இதிலுமா போலி?

 கூலி பெறாமல் கட்டிட மராமத்து பணி மகனை படிப்பால் உயர்த்திய அரசு பள்ளிக்கு தந்தை சேவை.

ஒன்றிய பாஜக அரசின் முக்கிய அரசுபணிகளுக்கு நேரடி நியமனங்கள் ரத்து. சமூகநீதிக்குகிடைத்தவெற்றிதமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பானிபூரி விற்பது போல் நடித்து தள்ளுவண்டியில் குட்கா விற்ற பீகார் வாலிபர் பிடிபட்டார்.
பள்ளியில்3,4வயது  சிறுமிகளுக்கு துப்புரவு வாலிபர் பாலியல் தொல்லை ரயிலை மறித்து மக்கள் போராட்டம்.



வரி இல்லாமல் 25 கோடி லாட்டரி பரிசு?

கேரள மாநில லாட்டரி என்ற பெயரில் ஆன்லைன் மூலம் போலி சீட்டுகளை விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது. மேலும் இதன்மூலம் கோடிக் கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் ஓணம் பம்பர் போலி லாட்டரி டிக்கெட்டுகளை நம்பி வாங்க வேண்டாம் என கேரள லாட்டரித்துறை அறிவித்துள்ளது.


கேரளா லாட்டரித்துறை சார்பில் ஆண்டுதோறும் 6 பம்பர் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் நடைபெறுகிறது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி மான்சூன் பம்பர் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் நடைபெற்றது.


இதனை தொடர்ந்து ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டது. ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக 25 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அடுத்தடுத்து பல பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்த டிக்கெட்டின் விலை 500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


டிக்கெட் விற்பனை தொடங்கியதுமே சூடுபறக்க விற்பனையாது. முதற்கட்டமாக அச்சிடப்பட்ட 10 லட்சம் டிக்கெட்டுகளும் 3 நாட்களில் விற்பனை ஆனதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் கேரளா மாநில லாட்டரியனி போலி டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 25 கோடி ரூபாய் முதல் பரிசாக வழங்கப்பட உள்ள ஓணம் பம்பர் லாட்டரி சீட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


கேரளா லாட்டரியை பொறுத்தவரை காகித வடிவில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதில்லை.

ஆனால் மோசடி கும்பல் ஆன்லைனில் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. கேரள மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டம் சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ள போதும் ஆன்லைன் மோசடிகள் அதிகமாக நடைபெற்று வருகிறது.

இந்த மோசடிக்காக கேரளா லாட்டரி மற்றும் கேரளா மெகா மில்லியன் லாட்டரி என்ற பெயரில் ஒரு ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை ஏற்கனவே ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் விரும்பிய எண்ணைக் கொடுத்தால், அதன்படி டிக்கெட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.


ஒரே கிளிக்கில் 25 டிக்கெட்டுகள் வரை விற்கப்படும் என்றும் ஆப் தெரிவித்துள்ளது. ஆன்லைன் போலி டிக்கெட்டுகளுக்கும் ஓணம் பம்பர் டிக்கெட்டுக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

லாட்டரியை வென்றவுடன், முழுத் தொகையும் உடனடியாக வாடிக்கையாளரின் கணக்கில் வரி இல்லாமல் டெபாசிட் செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அரசு சின்னம் மற்றும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் படங்களை தவறாக பயன்படுத்தி சமூக வலைதளங்கள் மூலம் லாட்டரி மோசடி நடப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் மோசடிக்கான போலி QR குறியீடு கேரளா லாட்டரியை மிஞ்சும் டிசைனில் போலி QR குறியீடு மற்றும் லாட்டரி இயக்குனரின் போலி கையெழுத்து இடம் பெற்றுள்ளது.


ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் காகித வடிவில் மட்டுமே கேரள லாட்டரித்துறை சார்பில் விற்கப்படுகிறது.

லாட்டரியை வெல்பவர்கள், அதை மாவட்ட அலுவலகங்கள், இயக்குநரகம் அல்லது வங்கிக் கிளைகளில் சமர்ப்பிக்க வேண்டும். லாட்டரி சீட்டின் பின்புறம் குறிப்பிட்ட இடத்தில் பெயர், முகவரியை எழுதி கையெழுத்திட வேண்டும் என கேரள லாட்டரித்துறை தெரிவித்துள்ளது.


