்கு சுமார் 11,000 தந்தால் மட்டுமே அவருக்கு ஓட்டு! (தக்காளி! வச்சி செய்வதில் எங்க தமிழ் மக்கள் கிங்குடா)
இப்போ இந்த பதிவின் முதல் பாராவுக்கு வருவோம்... அதாவது //ரஜினிக்கு ஒரு நாளில் பத்து லட்சம் உறுப்பினர்கள்// ... சில திமுக இணைய தள நண்பர்கள் “அய்யோ வெறும் 30,000 பேர் தானே அந்த ஆப்பை பார்த்தாங்க ... பின்ன எப்படி பத்து லட்சம் உறுப்பினர் என பதிவிட்டனர். விடுங்க ... விடுங்க.. ரஜினியின் உறுப்பினர் எண்ணிக்கை பத்து கோடியை தாண்டும்.. அதாவது தமிழக மக்கள் தொகையை விட அதிகமாகும்.... அப்ப கூட ரஜினிக்கு புரியாது அதல்லாம் மாயை என!
மாயை உலகில் இருப்பவர்களை மாய தோற்றத்திலேயே வச்சி செய்வது தான் திராவிட பழக்கம்! வச்சி செய்வோம்!