முடங்கிய தமிழ் நாடு.
தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்து ஊழியர்களுக்கான 13வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை, தமிழக அரசின் பிடிவாதம் காரணமாக முறிந்தது.
இதையடுத்து வியாழனன்று மாலை முதல் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்கினர். தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்து ஊழியர்களுக்கான 13 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
12 வது சுற்று பேச்சுவார்த்தை வியாழனன்று (ஜன.4) குரோம் பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இதில் போக்கு வரத்துறை அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர், கூடுதல் தலைமை செயலாளர் டேவிதார், நிதித்துறை செயலாளர் (செலவினம்) எம்.ஏ.சித்திக், நிதித்துறை கூடுதல் இயக்குநர் பூமா, போக்குவரத்துக் கழங்களின்மேலாண் இயக்கு னர்கள், சிஐடியு, தொமுச, அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட 46 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தை காலை12 மணிக்கு தொடங்கிமாலை வரை நீடித்தது.
தொழிற்சங்கங்கள், தரஊதியத்தை ரூ.1700 லிருந்து ரூ.2400 ஆக மாற்றி 2.57 காரணிஊதிய உயர்வு, மூன்று ஆண்டுக்கு ஒரு முறை ஒப்பந்தம் என்று கோரி வந்த நிலையில் அமைச்சர் 2.44 காரணி ஊதிய உயர்வும், நான்கு ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் என கடந்த முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது கூறினர். இதனைத் தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை.
கடந்த பேச்சுவார்த்தையில் கூறியதற்கு முரணாக தற்போது 2.40 காரணி ஊதியஉயர்வும் மூன்று ஆண்டு க்கு ஒருமுறை ஒப்பந்தம் என்றும் அமைச்சர்முன்மொழிந்ததை தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்த்தன.
ஊழியர்கள் கொதிப்புஇப்பேச்சுவார்த்தைக்கு இடையே அமைச்சர் அதிகாரி களுடன் இரண்டு முறையும், பத்துசங்கங்கள் கொண்ட போராட்டக்குழு 3 முறையும் ஆலோசனை நடத்தின. இருப்பினும் இரவு 7 மணிக்கு மேலாகியும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதனால் தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும்பேருந்துகளை கொண்டு சென்று பணி மனையில் நிறுத்தினர்.
“அரசின் மோசமான அணுகு முறை காரணமாக போக்குவரத்து தொழிலாளர்களும் அரசுப்பேருந்துகளை நம்பியுள்ளமக்களும்தான் பாதிக்கப்பட்டுள் ளனர். ஊதிய உயர்வு ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்பே பலமுறை தொழிற்சங்கங்கள் தரப்பில் அரசிடம் நினைவூட்டிய போதும் அரசு கண்டுகொள்ளாமல் இருந்தகாரணத்தால் இம்முறை ஊதியஉயர்வு பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே போகிறது.
இதனால் அரசே தொழிலாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது” என தொழிற்சங்கத்தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
ஏமாற்றம்போக்குவரத்து ஊழியர்கள் மொத்தமாக 19 ஆயிரத்து 500ரூபாய் கிடைக்கும் என்று எதிர் பார்த்த நிலையில் தற்போதைய ஊதியத்தின் அடிப்படையில் 2.40 காரணி எனக் கணக்கிட்டால் 16, 565 ரூபாய் மட்டும் கிடைக்கும்.
18 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச சம்பளம் என்று அரசு அறிவித்துள்ளநிலையில் இந்த ஊதியத்தை எவ்வாறு ஏற்க இயலும். போக்கு வரத்து கழகங்களின் நிதி நிலையை கருத்தில் கொண்டு 2.57 காரணி தான் கேட்கிறோம். இதன் படிகணக்கிட்டால் கூட 17, 733 ரூபாய்தான் கிடைக்கும்.
எனவே அரசு நிர்ணயித்த குறைந்தபட்சஊதியத்தை விட குறைவாகத்தான் கோருகிறோம் என்று தொழிற்சங்க தலைவர்கள் கூறினர்.மீண்டும் அழைப்புஇந்நிலையில் வியாழனன்று மாலை மீண்டும் அரசுத் தரப்பில்பேச அழைக்கப்பட்டது.
அப்போதும் அரசு தரப்பு தனது நிலையிலிருந்து இறங்கி வர மறுத்தது.
இதையடுத்து உடனடியாக செய்தியாளர்களை சந்தித்த தொமுச தலைவர் சண்முகம், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் ஆகியோர், போக்குவரத்து ஊழியர்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காத தமிழக அரசின் பிடிவாத போக்கினை எதிர்த்து உடனடியாக தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்குவதாக அறிவித்தனர்.
தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை செய்தியாளர் களிடம் விளக்கிய தொமுச தலைவர் சண்முகம், அரசு தனதுபிடிவாதத்திலிருந்து எந்த விதத்திலும் இறங்கி வரவில்லை என குற்றம்சாட்டினார்.
அ.சவுந்தரராசன் பேசுகை யில், அரசுத் துறையில் பணி யாற்றும் ஊழியர்களை அரசே சமமாகநடத்தாத போக்கு நீடிக்கிறது;
தற்போது நாங்கள் முன்வைத்துள்ள 2.57 காரணி அடிப்படை யிலான ஊதிய உயர்வை அறி வித்தால்கூட குறைந்தபட்ச ஊதியத்தை எட்டிப்பிடிக்காத நிலைதான் இருக்கும்; ஆனாலும் அதைக்கூட அரசு ஏற்க மறுக்கிறது என குற்றம்சாட்டினார்.
ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு தர வேண்டிய ரூ.2ஆயிரம் கோடி, தற்போதைய போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தர வேண்டிய ரூ. 5ஆயிரம் கோடி எனமொத்தம் ரூ.7ஆயிரம் கோடியைதருவதிலும் அரசுக்கு அக்கறை யில்லை; வருடத்திற்கு ரூ.1000 கோடி தருவதாக அரசு கூறுகிறது; அப்படியானால் தொழிலாளி தனதுபென்சனை பெறுவதற்கு 7 வருடம்காத்திருக்க வேண்டும்; இது போகாத ஊருக்கு வழி சொல்வதாகும் என்றும் சாடினார்.
இன்று,
ஜனவரி-05.
- ஹிட்லரின் "நாஜி"க் கட்சி துவக்கம் (1918)
- பண்பலை வானொலி முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது(1940)
- டெய்லி மெயில்,கடல் தாண்டி சென்ற முதல் செய்தி தாளானது(1944)