மேலும் ஆன்லைனில் விற்பனை போலி லாட்டரி டிக்கெட்டுகள் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல்துறை தலைவர்கள் இதற்கு பொறுப்பாக இருப்பார்கள் என்றும் கேரளா லாட்டரித்துறை இயக்குநர் ஆப்ரகாம் தெரிவித்துள்ளார்.

அதோடு மக்களும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதிலுமா போலி?

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் கிங்ஸ்லி தனியார் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை (என்சிசி) பெயரில் எட்டாம் வகுப்பு மாணவிக்கு நடந்துள்ள கொடுமை இனி எந்தப் பள்ளியிலும் நடைபெறக்கூடாது.


13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன், போலி என்சிசி பயிற்சியாளர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

தேசிய மாணவர் படை என்பது உடல் திறனையும் ஒழுக்கத்தையும் நாட்டுப்பற்றை யும் அர்ப்பணிப்பு உணர்வையும் இளைய தலைமுறைக்கு கற்பிப்பதற்கே  அமைக்கப் பட்டது. அதில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் முதன்மையானது. 

ஆனால் அதன் பெயரிலேயே போலியான முகாம்கள் நடத்தப்படுவது எப்படிச் சாத்தியமாகிறது? 

இதை கண்காணிப்பதற்கும்  ஒழுங்குபடுத்துவதற்கும் தகுந்த ஏற்பாடு ஏதும் இல்லையா? 

தனியார் பள்ளிகள் ‘தனி ராஜ்யம்’ நடத்துகின்றனவா? 

அப்படியெனில் அவை பள்ளிக் கல்வித்துறையின் வரம்புக்குள், கட்டுப்பாட்டுக்குள் வராதா?

மெட்ரிக் பள்ளிகள் தவிர்த்து அனைத்துப் பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் தானே இயங்குகின்றன. அப்படியிருக்கும் போது என்சிசி முகாம்கள் மட்டுமல்ல, இதர முகாம்கள் நடத்துவதற்கும் பள்ளி நிர்வாகம், பள்ளிக்கல்வித் துறையின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டுமல்லவா? 

ஆனால் கிங்ஸ்லி பள்ளி அத்தகைய  அனுமதியைப் பெற்றதா எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது.

என்சிசியின் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்  அந்தமான் நிகோபர் தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அந்த முகாம் போலியானது, அதை நடத்தியவர்களும் போலியானவர்கள். அந்தப் பள்ளி சார்பில் என்சிசி முகாமுக்காக எந்தப் பதிவும் செய்யப்பட வில்லை என்று கூறியுள்ளது.

 அப்படியெனில் கிங்ஸ்லி பள்ளி போல எத்தனை பள்ளிகளில் இத்தகைய போலிகள் செயல்படுகிறார்கள் என்பது கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

விதி மீறி நடத்தப்பட்ட முகாமில் மாணவ, மாணவிகளுக்கான பாதுகாப்பு வழிகாட்டுதல் எதுவும் பின்பற்றப்படவில்லை என்றும் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை விரிவான அறிக்கை கேட்டுள்ளது என்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். 

அறிக்கை பெறட்டும்; கடும் நடவடிக்கை எடுக்கட்டும். அது அவசியமானதே.

ஆனால் தேசியம் பேசிக் கொண்டு, என்சிசியின் பெயரால் இழுக்கை ஏற்படுத்திய இந்தக் கொடும் நிகழ்வு தொடர்புடைய அனை வரும் கடும் தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும்.

 இந்த வழக்கு தொடர்புடையவர்கள் நாம்தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டது பாராட்டத்தக்கது.

 பள்ளிக் கல்வித்துறை தனது க ண்காணிப்பு நடவ டிக்கைகளை கடுமையாக்க வேண்டும். தடிகள் ஏந்தும் ஆர்எஸ்எஸ் வன்முறை அணிவகுப்பு கள் கூட பல தனியார் பள்ளிகளில் நடைபெறு கின்றன. அவற்றை தடுத்திடும் வகையில் கல்வித்துறையின் செயல்பாடுகள் அமைந்திட  வேண்டும். 

  

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக