முத்தமிழ் மாநாடு!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆவிச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற நத்தம் போலீசார், 2 பேரின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலையாள சினிமாவின் பிரபல நடிகர் இந்திரன் இன்று (ஆக 24) எழுத்தறிவு இயக்கத்தின் 7ஆம் வகுப்பு தேர்வினை எழுதி உள்ளார்.
கேரளாவில் இந்தாண்டில் மட்டும் இதுவரை, 121 பேர் எலி காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளார். பொதுமக்கள் கவனத்துடன், விழிப்புணர்வுடன் இருக்கும்படி மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமியின் கணவர் நடராஜன் (58) போலீசாரால் கைது. தனது தம்பி கொலைக்கு காரணமானவர்கள் வீட்டில், அதை நடத்திக் காட்டுவோம் என நடராஜன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். நடராஜனின் சகோதரும் அதிமுக பிரமுகருமான பார்த்திபன் கடந்தாண்டு ஆகஸ்ட் 17ம் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
திருப்பதி, சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்ட நுழைய முயன்றதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் கைது; கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 7 கோடாலிகள், மோட்டார் சைக்கிள், கார் ஆகியவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணைபதிவு.
பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் மாநாட்டில் கண்காட்சி ஆகஸ்ட் 30 வரை நீட்டிப்பு பொதுமக்கள் இலவசமாக பார்வையிடும் வகையில் கண்காட்சியை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; 23 லட்சம் பேர் பயன் பெறும் இந்த ஓய்வூதிய திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.