28 முதலைகள் தப்பின.

இந்தியாவைச் சேர்ந்த பெருமுதலாளிகளான விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்டோர், இந்திய வங்கிகளில் கோடிக் கணக்கில் மோசடி செய்துவிட்டு தற்போது வெளிநாட்டில் பதுங்கி இருக்கிறார்கள்.

இந்நிலையில், மல்லையா, நீரவ் மோடி மட்டுமன்றி, இவர்களைப் போல 28 முதலாளிகள் வெளி நாட்டில் பதுங்கி இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் பட்டியல் அளித்துள்ளது.

பொருளாதாரக் குற்றவாளி களான இந்த 28 பேரையும் இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைகள், மத்திய புலனாய்வுத்துறை மற்றும் அமலாக்கத்துறை மூலம்மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக வும் வெளியுறவுத்துறை தெரி வித்துள்ளது.


வங்கிகளில் கடனாக வாங்கியகோடிக்கணக்கான ரூபாயை முறையாக திருப்பிச் செலுத்தாமல்நாட்டை விட்டு தப்பியோடும் குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான சட்ட மசோதா, நாடாளுமன்ற மக்களவை யில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவின் படி, வங்கிகளில் ரூ. 100 கோடிக்கும் மேல் கடன் பெற்று அதை செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பியோடி னாலோ அல்லது விசாரணைக்காக நாடு திரும்ப மறுத்தாலோ அவரைகைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும். 

பின்னர், அவர் களுக்கு சொந்தமான சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான மனுசிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். 
மேலும், பொருளாதார குற்றங்களில் ஈடுபடுபவர்களை பண மோசடி சட்டத்தின்படி தலைமறைவு பொருளாதார குற்ற வாளியாக அறிவித்து அவருடைய சொத்துகளை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

குறிப்பாக, தலைமறைவு பொருளாதார குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட அடுத்த2 ஆண்டுக்குள் சொத்துகள் அனை த்தும் பறிமுதல் செய்யப்படும்.இந்நிலையில், நிதிமோசடி செய்துவிட்டு, வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் இந்தியாவைச் சேர்ந்த 28 பொருளாதார குற்றவாளிகளின் பெயர்களை வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது பட்டிய லிட்டுள்ளது.

அதில், விஜய் மல்லையா, நீரவ் மோடி மட்டுமன்றி, “புஷ்பேஷ்பெய்ட், ஆஷிஷ் ஜோபன்புத்ரா, சுனய் கல்ரா, சஞ்சய் கல்ரா, சுதிர்குமார் கல்ரா, ஆர்த்தி கல்ரா, வர்ஷா கல்ரா, ஜதின் மேத்தா, உமேஷ் பரேக், கமலேஷ் பரேக், நிலேஷ் பரேக், எகல்வியா கார்க், வினய் மிட்டல், சேட்டன் ஜெயந்திலால் சந்தேசரா, நிதின் ஜெயந்திலால் சந்தேசரா, தீப்திபென் சேட்டன் குமார் சந்தேசரா, நிஷால் மோடி,மெகுல் சோக்ஸி, சப்யா சேத், ராஜிவ் கோயல், அல்கா கோயல்,லலித் மோடி, ரிதேஷ் ஜெயின், ஹிதேஷ் நரேந்திரபாய் படேல், மயூரிபென் படேல், பிரீத்தி ஆஷிஷ்ஜோபன்புத்ரா” ஆகியோர் நிதிமோசடி செய்து விட்டு, வெளிநாடு களுக்கு தப்பிச் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"மெரினா கடற்கரையில் கலைஞருக்கு இடம் தரக் கூடாது என்று வழக்கை அவசரமாக நடத்த அக்கறை காட்டிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களின் உயிர் கொல்லி ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஏன் அந்த அக்கறையைக் காட்டவில்லை. வரலாறு காணாத வகையில் தமிழகத்தின் நிர்வாகத்தின் தகுதியை சீர்குலைத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி'                                                                                                                                                                 திமுக மாநிலங்களவை எம்.பி.கனிமொழி .

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சூழ்ச்சியா?

பதில் மனுவை இன்னும் தாக்கல் செய்யாதது ஏன்?

தமிழக அரசுக்கு கேள்வி



"மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த வேதாந்தா குழுமத்தின் நிறுவனமான தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடுவ தற்கு அம்மக்கள் நடத்திய போராட்டம், அதை ஒட்டிய 13 போராடிய அப்பாவிகளை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த  எடுபிடி பழனிசாமி அரசு வன்முறை போன்றவற்றின் பின்னணியில் ஆலையை மூடுவதற்குத் தங்கள் அரசு, அரசாணை வெளியிட்டு ஆலை மூடப்பட்டது. 

அதன் பிறகும் ஆலையைத் திறந்து விடுவார்களோ என்ற அச்சம் அவ்வப்போது மக்கள் மத்தியில் எழுந்தது. அரசாணையை எதிர்த்து ஆலைநிர்வாகம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தது. 
அரசுத் தரப்பின் பதில் கேட்டு வழக்கு தற்போது ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.


அண்மையில் தில்லியில் தமது நிறுவனத்தின் ஆண்டறிக்கையை வெளி யிட்டுப் பேசிய வேதாந்தா குழுமத்தின் பிரதிநிதி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறப்பதை விரைவுபடுத்த அதிகாரிகளுடன் இணைந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

 பிரதான செய்தித் தாள்களில், சுற்றுச்சூழலுக்கு ஆலையால் எவ்விதக் கேடும் இல்லை என்ற ரீதியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தொடர்ந்து விளம்பரம் வெளியிட்டு வருகிறது. 
அதற்கு அரசோ,பசுமைத் தீர்ப்பாயமோ எந்த கண்டனத்தையும் இதுவரை வெளியிடாமல் உள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்புகள் இருப்பதை சுட்டிக்காட்டியே ஆலை மூடலுக்குத் தங்கள் அரசு உத்தர விட்டது. ஆனால் அதற்கு மாறான செய்தி களையே தனது விளம்பரத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. 

இதற்கு ஒரு வலுவான மறுப்பு அரசுத் தரப்பில் ஏன் இல்லை என்ற கேள்வி எழுகிறது. 
மேலும், பசுமை தீர்ப்பாயத்தில் இது வரை, அரசு தரப்பு பதில் எழுத்து மூலமாகத் தாக்கல் செய்யப்படவில்லை என தெரிகிறது.

 இந்த அணுகு முறை ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை நிர்வாகத்துக்கே சாதகமாக அமையும். எனவே உடனடியாக, ஆலையை மூடியதற்கான நியாயங்களை எழுத்து மூலமாக பசுமை தீர்ப்பாயத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.

தமிழக மக்களுக்கு எழுந்துள்ள கீழ்க்கண்ட கேள்விகளுக்கான விளக்கங்களையும் அரசு சார்பில் சமர்ப் பித்திட வேண்டும்.

1. ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை செயல்படுவதற்கு தமிழக அரசு வழங்கியிருந்த அனுமதி 31.03.2018 உடன் முடிந்து விட்டது. 
மீண்டும் ஆலை நடத்திட அனுமதி கேட்டு நிர்வாகம் அளித்திருந்த மனுவும் 09.04.2018 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரி யத்தால் நிராகரிக்கப்பட்டு, உரிய முன் அனுமதியின்றி ஆலையில் எவ்விதமான பணி களும் மேற்கொள்ளப்படக் கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், 18.05.18 மற்றும் 19.05.18 தேதிகளில் திருநெல்வேலி முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர் ஆய்வு செய்த போது, மீண்டும் ஆலையைத் துவக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டி ருந்ததால் மின் விநியோகத்தை ரத்து செய்து ஆலையை மூடிட உத்தரவிட 23.05.18 தேதி யிட்ட தமது அறிக்கையில் கூறியுள்ளார். மேற்கூறிய ஆய்வு உள்ளிட்ட விவரங்கள் தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மூடுதல் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தற்போது நடந்து வரும் வழக்கில், ஸ்டெர்லைட் ஆலை 25.07.18 அன்று தாக்கல் செய்துள்ள இடைக்கால மனுவில், மேற்சொன்ன 18.05.2018மற்றும் 19.05.18 தேதிகளில் எவ்வித ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறியுள்ளனர். இது குறித்து உரிய விளக்கத்தினைத்தமிழக அரசு அளிக்க வேண்டும்

2. தூத்துக்குடி சிப்காட் அலகு 1ல் தான் ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ளது. ஆனால் சிப்காட் 2வது அலகில் தன் இரண்டாவது யூனிட்டிற்கான கட்டுமானங்களை 80 சதவிகிதம் அளவில் ஸ்டெர்லைட் ஆலை எழுப்பி உள்ளது. 
சிப்காட் அலகு 2 மற்றும் அதற்கான பணிகள் முழுமை பெற்று தொழிற்பூங்கா நிறுவப்படாத நிலையில் ஆலை எழுப்பியுள்ள கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதையும், தூத்துக்குடி மாநகராட்சிக்கான மாஸ்டர் பிளானில் சிப்காட் தொழிற்பூங்கா அடங்கியுள்ளதா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

3. ஸ்டெர்லைட் ஆலையின் முதல் யூனிட் எந்த நில அளவீட்டில் புல எண்களில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதையும், அவற்றின் பரப்பளவையும் வெளியிட வேண்டும்.

4. ஸ்டெர்லைட்டுக்கு எவ்வளவு நிலம்ஒப்படை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்துஅரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும். அதே போல்நீர் விநியோகம் செய்யப்படுவது குறித்த விவரங்களையும் வெளியிட வேண்டும்.

5. ஸ்டெர்லைட் ஆலை துவங்கியதில் இருந்து 2018 ஜனவரி மாதம் வரை எத்தனை டன்தங்கம், வெள்ளி, பிளாட்டினம், பல்லாடியம் உற்பத்தி செய்யப்பட்டது என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம், ஆலையைத் திறப்பதற்கு சாதகமானஉத்தரவைப் பெற்று விடாமல் இருப்பதற் கான அனைத்து முயற்சிகளையும் தமிழகஅரசு செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

இதனை கவனத்தில் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் .
இதனை செய்ய தவறும்பட்சத்தில் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத் திற்கு சாதகமாக செயல்படுவதாகதான் பாதிக்கப்பட்ட  தமிழக மக்கள் உணர்வார்கள். 

                                                                                                                                                                                       -கே.பாலகிருஷ்ணன்
                                                                                                                                            மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்
=======================================================================================
ன்று,
ஆகஸ்ட்-11.

  • ஆர்மீனியா அமைக்கப்பட்டது(கிமு 2492)

  • மலேசியாவின் பெனாங்க்கில் கேப்டன் பிரான்சிஸ் லையிற் என்பவரால் பிரித்தானியக் குடியேற்றம் அமைக்கப்பட்டது(1786)

  • பிரான்சிடம் இருந்து சாட் விடுதலையை அறிவித்தது(1960)
========================================================================================
பதஞ்சலி நிறுவனத்தின் பொருட் களை நுகர்வோர் வாங்குவது குறைந்துவிட்டதால், யோகா சாமியார் ராம்தேவும், பதஞ்சலி தலைமை நிர்வாகியுமான  ஆச்சார்யா பாலகிருஷ்ணாவும் சோகத்தில் ஆழ்ந்துள் ளனர்.

பாபா ராம்தேவும், ஆச்சார்யா பாலகிருஷ்ணாவும், சுதேசி தயாரிப்புகள் என்ற பெயரில், தரமற்ற பொருட்களை விற்று கல்லா கட்டி வந்தனர். 

அதிலும் மோடி ஆட்சிக்கு வந்தது முதல், நுகர்பொருள் சந்தையில் பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம், வெளிநாட்டு நிறுவனங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி பல ஆயிரம் கோடி ரூபாய்களை லாபமாக குவித்தது.

மோடி ஆட்சிக்கு வந்த 2014-ஆம்ஆண்டில் ரூ. 2 ஆயிரம் கோடி விற்றுமுதல் பெற்ற பதஞ்சலி நிறுவனம், 2017-ஆம் ஆண்டில் ரூ. 10 ஆயிரம் கோடி விற்றுமுதல் பெற்றது.பதஞ்சலி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டுக்கும் 100 சதவிகித வளர்ச்சியைப் பெற்று முன்னேறும் எனவும், இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் பின்னுக்குத் தள்ளப்படும் என்றும் ராம்தேவ் கொக்கரித்திருந்தார்.


ஆனால், கிரெடிட் சுயிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பதஞ்சலி நிறுவனத்தின் வருவாய் எந்தவளர்ச்சியையும் எட்டாமல் முடக்கம்கண்டுள்ளதாகவும், அதுமட்டுமல்லாமல், பதஞ்சலி நிறுவனத்தின் தரமற்றபொருட்களைக் கண்டாலே நுகர்வோர்அலறியடித்துக் கொண்டு ஓடுவதாகவும் தெரிவித்துள்ளது. 

இந்த ஆய்வு, சாமியார் ராம்தேவைதற்போது சோகத்தில் ஆழ்த்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவர்களின் தயாரிப்பு தேன்,நெல்லிச்சாறு,கோதுமை மாவு போன்றவை கலப்படம் செய்யப்பட்டவை.
போலி.
நெல்லிச்சாற்றில் நெல்லிக்காயே பயன்படுத்தப்படவில்லை என்றும் இந்திய உணவு தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.

ஐரோப்பா உட்பட்ட மேலைநாடுகள் மட்டுமின்றி நேபாளம்,பூடான் போன்ற அண்டை நாடுகளும் பதஞ்சலி பொருட்களுக்கு தடைவிதித்துள்ளன .

இதனால் இந்திய உள்நாட்டு விற்பனையும் சரிந்தது.பல விற்பனை கடைகள் மூடப்பட்டுள்ளன.
ஆனால் பாஜக ஆளும் உ.பி.,ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அரசு அலுவலங்கள்,நிர்வகிக்கும் இடங்களில் அனைத்தும் பதஞ்சலி பொருட்களை மட்டும்தான் வாங்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அங்குள்ள நியாய விலைக்கடைகளிலும் போலி சாமியாரின் போலித்  தயாரிப்புகள் மட்டுமே மக்களுக்கு வழங்கப்படுகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?