எதிர்பாரா தாக்குதல்?
சண்டிகர் பாரீஸ் ஒலிம்பிக் மல் யுத்தத்தில் மகளிருக் கான 50 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.
இறுதிப் போட்டிக்கு முன்னதாக நடை பெற்ற எடை பரிசோதனையில் வினேஷ் 100 கிராம் எடை அதிக மாக இருந்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த எதிர்பாராத சம்பவத் தால் வினேஷ் போகத் மல்யுத் தத்தில் இருந்து ஓய்வு பெற்ற நிலை யில், தகுதி நீக்கத்திற்கு எதிராக ஒட்டுமொத்த நாடே குரல் கொடுத்து வருகிறது.
ஆனால் பாஜக எம்.பி.,க்கள், “கோடி மீடியா” ஊடகங்கள் வினேஷ் போகத்தின் தகுதி நீக் கத்தை நியாயப்படுத்தி வருகின்ற னர். எங்களுக்கும் வினேஷ் போகத் விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா ஓடி ஒளிந்து வருகிறார்.
இதனால் முன்னாள் பாஜக எம்.பி.,யும், முன்னாள் மல் ஹயத்த சம்மேளன தலைவரு மான பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் பாலியல் வன்கொடுமைக்கு எதி ராக போராடியதன் காரணமாகவே அரசியல் சதியால் வினேஷ் போகத் தின் பதக்க கனவு நொறுக்கப் பட்டது என “இந்தியா” கூட்டணிக் கட்சியினர் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், இந்திய ஒலிம் பிக் சங்கத்தின் அலட்சியத்தால் பதக்க வாய்ப்பு பறிபோயுள்ள தால் வினேஷ் போகத்திற்கு ஹரி யானா பாஜக மாநிலங்களவை எம்.பி., பதவி அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கடந்த வாரம் கோரிக்கை விடுத்திருந்தது.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., தீபிந்தர் சிங் ஹூடா கூறுகையில், “பதக்கம் வெல்லா விட்டாலும் வினேஷ் போகத் இந்திய நாட்டின் தங்க மகளாக ஆகிவிட்டார்.
அவரது கடின உழைப்பு மற்றும் போராட்டத்திற்கு பலனாக ஹரி யானா பாஜக, வரவிருக்கும் மாநி லங்களவை தேர்தலில் சீட் வழங்கி, எம்.பி., பதவி அளிக்க வேண்டும். வினேஷ் போகத்திற்கு மாநிலங்களவை பதவி அளிக்க எங்களிடம் (காங்கிரஸ்) பெரும் பான்மை பலம் இல்லை. இல்லை யென்றால் நாங்கள் மாநிலங்க ளவை பதவி அளித்து நாடாளு மன்றத்திற்கு அனுப்புவோம்” எனக் கூறினார்.
ஆனால், ஹரியானா பாஜ கவினர் வினேஷ் போகத்துக்கு 30 வயது நிரம்பவில்லை. அவருக்கு 29 வயது மட்டுமே ஆகிறது. அத னால் அவருக்கு மாநிலங்களவை பதவி கொடுக்க முடியாது என சமாளிப்பு வேலையில் ஈடுபட்டது.
வினேஷ் போகத் 25 ஆகஸ்ட் 1994 அன்று ஹரியானா மாநிலம் பலாலியில் பிறந்தார். தற்போது அவருக்கு 29 வயது என்ற நிலை யில், வரும் ஆகஸ்ட் 24 அன்று வினேஷ் போகத் 30 வயதை எட்டி விடுவார்.
ஹரியானா மாநிலத்தில் காலியாக உள்ள ஒரே ஒரு மாநி லங்களவை பதவிக்கு செப்டம்பர் 6 அன்று தேர்தல் நடைபெறுகிறது.
செப்டம்பர் 6 க்கு முன்னரே வினேஷ் போகத் 30 வயதை நிரம்பிய பெண் என்பதால் மாநி லங்களவை தேர்தலில் போட்டி யிடத் தகுதியானவர் ஆவார்.
தொடக்கத்தில் வினேஷ் போகத்திற்கு மாநிலங்களவை வழங்க காங்கிரஸ் கட்சி மட்டும் கோரிக்கை விடுத்து வந்த நிலை யில், தற்போது பாஜகவை தவிர்த்து மற்ற (ஹரியானா) அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்து வருவ தாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஹரியானா முழுவதும் இளைஞர்கள் உள்ளிட்ட அனை த்து தரப்பினரும் சமூகவலைத் தளங்களில் வினேஷ் போகத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த ஆண்டு இறுதியில் ஹரி யானாவில் சட்டமன்ற தேர்தல் வேறு நடைபெற உள்ள நிலையில், வினேஷ் போகத் விவகாரம் பாஜக விற்கு கூடுதல் நெருக்கடியை ஏற் படுத்தியுள்ளது.
இது மோடி பரிவார் எதிர்பாரா தாக்குதல்?
செவ்வாயில் நீர்.
