வயநாடு இடருக்கு உதவுவோம்

 வேர்களைத்தேடி’ திட்டத்தில் 15 நாடுகளை சேர்ந்த 100 அயலக தமிழ் இளைஞர்கள் ஆக.15 வரை தமிழக சுற்றுப்பயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மேம்பாடியில் தமிழ்நாடு அரசின் சார்பில் உதவி மையம் திறப்பு.

கனமழை பெய்யும், நிலச்சரிவு அபாயம் உள்ளது. ஊட்டிக்கு வருவதை தவிர்க்கவும்... சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

மாஞ்சோலை எஸ்டேட்டை ஏற்கனவே நட்டத்தில் இயங்கும் டான் டீ நிறுவனம் ஏற்று நடத்த முடியாது: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்.
ஈரோட்டுக்கு ஆற்றிலேயே வருகிறேன் என தொலைபேசியில் கூறி காவிரியில் குதித்த விவசாயி கந்தசாமி மாயம்.

ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.82 லட்சம் கோடி.ஜூலை மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 10.3 சதவீதம் உயர்ந்து ரூ.1.82 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஒன்றியஅரசு வெளியிட்ட தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் மொத்த ரீபண்ட் ரூ.16,283 கோடியாக இருந்தது.


வயநாடு இடருக்கு உதவுவோம்

வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு தென்னிந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இருந்து நடிகர்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நிவாரண நிதி யாக ரூ25 லட்சம் வழங்கியுள்ளார்.

கேரளா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பருவழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல பகுதிகளில் அதிதீவிர கனமழை பெற்று வருகிறது.


இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கும் நிலையில், வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மலைகள் இருக்கும் பகுதியில், பாறைகள் சாலையில் விழுந்துள்ளதால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது,


இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு, கேரளாவில் முக்கிய பகுதிகளில் ஒன்றாக இருக்கும் வயநாடு பகுதியில், நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவம் தென்னிந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமடைந்து வருகிறது.


பலி எண்ணிக்கை 300-ஐ நெருங்கி வரும் நிலையில், இந்த நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட பலர் பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளும் நிவாரண பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், வயநாடு பகுதியில் மீட்பு பணிக்காக, தமிழக அரசின் சார்பில் ஒரு குழு சென்றுள்ள நிலையில், நிவாரண பணிக்காக தமிழக அரசின் சார்பில், 5 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.


அமைச்சர் எ.வ.வேலு இந்த நிதியை கேரளா முதல்வர் பிணராயி விஜயனிடம் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து வயநாடு பகுதியில் மேப்பாடி பகுதியில் தமிழக அரசின் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் உணவு, மருத்துவ வசதி ஆடைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசை போல் அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் என பலரும் தங்களது நிவாரண நிதியை கேரளாவுக்கு வழங்கி வருகின்றனனர்.


அந்த வகையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், வயநாடு நிவாரண பணிக்காக ரூ25 லட்சம் வழங்கியுள்ளார்.

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 10லட்சம் வழங்கியுள்ளது.

அதிமுகழகம்ரூ1கோடி,SRMபல்கலைக்கழகம்ரூ1கோடி

,அகரம் பவுண்டேஷன் மூலம் நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் கார்த்தி ஆகிய மூவரும் இணைந்து ரூ50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

மேலும் நடிகர் விக்ரம் ரூ20 லட்சம் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.


அதேபோல் கேரளாவை சேர்ந்த நடிகர் பகத் பாசில் நஸ்ரியா தம்பதி ரூ25 லட்சமும், மலையாள சினிமாவின் முன்னணி

நட்சத்திரமாக மம்முட்டி ரூ20 லட்சமும் நிதியுதவி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

-----------------------------------------------------------------------

இந்திய

விபத்து’ ரயில்வே

பொதுப் போக்­கு­வ­ரத்­தின் அடித்­த­ள­மாக இருக்­கக் கூடிய ரயில் பய­ண­மானது பாது­காப்­பற்­ற­தாக மாறிக் கொண்டு இருக்­கி­றது. ஜூலை மாதத்­தில்

9 ரயில் விபத்­து­கள் நடந்­துள்­ளன.

« ஜூலை 18 -– உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லம் --– கோண்டா ரயில் நிலையம் அருகே சண்­டி­கர் –- திப்­ரு­கர் விரைவு வண்­டி­யின் 8 பெட்­டி­கள் தடம் புரண்­ட­தில் 4 பேர் உயி­ரி­ழந்­துள்­ளார்­கள். 30 பேர் காய­ம­டைந்­துள்ள­னர்.

« ஜூலை 19 –- குஜ­ராத் மாநி­லம் வல்­சாத்­தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்­துக்கு உள்­ளா­னது.

« ஜூலை 20 -– உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லம் -– அம்­ரோ­ஹா­வில் சரக்கு ரயி­லில் 12 பெட்­டி­கள் தடம் புரண்டு விபத்­துக்­குள்­ளா­னது.

