வளர்ச்சி யாருக்கானது?
சிக்கிமில் மிதமான நிலநடுக்கம்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் மாநில அளவில் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் ஆடிப்பெருந்தேர் திருவிழா நேற்று 2வது நாளாக நடந்து வருகிறது. இத்திருவிழாவில் மாநில அளவிலான குதிரைச் சந்தை 4 நாட்களுக்கு நடக்கிறது. இதில் உயர்ரக குதிரைகளான மார்வார், கத்தியவார், நொக்ரா, இங்கிலீஷ் பிட் மற்றும் நாட்டுக் குதிரைகளும் ரூ.25 ஆயிரம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை விற்பனைக்கு வந்திருந்தது. இதில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காலா (எ) கத்திவார் ரகக் குதிரையை இந்தியாவின் முன்னணி பணக்காரரான அம்பானி ஒரு கோடி ரூபாய்க்கு கேட்டதாக கூறப்பட்டது. இந்த கலா குதிரை இந்திய அளவிலும், தமிழ்நாடு அளவிலும் பல பரிசு கோப்பைகளை வென்றிருப்பதாக அதன் உரிமையாளர் வீரா வரதராஜன் கூறினார்.
வளர்ச்சி
யாருக்கானது?
சமீபத்தில், இந்திய நாட்டின் கொள்கை சிந்தனைக் குழுவான (Policy think tank) நிதி ஆயோக் (Niti Aayog) வெளியிட்டுள்ள “நிலையான வளர்ச்சி இலக்குகளின் நிலை” (Status of Sustainable Development Goals) குறித்த அறிக்கையானது,
குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதிலும் பசியை எதிர்த்துப் போராடுவதிலும், குஜராத் மிக மோசமாக செயல்படும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.
குஜராத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட 39.7 சதவிகித குழந்தைகள் குறைந்த எடையுடனும் 39 சதவிகித குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாகவும் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
2023 – 2024 ஆம் ஆண்டுக்கான நிதி ஆயோக் அறிக்கையின்படி, மாநில வாரியான தரவரிசையில் குஜராத் பசி குறியீட்டில் 25-வது இடத்தில் உள்ளது. மத்தியப்பிரதேசம், ஒடிசா, அசாம் போன்ற பா.ஜ.க. கும்பல் ஆளும் பிற மாநிலங்களை விடவும் குஜராத் பின்தங்கியுள்ளது.
மேலும் அறிக்கையின்படி, 2018-ஆம் ஆண்டில் 49 என இருந்த குறியீட்டெண், 2020-21-ஆம் ஆண்டில் 46 எனவும், 2023-24-ஆம் ஆண்டில் 41 எனவும் குறைந்துள்ளது. அதற்கேற்ப 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த எடை, வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் இரத்த சோகை பாதிப்புக்குள்ளான பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நிதி ஆயோக் அறிக்கை மட்டுமின்றி மேலும் பல அறிக்கைகளும் குஜராத் மக்களின் மோசமான நிலைமையை தங்களுடைய ஆய்வின் மூலம் அம்பலப்படுத்தியுள்ளன.
சான்றாக, 2023-ஆம் ஆண்டின் உலகளாவிய பல பரிமாண வறுமைக் குறியீட்டின் (Global Multidimensional Poverty Index) அறிக்கையானது, ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குஜராத்தின் கிராமப்புறங்களில் வாழும் 44.45 சதவிகித மக்களும் நகர்ப்புறங்களில் வாழும் 28.97 சதவிகித மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இவ்வறிக்கைகள் ஆண்டுதோறும் குஜராத் மக்களின் நிலைமை மோசமடைவதையே எடுத்துக்காட்டுகின்றன. இனிவருங்காலங்களில் குஜராத்தில் வாழும் குழந்தைகள் மற்றும் பெண்களின் நிலைமை மேலும் மோசமாகும் என்பதை அறிக்கைகள் நமக்கு உணர்த்துகின்றன.
இதன்மூலம், மோடி-அமித்ஷா கும்பலால் “குஜராத் மாடல் வளர்ச்சி” என்று பெருமையாகப் பீற்றிக்கொள்ளப்படும் ‘வளர்ச்சி’ என்பது பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நலனுக்கானது அல்ல.
அது உழைக்கும் மக்களுக்கு விரோதமானது; அம்பானி-அதானி வகையறா கார்ப்பரேட் கும்பல்களின் நலனுக்கானது என்பது நிதி ஆயோக் அறிக்கை மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற அலு வல் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்துள்ளார்.
இந்த சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு இந்த மசோதா அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நரேந்திரமோடி தலைமையிலான பாஜக கூட் டணி அரசு சிறுபான்மை இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வருகிறது.
அதனொரு பகுதியாகவே, வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திருத்த மசோதா, அரசியல் சட்டம் வழங்கியுள்ள மத சுதந்திரத்திற்கு எதிரானது; மாநி லங்களின் உரிமையை பறிக்கக் கூடியது; கூட் டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது; மக்களை மத ரீதியாக பிளவுபடுத்துவது என்று இந்தியா கூட்ட ணிக் கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுக்களை மக்களவையில் முன்வைத்துள்ளன.
மோடி அரசின் நோக்கம், வக்பு வாரியத்தில் நிலவும் குறைபாடுகளைக் களைவது அல்ல; மாறாக, இஸ்லாமிய மக்களுக்குச் சொந்தமான சொத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக அவர் களிடமிருந்து கைப்பற்றுவதே ஆகும்.
இந்த சட்டத் திருத்த மசோதா குறித்து இஸ்லாமிய அமைப்புகளிடமோ, மதத் தலைவர்களிடமோ, மாநில அரசுகளிடமோ எந்தவிதமான ஆலோ சனையும் மேற்கொள்ளாமல் தானடித்த மூப்பாக கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையை கலைக்க வேண்டும் என்றும், கோவில் மற்றும் சொத்துக்களை இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் பாஜக கூப்பாடு போடுகிறது.
நிர்மலாவோ தான் நிதியமைச்சர் என்பதை மறந்து காணிக்கைகளை உண்டியலில் போடாதீர்கள் அர்ச்சகர் பிச்சைத் தட்டில் பாடல்கள் என்று பேசுகிறார்.
கோவில் சொத்துக்களை கொள்ளையடிப்ப தற்காகவே இவ்வாறு கோருகிறார்கள். கோவில் அறங்காவலர்களாக இந்துக்கள் மட்டுமே நிய மிக்கப்படுகிறார்கள்.
ஆனால், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்புவாரிய சட்டத் திருத்தத் தின்படி முஸ்லிம் அல்லாதவர்களும் வக்புவாரி யத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
குஜராத்தில் சிறுபான்மை இஸ்லாமிய மக்களைக் கொன்று குவித்தது பாஜக பரிவாரம். இப்போதும் உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் சிறு பான்மையோர் புல்டோசர் அச்சத்திற்கு மத்தி யில்தான், வாழ வேண்டியுள்ளது.
மறுபுறத்தில், குடியுரிமைத் திருத்தச் சட்டம், ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தை துண்டு துண்டாக உடைத்தது, அர சியல் சட்டத்தின் 370 ஆவது பிரிவை ரத்து செய்தது
என இஸ்லாமியர்களின் குடியுரிமை, அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என அனைத்திலும் கைவைக்கிறது மோடி அரசு.
விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற பிரச்சனைகளிலிருந்து மக்களது கவனத்தை திசை திருப்பி மக்களிடையே பதற்றத்தை ஏற் படுத்துவதே மோடி அரசின் நோக்கமாக உள்ளது. மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் தொடர்ந்து இணைந்து போராடியாக வேண்டும்.