செவ்வாய் கிரகத்தில் அதிக அளவிலான நீர் இருக்கக்கூடும் என்று சமீபத்திய ஆய்வு சுட்டிக்காட்டுகிறது, இது உலகளாவிய பெருங்கடலை உருவாக்கும் அளவிற்கு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
திங்களன்று வெளியிடப்பட்ட ஆய்வில், நாசாவின் மார்ஸ் இன்சைட் லேண்டரின் நில அதிர்வு தரவை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது இரண்டுஆண்டுகளுக்கு முன்பு செயல்பாடுகளை நிறுத்துவதற்கு முன்பு 1,300க்கும் மேற்பட்ட செவ்வாய் நடுக்கங்களைப் (marsquakes) பதிவு செய்தது.
கலிபோர்னியா சான் டியாகோ பல்கலைக்கழகத்தின் ஸ்க்ரிப்ஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் ஓசியானோகிராஃபியின் முன்னணி விஞ்ஞானி வாஷன் ரைட்டின் கூற்றுப்படி, இந்த நீர் செவ்வாய் கிரகத்தின் மேலோட்டத்தில் ஏழு முதல் பன்னிரண்டு மைல்கள் (11.5 முதல் 20 கிலோமீட்டர்) ஆழத்தில் அமைந்திருக்கலாம் என்று ஏபிசி செய்தி தெரிவித்துள்ளது.
பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் ஆறுகள், ஏரிகள் மற்றும் ஒருவேளை பெருங்கடல்கள் இருந்தபோது இந்த நீர் நிலத்தடி விரிசல்களில் ஊடுருவியிருக்கலாம் என்று ரைட் விளக்கினார்.
இருப்பினும், உறுதிப்படுத்தலுக்கு செவ்வாய் கிரகத்தில் துளையிட்டு ஆய்வு செய்தல் வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
-------------------------------------
படித்ததில் பிடித்தது
பயணி ஒருவர் ஆட்டோக்காரரிடம் தான் போக வேண்டிய இடத்தை சொல்லி எவ்வளவு சார்ஜ் என்று கேட்டார்... 300-ரூபாய்.... 200-ரூபாய்க்கு வருமா? சற்று யோசித்த ஆட்டோ டிரைவர் சரி 250-ரூபாய் கொடுங்க... பயணி ஆட்டோவில் ஏற ஆட்டோ புறப்பட்டது.... அண்ணே இந்த வழியா போனா நீங்க டிபன் எங்கே சாப்பிடுவிங்க...? ரோட்டுக்கடைதான் சார்... அப்ப நீங்க சாப்பிடும் கடை எதுவோ அங்கே வண்டியை நிறுத்துங்கண்ணே, நாம ரெண்டு பேருமே டிபன் சாப்பிட்டு விட்டு போலாம்....
இரண்டு கிலோமீட்டர் தாண்டி ஒரு புளியமரத்தின் ஓரமாய் இருந்த தள்ளு வண்டிகிட்ட ஆட்டோ நின்றது.... ஒரு நடுத்தரவயது அம்மா, அவரது நெற்றி மற்றும் தோற்றம் அவர் கணவர் துணையற்றவர் என சொல்லியது.... வாங்க... இங்கதான் சார், வயித்துக்கு ஒன்னும் பண்ணாது என்றார் ஆட்டோ டிரைவர். இட்லி, தோசை என சாப்பிட்டோம். எவ்ளோம்மா? 60-ரூபாய் சார் ன்னு சொன்னாங்க 100-ரூபாய் கொடுத்தேன்... மீதியை... சில்லரையாக பொருக்கியது அந்த அம்மா... இன்னக்கி வியாபாரம் டல் சார் அதன் சில்லரை கஷ்டமுன்னாங்க... சரிம்மா 40-ரூபாய் உங்க கிட்டேயே இருக்கட்டும்.. நாளைக்கு இந்த பக்கமா வருவேன்... அப்போ வாங்கிக்கிறேன் என்று கூறி புறப்பட்டனர்... சார் நீங்க இன்னைக்கே ஊருக்கு போறீங்க... நாளைக்கு வருவேன்னு சொல்லிட்டு, 40-ரூபாய அந்த அம்மாகிட்ட விட்டுட்டு வர்ரீங்க? அண்ணா இப்ப நாம சாப்பிட்டத ஒரு ஹோட்டல்ல புகுந்து சாப்பிட்டிருந்தா நிச்சயம் 250-ரூபாய் ஆகி இருக்கும். அப்புறம் டிப்ஸ், வரி என 300-ரூபாய் கொடுத்திருப்போம்... இல்லையா? எப்பப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்பப்ப இந்த மாதிரி ஆளுங்களுக்கு நாம உதவணும் அண்ண... நலச்சங்கம் அமைப்பது, வசூல்செய்வது, அதன்மூலம் பொதுசேவை செய்வது, புண்ணிய தலங்கள் செல்வது, நன்கொடை கொடுப்பது, உண்டியல் போடுவது என... இப்படித்தான் புண்ணியம் தேட வேண்டும் என்பதில்லை நடைமுறை வாழ்கையிலே இப்படியும் தேடலாம்.