வழிமறித்துக் கொள்ளை!

 ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஆர்.கே. கடற் கரையில் இயற்கை சீற்றம் எதுவும் இல்லாத நிலையில், திடீரென 400 மீட்டர் அளவில்  கடல் நீர் உள்வாங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதியின் அருகே செல்பி எடுக்க முயன்றபோது, ஆற்றில் தவறி விழுந்து சோனா சிங் (19) என்ற மருத்துவ மாணவி உயிரிழந்தார். அவரை காப்பாற்ற சென்ற அவரது நண்பர்களான ரிஷி, வைபவ் சிங் ஆகியோரும் உயிரிழந்தனர்.


லடாக் யூனியன் பிரதேசத்தில் தற்போது லே,  கார்கில் என 2 மாவட்டங்கள் உள்ள நிலையில், ஜன்ஸ்கர், ட்ராஸ், ஷாம், நுப்ரா, சங்தங் ஆகிய 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.


மகாராஷ்டிரா மாநிலத்தின் நான்டெட் நாடாளு மன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.,யான வசந்த் சவான் (69) திங்களன்று காலமானார்.


தில்லி சத்ய நிகேதன் பகுதியில் உணவகத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப் பட்ட சிறுவன் உட்பட 5 பேரிடம் இருந்து துப்பாக்கி கள், கார் ஆகியவற்றை தில்லி போலீஸ் பறிமுதல் செய்தது.


நடிகர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் பலாத்கார புகார்கள் குவிவதால் மலையாள நடிகர்கள் சங்கத்தின்  செயற்குழு கூட்டம் செவ்வாயன்று கூட உள்ளது.  கொச்சியில் நடைபெறும் இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் மலையாள நடிகர்கள் சங்கத்தின் தலைவர் மோகன்லால், தற்காலிக பொ துச்செயலாளர் பாபுராஜ், துணைத் தலைவர்கள் ஜெயன் சேர்த்தலா, ஜெகதீஷ், நடிகைகள் அன்சிபா ஹசன், அனன்யா, ஜோ மோள் உள்ளிட்ட நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

கேரள நடிகைகள் கூட்டமைப்பை ஆத ரித்ததற்காக தொலைபேசியில் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததாக நடிகை பாக்கிய லட்சுமி புகார் அளித்துள்ளார்.


“விவசாயிகள் போராட்டத்தில் ஒன்றிய அரசு வலுவான நடவடிக்கை எடுத்ததாகவும், ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வங்கதேச சூழல் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும்”என நடிகையும், பாஜக எம்.பி.,யுமான கங்கனா ரணாவத் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கங்கனா ரணாவத் எம்.பி. கருத்திற்கும் எங்க ளுக்கும் தொடர்பில்லை என பாஜக விளக்கம் அளித்துள்ளது. 


கடந்த 2 நாட்களாகப் பெய்துவரும் கன மழைக்கே பாஜக ஆளும் குஜராத் மாநி லத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்து வரும் நிலையில், மேலும் 2 முதல் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது அம்மாநில மக்களிடையேகடும்அதிர்ச்சியைஏற்படத்தியுள்ளது.


மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் - வானிலை மய்யம்.

வழிமறித்துக் கொள்ளை!


அடி மேல் அடி, இடி மேல் இடி என்பது போல நாடு முழுவதும் சுங்கச் சாவடி கட்டணங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்தப்பட்டு வரு கின்றன. 

இதன்படி ஒவ்வோராண்டும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுங்கச் சாவடி கட்டணம் உயர்த்தப்படுகிறது. மாற்றியமைக்கப் படுவதாகக் கூறப்பட்டாலும் ஒரு முறை கூட கட்ட ணம் குறைக்கப்பட்டதில்லை. மாறாக, ஒவ்வொரு முறையும் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை உயர்த் தப்பட்டுக் கொண்டேதான் வந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் மட்டும் கட்ட ணம் உயர்த்தப்படுவதில்லை. அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வும் நிறுத்தி வைக்கப்படுவதாக அறி விக்கப்பட்டது. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 67 சுங்கச் சாவடிகள் உள்ளன. 

இதில் 36 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப் பட்ட நிலையில் தற்போது செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வாக னங்களுக்கு ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்ட ணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இதில் மாநில அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கு கூட விதிவிலக்கு இல்லை. இத னால் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மேலும்,மேலும்நெருக்கடியில்தள்ளப்படுகின்றன.

 சரக்கு வாகனங்களுக்கு அதிகப்படியான கட்டணம்  வசூ லிக்கப்படுவதினால் அத்தியாவசியப் பொருட்கள்  விலையும் தொடர்ந்து உயர்ந்தவண்ணம் உள்ளது. 

