கொல்கத்தா கொலை!

 கைமீறிய   போராட்டங்கள் 

கொல்கத்தா மருத்துவர் பலாத்காரம் மற்றும் கொலையை தொடர்ந்து அங்கே பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

மக்கள் தன்னெழுச்சியாக வந்து அங்கே போராடி வருகின்றனர். கொல்கத்தாவில் நடந்த இந்த பிரம்மாண்ட போராட்டத்திற்கு காரணமாக அமைந்தது ரிம்ஜிம் சின்ஹா என்பவரின் போஸ்ட்தான்.

கொல்கத்தாவில் நடந்த பலாத்காரம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் நடந்த நிர்பயா சம்பவத்திற்கு இணையாக மிகப்பெரிய கொடூரம் கொல்கத்தாவில் நடந்து உள்ளது.

நேற்று பெங்களூர், டெல்லி, மும்பை, புனே தொடங்கி நாடு முழுக்க சுதந்திர தின இரவுக்கு முன் பெண்கள் , ஆண்கள் இதை எதிர்த்து கூட்டம் கூட்டமாக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். கொல்கத்தா மக்கள் இடையே அதீத கோபத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவம் அங்கே மம்தா அரசுக்கு எதிராகவும் திரும்பி உள்ளது.


கொல்கத்தாவில் நடந்த இந்த பிரம்மாண்ட போராட்டத்திற்கு காரணமாக அமைந்தது ரிம்ஜிம் சின்ஹா இளம்பெண்தான்.


எப்படி நேனோ ஆலைக்கு எதிராக மமதா பானர்ஜி போராட்டம் செய்தது அங்கே அரசியல் மாற்றமாக அமைந்ததோ..


அதே போன்ற அரசியல் மாற்றத்தை ரிம்ஜிம் சின்ஹா என்ற 27 வயது இந்த பெண்ணின் போராட்டம் அங்கே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


ஆட்சிக்கே சிக்கல்: கிட்டத்தட்ட மம்தா ஆட்சிக்கு ஆதரவாக இருந்த பெண்கள் அங்கே அவரின் ஆட்சிக்கே எதிராக கொதிக்க இவரின் பேஸ்புக் போஸ்ட் காரணம் ஆகும்.


அங்கே மம்தா ஆட்சிக்கே இந்த விவகாரம் சிக்கலாக மாறும் என்று கூறப்படுகிறது. கடந்த 4 நாட்களாக அங்கே நடக்கும் போராட்டம் மம்தா ஆட்சியை முடக்கி போடும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த போராட்டங்களை மம்தா கையாளும் விதமும் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.


கொல்கத்தாவின் பிரசிடென்சி பல்கலைக்கழகத்தின் முன்னாள் சமூகவியல் ஆராய்ச்சியாளர் ஆவார் ரிம்ஜிம் சின்ஹா. இவர்தான் சுதந்திர தின போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். 14ம் தேதி இரவு மக்கள் கொல்கத்தா முழுக்க போராட்டம் நடத்த வேண்டும் என்று இவர்தான் அழைப்பு விடுத்தார்.

ஆகஸ்ட் 14-15 இடைப்பட்ட இரவில் இந்தியா சுதந்திரம் அடைந்தாலும், பெண்களுக்கு இன்னும் உண்மையான சுதந்திரம் இல்லை என்பது கிடைக்கவில்லை. இதற்காக போராட்டம் செய்வதே நம்முடைய நோக்கமாகும் என்று அவர் தனது கருத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்,

அது வைரலாக பரவியது.


இதனை சமூக வலைதளங்களில் பலர் பகிர்ந்துள்ள நிலையில், ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட விருப்பம் தெரிவித்தனர். இதுவே அங்கு அரசுக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்து உள்ளது.


அவரின் பெண் உறுப்பின் 150 mg விந்தணு இருந்துள்ளது. இதன் அர்த்தம் இந்த சம்பவத்தை தனி ஆள் செய்திருக்க முடியாது.


அங்கே உள்ளே மாணவர்கள் சந்தேகிப்பது.. ஒரு ஆள் செய்யவில்லை, அப்போது ஷிப்டில் இருந்த சிலரும் இதை செய்துள்ளனர். அந்த பெண் உணவிற்கு பின் அதீதமாக தூக்கம் வந்ததாக கூறியுள்ளார்.


அவரின் உணவில் இவர்கள் எதையாவது கலந்து இருக்கலாம்.. திட்டமிட்டே இதை எல்லாம் செய்து இருக்கலாம் என்று நம்மிடம் கூறி உள்ளனர்.


உடலில் பல காயங்கள் உள்ளன.. அந்த பெண்ணின் கண்ணாடி உடைந்து இரண்டு கண்களில் குத்தி உள்ளது. இதனால் கண்களில் ரத்தம் இருந்துள்ளது.


காதுகளில் அடிக்கப்பட்ட நிலையில் அங்கேயும் ரத்தம் உள்ளது. உதடுகள் கிழிந்து ரத்தம் வந்துள்ளது. அந்த பெண்ணின்.. இரண்டு கால்களும் உடைந்து உள்ளன. 90 டிகிரிக்கு கால்களை கொண்டு செல்லும் அளவிற்கு உடைத்து உள்ளனர்.எனவும் தெரிகிறது.


இதெல்லாம் நடக்கும் போது அந்த பெண் கத்த கூடாது என்பதால் அந்த பெண்ணின் தொண்டையை உடைத்து உள்ளனர். அதேபோல் கழுத்தில் உள்ள தைராய்டு கேலண்டு உடைக்கப்பட்டு உள்ளது.


கால்கள் உடைக்கப்பட்ட போது, தலையின் பின்புறம் தாக்கப்பட்ட போது அந்த பெண் மரணம் அடைந்து உள்ளார்.


 இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 33 வயதான சஞ்சோய் ராய் என்ற நபரை கைது செய்துள்ளனர். இவர் அங்கே தன்னார்வலராக போலீஸார் உடன் இணைந்து செயல்பட்டு உள்ளார்.


இவர் வெறும் தன்னார்வலர்தான். ஆனால் போலீஸ் குழுக்களில் இருக்கிறார், அங்கே கிடைத்த காண்டாக்ட் மூலம் போலீஸ் கமிட்டி ஒன்றிலும் கூட கமிட்டி உறுப்பினராக இருக்கிறார்.

கிழிந்த புளூடூத் இயர்போன் உள்ளிட்ட ஆதாரங்கள் மூலம் போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளுடனான தொடர்பு காரணமாக ராய் பல்வேறு மருத்துவமனை துறைகளுக்கு சென்று பல்வேறு பணிகளை செய்துள்ளார்.


இது போன்ற ஒரு வாய்ப்பிற்காக அவர் இத்தனை காலம் காத்து இருந்ததாக கூறப்படுகிறது.


ராயின் கடந்தகால நடத்தை, முந்தைய திருமண வாழ்க்கையில் மனைவியை கொடுமை செய்தது மற்றும் ஆபாச வீடியோக்கள் பார்த்தது ஆகியவை அவருக்கு மனநல ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம் என்கிறார்கள்.


இவர் கைதான் நிலையில்.. குழு வன்முறையில் ஈடுபட்ட மற்றவர்கள் யார் யார்.. அவர்கள் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்ற கேள்விக்குத்தான் இன்னமும் பதில் கிடைக்கவில்லை!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக