எப்போது மன்னிப்பு கேட்கபோகிறீர்கள்?
" குரங்கிலிருந்து மனிதன் தோன்றவில்லை. அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. இதுதொடர்பான டார்வின் கோட்பாடு தவறு.
அறிவியல் பூர்வமாக ஏற்றுக் கொள்ள முடியாது.
புவி உருவான காலத்தில் இருந்தே மனிதன் வாழ்கிறான்.
எனவே டார்வின் கோட்பாட்டை பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் இருந்து நீக்க வேண்டும்" என்றுமத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணையமைச்சர் சத்யபால் சிங் குறிப்பிட்டார்.
அறிவியல் பூர்வமாக ஏற்றுக் கொள்ள முடியாது.
புவி உருவான காலத்தில் இருந்தே மனிதன் வாழ்கிறான்.
எனவே டார்வின் கோட்பாட்டை பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் இருந்து நீக்க வேண்டும்" என்றுமத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணையமைச்சர் சத்யபால் சிங் குறிப்பிட்டார்.
புவியில் உள்ள அறிவாளிகள்,ஆய்வாளர்கள்,அறிவியலாளர்கள் அனைவரும் இருக்கும் ஒரே இடம் பாஜகதான்.
காரணம் ஆர்.எஸ்.எஸ்,குருகுல வளர்ப்பு அப்படி.
காரணம் ஆர்.எஸ்.எஸ்,குருகுல வளர்ப்பு அப்படி.
இந்திய "வரலாற்றை" (தங்களுக்கேற்றபடி)மாற்றி எழுதிய இந்துத்துவாவினர் இப்போது "அறிவியல் "பாடத்திட்டத்துக்கு போய் விட்டார்கள்.
அமைச்சர் தனது கருத்துக்கு ஆதாரமாக எதைக்காட்டுவார்?
ஏற்கனவே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பிள்ளையார்.
விமானத்துக்கு புஷ்பக விமானம் என்று ஆதாரங்கள் கைவசம் நிறைய உள்ளது
ராமாயணத்தில் மனிதர்களுடன் சேர்ந்த குரங்குகளும் பாலம் காட்டியதை காட்டுவார்.
குரங்குகள் இருக்கும் காலத்திலேயே மனிதர்களும் சேர்ந்தே இருந்தனர் என்பது வலுவான ஆதாரம்தான்.
அடுத்து" பூமி தட்டையானதுதான்"என்று புவியியலுக்கு போகலாம் .
அதனால்தான் அதை பாய் போல சுருட்டிக்கொண்டு கடலுக்கடியில் அரக்கன் ஒளிந்து கொண்டான் "என்பதை ஆதாரமாகக் காட்டலாம்.
இன்னும் 400 நாட்கள் உங்கள் ஆராய்ச்சிகளைத்தான் கேட்டுத்தொலைக்க வேண்டிய கட்டாயம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்னும் 400 நாட்கள் உங்கள் ஆராய்ச்சிகளைத்தான் கேட்டுத்தொலைக்க வேண்டிய கட்டாயம்.
டார்வின் சத்யபால் சிங் |
அய்யா சுபவீ அவர்களுடன் ஆர்.எஸ்.எஸ்.%தந்தி பாண்டே
பாண்டே - பாஜக மாநில தலைவர் பார்ப்பனர் இல்லையே.
அய்யா சுப.வீ - தமிழிசையை எதற்கு முன்னிறுத்தி உள்ளீர்கள் என்று எங்களுக்கு தெரியாதா. அடி வாங்குவது எல்லாம் தமிழிசை. ஆனால் பாஜக வை இங்கு இயக்குவது எச்.ராஜா வும் குருமூர்த்தியும் தானே. தேர்தலில் ஜெயித்த பொன்.ராதாவுக்கு என்ன பதவி.. போட்டியிடாத நிர்மலா சீத்தாராமனுக்கு என்ன பதவி ...