சுங்கச் சாவடி வசூல் என்பது ஒரு மர்மப் பிரதே சமாகவே உள்ளது. காலாவதியான சங்கச் சாவடி களில் பராமரிப்புச் செலவிற்காக 40 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்பது விதி. 

ஆனால் அத்தகைய சுங்கச் சாவடிகளிலும் கூடுதலாகவே கட்டணங்கள் வசூலிக்கப்படுகின் றன. காலாவதியான சுங்கச் சாவடிகள் எவை என்ற விவரத்தைக் கூட தேசிய நெடுஞ்சாலை ஆணை யம் வெளியிடுவதில்லை. 

இரண்டு சுங்கச் சாவடிகளுக்கு இடையில் 60 கி.மீ இடைவெளி இருக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி எல்லைகளைச் சுற்றி 10 கி.மீட்டருக்குள் சுங்கச்சாவடி இருக்கக் கூடாது என்ற விதிகள் எல்லாம் பின்பற்றப்படுவதில்லை. 

உள்ளூர் மக்க ளுக்கான கட்டணங்களுக்கான விலக்கும் பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை. 

உச்சக்கட்டமாக குஜராத்தில் ஒரு போலி சுங்கச் சாவடி அமைக்கப்பட்டு தொடர்ந்து கொள் ளையடிக்கப்பட்டு வந்தது சமீபத்தில் அம்பலமா னது. சாலைப் பராமரிப்பில் அலட்சியம் என்பதை யும் தாண்டி குறைந்தபட்ச வசதிகள்  பெரும்பா லான சுங்கச் சாவடிகளில் இருப்பதில்லை. 

இந்த  லட்சணத்தில் சுங்கச் சாவடி கட்டண வசூல் முறையை மாற்றியமைக்க ஒன்றிய அரசு திட்ட மிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. மொத்தத்தில் சுங்கச் சாவடி வசூல் என்பது 24 மணி நேரமும் இயங்கும் கொள்ளைச் சாவடியா கவே மாறிவிட்டது. 

இதை எதிர்த்துப் போராட வேண்டியது அவசியமாகிறது..

சிவாஜி தூள்,தூள்.பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டத்தின் மால்வன் பகுதியில் ராஜ்கோட் கோட்டையில் கடந்த ஆண்டு (2023) சத்ரபதி சிவாஜி சிலை பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது. இந்த சிலையானது கடற்படை தினத்தன்று டிசம்பர் 4-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த சூழலில் சிலை திறக்கப்பட்டு ஓராண்டு கூட நிறைவு பெறாத நிலையில், தற்போது சிலை உடைந்து தூள் தூளாக ஆகியுள்ளது.
மோடி திறந்து வைத்த 35 அடி சத்ரபதி சிவாஜி சிலை... வெறும் 9 மாதத்தில் தூள் தூளானது - பின்னணி ?

மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், இந்த கட்டுமானம் பாதிப்படைந்துள்ளது. இந்த சூழலில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் 35 அடி உயரம் கொண்ட இந்த சிலை, சரிந்து கீழே விழுந்து சல்லி சல்லியாக நொறுங்கியுள்ளது. இந்த சிலையின் காலின் பாதம் பகுதி மட்டுமே சிலை இருந்த இடத்தில் இருக்கிறது. மற்ற பகுதிகள் அனைத்தும் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.

மோடி திறந்து வைத்த 35 அடி சத்ரபதி சிவாஜி சிலை... வெறும் 9 மாதத்தில் தூள் தூளானது - பின்னணி ?

இந்த சம்பவத்துக்கு மாநில அரசுதான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதாவது சிவாஜி சிலை இருந்த இடத்தை மாநில அரசு முறையாக பராமரிக்காததே முக்கிய காரணம் என்று கூறி வருகின்றனர். மேலும் கட்டுமான பணிகள் முடிந்து ஓராண்டு கூட நிறைவு பெறாத சூழலில், கனமழை, காற்று காரணமாக ஒரு சிலை எப்படி விழுந்திருக்க முடியும் என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

மோடி திறந்து வைத்த 35 அடி சத்ரபதி சிவாஜி சிலை... வெறும் 9 மாதத்தில் தூள் தூளானது - பின்னணி ?

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து உண்மை தன்மையை விசாரிக்க வேண்டும் என்றும், சிலை கட்டுமானத்தின் போது முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

சுதர்ஷன் சேது பாலம்
சுதர்ஷன் சேது பாலம்

முன்னதாக குஜராத்தின் கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சுதர்ஷன் சேது பாலம், திறந்த 5 மாதங்களில் சேதமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரூ.980 கோடியில் உருவாக்கப்பட்ட இந்த பாலம் , நாட்டின் மிக நீளமான கேபிள்-தடுப்புப் பாலம் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக