இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இதுதான் ராமராஜ்யம்?

படம்
  #go back modi   தப்பே இல்லை . தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் முழுதும் பெய்த வரலாறு காணாத மழையால் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.  டெல்டா மாவட்டத்தில் ஏற்பட்ட பெருமளவிலான பயிர் சேதத்தை ஒன்றிய அரசின் குழுவினரும் வந்து ஆய்வு செய்தனர். இந்த நிலையில் தமிழகத்துக்கு வெள்ள நிவாரணமாக தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக 1,510 கோடியே 83 லட்ச ரூபாயும், பாலங்கள் போன்ற உட்கட்டமைப்புகளை நிரந்தரமாக சரிசெய்ய 4719 கோடியே 62 லட்ச ரூபாயையும் வழங்கக் கோரி, ஏற்கனவே 3 விரிவான அறிக்கைகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்ததுள்ளது தமிழக அரசு. அதை நினைவூட்டி டிசம்பர் 29 ஆம் தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்தக் கடிதத்தில், “ கொரோனாவால் அரசின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், வெள்ள பாதிப்புகள் மேலும் அதை கடுமையாக்கியுள்ளன. மாநில பேரிடர் நிவாரண நிதியை முழுமையாக பயன்படுத்திவிட்டோம்.  எனவே, தமிழக அரசு கோரிய ஆறாயிரத்து 230 கோடியே 45 லட்ச ரூபாய் நிதியை வழங்கிட, உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும்” என்று அந்தக்

புத்தாண்டு பரிசுகள்.

படம்
 மோடியின் ஆட்சியில் இந்திய ஒன்றிய அரசு 2022 முதல் பல பரிசுகளை இந்திய மக்களுக்கு வாரி வழங்க உள்ளது. உலகிலேயே மிகச் சிறந்த பொருளாதாரக் கொள்கைகள்,நிதி திர்வாகம் கொண்ட பா.ஜ.க மட்டுமே இப்படி சாதனைகளை செய்ய முடியும் என ஐ.நா.மன்றமே வியந்துள்ளது. இனி2022 புத்தாண்டு மோடி அரசு வழங்க உள்ள  மக்கள் நலத்திட்டங்கள் விபரம்:- ஒவ்வொரு மாதமும் புதிய விதிமுறைகள், விலை ஏற்ற இறக்கம் என பல்வேறு விதிகள் அமல்படுத்தப்படுகின்றன. அதிலும், புத்தாண்டு என்றால் சொல்லவா வேண்டும். இதில் பெரும்பாலான விதிமுறைகள் சாமானிய மக்களை நேரடியாக பாதிக்கும் வகையிலே உள்ளன. ஆக, ஜனவரி முதல் மாறவிருக்கும் விதிமுறைகளைப் பற்றி பார்க்கலாம். ஏடிஎம்  கட்டணம் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இப்புதிய கட்டணம் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இலவச வரம்புக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுக்க இதுவரை 20 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இனி 21 ரூபாய் வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சமையலுக்கு தேவையான கேஸ் சிலிண்டர் விலை மாற்றப்பட்டு வருகிறது. எனவே, ஜனவரியிலும் கேஸ்

வென்றிடக் காரணம் என்ன?

படம்
  மதவெறியும் பாசிசமே.... கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி மூன்று நாட்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்எஸ்எஸ் - பாஜக தலைமையிலான சங்பரிவாரக் கும்பல்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டன.   ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள புனித மீட்பர் தேவாலயத்தில் உள்ள ஏசு கிறிஸ்து வின் சிலையை இந்துத்துவா மத வெறிக் கும்பல் உடைத்து நொறுக்கி யது. இது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் இஸ்லாமிய மற்றும் கிறித்துவ சிறு பான்மை மக்களுக்கு எதிராக நடத்தப் படும் தாக்குதல்கள் வன்மை யாகக் கண்டிக்கப்பட்டன.  2021ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 300 தாக்குதல்கள் கிறித்துவர்கள் மீது நடத்தப்பட்டுள்ளன என்பதை மத்திய குழுவின் அறிக்கை சுட்டிக் காட்டியது. கடந்த சில நாட்களில் இத்தகைய தாக்குதல்கள் அதிகரித் துள்ளன. இஸ்லாமியர்களை இனப் படுகொலை செய்ய வேண்டும் என பகிரங்கமாக அறைகூவல்விடப் பட்டது. கிறித்துவ  மக்கள் மீதும் தேவாலயங்கள் மீதும் தாக்குதல்கள் தீவ

குட்டித் தூக்கம் நல்லதா?

படம்
  பாபா வாங்கா.... பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா.  கண் தெரியாதவர்.   இவர் தனது 85 வயதில் 1996-ஆம் ஆண்டு காலமானார்.  இவர் அங்கு, பல்கேரிய நாஸ்டர்டாமாக மதிக்கப்படுகிறார். இவர் 50 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு  தகவல்களை முன் கூட்டியே கணித்து கூறி உள்ளார்.  இவர் கூறியதில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்டவை பலித்தும் உள்ளன, நடந்தும் உள்ளன. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாம்ஸ் உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளதும் அவை அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது.  14-12-1503-ல் பிறந்த இவர் 2-7-1566ல் மறைந்தார். இவரது வாழ்வு மிக விசித்திரமான ஒன்று. இவர் கூறிய பலன்கள் பெரும்பாலும் அழிவையும், விபத்துக்களையும், கொலைகளையும் சுட்டிக் காட்டுவதால் சிறிது பயத்துடன் தான் அவரது நூலை அணுக வேண்டியிருக்கிறது. அதுபோல் தான் இந்த பெண் பாபா வாங்கா. இவரது கணிப்புகளில் அதிகம் பலித்து உள்ளன. 2016 ஆண்டு மிகப்பெரிய ஐஎஸ்  அமைப்பு போர் தொடங்கும், ஐரோப்பியர்களுக்கு எதிராக ர

ஏசு எப்பொ பிறந்தார்

படம்
  வேளாண்சட்டங்கள்.. மீண்டும் வருகிறது...,? மோடி அரசு 2019ஆம் ஆண்டில் நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், வேளாண் சட்டங்கள் மீண்டும் அமல்படுத்தப்படும் என்கிற தொனியில் வேளாண் அமைச்சர் பேசியிருப்பது விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லிக்கு பேரணியாகச் சென்றனர். கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கிய இந்த போராட்டம் ஓராண்டாக நீடித்தது. புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி லாரிகள், டிராக்டர்கள் போன்ற ஏராளமான வாகனங்களில் விவசாயிகள் டெல்லியின் திக்ரி, சிங்கு எல்லை பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டங்களில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்தனர். ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை எனக் கூறிவந்த ஒன்றிய பா.ஜ.க அரசு, எதிர்வரும் 5 மாநில சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் முடிவை எடுத்தது. இந்நிலையில் வேளாண

செயற்கை இறைச்சி தயார்.

படம்
ஐஸ்லாந்தில் எதிர்காலத்தில் மனிதர்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய பல புதிய உணவு வகைகளை உருவாக்கி ஆய்வு செய்கின்றனர். இங்குள்ள பசுமைக் குடில்களில் பார்லி செடிகள் வளர்க்கப்படுகின்றன. செடிகள் வளர்த்தபிறகு, விதைகள் அறுவடை செய்யப்படுகின்றன. விதைகள் அரைத்து சுத்தம் செய்யப்பட்டு, அதிலிருக்கும் வளர்ச்சிப் புரதம் தனியாக எடுக்கப்படுகிறது. பின்னர் இந்த புரத்தின் மூலம், விலங்குகளே இல்லாமல் ஆய்வகத்தில் இறைச்சி உருவாக்கப்படுகிறது. நாம் இப்போது செயற்கை இறைச்சி தேவை என்ற என்ற காலகட்டத்திற்கு வந்துவிட்டோம். பூமி விரிவடையப்போவதில்லை, அதிகமான விவசாய நிலங்களோ உற்பத்தியோ கிடைக்கப்போவதில்லை. மக்கள் தொகை பெருகிவருகிறது. எல்லாருக்கும் உணவளித்தாகவேண்டும். விலங்குகள் இல்லாமல் ஆய்வுக்கூடத்தில் இறைச்சியை உருவாக்குவதன் அடிப்படை என்னவென்றால், காலப்போக்கில் இது நிலத்தின் மீதான தேவையைக் குறைக்கும். குறைவான ஆற்றல் இருந்தால் போதும். கழிவுகளும் வெகுவாக குறையும். ``நாம் உண்கிற இறைச்சியை உருவாக்கும் விலங்குகளை வளர்க்கத் தீவனம் தேவை. அதற்கு விளைநிலங்கள் தேவை.  செயற்கை இறைச்சியில் அதற்கான வேலையில்லை.  எந்த விலங்குகளையும் க