"இது ஆண்டாள் பிரச்சினையும் இல்லை வைரமுத்து பிரச்சினையும் இல்லை. மதநம்பிக்கை குறித்த பிரச்சனையும் இல்லை. அப்படி எங்களை நம்பவைக்க முயற்சி செய்கிறீர்கள். நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இது பார்ப்பனருக்கும், பார்ப்பனரல்லாதாருக்கும் இடையிலான பிரச்சினை."
பாண்டே : உங்களைப் போன்றவர்கள் இந்து மதத்தை எதிர்ப்பது போல மற்ற மதங்களை ஏன் எதிர்ப்பதில்லை???
சுபவீ : மற்ற மதங்கள் எங்களை காலில் பிறந்த சூத்திரர்கள் என இழிவு படுத்தவில்லையே...மேலும் நாங்கள் இந்து குடும்பத்தில்தானே பிறந்தோம்.
பாண்ட : கடவுளை யாரும் தலையிலோ, தோளிலோ, நெஞ்சிலோ விழுந்து வணங்குவதில்லையே, எல்லோரும் பாதத்தில் விழுந்துதானே வணங்குகிறார்கள், அத்தகைய பெருமைக்குரிய இடத்தில் பிறந்ததாக சொல்லப்படுவது பெருமைதானே...
சுபவீ : அத்தகைய பெருமைக்குரிய இடத்தை ஏன் பார்பனர்களாகிய நீங்கள் மற்றவர்களுக்கு,எங்களுக்கு விட்டுத்தர வேண்டும், நாங்கள் காலில் பிறந்தவர்கள் என சொல்லி நீங்கள் பெருமைபட்டுக்கொள்ள வேண்டியதுதானே...
பாண்டே : ஆண்டாளை பற்றி தவறாக பேசியதற்கு வைரமுத்து கோயிலில் வந்து மன்னிப்பு கேட்கவேண்டும் அல்லவா?.
சுபவீ : எங்களை சூத்திரன் (அதாவது வேசி மகன்)என்று காலங்காலமாக சொன்னதற்கு,சொல்வதற்கு நீங்கள்
எங்குவந்து ,எப்போது மன்னிப்பு கேட்கபோகிறீர்கள்.?
========================================================================================சுபவீ : எங்களை சூத்திரன் (அதாவது வேசி மகன்)என்று காலங்காலமாக சொன்னதற்கு,சொல்வதற்கு நீங்கள்
எங்குவந்து ,எப்போது மன்னிப்பு கேட்கபோகிறீர்கள்.?
ஜனவரி-22.
- கொலம்பியா கிராமபோன், வாஷிங்டனில் அமைக்கப்பட்டது(1889)
- உலகின் முதலாவது பயணிகள் ஜெட் விமானம் சேவைக்கு விடப்பட்டது(1952)
- சினாய் தீபகற்பத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேறியது(1957)
- ஆப்பிள் மடிக்கணினி அறிமுகப்படுத்தப்பட்டது(1984)
- ஆர்க்குட் துவங்கப்பட்டது(2004)
இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருக்கும் ஏ.கே.ஜோதியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது.
ஓம் பிரகாஷ் ராவத் |
புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அவர்நாளை ( 23-ம் தேதி) பதவியேற்கிறார்.
ஓம் பிரகாஷ் ராவத் தற்போது தேர்தல் ஆணையர்களில் ஒருவராக இருக்கிறார் .
இவர் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆனதால் காலியாகும் இடத்துக்கு முன்னாள் நிதித்துறை செயலாளர் அசோக் லவாசா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காந்தி சிரிப்பது நம்மைப் பார்த்தல்ல.!
இந்தியா வல்லரசாகிறது,பொருளாதாரத்தில் அமெரிக்காவை விஞ்சப் போகிறது என்றெல்லாம் வண்ண,வண்ணமாக பலூன்களை மோடி அரசு விட்டுக்கொண்டு இருக்கிறது.