« ஜூலை 21 -– ராஜஸ்­தான் –- அல்­வா­ரில் சரக்கு ரயி­லின்

3 பெட்­டி­கள் தடம் புரண்டு விபத்­துக்கு உள்­ளா­னது.

« ஜூலை 21 – மேற்கு வங்க மாநி­லம் -– ரண­காட்­டில் சரக்கு ரயில் புரண்டு விபத்­துக்கு உள்­ளா­னது.

« ஜூலை 26 – ஒடிசா மாநி­லம் –- புவ­னேஸ்­வர் ரயில் நிலை­யத்­தில் சரக்கு ரயி­லின் 2 பெட்­டி­கள் தடம் புரண்டு விபத்­துக்கு உள்­ளா­னது.

« ஜூலை 29 – பீகார் மாநி­லம் -– சமஸ்­தி­பூ­ரில் சம்­ரக் கிராந்தி விரைவு ரயி­லின் இஞ்­சின் மட்­டும் தனி­யாக பிரிந்து விபத்­துக்கு உள்­ளா­னது.

« ஜூலை 30 – ஜார்­கண்ட் –- சக்­ர­தர்­பூ­ரில் ஹவுரா –- சி.எஸ்.எம்.டி. விரைவு ரயி­லின் 18 பெட்­டி­கள் தடம் புரண்­ட­தில் 2 பேர் உயி­ரி­ழப்பு.

20 பேர் காயம்.

« ஜூலை 31 – ஒடிசா மாநி­லம் –- சம்­பல்­பூர் –- சரளா அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்­துக்கு உள்­ளா­னது.

-– இவை அனைத்­தும் கடந்த 13 நாட்­க­ளுக்­குள் நடந்த விபத்­து­கள் ஆகும். ஒன்­றிய அர­சின் கட்­டுப்­பாட்­டில் இருக்­கும் ரயில்வே துறை­யா­னது எப்­படி அலட்­சி­ய­மா­கக் கையா­ளப்­ப­டு­கி­றது என்­ப­தற்கு இது ஒரு உதா­ர­ணம் ஆகும்.

பிர­த­மர் மோடி ஆட்­சிக்கு வந்­த­தும் செய்த ஒரு காரி­யம், ரயில்­வேக்கு என இருந்த தனி நிதி­நிலை அறிக்­கையை ரத்து செய்­த­து­தான். கோடிக்­க­ணக்­கான மக்­க­ளின் போக்­கு­வ­ரத்­துக்­கான ஒரு துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை கூடாது என்று துரி­த­மாக முடி­வெ­டுத்த ஒன்­றிய பா.ஜ.க. அர­சா­னது விபத்து இல்­லாத ரயில்­வேயை இந்த பத்­தாண்டு காலத்­தில் உரு­வாக்­கி­யதா என்­றால் இல்லை.

மிகப்­பெ­ரிய விபத்­து­கள் பா.ஜ.க. ஆட்­சி­யில்­தான் நடந்­துள்­ளன.

« 2010 ஆம் ஆண்டு மே மாதம் மேற்கு வங்­கத்­தில் சரக்கு ரயி­லும் விரைவு ரயி­லும் மோதிக்­கொண்ட விபத்­தில் 148 பய­ணி­கள் உயி­ரி­ழந்­த­னர்.

« 2023ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம்­தேதி ஒடி­சா­வின் பால­சோர் மாவட்­டத்­தில், கோர­மண்­டல் விரைவு ரயில், பஹா­னாகா பஜார் நிலை­யம் அருகே விபத்­துக்­குள்­ளா­னது. இதில் இரு­ப­துக்­கும் மேற்­பட்ட பெட்­டி­கள் தடம் புரண்­டன. இந்த விபத்­தில் 296 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

« 2023ஆம் ஆண்டு அக்­டோ­பர் 29 ஆம் தேதி ஆந்­தி­ரப் பிர­தேச மாநி­லம், விஜ­ய­ந­க­ரம் மாவட்­டத்­தில், கொத்­த­வ­லசா சந்­திப்பு ரயில் நிலை­யம் அருகே, விசா­கப்­பட்­டி­னம்- – பலாசா பய­ணி­கள் ரயில் மோதி­ய­தில், விசா­கப்­பட்­டி­னம் – -ராய­கடா பய­ணி­கள் ரயில் தடம் புரண்­டது.

14 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

« இந்த ஆண்டு ஜூன் 17ஆம் தேதி மேற்கு வங்க மாநி­லம் டார்­ஜி­லிங் மாவட்­டத்­தில் உள்ள நியூ ஜல்­பை­குரி அருகே சரக்கு ரயி­லும், விரைவு ரயி­லும் மோதிக்­கொண்ட விபத்­தில் 15 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

இதற்கு பா.ஜ.க. அரசு பொறுப்­பேற்­றுக் கொண்­டதா? அல்­லது பொறுப்­பான பதி­லா­வது சொன்­னார்­களா என்­றால் இல்லை. ஆண்டு தோறும் கோடிக்­க­ணக்­கில் நிதி ஒதுக்­கு­கி­றார்­களே, அதெல்­லாம் எங்கே போகி­றது? என்ன பாது­காப்பு செய்­யப்­பட்­டது?

இந்த ஆண்டு கூட நிதி நிலை அறிக்­கை­யில் 2 லட்­சத்து 62 ஆயி­ரத்து 200 கோடி ரூபாய் ரயில்­வேக்கு ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இப்­படி ஒவ்­வொரு ஆண்­டும் ஒதுக்­கப்­பட்­டு­தான் வரு­கி­றது. ஆனால் ரயில் பய­ணம் பாது­காப்­பற்­ற­தாக மாறி வரு­வதை ஏன் தடுக்க முடி­ய­வில்லை?

“பட்­ஜெட் நிதி ஒதுக்­கீட்­டில் பெரும்­ப­குதி ‘கவச்’ தானி­யங்கி பாது­காப்பு அமைப்பை நிறு­வு­தல் உள்­பட ரயில் பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­குச் செல­வி­டப்­ப­டும்” என்று ரயில்வே அமைச்­சர் அஸ்­வினி வைஷ்­ணவ் சொல்லி இருக்­கி­றார். இனி­மேல்­தான் இவர்­கள் பாது­காப்பு நட­வ­டிக்­கை­யி­லேயே இறங்­கப் போகி­றார்­க­ளாம்.

2014 முதல் 2023 வரை சுமார் 638 ரயில் விபத்­து­கள் நடந்­துள்­ளன. சரா­சரியாக ஆண்­டுக்கு 71 ரயில்­கள் தடம் புரண்­டுள்­ள­தாக ரயில்வே அமைச்­ச­கம் தெரி­வித்­துள்­ளது.

‘கவச்’ தொழில் நுட்­ப­மா­னது விபத்­து­க­ளைத் தடுப்­ப­தற்­கா­னது ஆகும். ஒரே ரயில் பாதை­யில் இரண்டு ரயில்­கள் வரு­வதை இது தடுக்­கும். இது இல்­லா­ததே பெரும்­பா­லான விபத்­து­க­ளுக்­குக் கார­ணம். 2012 ஆம் ஆண்­டில் இருந்து இது பற்றி பேசிக் கொண்­டு­தான் இருக்­கி­றார்­கள். 2014 இல் மதிப்­பீடு செய்­யப்­பட்­டது. அடுத்த மூன்று ஆண்­டு­கள் கள ஆய்வு செய்­தார்­கள். 2017 ஆம் ஆண்டு இந்த சிஸ்­டத்தை முறைப்­ப­டுத்­தி­னார்­கள். 2019 ஆம் ஆண்டு ரயில்வே ஊழி­யர்­க­ளுக்கு பயிற்சி தரப்­பட்­டது. 2022 ஆம் ஆண்டு ஒரு ரயில் பாதை­யில் சோதனை செய்­யப்­பட்­டது. 2024 ஆம் ஆண்டு இன்­னொரு ரயில்­பா­தை­யில் சோத­னை­யைச் செய்­தார்­கள். ‘கவச் 4.0 –- தொழில் நுட்­பத்­துக்கு சமீ­பத்­தில் தான் ஒப்­பு­தல் கிடைத்­துள்­ளது’ என்று நேற்­றைய தினம் பேட்டி தந்­துள்­ளார் ரயில்வே அமைச்­சர் அஸ்­வினி

வைஷ்­ணவ். இந்த வேகத்­தில் போனால் இந்­தியா முழுக்க அனைத்து ரயில் பாதைக்­கும் கவச் அமைக்க 100 ஆண்­டு­கள் ஆகும்.

டிசம்­பர் 23, 2022 நில­வ­ரப்­படி, இந்­திய ரயில்­வே­யில் நாடு முழு­வ­தும் 3.12 லட்­சத்­திற்­கும் அதி­க­மான காலிப் பணி­யி­டங்­கள் (Non-–Gazetted Posts) நிரப்­பப்­ப­டா­மல் உள்­ளன. சிக்­னல் மற்­றும் தொலைத்­தொ­டர்பு, போக்­கு­வ­ரத்­துத் துறை ஆகி­ய­வற்­றில் கணி­ச­மான எண்­ணிக்­கை­யி­லான பணி­யி­டங்­கள் நிரப்­பப்­ப­டா­மல் உள்­ளன. இதில், சிக்­னல் மற்­றும் தொலைத்­தொ­டர்­புத் துறை­யில் 14,815 பணி­யி­டங்­க­ளும், போக்­கு­வ­ரத்­துத் துறை­யில் 62,264 பணி­யி­டங்­களும் நிரப்­பப்­ப­டா­மல் உள்­ளன. ஊழி­யர்­களே இல்­லா­மல் ரயில்வே துறையை நடத்த முடி­யுமா?

வந்தே பாரத் விடு­வது பெரு­மை­யல்ல, ‘விபத்­தில்­லாத’ ரயில்வே தான் பெருமை!




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக