ஊழல் வெள்ளம்...


இன்று கொள்ளிடம் பாலம் இடிந்ததற்கும்,கடைமடைக்கு காவிரிநீர் வராமல் வழி முழுக்க வயல்கள்,தென்னை தோப்புகள்,குடியிருப்புகளில் வெள்ளம் பாய்ந்து பலத்த சேதம் உண்டாக்கியுள்ளது.

இதற்குக்காரணம் பொதுப்பணித்துறைதான்.
கரை உடைத்து புரளும் வெள்ளம் 


பொதுப்பணித்துறையை கடந்த ஏழு ஆண்டுகளாக கையில் வைத்து பணத்தை கோடிகளில் குவிக்கும் பழனிசாமிதான் என்பதும்  ஆதாரம் உள்ள குற்றசாட்டுகள்.

ஏழு ஆண்டுகளாக கால்வாய்கள்,அணைகள்,குளங்கள்,ஏரிகள் தூர்வாராததுதான் இந்த காவிரி நீர் வீணாக கடலுக்கு சென்றதற்கு காரணம்.

ஆனால் ஆண்டுதோறும் அனைத்து நீர்ப்பிடிப்பு பகுதிகளும் தூர்வாரியதாக கணக்கு எழுதப்பட்டு பலகோடிகள் எடுக்கப்பட்ட ள்ளது.

அந்தப்பணம் யார் பைக்குள் போனது என்பது பாமரனுக்கும் தெரிந்த விடயம்.மேட்டூர் அணையில் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாததால் 20 அடிகளுக்கு சகதிமணல்தான் உள்ளது.

இதனால் பலஆயிரம் கணவாய் நீர் சேகரிக்கப்படமுடியாமல் வீணாகி யுள்ளது.

அதுவும் இருந்தால் ஓராண்டுக்கு மழை நீரை சேமித்து விவசாயத்துக்குப்பயன்படுத்தமுடியும்.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, வழக்குப் பதிவு செய்ய, லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க., தாக்கல் செய்த மனு விபரம்:-
 "முதல்வர் பழனிசாமி வசம், நெடுஞ்சாலை துறை உள்ளது. 
கடைமடை 

ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசிபாளையம் நான்கு வழி சாலை திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு, 713.34 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு.

ஆனால், இதன் மதிப்பு, 1.515 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.ஒரு கி.மீ.,துாரம் சாலை அமைக்க, 2.20 கோடி ரூபாய் செலவாகும். 
70 கி.மீ., துாரத்துக்கு என கணக்கிட்டால், 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வராது. ஆனால், 1.515 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

திட்டப் பணிகளைமேற்கொள்ள, 'ராமலிங்கம் அண்ட் கோ' நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.இந்த நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர், முதல்வர் பழனிசாமிக்கு உறவினர். திருநெல்வேலி - செங்கோட்டை - கொல்லம் நான்கு வழி சாலை திட்டம், 'வெங்கடாசலபதி கன்ஸ்ட்ரக் ஷன்ஸ்' நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. 

இந்த நிறுவனத்தின் உரிமையாளர், முதல்வர் பழனிசாமியின் சம்பந்தி.மதுரை சுற்றுச் சாலை, வண்டலுார் - வாலாஜாபாத் ஆறு வழி சாலை, ராமநாதபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர் மாவட்டங்களில் நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள,முதல்வர் பழனிசாமியின் உறவினர்கள், பினாமிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதிகார துஷ்பிரயோகத்தை, முதல்வர் பழனிசாமி செய்துள்ளார். 

அதன்மூலம்,ஆதாயம் அடைந்துள்ளார். இதுகுறித்து, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். நெடுஞ்சாலைத் துறைக்கும் அமைச்சர் என்ற வகையில், அதிகார துஷ்பிரயோகம் செய்து, சொத்து குவித்துஉள்ளார்.

ஜூன்ல், லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டும், இதுவரை, வழக்குப் பதிவு செய்யவில்லை.
புகாரில் உள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மை நிலை குறித்து கூட விசாரணைநடத்தவும் இல்லை. 
ஆனால், வருமான வரித் துறை, முதல்வரின் பினாமி நிறுவனத்தில் சோதனை நடத்தியது. 
எனவே, ஏற்கவனவே  அளித்த புகாரை, பதிவு செய்ய, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும்.'இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
======================================================================================
ன்று,

ஆகஸ்ட்-24.
  • கல்கத்தா நகரம் அமைக்கப்பட்டது(1690)

  • ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் பிரதேசம் உருவாக்கப்பட்டது(1936)

  • நேட்டோ ஒப்பந்தம் அமலுக்கு வந்தது(1949)

  • நாமக்கல் கவிஞர் வே.ராமலிங்கம் பிள்ளை இறந்த தினம்(1972)

  • உக்ரேன் விடுதலை தினம்(1991)

=======================================================================================
96 ஐ எட்டிப்பார்த்த 74.
கேரளாவைச் சேர்ந்த 96 வயது மூதாட்டி கார்த்தியாயினி. ஆலப்புழா பகுதியை சேர்ந்த இவர், அம்மாநிலத்தின் முதியவர்கள் கல்வியறிவு பெரும் திட்டம் ஒன்றில் படித்து வருகிறார்.
சிறுவயதில் இருந்தே படிக்க வேண்டும், சரளமாக ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்பது தான் ஆசையாம். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் ஒருமுறை கூட பள்ளி பக்கம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தனது இளம் வயதில் தொடர முடியாத கல்வியை 96 வயதில் கற்க தொடங்கியுள்ளார் கார்த்தியாயினி.
முதியவர்கள் கல்வியறிவு பெரும் திட்டத்தில் கடந்த 6 மாதங்களாக படித்து வரும் இவர்,சில தினங்களுக்கு முன்பு முதன்முறையாக நான்காம் வகுப்பு தேர்வு எழுதினார்.

 தேர்வு அறையில் அவருக்கு வினாத்தாள அளிக்கப்பட்டவுடன், மாணவி கார்த்தியாயினி விறுவிறுப்பாக அனைத்து கேள்விகளுக்கு பதில் எழுத தொடங்கியுள்ளார். 
அப்போது அவரின் அருகில் இருந்த சக மாணவனா 74 வயது முதியவர், கார்த்தியாயினின் விடைத்தாளை எட்டிப் பார்த்துள்ளார்.
இதைப்பார்த்த கார்த்தியாயினி அங்கிருந்த ஆசிரியரிடம் இதுப் பற்றி புகார் அளித்துள்ளார். அவரை வகுப்பு ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர். 
100 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்தத் தேர்வில், வாசிப்பிற்கு 30 மதிப்பெண்களும், மலையாளத்தில் எழுதுவதற்கு 40 மதிப்பெண்களும், கணக்கு பாடத்திற்கு 30 மதிப்பெண்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
தன் வாழ்நாளில் முதல் தேர்வை எழுதிய கார்த்தியாயினி வாசிப்பு பகுதியில் 30/30 என முழுமதிப்பெண் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
பிரபல மலையாள தொலைக்காட்சி ஒன்றில் கார்த்தியாயினி தேர்வு எழுதிய செய்திகள் ஒளிப்பரப்பட்டன. அடுத்த நாள் அவர் மாநிலம் முழுக்க பிரபலம் . 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?