உண்மையில் மோடி ஆட்சியில் அப்படி பொருளாதாரத்தில் இந்தியா வளர்கிறது.
ஆனால் அது வளர்ச்சி அல்ல.வீக்கம்.அதுவும் ஒரு உறுப்பு மட்டும் பெரிதாக்கிக்கொண்டு போகிறது.அது இந்திய சமநிலையை கொல்லும் புற்றுநோயாக மாறி வருகிறது.
இந்தியாவின் 73 சதவீத சொத்துக்கள் , வளங்கள், 1 சதவீத மக்களிடம் மட்டுமே உள்ளது. இது மற்ற 99 %மக்களிடையே வருவாய் சமநிலை இல்லாத நிலையை காட்டுவதாக உலக அளவு ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலக அமைப்பான ஆக்ஸ்போம் ஹவர்ஸ், இந்திய மக்களிடையே வருவாய் சமநிலை, சொத்துக்களின் சதவீதம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு நடப்பாண்டில் ஆய்வு மேற்கொண்டது.
உலக அமைப்பான ஆக்ஸ்போம் ஹவர்ஸ், இந்திய மக்களிடையே வருவாய் சமநிலை, சொத்துக்களின் சதவீதம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு நடப்பாண்டில் ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வறிக்கையில் தான் இந்த அவல வளர்ச்சி வெளியாகியுள்ளது.இந்த சிலருக்கான வளர்ச்சி
கடந்த மூன்று ஆண்டுகளில்தான் அபிரிமிதமாக உள்ளதாம்.
இந்தியாவின் 73 சதவீத சொத்துக்கள், வளங்கள், 1 சதவீத மக்களிடம் தான் உள்ளது.
இதற்கு வருவாய் சமநிலை இல்லாததே முக்கிய காரணம்.
பணியாற்றும் கடைநிலை ஊழியர், அத்துறையின் அதிக சம்பளம் வாங்கும் அதிகாரியை போல் உயர, அவருக்கு 941 ஆண்டுகள் பிடிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் அதில் வெளியாகியுள்ளது.
இந்தியா மட்டுமல்லாது உலக அளவிலும் முதலாளித்துவ நாடுகளில் இதேநிலை உருவாகி வருகிறதாம்.
கடந்தாண்டில் அமெரிக்கா,இந்தியா போன்ற நாடுகளில் சம்பாதிக்கப்பட்ட 82 சதவீத சொத்துக்கள், மேற்கண்ட 1 சதவீத பகாசுர மக்களிடம்தான் சென்று சேர்ந்துள்ளன.
கடந்தாண்டு ஆய்வின்படி இந்தியாவில் இந்த அம்பானி,அதானி,டாடா போன்ற 1 சதவீத மக்களிடம் உள்ள 58 சதவீத சொத்துக்கள்,வளங்கள் இருந்ததாகவும், அது தற்போது அதிகரித்து 73 சதவீத மாக உயர்ந்துள்ளது.
கடந்தாண்டு ஆய்வின்படி இந்தியாவில் இந்த அம்பானி,அதானி,டாடா போன்ற 1 சதவீத மக்களிடம் உள்ள 58 சதவீத சொத்துக்கள்,வளங்கள் இருந்ததாகவும், அது தற்போது அதிகரித்து 73 சதவீத மாக உயர்ந்துள்ளது.
அவற்றின் மதிப்பு 20.9 லட்சம் கோடிகள்.
இந்த 20.9 லட்சம் கோடிகள் என்பது இந்திய அரசின்தற்போதைய 2017-18 நிதியாண்டிற்கான பட்ஜெட்டிற்கான மதிப்பு என்பது வேதனையுடன் குறிப்பிடத்தக்கது.
ஆக இந்திய ரூபாய்களில் உள்ள காந்தி சிரிப்பது நம்மைப் பார்த்தல்ல.!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------