குரங்கம்மை

 நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தி வருகின்ற பருவத்தில், குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்படக் கூடிய நபர்களாக இருக்கின்றனர். இந்தப் பிராந்தியத்தில் பலரும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கொண்டிருப்பதால் நோயை எதிர்த்துப் போராடுவது கடினமாகிறது.

குழந்தைகள் விளையாடுவது மற்ற குழந்தைகளுடன் நெருக்கமாகப் பழகுவது போன்றவற்றால் அவர்களுக்கு எளிதில் தொற்று ஏற்படுவதாகச் சில நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட சின்னம்மை தடுப்பூசிகளையும் இவர்களால் பெற இயலாது. இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட பெரியவர்களுக்கு குரங்கம்மை தொற்றில் இருந்து பாதுகாப்பு கிடைக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களுக்கு இந்தத் தொற்று எளிதில் ஏற்படக்கூடும். கர்ப்பிணிப் பெண்களுக்கும் இதனால் ஆபத்து இருக்கலாம்.

குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட நபர்களுடனான தொடர்பைத் தவிர்க்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் உங்கள் பகுதியில் நோய்த் தொற்று இருக்கும் பட்சத்தில் கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும்.

உடலிலுள்ள புண்கள் ஆறும் வரை நோய்த் தொற்று உள்ளவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.

தொற்றில் இருந்து மீண்ட பிறகும் 12 வாரங்களுக்குப் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.


ரம்புட்டான்

ரம்புட்டான் பழம் அதன் இனிமையான சுவைக்கு மட்டுமல்ல, அதன் பல்வேறு ஆரோக்கியநன்மைகளுக்காகவும் பிரபலமானது. இந்த பழம் எப்படி நம் உடலுக்கு நன்மை பயக்கிறது, யார் இதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதைக் காண்போம்.

ரம்புட்டான் பழம் பார்ப்பதற்கு முள் அமைப்பில் இருந்தாலும் உள்ளே ஒரு வெள்ளை, ஜெல்லி போன்றது. அதன் சுவை இனிமையானது.


 இந்த பழம் மலேசியா, இந்தோனேசியாவின்  தாயகமாக கொண்டது.

 பின்னர் மற்ற நாடுகளுக்கும் பரவியது.  இதில்  இரும்பு சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கார்போஹைட்ரேட், மினரல்கள், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் B3, புரதம் ஆகிய பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 


நம் உடலில் கெட்ட கொழுப்பை ரம்புட்டான் செயல்படாமல் தடுக்கிறது. இதனால் மாரடைப்பு அபாயம் குறைகிறது. மேலும் ஆஸ்துமா மற்றும் கண் ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவுவதாக கூறப்படுகிறது. 

இந்த பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது மலச்சிக்கல் பிரச்சனைகளை குறைக்கிறது. செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. 

ரம்புட்டான் பழத்தில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிடுவதால் உடலை நீரேற்றத்துடன் வைத்துப் பராமரிக்க முடிகிறது.


ரம்புட்டானில் வைட்டமின் சி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன.

வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் சரும ஆரோக்கியத்தை நல்ல முறையில் பாதுகாக்கின்றன. சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதைத் தடுத்து, இள வயதிலேயே முதுமைத் தோற்றம் உண்டாவதைத் தவிர்க்கச் செய்கின்றன.


 சருமத்திற்கு உதவக்கூடிய கொலாஜன் என்ற புரதத்தின் உற்பத்திக்கு துணை நின்று, எலாஸ்ட்டிசிட்டி தன்மையுடன் உறுதியான சருமம் பெற  ரம்புட்டான் பெரிதும் உதவுகிறது.

ரம்புட்டான் பழம் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும், கர்ப்பிணிகள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக குழந்தைகள் இந்த பழத்தை சாப்பிடும்போது அதிகம் கவனம் தேவை. வழுவழுப்பான இந்த பழத்தை குழந்தைகள் சாப்பிடும் பொழுது உஷாராக இருக்க வேண்டும். 

இந்த பழம் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் இந்த பழத்திற்கு சீசன் காலமாகும். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் நேரங்களில் இந்த பழத்தை அதிகளவில் சுற்றுலா பயணிகள் வாங்கிச் செல்வார்கள்.  

ரம்புட்டான் கிலோ ரூ.200 முதல் ரூ.500 விற்பனை செய்யப்படுகிறது.  ரம்புட்டான் பழம் காயாக இருக்கும் போது பச்சை நிறத்திலும், பழுத்த பிறகுசிவப்பு அல்லது மஞ்சள் நிறமாக மாறும். ரம்புட்டான் மரத்தில் பழம் காய்க்கும் நேரத்தில் மரத்தை முழுவதும் வலை போட்டு மூடி விடுவார்கள்.


 பழத்தை குரங்கு, வவ்வால், அணில் போன்ற விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்கு இப்படி செய்யப்படுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக