அதானி&செபி?

 ஆக.16 முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை.

கொளத்தூர் கங்கையம்மன் கோவில் தீமிதி விழாவில் தீயில் தவறி விழுந்த 2 பேர் காயம்.அம்மன் கைவிட்டாளா?

ராஜஸ்தானில் கனமழைக்கு 20 பேர்கள் பலி.

78வது சுதந்திர தின கொண்டாட்டம் சென்னை கோட்டையில் ஏற்பாடுகள் தீவிரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றுகிறார்.விருதுகள் வழங்குகிறார்.

மணிப்பூர்கலவரம்முன்னாள்எம்.எல்.ஏ.வின் மனைவி குண்டு வெடித்து பலி.

அதானி-செபி தலைவர் பங்கு?

உல­கில் நடை­பெ­றும் நிதி மற்­றும் நிர்­வாக முறை­கே­டு­கள் குறித்து ஆய்வு செய்­யும் நிறு­வ­னம் ஹிண்­டன்­பர்க். இந்­நி­று­வ­னம் கடந்த சில மாதங்­க­ளுக்கு முன் அதானி குழு நிறு­வ­னங்­கள் மீது கூறிய குற்­றச்­சாட்டு பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி இருந்­தது.

அதானி குழு­மம் பங்கு முறை­கேடு, பங்கு மதிப்பை உயர்த்­திக் காட்டி, அதன் மூலம் அதி­கக் கடன் பெறு­தல், போலி நிறு­வ­னங்­க­ளைத் தொடங்கி, வரி ஏய்ப்பு செய்­தல் உள்­ளிட்ட முறை­கே­டு­க­ளில் ஈடு­பட்­ட­தாக அறிக்­கை­யில் தெரி­வித்­தது. இத­னைத் தொடர்ந்து, ஹிண்­டன்­பர்க்­கின் அறிக்கை வெளி­யான உட­னேயே, அதானி குழும நிறு­வ­னங்­க­ளின் பங்­கு­க­ளில் விலை மாபெ­ரும் சரிவை சந்­தித்­தன. 86 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் அள­வுக்கு அதானி குழு­மத்­தின் பங்­கு­கள் சரிவை சந்­தித்­தன. இத­னால் அதானி குழு­மத்­திற்கு பல ஆயி­ரம் கோடி நஷ்­டம் ஏற்­பட்­டது.

இத­னி­டையே தங்­கள் குழு­மத்­தின் மீதான ஹிண்­டன்­பர்க்­கின் கூற்­றுக்­கள் அனைத்­தும் ஆதா­ர­மற்­றவை என்று அதானி குழு­மம் மறுப்பு தெரி­வித்­தது. ஆனால், தங்­க­ளது இந்த அறிக்கை தவ­றா­னது என்று கரு­தி­னால், அதானி குழு­மம் தங்­கள் மீது வழக்­குத் தொட­ர­லாம் என்று அதானி குழு­மத்­திற்கு ஹிண்­டன்­பர்க் அழைப்­பும் விடுத்­தி­ருந்­தது.

அதானி மீதான குற்­றச்­சாட்­டு­களை சிறப்பு புல­னாய்வு அமைப்பு விசா­ரிக்க கோரி சுப்­ரீம் கோர்ட்­டில் வழக்கு தொட­ரப்­பட்­டது. இந்த கோரிக்­கையை நிரா­க­ரித்த சுப்­ரீம்­கோர்ட்டு செபி விசா­ரணை நடத்­தி­னால் போதும் என கூறி­யது. உண்­மை­யில் ஹிண்­டன்­பெர்க் ஆய்­வ­றிக்கை என்­பது அதானி குழு­மத்­துக்கு பெரும் பிரச்­சி­னையை உரு­வாக்­கி­யது.

இந்­நி­லை­யில் ஹிண்­டன்­பர்க் ரிசர்ச் நிறு­வ­னம் நேற்று தனது எக்ஸ் வலை­தள பக்­கத்­தில், “விரை­வில் இந்­தி­யா­வில் பெரிய சம்­ப­வம் நடக்­க­போ­கி­றது..” என்று பதி­விட்­டி­ருப்­பது

பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது. ஹிண்­டன்­பர்க் நிறு­வ­னம் இந்­தி­யா­வின் ஒரு முன்­னணி நிறு­வ­னம் குறித்த மோச­டி­கள் மற்­றும் முறை­கே­டு­களை வெளிப்­ப­டுத்­தும் என்று கூறப்­ப­டு­கி­றது.

இந்த விவ­கா­ரம் உல­க­ள­வில் பேசு­பொ­ரு­ளாகி உள்­ளது.

-------------------------------

ஆசியாவுக்கு ஆபத்து

ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பிறகு இந்தியாவில் தங்கியுள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக்  ஹசீனா, தன்னை ஆட்சியில் இருந்து வெளி யேற்ற அமெரிக்கா சதி செய்ததாகவும், தற்போதைய இடைக்கால அரசாங்கத்தையும் அவர்கள் பயன்படுத்துவார்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறும் முன்பு இறுதியாக உரையாற்ற இருந்ததாகவும் ஆனால் கலவரக்காரர்கள் அவரது அரசு இல்லத்தை முற்றுகையிட்டதால் அந்த உரை நிகழ்த்தப்படவில்லை எனவும் தற்போது அவர் தமது அவாமி லீக் கட்சியினருக்கு அந்த செய்தியை வெளியிட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வங்காள விரிகுடா கடல் பகுதியில் அமைந் துள்ள வங்கதேசத்தின் செயின்ட் மார்ட்டின்  தீவை அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு விட்டுக் கொடுத்திருந்தால் எனது ஆட்சியை தக்க வைத்துக்கொண்டிருக்க முடியும்” எனவும் “புதிய இடைக்கால அரசாங்கத்தை அமெரிக்கா பயன் படுத்திக்கொள்ளும்” ஷேக் ஹசீனா அச்செய்தி யில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“அவர்கள் மாணவர்களின் பிணங்களை வைத்து அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பினர். நான் பதவியை ராஜினாமா செய்யாமல் அங்கு இருந்திருந்தால் இன்னும் அதிகமான மாணவர் களின் உயிர் போயிருக்கும். அதில் எனக்கு விருப்பம் இல்லை.  அதனால் தான் நான் எனது பதவியை ராஜினாமா செய்தேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார். ஷேக்  ஹசீனா அரசு அமெரிக்கா வின் ஆதிக்கத்திற்கு எதிராகவும் இந்தியா - சீனா வுடன் உறுதியான அரசியல், பொருளாதார உறவு களையும் மேற்கொண்டு வந்தது. அதேநேரத்தில் நவீன தாராளமயக் கொள்கைகளையே அமலா க்கியது. இதன் காரணமாக வேலையின்மை உள் ளிட்ட கடும் நெருக்கடிகள் சூழ்ந்தன. இதனால்  இயல்பாகவே எதிர்ப்பு இயக்கம் எழுந்தது. அதை அமெரிக்கா பயன்படுத்தி கொண்டு ஆட்சிக்கவிழ்ப்பை அரங்கேற்றியுள்ளது என விபரங்கள் உறுதி செய்கின்றன.

புதிதாக அமைந்துள்ள வங்கதேச இடைக் கால அரசில் அங்கம் வகிக்கும் வங்கதேச தேசிய வாதக் கட்சி (BNP), ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு களின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 17பேர்  கொண்ட குழுவில் அமெரிக்கவுடன்  நேரடித்தொடர்பில் உள்ள  நபர்களும் அடங்கியுள்ளனர் என வங்க தேச அறிவுஜீவிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதும் கடந்து செல்லக் கூடியது அல்ல. 

இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்தும் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், அமெரிக்கா வுடன் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளார் என விக்கிலீக்ஸ் புலனாய்வுச் செய்திகளை வெளி யிட்டுள்ளது. அவர் தொடர்ந்து பலமுறை வங்க தேச அரசியல் சூழல் குறித்து அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுடன் விவாதித்துள்ளார் எனவும் விப ரங்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஏகாதி பத்தியம், ஆசியாவைச் சுற்றி வளைத்துக்  கொண் டிருக்கிறது என்பதற்கான சாட்சியம் இது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?